TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:27 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Jul 03, 2022 1:14 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Jul 02, 2022 2:09 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 29, 2022 5:12 pm

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 16, 2022 7:15 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Apr 25, 2022 4:11 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am

» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am

» மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
by veelratna Thu Sep 30, 2021 11:21 am

» டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன்
by veelratna Wed Sep 29, 2021 3:11 pm

» சித்தர்கள் சொன்ன சாமுத்திரிகா லட்சணம்-பெண்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 29, 2021 11:46 am

» சொல் வித்தை விளையாடும் பாடல்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 01, 2021 12:05 pm


கார்த்தி சிதம்பரத்தை வளைக்கும் மலேசிய ரகசியங்கள்!

Go down

HOT கார்த்தி சிதம்பரத்தை வளைக்கும் மலேசிய ரகசியங்கள்!

Post by Tamil Fri Mar 04, 2016 6:36 pm

கொந்தளிப்பில் நாடாளுமன்றம்
ஜே.என்.யு விவகாரத்தை விவாதிக்க முடியவில்லை… ஸ்மிருதி இரானியின் அபத்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க முடியவில்லை… பட்ஜெட்டின் நிறைகுறைகள் அலசப்படவில்லை… அனைத்தையும் ஓரம்கட்டிவிட்டு, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைதுசெய்ய வேண்டும் என்ற கோஷங்கள் நாடாளுமன்றச் சுவர்களில் முட்டி மோதி எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. காரணம், அ.தி.மு.க எம்.பி-க்கள்.
கூச்சலுக்கான வெளிப்படைக் காரணம்!



2015 டிசம்பர் 2-ம் தேதி, மத்திய அமலாக்கத் துறையும் வருமானவரித் துறையும் இணைந்து, ஒரே சமயத்தில்…  ஒரே நபரைக் குறிவைத்து சென்னை, திருச்சி உட்பட தமிழகத்தில் பல இடங்களில் ரெய்டு நடத்தின. ரெய்டுக்கு உள்ளானவர், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். அவர் நடத்தும் அலுவலகங்கள், அவர் நிறுவனங்கள் தொடர்புடைய அலுவலகங்கள் மற்றும் அவரது வீடுகள் ரெய்டு செய்யப்பட்டன. ரெய்டுக்குக் காரணம், ஏர்செல் – மேக்ஸிஸ் ஊழல் விவகாரத்தில், தயாநிதி மாறன் மட்டும் குற்றவாளி அல்ல… அதில், கார்த்தி சிதம்பரம், அவருடைய தந்தை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கும் தொடர்பு உண்டு என்ற குற்றச்சாட்டு.
வெளியான சிதம்பர ரகசியங்கள்…
2015 டிசம்பர் 2-ம் தேதி ரெய்டுக்கு, பல மாதங்களுக்கு முன்பே இதுபோல் சில ரெய்டுகளும் சிதம்பரம் குடும்பம் தொடர்பான நிறுவனங்களில் நடத்தப்பட்டன. அப்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து தமிழகத்திலும் இந்தியாவிலும் சிதம்பரம் குடும்பத்துக்கு உள்ள தொழில் முதலீடுகள் வெளியில் தெரிய ஆரம்பித்தன. 
ஆனால், அந்த ஆவணங்களைவைத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டபோது, சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு உலக அளவில் தொழில் தொடர்புகள், அசையும் சொத்துக்கள் – அசையாச் சொத்துக்கள் என பரந்து விரிந்த சாம்ராஜ்யம் இருப்பது தெரியவந்தது. இதுதான் அ.தி.மு.க எம்.பி-க்களின் கூச்சலுக்குக் காரணம். சிதம்பரத்தையும், கார்த்தி சிதம்பரத்தையும் இதற்காக கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒற்றைக் கோரிக்கை.

[You must be registered and logged in to see this image.]
லண்டன், அமெரிக்கா, ஆப்ரிக்கா, துபாய், சிங்கப்பூர்…
மத்திய அமலாக்கத் துறையும் வருமானவரித் துறையும் தங்கள் விசாரணையின் அடிப்படையில் கண்டறிந்த, கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் மற்றும் பணப் பரிவர்த்தனை விவரங்களை உச்ச நீதிமன்றத்தில், சீலிட்ட கவரில் வைத்து சமர்ப்பித்துள்ளன. 
அதில் உள்ள விவரங்கள் என வட இந்திய ஊடகங்கள் வெளியிட்ட பட்டியல்…
அட்வான்டேஜ் ஸ்ராட்டிஜிக்  கன்சல்டிங் என்ற நிறுவனம் சென்னையில் உள்ளது. இது கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமானது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனம் சிங்கப்பூரில் இதே பெயரில் செயல்படுகிறது. அது வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள்…
1. லண்டனில் உள்ள சோமர்செட் என்ற பகுதியில், 2011 -ம் ஆண்டு, 88 ஏக்கர் நிலத்தை 1 மில்லியன் பவுண்டுக்கு வாங்கி உள்ளது. இதை லண்டனில் இயங்கும் ஆர்ட்டிவா டிஜிட்டல் லிமிடெட், ஓப்பன் ஹெய்மெர் நிறுவனங்களோடு இணைந்து வாங்கி உள்ளது. 
2. இலங்கையில் கொடிகட்டிப் பறக்கும், ‘லங்கா ஃபார்ச்சூன் ரெஸிடென்ஸ்’ குரூப்போடு இணைந்து முதலீடு செய்து உள்ளது.
3. கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம், துபாய் வழியாகப் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டு தென் ஆப்ரிக்காவில் பல ஏக்கர் பரப்பில் திராட்சைத் தோட்டங்களையும் பண்ணைகளையும் வாங்கி உள்ளது. உதாரணம் ரூவி பண்ணை, கேப் பழத்தோட்டம் மற்றும் திராட்சைத் தோட்டம், ஜியான்ட்வில்ட் என்டர்பிரைசஸ் மற்றும் ஒயின் தயாரிப்பு நிறுவனம். அதோடு ஸ்டெய்ன் அசோஷியேட்ஸ் நிறுவனத்தோடு பல பணப் பரிவர்த்தனைகளை அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டிஜிக் நிறுவனம் நடத்தி உள்ளது.
4. துபாயில் உள்ள மற்றொரு நிறுவனமான, பியர்ல் துபாய் எல்.எல்.சி என்ற நிறுவனத்தோடு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளது. 
5. இன்டர்நேஷனல் பிரீமியர் டென்னிஸ் அணியை பிலிப்பைன்ஸில் உள்ள நிறுவனங்களோடு இணைந்து கார்த்தி சிதம்பரம் நடத்தி வருகிறார்.
6. சிங்கப்பூர் ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘ரியல் பியாண்ட்’ நிறுவனத்தோடு சேர்ந்து சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் ரியல் எஸ்டேட் தொழிலில் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டுள்ளார்.  
7. பிரிட்டிஷ் வெர்ஜின் தீவில், ‘சர்ரிட்ஜ்’ என்ற நிறுவனத்தை, கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான சிங்கப்பூர் நிறுவனம் நடத்தி வருகிறது. இது 4 லட்சம் சிங்கப்பூர் டாலர்களை, ‘புல் இன்னோவேஷன்’ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. ‘கிபன் டிரேடிங் லிமிடெட்’ என்ற நிறுவனத்தோடும் இணைந்து தொழில் செய்து வருகிறது.
8. துபாயில் செயல்படும் ‘டெஸர்ட் டியூன்ஸ் பிராப்பர்டிஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம், கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனத்தில், 1.7 மில்லியன் சிங்கப்பூர் டாலர் முதலீடு செய்துள்ளது.
9. சிங்கப்பூரில் உள்ள, யூனிஸன் குளோபல் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்கள், 5 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளன. 
10. மணிலா மேவ்ரிக்ஸ் என்ற டென்னிஸ் அணியையும் கார்த்தி சிதம்பரத்தின நிறுவனம் கிராவிட்டாஸ் இன்வெஸ்ட்மென்ட், மேட்ச் பாயின்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் ஈவன்ட் என்ற நிறுவனத்தோடு சேர்ந்து வாங்கி உள்ளது. அந்த அணியின் பெயர் மணிலா மேவ்ரிக்ஸ்.  
11. மலேசியாவில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் 1.9 மில்லியன் மலேசியன் ரிங்கிட்ஸ் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் பெயர் பெனின்சுலா ஸ்மார்ட். கபே காபி டே என்ற பெயரில் மலேசியாவில் பல இடங்களில் கடைகளை நடத்தி வருகிறது.
12. சிங்கப்பூர் அட்வான்டேஜ் நிறுவனம், அட்வான்டேஜ் எஸ்ட்ராஜியா எஸ்போர்ட்டிவா என்ற பெயரில் துணை நிறுவனம் ஒன்றினை ஸ்பெயினில் திறந்துள்ளது. விளையாட்டு அகாடமியாகச் செயல்படுகிறது இந்த நிறுவனம்.
13. பேங்க் ஆஃப் அமெரிக்கா வங்கியில் 50 ஆயிரம் டாலர்களை கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பரிவர்த்தனை செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் பெயர் சென்னை ரிஸர்வ் – பிசினஸ் அட்வான்டேஜ் செக்கிங்.
அம்மாவின் ஆணைக்கிணங்க….
நாடாளுமன்றத்தின் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, இந்த விவகாரம் பற்றி, டெல்லியில் பேட்டியளித்தபோது, ‘‘அம்மாவின் ஆணைக்கிணங்க, நாங்கள் இந்தப் பிரச்னையை எழுப்பி உள்ளோம்” என்று போட்டு உடைத்தார். ஆக, ஜெயலலிதா, பி.ஜே.பி-க்கு ஆதரவுக் கரம் நீட்ட, காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சிகளின்  நாடாளுமன்றச் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டுள்ளார்.
கார்த்தி சிதம்பரம் மறுக்கவில்லை!
கார்த்தி சிதம்பரத்திடம் கருத்துக் கேட்க முயன்றபோது, அவர் பேசவில்லை.  பின்னர் அவர், மூன்று வரிகளில் வெளியிட்ட அறிக்கையில், ‘என்னுடைய வியாபாரங்கள் எல்லாம் சட்டப்படி நடக்கின்றன. எந்தப் பிரச்னை வந்தாலும் அதை சட்டப்படி சந்திப்போம்’ என்று தெரிவித்திருந்தார். கார்த்தி சிதம்பரத்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசினோம். ‘‘அவர், நியாயமாக பதில் சொல்ல வேண்டியது மூன்று பேருக்குத்தான். அவை, ரிசர்வ் வங்கி, கம்பெனிகள் பதிவுத்துறை, வருமானவரித் துறை. அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்துள்ளார். அதனால், இந்த விவகாரத்தில் அவர் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. இது ஓர் அரசியல் பழிவாங்கல்’’ என்றனர். ‘‘இந்தச் சொத்துக்கள் தன்னுடையது அல்ல” என்று கார்த்தி சிதம்பரம் சொல்லவில்லை.
வில்லங்கமான மலேசியா…
கார்த்தி சிதம்பரத்தைச் சுற்றியுள்ள இந்த விவகாரத்தில், குறிப்பிடத்தகுந்த விஷயம் கடந்த 2006 முதல் 2014 காலகட்டத்தில்தான் அவர் இத்தனை நிறுவனங்களை வாங்கிக்குவித்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அதுபோல, இந்தக் காலகட்டத்தில்தான் ஏர்செல் – மேக்ஸிஸ் விவகாரம் நடைபெற்றது. அந்த ஊழலுக்கும் தலைமையிடமாகச் செயல்பட்டது மலேசியாதான். தற்போது கார்த்தி சிதம்பரத்தின் சொத்து முதலீடுகள், பணம் போனது வந்தது எல்லாம் மலேசியாவை மையமாக வைத்துதான். அதனால், இன்னும் பல ரகசியங்கள் உடையக் காத்திருக்கின்றன.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11796
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum