TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jul 11, 2024 1:06 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பயமுறுத்தும் வெயில் நோய்கள்… பதமாக தவிர்க்க ஆலோசனைகள்!

Go down

பயமுறுத்தும் வெயில் நோய்கள்… பதமாக தவிர்க்க ஆலோசனைகள்! Empty பயமுறுத்தும் வெயில் நோய்கள்… பதமாக தவிர்க்க ஆலோசனைகள்!

Post by Tamil Sat Jun 04, 2016 2:07 pm

பயமுறுத்தும் வெயில் நோய்கள்… பதமாக தவிர்க்க ஆலோசனைகள்!
வெயில் நோய்கள்
வியர்க்குரு, அதீத வியர்வை போன்ற சின்னச் சின்ன பிரச்னைகள் தொடங்கி… அம்மை, சீழ்கட்டி, சிறுநீர் கடுப்பு பிரச்னைகள் வரை வெயில்கால நோய்கள் கண் முன்னே மிரட்டுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த, இவை வருமுன்னரே காக்க என்ன செய்ய வேண்டும்..? சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் டாக்டர் அன்புமணி.
நோய்கள் எதனால் வருகின்றன என்பது தெரிந்தால், அவற்றைத்  தவிர்க்கும் வழிகளும் தெரிந்ததாகிவிடும். அந்த வகையில் கோடை நோய்களை அணுகுவோம் இங்கு.  
அம்மை
[You must be registered and logged in to see this image.]
சிறியவர்கள், வயதானவர்கள் என வெயில் காலங்களில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தவர்களைத்தான் அம்மை நோய் அதிகம் தாக்குகிறது. சத்துள்ள உணவு வகைகளை உண்டு நோய் எதிர்ப்புத் திறனை கூட்டுவதோடு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொண்டால் அம்மையில் இருந்து தப்பலாம். காபி, டீ போன்றவை உடலை டீஹைட்ரேட் செய்யும் என்பதால், கோடையில் அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டாம்.
வெப்பக் கட்டிகள்
[You must be registered and logged in to see this image.]
கோடையில் ‘ஹாட் பாயில்ஸ்’ என்று சொல்லக்கூடிய வெப்பக் கட்டிகள் உடலில் உண்டாகலாம். சிறிய கொப்புளங்கள் போன்று தோன்றும் இவை வராமல் தடுக்க, எண்ணெய்ப் பலகாரங்கள் அதிகம் உட்கொள்ள வேண்டாம். எப்போதும் வெந்நீரில் குளிப்பவர்களும், கோடையில் குளிர்ந்த நீரில், ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு வேளை குளிக்கவும்.
வியர்க்குரு
[You must be registered and logged in to see this image.]
வியர்க்குரு, கோடையில் அனைவரையும் தாக்கும் பிரச்னை. தினமும் இரண்டு வேளை குளித்து, வெயிலில் சென்று வீட்டுக்குத் திரும்பியவுடன் கை, கால்களை குளிர்ந்த நீரில் கழுவுவது வியர்க்குருவை தவிர்க்க உதவும். வியர்க்குருவை சொறிந்தால் தொற்றுக்கு வழிவகுக்கும் என்பதால் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
தோல் அரிப்பு மற்றும் வெயில் ஒவ்வாமை
[You must be registered and logged in to see this image.]
வெயிலில் அலையும் பலருக்கு தோலில் அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்படலாம். சிலருக்கு ‘சன் பர்ன்’ என்று சொல்லக்கூடிய வெயில்கால வெடிப்பும் ஏற்படலாம். இப்பிரச்னை அதிகம் உள்ளவர்கள் தளர்வான காட்டன் ஆடைகள் அணிவது முக்கியம்.
சீழ் கட்டிகள்
[You must be registered and logged in to see this image.]
நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தவர்களையும், சுகாதாரமான பழக்க வழக்கங்கள் இல்லாதவர்களையும் தாக்கும் சீழ் கட்டிகள், சருமத்தில் கிருமித்தொற்று ஏற்படுவதாலும் உடற்சூட்டாலும் உண்டாகின்றன. முதுகு, கழுத்து, அக்குள் மற்றும் தொடைப் பகுதிகளை அதிகம் தாக்கும் இக்கட்டிகள் வீங்கிக்கொண்டு வலி கொடுத்தால், மேலும் தொற்று ஏற்படுவதற்குள் மருத்துவரை நாடவும். கட்டியை உடைத்துவிடுதல் கூடாது.
சிறுநீர் கடுப்பு
[You must be registered and logged in to see this image.]
கோடைகாலத்தில் அதிக தண்ணீர் குடிக்கவில்லை எனில் சிறுநீர் அடர்த்தியாக, மஞ்சள் நிறத்தில் பிரிவதோடு வலி மற்றும் எரிச்சல் ஏற்படும். இந்த நீர்க்கடுப்பு பெண்களையே அதிகம் தாக்கும். உடலின் நீர்ச்சத்து கோடையில் வியர்வையாக வெளியேறும் என்பதால், வெயில் நாட்களில் தேவையைவிட சற்று அதிகமாகவே தண்ணீர் அருந்தவும். நீர்க்கடுப்போடு அடிவயிற்றில் வலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடவும்.
ஹீட் ஸ்ட்ரோக்
[You must be registered and logged in to see this image.]
அதிக நேரம் வெளியே அலையும்போது திடீரென மயக்கம், தலைவலி, படபடப்பு மற்றும் நிதானமின்மை ஏற்பட்டு சீரியஸான நிலைமைக்குத் தள்ளிவிடும். அதுபோன்ற சூழலில் பாதிக்கப்பட்டவரின் உடைகளைத் தளர்த்தி காற்றோட்டமான இடத்தில் அமரவைத்து முதலுதவி கொடுக்க வேண்டும். ஹீட் ஸ்ட்ரோக்கை தவிர்க்க காலை 10 மணியில் இருந்து மதியம் 3 மணிவரை வெயி
லில் அலைவதை தவிர்க்கவும். வெயில் நேரங்களில், காற்றுப் புகமுடியாத இடங்களில் அமர்வதைத் தவிர்க்கவும்.
“மொத்தத்தில் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களால் வெயிலில் இருந்து காக்கும் கவசம் அமைப்போம்!’’
– எளிமையான தீர்வு சொன்னார், டாக்டர் அன்புமணி.


முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள்!
[You must be registered and logged in to see this image.] வெயிலில் வெளியே செல்லும்போது ஏற்படும் தாகத்தைத் தணிக்க கண்ணில்படுவதை எல்லாம் வாங்கிக் குடிக்காமல், கையோடு எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டில் இருக்கட்டும்.
[You must be registered and logged in to see this image.] காரமான, அதிகம் எண்ணெய் கொண்ட உணவு வகைகளைத் தவிர்த்து… இளநீர், மோர், தர்பூசணி போன்ற குளிர்ச்சியான உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
[You must be registered and logged in to see this image.] மிகவும் இறுக்கமான ஆடைகள் தவிர்த்து, உடலில் ஈரம் தங்காதவாறு வியர்வையை உறிஞ்சக்கூடிய, சருமத்தில் அரிப்பு ஏற்படுத்தாத, பருத்தி ஆடைகளையே அணியவும்.
நன்றி – விகடன்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum