Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இது ஜெயலலிதாவுக்கு தெரியுமா?
Page 1 of 1
இது ஜெயலலிதாவுக்கு தெரியுமா?
தமிழக அரசின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்த விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் முடங்கிக் கிடப்பதாக முணங்கல்கள் கேட்கத் தொடங்கி உள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தவாறு, ஏழைகளுக்கு இலவசமாக ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்தைக் கடந்த 2011 ஆம் ஆண்டு அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார் ஜெயலலிதா.
சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் காரணமாக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்த பிறகு, தமிழக முதல்வரானார் ஓ.பன்னீர் செல்வம். புதிய திட்டங்கள் எதுவும் கடந்த 4 மாதங்களாக தொடங்கப்படவில்லை.அதே நேரத்தில் ஜெயலலிதா தொடங்கிவைத்து செயல்படுத்தப்பட்டு வந்த திட்டமான இலவச வெள்ளாடுகள், கறவை மாடுகள் திட்டமும் முன்னேற்றம் கொள்ளாமல் இருப்பது கவனிக்கத்தக்கது.
கிராமப் பொருளாதரத்தில் வளர்ச்சி கொண்டு வருவதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் குறித்து கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பிலான கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டிற்கான இலக்கும் 2015- 2016 ஆம் ஆண்டிற்கான பயனாளிகள் ஆண்டுக்கு தலா 1.50 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நடப்பாண்டில் வழங்கப்பட்ட ஆடுகள் மற்றும் மாடுகளின் எண்ணிக்கை சொற்ப அளவிலானதே.
தான் தொடங்கி வைத்த திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது ஜெயலலிதாவுக்கு தெரியுமா? அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் உள்ளாரா?
உண்மை நிலை என்ன என்பதை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்தான் சொல்ல வேண்டும்!

அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் ஏழைஎளிய மற்றும் விதவைப்பெண்கள் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரைக் கண்டறிந்து இலவசமாக வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கப்பட்டன. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையாமல் அத்திட்டம் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நிலம் மற்றும் விவசாயம் சார்ந்து வாழக்கூடியவர்களில் 36%-க்கும் மேலானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். இது தேசிய சராசரியான 21.12%-ஐக் காட்டிலும் மிக அதிகம் என்று திட்டக் குழு அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதனைக் கருத்தில் கொண்டும் மாநில அரசு சார்பில் தலித் மற்றும் பழங்குடி மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
அதன்படி விறு விறுப்பாக செயல்படத் தொடங்கிய இந்தத் திட்டம், தற்போது சுனங்கியுள்ளதாக இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையின் 2014 ஆம் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் கீழ் இயங்குகிற இந்த திட்டம் மட்டுமல்லாமல் இது போன்று விவசாயம், கூட்டுறவு, சிறு - குறு தொழில் என இன்னும் பல திட்டங்களையும் அது மதிப்பீடு செய்து, பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆண்டொன்றுக்கு 12,000 வீதம் 2011 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுக்குள் 60,000 ஜெர்ஸி மற்றும் ஹோல்ஸ்டீன் பிரிசியன் வகைக் கறவை மாடுகளை வழங்குவது இதன் நோக்கம். தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் பால் கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள மாவட்டங்கள் அடிப்படையில் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
ஒரு பசு வாங்க 30,000 என அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் 2011 - 12 முதல் 2012 - 13 வரை பசுக்களின் விலை, போக்குவரத்து, காப்பீடு மற்றும் இதர செலவு என 24,000 பசுமாடுகள் வாங்க இதுவரையிலும் ரூ. 84.28 கோடி செலவிடப்பட்டுள்ளது.
கறவை மாடுகள் வழங்கும் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை இந்தியக் கணக்காயரின் தணிக்கைத் துறை 21 மாவட்டங்களின் 136 கிராமப் பஞ்சாயத்துக்களில் விரிவான ஓர் ஆய்வை மேற்கொண்டது. கடந்த ஆண்டு வெளியிட்ட அந்த அறிக்கையைப் பார்த்தால் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.
அதாவது, அருகில் உள்ள சந்தைகளில் பசுக்கள் வாங்காமல், ஜெர்சி பசு வாங்குவதற்கு ஏற்ற இடமாக இல்லாத ஆந்திர மாநிலத்தின் புங்கனூர், பலமனேர் மற்றும் பீலேறு சந்தைகளில் வாங்கியதால் தரம் குறைந்த - வயதான, பால் சுரப்பற்ற பசு மாடுகளை, திட்ட அறிவிப்புக்காக மிக அவசரமாக அரசு வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் பயனாளிகளைத் தேர்வுசெய்வதில் வெளிப்படையான தன்மை எதுவும் பின்பற்றப்படாமல் தகுதியற்ற பயனாளிகளைத் தேர்வுசெய்துள்ளனர் என்றும், தேர்வு செய்வதில் அரசியல் பிரமுகர்களின் தலையீடு இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே போல வழிகாட்டும் நெறிமுறை சொல்கிற 30% தலித் - பழங்குடியினப் பெண்கள் ஒரு கிராமத்தில்கூடத் தேர்வு செய்யப்படவில்லை. அவர்களுக்குக் கறவை மாடுகளும் வழங்கப்படவில்லை. மேலும் கொடுக்கப்பட்ட பசுக்களுக்குத் தீவனம் எங்கிருந்து பெறுவது என்பதைப் பற்றியோ, கொள்ளை நோய்க் காலத்தில் பாதிக்கப்பட்டால் இழப்பீடு பெறக் காப்பீடு வழங்கப்படுவது குறித்தோ எந்த உத்தரவாதம் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் கீழ் இயங்குகிற இந்த திட்டம் மட்டுமல்லாமல் இது போன்று விவசாயம், கூட்டுறவு, சிறு - குறு தொழில் என இன்னும் பல திட்டங்களையும் அது மதிப்பீடு செய்து, பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆண்டொன்றுக்கு 12,000 வீதம் 2011 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுக்குள் 60,000 ஜெர்ஸி மற்றும் ஹோல்ஸ்டீன் பிரிசியன் வகைக் கறவை மாடுகளை வழங்குவது இதன் நோக்கம். தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் பால் கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள மாவட்டங்கள் அடிப்படையில் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
ஒரு பசு வாங்க 30,000 என அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் 2011 - 12 முதல் 2012 - 13 வரை பசுக்களின் விலை, போக்குவரத்து, காப்பீடு மற்றும் இதர செலவு என 24,000 பசுமாடுகள் வாங்க இதுவரையிலும் ரூ. 84.28 கோடி செலவிடப்பட்டுள்ளது.
கறவை மாடுகள் வழங்கும் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை இந்தியக் கணக்காயரின் தணிக்கைத் துறை 21 மாவட்டங்களின் 136 கிராமப் பஞ்சாயத்துக்களில் விரிவான ஓர் ஆய்வை மேற்கொண்டது. கடந்த ஆண்டு வெளியிட்ட அந்த அறிக்கையைப் பார்த்தால் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.
அதாவது, அருகில் உள்ள சந்தைகளில் பசுக்கள் வாங்காமல், ஜெர்சி பசு வாங்குவதற்கு ஏற்ற இடமாக இல்லாத ஆந்திர மாநிலத்தின் புங்கனூர், பலமனேர் மற்றும் பீலேறு சந்தைகளில் வாங்கியதால் தரம் குறைந்த - வயதான, பால் சுரப்பற்ற பசு மாடுகளை, திட்ட அறிவிப்புக்காக மிக அவசரமாக அரசு வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் பயனாளிகளைத் தேர்வுசெய்வதில் வெளிப்படையான தன்மை எதுவும் பின்பற்றப்படாமல் தகுதியற்ற பயனாளிகளைத் தேர்வுசெய்துள்ளனர் என்றும், தேர்வு செய்வதில் அரசியல் பிரமுகர்களின் தலையீடு இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் காரணமாக முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்த பிறகு, தமிழக முதல்வரானார் ஓ.பன்னீர் செல்வம். புதிய திட்டங்கள் எதுவும் கடந்த 4 மாதங்களாக தொடங்கப்படவில்லை.அதே நேரத்தில் ஜெயலலிதா தொடங்கிவைத்து செயல்படுத்தப்பட்டு வந்த திட்டமான இலவச வெள்ளாடுகள், கறவை மாடுகள் திட்டமும் முன்னேற்றம் கொள்ளாமல் இருப்பது கவனிக்கத்தக்கது.
கிராமப் பொருளாதரத்தில் வளர்ச்சி கொண்டு வருவதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் குறித்து கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பிலான கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டிற்கான இலக்கும் 2015- 2016 ஆம் ஆண்டிற்கான பயனாளிகள் ஆண்டுக்கு தலா 1.50 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நடப்பாண்டில் வழங்கப்பட்ட ஆடுகள் மற்றும் மாடுகளின் எண்ணிக்கை சொற்ப அளவிலானதே.
தான் தொடங்கி வைத்த திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது ஜெயலலிதாவுக்கு தெரியுமா? அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் உள்ளாரா?
உண்மை நிலை என்ன என்பதை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்தான் சொல்ல வேண்டும்!
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» எது நாடகம்? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
» ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதங்கள்: சி.பி.ஐ. விசாரணை தேவை
» ஜெயலலிதாவுக்கு மீண்டும் மிரட்டல்
» ஜெயலலிதாவுக்கு கனிமொழி நோட்டீஸ்
» ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுப்பு
» ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதங்கள்: சி.பி.ஐ. விசாரணை தேவை
» ஜெயலலிதாவுக்கு மீண்டும் மிரட்டல்
» ஜெயலலிதாவுக்கு கனிமொழி நோட்டீஸ்
» ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum