TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எவ்வளவு நாட்களாக நீங்கள் காதலிக்கிறீர்கள்?

4 posters

Go down

எவ்வளவு நாட்களாக நீங்கள் காதலிக்கிறீர்கள்? Empty எவ்வளவு நாட்களாக நீங்கள் காதலிக்கிறீர்கள்?

Post by sakthy Fri Apr 04, 2014 9:19 pm

எவ்வளவு நாட்களாக நீங்கள் காதலிக்கிறீர்கள்?

நான் காதலித்தால், உடனே அம்மாவிடம் இருந்து ,
உடனே வந்து விடு,வெளி நாடு போதும் என்று கடுமையாக கடிதம் வரும். அதனால் நான் காதலிக்கவில்லை. காதலிக்க நேரமும் கிடையாது. ஆனாலும் காதலித்தவர்களிடம், காதலிப்பவர்களிடம் தான் இந்தக் கேள்வி.
என்ன கேள்வி இது, என்று உங்கள் மனத்தில் கேள்வி எழும்.

காதல் செய்வதை தமிழர்கள் ஆதரித்தார்கள்,ஏற்றுக் கொண்டார்கள் என்று சங்க நூல்கள் சொல்லுகின்றன. ஆனாலும் அதற்கு ஒரு விதிமுறை உண்டு என்கிறது தமிழ்க் கலாச்சாரம். இன்று பலர் சொல்லக் கேட்டிருப்போம்,சில மாதக் காதல்,சில வருடக் காதல்,பல வருடங்களாக காதலிக்கிறோம் என பல பதில்கள் வரும். ஆனால் ஒரு சிலரோ ஒரு சில மணி நேரத்தில்,ஏன் சில நிமிடங்களில் கூடக் காதலிக்கத் தொடங்கி விடுவார்கள். அவை எல்லாம் நீதிமன்றங்களில் போய் முடிவதையும் காண்கிறோம்.

ஆனால்......

களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்
திங்கள் இரண்டின் அகமென மொழிப, என்று இறையனார் களவியல் சொல்கிறது.அதாவது களவாகிய காதல் இரண்டு மாத காலம் தான் நிகழ வேண்டுமாம். அதன் பின் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.காதலிப்பதற்கும் ஒரு கால அளவுண்டு என்பதை, களவும் கற்று மற, (இதையும் நாம் மாற்றி விட்டோம்) என்ற முதுமொழி மூலம் உணர்த்தினார்கள் நம் தமிழ்ப் பெரியோர்கள்.

காதலித்துக்கொண்டே இருந்துவிடக் கூடாது காதல் திருமணமாக மாறவேண்டும் என்பதே, நம் முன்னோர் வகுத்த மரபாகும். எப்போது காதலித்தவன் பெண்ணை கழற்றிவிடத் துணிந்தானோ,அன்று திருமணத்தின் அவசியம் வந்து விட்டது. இன்னும் சொல்லப் போனால், கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் இருக்கவேண்டிய ஒன்று என்ற சிந்தனை எப்போது தோன்றியதோ, அன்றே திருமணத்துக்கான தேவையும் தோன்றிவிட்டது என்று சொல்லலாம்.

கற்பு என்றால் ஒழுக்கம் என்று பொருள். அது ஆண்,பெண் இருபாலருக்குமே பொதுவானது. சில ஆண்கள் பெண்களைக் காதலி்த்துவிட்டு ஏமாற்றிய சூழலில் தான்,கற்பு-ஒழுக்கம்- தவறிய, இந்த மன்மதக் குஞ்சுகளைக் கட்டுப்படுத்த திருமணம் என்ற சடங்கு பெரியோர்களால் உருவாக்கப்பட்டது.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப, என்கிறது தொல்காப்பியம்.
பொய்சொல்லுதல், ஏமாற்றுதல்,காதலித்து விட்டு ஏமாற்றுதல், திருமணம் செய்துகொள்வேன் எனக் கூறி கால நீட்டிப்பு செய்தல், இப்படியான செயல்கள் தோன்றத் தொடங்கியதன் விளைவே,திருமணம் என்ற மணச்சடங்கு பெரியோர்களால் உருவாக்கப்பட்டது,என்கிறார் தொல்காப்பியர். இங்கே கரணம் என்பது மணச்சடங்கு,திருமணத்தைக் குறிக்கும்.

எனவே காதலிப்பவர்கள், ஆணையோ பெண்ணையோ ஏமாற்றாது, முடிந்தவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். கவர்ச்சியால் உருவாகும் காதல் நிலைத்ததில்லை.அது ஒரு மோகம் -infatution – venereal appetite – என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த சமயத்தில், ஆயிரம் பொய் சொல்லி திருமண செய் என்பது தவறானது என்பதும், ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய் -  என்பதே சரியான விளக்கம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் நாட்டிலும் தமிழுக்கு இன்னமும் இடம் கிடைக்கல,புதியதமிழிலும் தமிழுக்கு இன்னமும் இடம் கிடைக்கல..........அதனால் இங்கே வந்தேன்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எவ்வளவு நாட்களாக நீங்கள் காதலிக்கிறீர்கள்? Empty Re: எவ்வளவு நாட்களாக நீங்கள் காதலிக்கிறீர்கள்?

Post by krishnaamma Sat Apr 05, 2014 6:58 am

தமிழ் நாட்டிலும் தமிழுக்கு இன்னமும் இடம் கிடைக்கல,புதியதமிழிலும் தமிழுக்கு இன்னமும் இடம் கிடைக்கல..........அதனால் இங்கே வந்தேன்.
 

அதற்கு புதியதமிழ் என்ன செய்யணும் 
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

எவ்வளவு நாட்களாக நீங்கள் காதலிக்கிறீர்கள்? Empty Re: எவ்வளவு நாட்களாக நீங்கள் காதலிக்கிறீர்கள்?

Post by sakthy Sat Apr 05, 2014 4:24 pm

சினிமாவிற்கு -நடிகர் நடிகைகளூக்கு, விளையாட்டுக்கு- IPL ற்கு, அலைபேசிக்கு-Mobile ற்கு-Nokia விற்கு,கதைகளுக்கு ஒன்று-தென்னாலிராமனுக்கு ஒன்று,மருத்துவத்திற்கு -7 ,
கணினிக்கு -3 ,இப்படி ஒரு விடயம்- பல தலைப்பு.இது கொஞ்சம் ஓவராக இல்லையா அண்ணா/அக்கா.

இல்லாத இந்துக் கடவுளுக்கு,மத வெறியுடன் இருக்கும் மதங்களுக்கு, தனி இடம் இருக்கு,சாதிக்கு மட்டும் இன்னமும் வரவில்லை. அதற்கு ஒரு தலைப்பு வருவதற்கு முன் தாய்த் தமிழுக்கு ஒரு இடம் வரும் என நம்புகிறேன்.

தாய்த் தமிழில் எழுதும் அல்லது தமிழ் பற்றிய கட்டுரை பதிவுகளுக்கு ஒரு தலைப்பு இல்லையே!
பள்ளியில்,கல்லூரிகளில் தமிழை தூக்கிப் போட்டோம். அம்மா,அப்பாவை தூக்கிப் போட்டு,டாடி மம்மியை எடுத்துக் கொண்டோம்..
இனித் தூக்கிப் போட என்ன இருக்கிறது?

ஏற்கனவே ஜனனி அக்காவிடம் சொல்லியாயிற்று. தேர்தல் வேலகள் முடிந்ததும், சரி செய்து விடுவார் என நம்புவோம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எவ்வளவு நாட்களாக நீங்கள் காதலிக்கிறீர்கள்? Empty Re: எவ்வளவு நாட்களாக நீங்கள் காதலிக்கிறீர்கள்?

Post by mmani Sat Apr 05, 2014 4:42 pm

அய்யா சக்தி நீங்கள் எந்த தலைப்பு வைக்கணும் என்று சொன்னால் அதை நமது தளத்தின் அட்மின் மாற்றம்செய்ய சவுரியமாக இருக்கும் ....கூறுங்கள்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

எவ்வளவு நாட்களாக நீங்கள் காதலிக்கிறீர்கள்? Empty Re: எவ்வளவு நாட்களாக நீங்கள் காதலிக்கிறீர்கள்?

Post by ஜனனி Sun Apr 06, 2014 7:48 am

mmani wrote:அய்யா சக்தி நீங்கள் எந்த தலைப்பு வைக்கணும் என்று சொன்னால் அதை நமது தளத்தின் அட்மின் மாற்றம்செய்ய சவுரியமாக இருக்கும் ....கூறுங்கள்
 அறிவிப்பு  அறிவிப்பு  அறிவிப்பு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

எவ்வளவு நாட்களாக நீங்கள் காதலிக்கிறீர்கள்? Empty Re: எவ்வளவு நாட்களாக நீங்கள் காதலிக்கிறீர்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum