TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun May 28, 2017 8:39 am

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 6:56 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Tue May 16, 2017 7:21 pm

» தாய் தந்தை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sat May 13, 2017 12:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:49 am

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 6:32 pm

» நீ இல்லையேல் கவிதையில்லை
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 12:23 pm

» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
by velang Thu May 04, 2017 8:27 am

» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
by கவிப்புயல் இனியவன் Tue May 02, 2017 8:18 pm

» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon May 01, 2017 7:42 am

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 1:46 pm

» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
by velang Fri Apr 28, 2017 10:51 pm

» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
by velang Mon Apr 24, 2017 10:18 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட
by velang Thu Apr 20, 2017 7:53 am

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன் Tue Apr 18, 2017 11:58 am

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:59 am

» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.
by velang Sat Apr 15, 2017 10:28 pm

» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 7:13 pm

» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.
by velang Thu Apr 13, 2017 7:44 am

» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க
by velang Tue Apr 11, 2017 10:04 pm

» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 12:41 pm

» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்
by velang Fri Apr 07, 2017 10:30 pm

» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
by velang Thu Apr 06, 2017 9:41 pm

» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க
by velang Mon Apr 03, 2017 10:17 pm

» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க
by velang Thu Mar 30, 2017 9:25 pm

» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
by velang Wed Mar 29, 2017 8:25 am

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:42 am

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:18 am

» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
by velang Wed Mar 22, 2017 10:09 pm

» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
by velang Tue Mar 21, 2017 9:48 pm

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 8:47 pm

» வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள
by velang Sat Mar 18, 2017 9:30 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 5:23 pm

» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட
by velang Thu Mar 16, 2017 9:44 pm

» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட
by velang Wed Mar 15, 2017 9:41 pm

» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட
by velang Tue Mar 14, 2017 10:02 pm

» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட
by velang Sun Mar 12, 2017 9:57 pm

» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 9:01 pm

» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 7:30 pm

» வேலன்:-டெக்ஸ்டாப்பினை அழகுப்படுத்த
by velang Sat Mar 11, 2017 10:21 pm


தஞ்சாவூர் பெரிய கோயில்--தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 9

Go down

HOT தஞ்சாவூர் பெரிய கோயில்--தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 9

Post by sakthy on Fri May 23, 2014 9:41 pm

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 9

மன்பதை எல்லாம் தமிழால் வாழவேண்டும்;
மல்குபெயர் செந்தமிழாய் மலர வேண்டும்;
அன்பகமாய் தமிழரகம் தமிழ ணிந்து,
இன்ப நிழற் பூஞ்சோலை கல்விச் சாலை
இயலிசை நாடக மேடை கோயிலெல்லாம்
தென்றமிழே நடம் புரியத் தமிழ ராட்சி
செந்தமிழின் ஆட்சியெனத் திகழ்வ தென்றோ?



தஞ்சாவூர் பெரிய கோயில் மறைக்கப்பட்ட அதிசயம் என, The encyclopedia Britannica ,கருத்துக் கூறுகிறது. ஏனென்றால் தமிழ் நாட்டைத் தவிர, 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருந்தும் கூட,உலகின் வேறு இடங்களில் அதிகம் பேசப்படவில்லை என்றும், தஞ்சைப் பெரிய கோயிலை விட கட்டிடக் கலையில் அதிகம் பெரிதாக இல்லாத பல, உலகெங்கும் பேசப்படுகிறது என்றும் ஆதங்கப்படுகிறது The encyclopedia Britannica .

அத்துடன் சரஸ்வதிமகால் (Thanjavur Saraswathi Mahal) தான் உலகிலேயே பழமையான ஓலைச்சுவடிகளை பேணிக் காத்துவரும் ஒரே நிலையம் (the most exceptional Indian manuscript collection /gathering of Palm leaf manuscripts ) எனவும் பாராட்டி உள்ளது.

உண்மைதான் தமிழர்களின் நாகரீகம், பண்பாடு, கலை, கலாச்சாரம், தொன்மை, மொழி, வரலாறு எல்லாமே மறைக்கப்பட்டதுடன்,2000 ஆண்டுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளது. இதை தமிழன் உணராதவரை,அவனை உலகில் தூக்கி நிறுத்த முடியாது.

தஞ்சாவூர் பெரிய கோயில்--தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 9 2yzbnlf

1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்தக் கோயில்,  ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் ,பின்னர் நாயக்கர் காலத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் (வட மொழியில் பிரகதீசுவரர் கோயில்) எனவும் தஞ்சை பெரிய கோயில் எனவும் அழைக்கப்பட்டது. இங்கே ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய நந்தியும்,மிகப்பெரிய சிவலிங்கமும் உள்ளன.

மூன்றாம் இராசேந்திரனுடன் சோழப்பேரரசு 1279 இல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, நாயக்கர்களின் ஆதிக்கம் ஆரம்பமான போதும், இந்தக் கோயிலை அவர்கள் அழியவிடாது விரிவு படுத்தினார்கள்.

தஞ்சை பெரியகோயில் நினைவாக 1000 ரூபா நோட்டும் தபால்தலையும் வெளியிடப்பட்டன.

தஞ்சாவூர் பெரிய கோயில்--தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 9 20pauck

கோயில் பற்றிய மேலதிக தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி அதில் பரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்து கொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.

தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர்.

இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. கோயிலின் அடியில் கிடைத்த பெரிய பருமணல், மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல் என்பதால், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தமிழ் மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை கட்டியது, காட்சிக்காகவும் பக்திக்காகவும் மட்டும் அல்ல. அன்னியர்களால் நமது வரலாறு அழியாமல் இருக்கவும், பொக்கிஷங்களை பாதுகாக்கவும்தான் பிரமாண்டமான கோயில்களைக் கட்டியுள்ளனர். அப்படி பிரமாண்டமாக அமைத்தால்தான் அதன் அடியில் பெரும் நிலவறைகள் வடிவமைத்து பொருட்களைப் பாதுகாக்க முடியும்.

எனவே, பெரிய கோயிலின் அடியில் நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்மூலம் தென் கிழக்கு ஆசியாவை வென்ற தமிழனின் மற்றொரு பரிமாணத்தையும், மணல் அஸ்திவாரக் கட்டுமானக் கலையின் வரலாற்றையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

கோயிலில் அகழ்வாராய்ச்சி நடத்தித்தான் இதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. செயற்கைக்கோள் உதவியுடன் ரிமோட் சென்சார் மற்றும் Ground penetrating radar தொழில்நுட்பம் மூலம் பூமிக்குள் ஊடுருவி படங்களை எடுத்து ஆய்வு செய்யலாம் என்கிறார்கள்.

தஞ்சையில் தலையாட்டிப் பொம்மையும் பெயர் போனது.

தஞ்சாவூர் பெரிய கோயில்--தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 9 2n72g4j
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1936
Join date : 26/09/2010

Back to top Go down

HOT Re: தஞ்சாவூர் பெரிய கோயில்--தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 9

Post by ஜனனி on Fri May 23, 2014 10:02 pm

தஞ்சையில் தலையாட்டிப் பொம்மையும் பெயர் போனது
சிறிய வயது ஞாபகம் வருகிறது
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum