Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மைண்ட் வாய்ஸோடு மைக் பிடித்த வடிவேலு!
Page 1 of 1
மைண்ட் வாய்ஸோடு மைக் பிடித்த வடிவேலு!
கடந்த மூன்று வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வனவாசம் அனுபவித்த வடிவேலு மீண்டும் 'தெனாலிராமன்’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி. வடிவேலு படமே வரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலைப் பார்த்த சினிமா புள்ளிகளை எல்லாம் கடந்த 1-ம் தேதி 'தெனாலிராமன்’ இசையை வெளியிட்டு ஏப்ரல் ஃபூல் ஆக்கினார் வடிவேலு.
வழக்கமாக இதுபோன்ற இசை வெளியீட்டு விழாவுக்கு ஹீரோக்கள்தான் லேட்டாக வந்து நிகழ்ச்சி நடத்துபவர்களைக் கடுப்பேற்றுவார்கள். இந்த விழாவில் விதிவிலக்காக கதாநாயகி மீனாட்சி தீக்ஷிதா லேட்டாக வந்து நிறைய பேருக்கு பீப்பி ஊதும் ரேஞ்சுக்கு பிபி எகிறவைத்தார். இனி ஆடியோ ஃபங்ஷன் ஸ்டார்ட்...
''ஏன் இப்படி... உனக்கு இது தேவையா பேசாம காமெடி பண்ணிட்டு இருக்க வேண்டியது தானே...’ னு நீங்க மனசுல நினைக்கறது என் காதுல நல்லா கேட்குது'' என்று மைன்ட் வாய்ஸ் பீடிகையோடு மைக் பிடித்தார், வடிவேலு.
தமிழ்நாட்ல இருக்குற எல்லா வீட்டு ரேஷன் கார்டுல என் பேர் இல்லை. மத்தபடி அவங்க வீட்டுல நானும் ஒரு குடும்ப உறுப்பினர்தான். தெலுங்கு, மலையாள சினிமாவுல நடிக்கக் கூப்பிட்டாங்க. 'தமிழ்நாட்ல வடிவேலுவுக்கு சான்ஸ் இல்லை. அதான் வெளிமாநிலத்துக்கு நடிக்க ஓடிப் போயிட்டான்...’னு கிளப்பிவிடுவாங்க. அதனால போகலை. அப்படியும்மீறி சிலபேர் தமிழ் படத்துல நடிக்க அழைச்சாங்க. அப்படி ஏதாவது நடந்துடக் கூடாதுனு சிலபேர் வாடகைக்கு சைக்கிள் எடுத்துட்டுப் போயி தடுப்புக் கட்டை போட்டாய்ங்க.
அதுக்கப்புறம் கோடம்பாக்கத்துலயே நிறையபேர் சின்னச்சின்ன வேஷத்துல நடிக்கறதுக்குக் கூப்பிட்டாங்க... வேண்டாம்னு மறுத்திட்டேன். ரெண்டு வருஷம் இடைவெளி விட்டாச்சு. இனிமே மறுபடி நடிக்கவரும்போது 'கிங்’கா என்ட்ரி கொடுக்கணும்னு நினைச்சேன். அப்போதான் யுவராஜ் கதை சொல்ல வந்தார். 'முதல்ல நான் நடிக்கறதுக்கு ஒ.கே-வானு தயாரிப்பாளர் கல்பாத்தி சார்கிட்டே பர்மிஷன் வாங்கிட்டு வா’னு சொன்னேன். 'அவருதான் அனுப்பி வெச்சாருனு சொன்னார். அப்படியே ஷாக்காயிட்டேன். இப்போ சொல்றேன்... 'தெனாலிராமன்’ படத்துல நடிக்கறதுக்கு ஒரு பைசாகூட சம்பளம் வேண்டாம். நிறைய பேர் கல்பாத்தி சாரை தேடிப்போய் 'வடிவேலு நடிச்சா உங்க கதி அதோ கதிதான் கதறினாங்க.’
வடிவேலுவுக்கு சினிமாவில் இந்த மூன்று வருட இடைவெளி ஏன்...? சின்ன ப்ளாஷ் பேக்!
'எந்தக் கப்பலுக்கு கேப்டன்?'
விஜயகாந்த் நடித்த 'தர்மபுரி’ படத்தில் வடிவேலு நடிக்க ஆசைப்பட்டார் இயக்குனர் பேரரசு. படத்தில்விஜயகாந்தை அடுத்த முதல்வர் ரேஞ்சுக்கு வசனத்தை எழுதி வடிவேலுவை பேசச் சொன்னார். கடுப்பான வடிவேலு மறுத்துவிட்டார். அன்றுமுதல் ஆரம்பித்தது மதுரை மண்ணின் மைந்தர்களுக்குள் பனிப்போர். வடிவேலு ஆபீஸ் அருகில் வசித்துவந்த விஜயகாந்த் உறவினர் ஒருவர் திடீரென்று இறந்துவிட, தே.மு.தி.க தொண்டர்கள் கூட்டம் வடிவேலு ஆபீஸை ஆக்ரமித்தது. அப்போது வெளியில் வந்த வடிவேலு விசாரிக்க 'நாங்க கேப்டன் ஆளுங்க...’ என்று சொல்ல... 'அப்படியா எந்தக் கப்பலுக்கு கேப்டன்’ என்று வடிவேலு எகத்தாளமாய் கேட்க நிலவரம் கலவரமானது.
தி.மு.க ஆதரவு பிரசாரம்
சாலிக்கிராமத்தில் அடிக்கடி வடிவேலு வீடு தாக்கப்பட, பாதுகாப்புக்காக அடைக்கலம்தேடி அலைந்தார். அப்போது சட்டமன்ற தேர்தலும் வர, வடிவேலுவை தி.மு.க. பக்கம் அலேக்காக லபக்கிக் கொண்டார் அழகிரி. 'விஜயகாந்தை மட்டும்தாம் தாக்கி பேசுவேன்...’ என்கிற நிபந்தனையோடு தி.மு.க ஆதரவு பிரச்சாரத்தில் இறங்கினார். 'மானைப்போல் மானம் என்றாய்... நடையில் மதயானை நீயே என்றாய்... வேங்கைப்போல் வீரம் என்றாய்... அறிவில் உயர்வாகச் சொல்லிக் கொண்டாய்... மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்...’ என்று எம்.ஜி.ஆர் பாடலைப்பாடி விஜயகாந்தை கிண்டலடித்தார்.
கண்டு கொள்ளாத தி.மு.க.
சட்டமன்ற தேர்தல் முடிவில் ஜெ முதல்வராக, விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக கப்சிப் ஆனார் வடிவேலு. தமிழ்சினிமாவில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய போனவர்கள் மறைமுகமாக மிரட்டப்பட்டனர். எந்த தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தாரோ அந்தக் கட்சியே அவரை உதாசீனப்படுத்தியது உச்சக்கட்ட கொடுமை. அதாவது ஒருபக்கம் ஸ்டாலின் மகன் உதயநிதி, ஏகப்பட்ட படங்களைத் தயாரித்தும் அந்தப் படங்களில் நடிக்கும் வாய்ப்பை வடிவேலுவுக்குத் தரவில்லை. அழகிரி மகன் தயாநிதி அழகிரி தயாரிக்கும் படங்களிலும், மு.க.தமிழரசு மகன் அருள்நிதி தயாரித்து நடிக்கும் படங்களிலும் வடிவேலுவுக்கு நோ சான்ஸ். நொந்து நூடுல்ஸானர். ஆனால் அப்படி நடித்திருந்தால் அது அவருக்கு மேலும் தி.மு.க-காரன் முத்திரைதான் விழுந்திருக்கும் என்பது வேறு விஷயம்.
போயஸ் கார்டன் போட்ட கறார் உத்தரவு!
கடந்த 3 வருடங்களாக தமிழ் சினிமா, கைப்பிள்ளையைக் கண்டு கொள்ளவில்லை. சென்னைக்கும், மதுரைக்கும் விமானத்தில் சீசன் டிக்கெட் கொண்டு அடிக்கடி பறந்தார். தினசரி ரெமி மார்ட்டின் ப்ளஸ் எம்.ஜி.ஆர் பாடல்களோடு கழித்தார். ஜெயலலிதா அரசு சினிமா நூற்றாண்டு விழா நடத்தியபோது அதில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தை போயஸ் தோட்டத்துக்கு தூது விட்டார் வடிவேலு. கடுப்பான ஜெயலலிதா, வடிவேலுவுக்கு உடனடியாக நோ சொன்னர். அதுமட்டுமல்ல சினிமாவில் பெரிய லிஸ்ட் கொடுத்து இவர்கள் எல்லாம் விழாவுக்கு வரவேக்கூடாது என்று போயஸ் கார்டன் கறார் உத்தரவு போட்டது.
கிருஷ்ண தேவராயர் பிரச்னை...
இயக்குனர் சிம்புதேவன் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ இரண்டாம் பாகம் எடுக்க அணுகினார். 'நோ’ சொல்லி அணுப்பியவர் இப்போது அதேமாதிரி சரித்திரப் படமான 'தெனாலிராமன்’ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். கிருஷ்ண தேவராயர் வேஷத்தில் வடிவேலு நடிப்பதை சில தெலுங்குகாரர்கள் தீவிரமாக எதிர்க்கிறார்கள். சமீபத்தில் ஒரு நிருபர் 'நீங்கள் கிருஷ்ண தேவராயர் வேஷத்தில் நடிக்கிறார்களா?’ என்று கேள்வி கேட்க 'ஒரு மன்னன் வேஷத்தில் நடிக்கிறேன் அவ்வளவுதான்...’ என்று சாமார்த்தியமாக பதில் சொல்லி இருக்கிறார் வடிவேலு.
சூடுகண்ட வடிவேலு பூனை...
தெனாலிராமன் கதை ஒன்று உண்டு ஒருமுறை தெனாலி, தனது வீட்டுக்குவந்த பூனைக்குச் சுடச்சுட பால் கொண்டுவந்து வைத்தார். ஆவலோடு அருந்திய பூனை சூடு கண்டு பதறி ஓடியது. அதன்பின் ஆறிய பாலை கண்டால்கூட பூனை அலறித் துடித்து ஒடியது. இப்போது வடிவேலு நிலைமையும் அதுதான். ஏற்கெனவே அரசியலில் சூடு கண்டுவிட்ட வடிவேலு, இப்போது சாதாரணமாக அரசியல்வாதியை நேரில் பார்த்தால்கூட அலறிக்கொண்டு அந்த இடத்தை விட்டே எஸ்கேப் ஆகிவிடுகிறார்!
- திருவாரூர் குணா

''உண்மையிலேயே மனோபாலா சொன்னது மாதிரி நான் ரெண்டு வருஷம் சினிமாவிலே இருந்து ஓய்வெடுத்தது சந்தோஷமாத்தான் இருந்துச்சு. என்னென்னமோ நடந்து போச்சு. காமெடித்தானே செஞ்சேன்... அதையெல்லாம் காமெடியா எடுத்துக்க வேண்டியதுதான். நான் முன்னாடி செய்த காமெடியத்தான் இப்போ எல்லோரும் வெளியில செஞ்சிகிட்டு இருக்காங்க. நான் ஏற்கெனவே சொல்லி இருக்கேன்.
தமிழ்நாட்ல இருக்குற எல்லா வீட்டு ரேஷன் கார்டுல என் பேர் இல்லை. மத்தபடி அவங்க வீட்டுல நானும் ஒரு குடும்ப உறுப்பினர்தான். தெலுங்கு, மலையாள சினிமாவுல நடிக்கக் கூப்பிட்டாங்க. 'தமிழ்நாட்ல வடிவேலுவுக்கு சான்ஸ் இல்லை. அதான் வெளிமாநிலத்துக்கு நடிக்க ஓடிப் போயிட்டான்...’னு கிளப்பிவிடுவாங்க. அதனால போகலை. அப்படியும்மீறி சிலபேர் தமிழ் படத்துல நடிக்க அழைச்சாங்க. அப்படி ஏதாவது நடந்துடக் கூடாதுனு சிலபேர் வாடகைக்கு சைக்கிள் எடுத்துட்டுப் போயி தடுப்புக் கட்டை போட்டாய்ங்க.
அதுக்கப்புறம் கோடம்பாக்கத்துலயே நிறையபேர் சின்னச்சின்ன வேஷத்துல நடிக்கறதுக்குக் கூப்பிட்டாங்க... வேண்டாம்னு மறுத்திட்டேன். ரெண்டு வருஷம் இடைவெளி விட்டாச்சு. இனிமே மறுபடி நடிக்கவரும்போது 'கிங்’கா என்ட்ரி கொடுக்கணும்னு நினைச்சேன். அப்போதான் யுவராஜ் கதை சொல்ல வந்தார். 'முதல்ல நான் நடிக்கறதுக்கு ஒ.கே-வானு தயாரிப்பாளர் கல்பாத்தி சார்கிட்டே பர்மிஷன் வாங்கிட்டு வா’னு சொன்னேன். 'அவருதான் அனுப்பி வெச்சாருனு சொன்னார். அப்படியே ஷாக்காயிட்டேன். இப்போ சொல்றேன்... 'தெனாலிராமன்’ படத்துல நடிக்கறதுக்கு ஒரு பைசாகூட சம்பளம் வேண்டாம். நிறைய பேர் கல்பாத்தி சாரை தேடிப்போய் 'வடிவேலு நடிச்சா உங்க கதி அதோ கதிதான் கதறினாங்க.’
'அதுசரி வடிவேலு என்ன குத்தம் செஞ்சார்’ என்று அவங்களிடம் திருப்பி கேட்டு இருக்கார். அந்த மனசு யாருக்குங்க வரும்? என்னைநம்பி கோடிக்கணக்கா செலவு செஞ்சு பிரம்மாண்டமா செட் போட்டிருக்கார். படத்துல என்னோட நடிக்கறதுக்கு ஹீரோயினை தேடும்போதுதான் பிரச்னை உண்டாச்சு. ஒவ்வொரு ஹீரோயினா செலக்ட் செய்து ஃப்ளைட்ல டிக்கெட் போட்டு அழைச்சு வந்தாங்க. இங்கே இருக்குறவங்க மெசேஜ் கொடுத்து திரும்பி ஊருக்கு ஏகப்பட்ட பொண்ணுங்கள அனுப்பிக்கிட்டே இருந்தாங்க. கடைசியா இதோ இந்த பொண்ணு மீனாட்சி வந்துச்சு. இப்போதான் ஒரிஜினல் வடிவேலுவைப் பார்க்குது. எல்லாரும் நல்லா பாருங்க. என்னை அந்தப் பொண்ணோட சேர்த்து பார்த்தா தக்காளி மேல தார் ஊத்தின மாதிரியில்ல இருக்கு.. 'தெனாலிராமன்’ படம் பிரமாதமா வந்திருக்கு. கிணறு வெட்ட வெட்ட ஊத்துல இருந்து குபுகுபுன்னு தண்ணி வர்ற மாதிரி புதுசுபுதுசா காமெடி பொத்துக்கிட்டு வந்திருக்கு'' என்று உற்சாகமாகப் பேசி முடித்தார்.
வடிவேலுவுக்கு சினிமாவில் இந்த மூன்று வருட இடைவெளி ஏன்...? சின்ன ப்ளாஷ் பேக்!
'எந்தக் கப்பலுக்கு கேப்டன்?'
விஜயகாந்த் நடித்த 'தர்மபுரி’ படத்தில் வடிவேலு நடிக்க ஆசைப்பட்டார் இயக்குனர் பேரரசு. படத்தில்விஜயகாந்தை அடுத்த முதல்வர் ரேஞ்சுக்கு வசனத்தை எழுதி வடிவேலுவை பேசச் சொன்னார். கடுப்பான வடிவேலு மறுத்துவிட்டார். அன்றுமுதல் ஆரம்பித்தது மதுரை மண்ணின் மைந்தர்களுக்குள் பனிப்போர். வடிவேலு ஆபீஸ் அருகில் வசித்துவந்த விஜயகாந்த் உறவினர் ஒருவர் திடீரென்று இறந்துவிட, தே.மு.தி.க தொண்டர்கள் கூட்டம் வடிவேலு ஆபீஸை ஆக்ரமித்தது. அப்போது வெளியில் வந்த வடிவேலு விசாரிக்க 'நாங்க கேப்டன் ஆளுங்க...’ என்று சொல்ல... 'அப்படியா எந்தக் கப்பலுக்கு கேப்டன்’ என்று வடிவேலு எகத்தாளமாய் கேட்க நிலவரம் கலவரமானது.
தி.மு.க ஆதரவு பிரசாரம்
சாலிக்கிராமத்தில் அடிக்கடி வடிவேலு வீடு தாக்கப்பட, பாதுகாப்புக்காக அடைக்கலம்தேடி அலைந்தார். அப்போது சட்டமன்ற தேர்தலும் வர, வடிவேலுவை தி.மு.க. பக்கம் அலேக்காக லபக்கிக் கொண்டார் அழகிரி. 'விஜயகாந்தை மட்டும்தாம் தாக்கி பேசுவேன்...’ என்கிற நிபந்தனையோடு தி.மு.க ஆதரவு பிரச்சாரத்தில் இறங்கினார். 'மானைப்போல் மானம் என்றாய்... நடையில் மதயானை நீயே என்றாய்... வேங்கைப்போல் வீரம் என்றாய்... அறிவில் உயர்வாகச் சொல்லிக் கொண்டாய்... மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்...’ என்று எம்.ஜி.ஆர் பாடலைப்பாடி விஜயகாந்தை கிண்டலடித்தார்.
கண்டு கொள்ளாத தி.மு.க.
சட்டமன்ற தேர்தல் முடிவில் ஜெ முதல்வராக, விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக கப்சிப் ஆனார் வடிவேலு. தமிழ்சினிமாவில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய போனவர்கள் மறைமுகமாக மிரட்டப்பட்டனர். எந்த தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தாரோ அந்தக் கட்சியே அவரை உதாசீனப்படுத்தியது உச்சக்கட்ட கொடுமை. அதாவது ஒருபக்கம் ஸ்டாலின் மகன் உதயநிதி, ஏகப்பட்ட படங்களைத் தயாரித்தும் அந்தப் படங்களில் நடிக்கும் வாய்ப்பை வடிவேலுவுக்குத் தரவில்லை. அழகிரி மகன் தயாநிதி அழகிரி தயாரிக்கும் படங்களிலும், மு.க.தமிழரசு மகன் அருள்நிதி தயாரித்து நடிக்கும் படங்களிலும் வடிவேலுவுக்கு நோ சான்ஸ். நொந்து நூடுல்ஸானர். ஆனால் அப்படி நடித்திருந்தால் அது அவருக்கு மேலும் தி.மு.க-காரன் முத்திரைதான் விழுந்திருக்கும் என்பது வேறு விஷயம்.
போயஸ் கார்டன் போட்ட கறார் உத்தரவு!
கடந்த 3 வருடங்களாக தமிழ் சினிமா, கைப்பிள்ளையைக் கண்டு கொள்ளவில்லை. சென்னைக்கும், மதுரைக்கும் விமானத்தில் சீசன் டிக்கெட் கொண்டு அடிக்கடி பறந்தார். தினசரி ரெமி மார்ட்டின் ப்ளஸ் எம்.ஜி.ஆர் பாடல்களோடு கழித்தார். ஜெயலலிதா அரசு சினிமா நூற்றாண்டு விழா நடத்தியபோது அதில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தை போயஸ் தோட்டத்துக்கு தூது விட்டார் வடிவேலு. கடுப்பான ஜெயலலிதா, வடிவேலுவுக்கு உடனடியாக நோ சொன்னர். அதுமட்டுமல்ல சினிமாவில் பெரிய லிஸ்ட் கொடுத்து இவர்கள் எல்லாம் விழாவுக்கு வரவேக்கூடாது என்று போயஸ் கார்டன் கறார் உத்தரவு போட்டது.
கிருஷ்ண தேவராயர் பிரச்னை...
இயக்குனர் சிம்புதேவன் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ இரண்டாம் பாகம் எடுக்க அணுகினார். 'நோ’ சொல்லி அணுப்பியவர் இப்போது அதேமாதிரி சரித்திரப் படமான 'தெனாலிராமன்’ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். கிருஷ்ண தேவராயர் வேஷத்தில் வடிவேலு நடிப்பதை சில தெலுங்குகாரர்கள் தீவிரமாக எதிர்க்கிறார்கள். சமீபத்தில் ஒரு நிருபர் 'நீங்கள் கிருஷ்ண தேவராயர் வேஷத்தில் நடிக்கிறார்களா?’ என்று கேள்வி கேட்க 'ஒரு மன்னன் வேஷத்தில் நடிக்கிறேன் அவ்வளவுதான்...’ என்று சாமார்த்தியமாக பதில் சொல்லி இருக்கிறார் வடிவேலு.
சூடுகண்ட வடிவேலு பூனை...
தெனாலிராமன் கதை ஒன்று உண்டு ஒருமுறை தெனாலி, தனது வீட்டுக்குவந்த பூனைக்குச் சுடச்சுட பால் கொண்டுவந்து வைத்தார். ஆவலோடு அருந்திய பூனை சூடு கண்டு பதறி ஓடியது. அதன்பின் ஆறிய பாலை கண்டால்கூட பூனை அலறித் துடித்து ஒடியது. இப்போது வடிவேலு நிலைமையும் அதுதான். ஏற்கெனவே அரசியலில் சூடு கண்டுவிட்ட வடிவேலு, இப்போது சாதாரணமாக அரசியல்வாதியை நேரில் பார்த்தால்கூட அலறிக்கொண்டு அந்த இடத்தை விட்டே எஸ்கேப் ஆகிவிடுகிறார்!
- திருவாரூர் குணா
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஆஸி.யில் சச்சின் 100-வது சதம் அடிக்க மாட்டார்: மைக் ஹஸி
» எண்பதுகளின் வெள்ளிவிழா கதாநாயகன் மைக் புகழ் மோகன், மீண்டும் கொலிவுட்டில் வலம்வர இருக்கிறார்.
» பிடித்த கவிதை...!!
» சீனாவில் வடிவேலு!
» சூர்யாவுக்குப் பிடித்த டாப் 10 படங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum