TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பசுமைப் புரட்சியை கைவிட்டே ஆகவேண்டும்!

Go down

பசுமைப் புரட்சியை கைவிட்டே ஆகவேண்டும்! Empty பசுமைப் புரட்சியை கைவிட்டே ஆகவேண்டும்!

Post by krishnaamma Wed Feb 19, 2014 7:33 am

பசுமைப் புரட்சியை கைவிட்டே ஆகவேண்டும்!
பசுமைப் புரட்சியை கைவிட்டே ஆகவேண்டும்! 1610075_682580945127370_1746851010_n
தமிழக அரசு தடாலடி முடிவு... அரசு செயலர் அதிரடி பேட்டி!
- ஜெ.வடிவேல்

நன்றி : பசுமை விகடன்

இன்றைய விவசாயத்தின் பிரச்னை சந்தைப்படுத்துவதில் இல்லை. தற்போது நாம் கடைபிடித்து வரும் விவசாய தொழில்நுட்ப முறைகளில்தான் இருக்கின்றது. 'பசுமைப் புரட்சி’ என்று சொல்லிச் சொல்லியே அடிப்படையில் பல்வேறு தவறுகளை நாம் செய்துவிட்டோம்.

'பசுமைப் புரட்சி' என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் இந்தக் காலத்துக்கு சரிப்பட்டு வராத விஷயங்கள்தான். அவையெல்லாம் நம்பமுடியாதவையே...''

- இப்படி அதிரடியாக போட்டுத் தாக்கியிருக்கிறார் தமிழக வேளாண்துறை செயலாளர் சுர்ஜித் கே.சௌத்ரி ஐ.ஏ.எஸ்.

ஏதோ ஒரு அறைக்குள்ளே உட்கார்ந்து கொண்டு இதை அவர் வெளிப்படுத்தவில்லை... பிப்ரவரி 15-ம் தேதியன்று சென்னையில் ஏ.பி.எம்.சி. (Agriculture Produce Marketing Committee) சார்பில் நடைபெற்ற கூட்டத்தில்தான் இப்படி பொளந்து கட்டினார் சௌத்ரி.

'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் போன்றவர்கள் கடந்த பல ஆண்டுகளாகவே 'பசுமைப் புரட்சி'யை நார்நாராகக் கிழித்துத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசுத் தரப்பிலிருந்தோ... வேளாண் பல்கலைக்கழகத் தரப்பிலிருந்தோ இதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. பெரும்பாலும் அதிகாரவர்க்கம் அனைத்துமே பசுமைப் புரட்சியை ஆதரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய சூழலில், அரசுத் தரப்பிலிருந்து... அதுவும் தமிழக வேளாண்துறையின் மிக உயரிய பொறுப்பிலிருந்து கொண்டு, சௌத்ரி பற்ற வைத்திருக்கும் இந்த நெருப்பு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

சௌத்ரிக்கு என்னாச்சு... எதற்காக இந்த அதிரடி... அவரை இப்படி மாற வைத்தது எது...' என்றெல்லாம் பல்வேறு கேள்வி களோடு... சென்னை தலைமைச்செயலகத்திலி ருக்கும் அவருடைய அலுவலகத்துக்குச் சென்றோம். சிறிது நேர காத்திருப்புக்குப் பின் நம்மை அழைத் தவரிடம் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்தோம்.

''யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீர் என்று இப்படி சீறிக் கிளம்பிவிட்டீர்களே..?''

''யாரும் எதிர்பார்க்காத நேரமல்ல... ஒவ்வொரு விவசாயியும் 'நமக்கு ஒரு நல்லது நடக்காதா’ என்று ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் நேரம்தான். இப்படிப்பட்ட சூழலில் 'பசுமைப் புரட்சி... சிவப்புப் புரட்சி' என்பதெல்லாம் நடக்காத காரியம். இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த 'பசுமைப் புரட்சி' எடுபட்டிருக்கும். ஆனால், இன்றைக்கு முழுக்க முழுக்க நம் நாட்டுக்கு சரிப்பட்டுவராத ஒன்றாகிவிட்டது பசுமைப் புரட்சி.

ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் என்ன செய்வோம்..? ஜுரத்துக்கான மருந்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுப்போம். அப்படியும் சரியாகவில்லை என்றால் 'ஆன்ட்டி செப்டிக்’ மருந்துகளைப் போடுவோம். எல்லாவற் றையும் பார்த்துப் பார்த்து அளவோடுதான் செய்வோம். அளவுக்கு மிஞ்சினால் குழந்தையின் உடல்நிலை தாங்காது. அதேபோல இந்த மண்ணும் குழந்தைதான். தேவையான அளவுக்குதான் உரத்தைப் போட வேண்டும். ஆனால், 'பசுமைப் புரட்சி' என்ற பெயரால் உரத்தை அளவுக்கு அதிகமாகக் கொட்டி, கொட்டி இன்றைக்கு நிலத்தைக் கெடுத்து வைத்திருக்கிறோம். இந்த மண்ணானது நோயாளியாகிவிட்டது.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்று, அங்கே இருக்கும் விவசாய முறைகளைப் பார்த்த பிறகுதான், தாய் மண்ணை நாம் எப்படியெல்லாம் தண்டித்துக் கொண்டிருக்கிறோம் என்பது எனக்குப் புரிந்தது. நம் நாட்டின் 'தலைசிறந்த வேளாண் விஞ்ஞானி' என்று சொல்லப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன், அடிக்கடி பல வெளிநாடுகளுக்கு போகிறார். அங்கு நடக்கும் விவசாய முறைகளைப் பார்க்கிறார். ஆனால், ஒரு முறையாவது 'நாம் தவறான பாதையில் பயணம் செய்கிறோம்’ என்பதை உணர்ந்தாரா என்று தெரிய வில்லை..?

நம் நாட்டை ஒப்பிடும்போது, வெளி நாடுகளில் புதுப்புது முறைகளில் பல மடங்கு மகசூலை வாரிக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். 'அங்கு நடப்பது என்ன தொழில்நுட்பம் என்பதை தெரிந்துகொண்டு... அந்த முறைகளை நாமும் செய்தால் விவசாயத்தில் தன்னிறைவு அடையலாம்’ என்று நம் அரசுக்கு எடுத்துச் சொல்லி இருக்க லாமே. ஆனால், நமக்கு எது தேவை யில்லையோ அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார் சுவாமிநாதன்.

பசுமைப் புரட்சி பற்றிய என்னுடைய கருத்தை அன்றைய தினம் மேடையில் ஒலித்தபோது, 'அவசியமான ஒரு கருத்தை, சரியான நேரத்தில் சொல்லி இருக்கிறீர்கள்’ என்று என்னிடம் சொன்னார் மேடையிலிருந்த நாடாளு மன்ற உறுப்பினர் சரத் ஜோஷி.

பக்கத்து மாநிலமான கேரளாவில் முழுக்க இயற்கை முறை விவசாயத்துக்கு மாறப்போவதாக அறிவித்திருக் கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் நாம் மட்டும் பசுமைப் புரட்சியையே தொடர்ந்து நம்பிக் கொண்டிருந்தால், நம் விவசாயிகள் இன்னும் அதலபாதாளத்துக்குதான் போகநேரிடும். அவர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற நம் விவசாயத்தில் ஒரு மாபெரும் மாற்றம் தேவை.''

''மாற்றத்துக்கான திட்டங்கள் என்று எதையாவது தீட்டி வைத்திருக்கிறீர்களா?''

''அறிவியல் சார்ந்த விவசா யமும், இயற்கை விவசாயமும்தான் அந்த மாற்று! ஒரு பக்கம் அறிவியல் சார்ந்த முறையிலும், இன்னொரு பக்கம் இயற்கை முறையிலும் விவசாயம் செய் தால்தான் தற்போதைய நிலை மையில் இருந்து மீள வாய்ப் புள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் திருந்திய நெல் சாகுபடி (ஒற்றை நாற்று நடவு) முறையை நம் அரசு தீவிரமாக அமல் படுத்தியது. ஒரு ஏக்கரில் பத்து டன் மகசூல் கிடைத்தது. வழக் கமான முறையில் ஏறக்குறைய நான்கு டன் மகசூல்தான் கிடைக் கும். அதேசமயம் செலவு அதிகம். ஆனால், திருந்திய நெல் சாகு படியில் அதிக செலவில்லை. உரத் துக்காக பணத்தைக் கொட்ட வேண்டியதில்லை. மகசூலோ அதிகம்.

கரும்பில் குழி நடவு முறை மூலம் ஒரு ஏக்கருக்கு 120 டன் வரை மகசூல் எடுக்க வைத்திருக்கிறோம்.

ஆனால், 'பசுமைப் புரட்சி'யில் திரும்பத் திரும்ப, 'தண்ணி ஊத்து, உரம் போடு’ என்று விவசாயி களை ஒரு வழிக்கு கொண்டு வந்துவிடுவார்கள். இத்தகைய சாகுபடிச் செலவுகள்தான் விவசாயி களை பெரும் துன்பத்தில் ஆழ்த்தக்கூடியது.

நீர்ப்பாசன முறையிலும் மாற்றம் தேவை. சொட்டுநீர் பாசனம் மாதிரியான முறைகளை மக்கள் கையிலெடுக்க வேண்டும். உரத்துக்காக செலவு செய்வதற்கு பதில் பயோ-கம்போஸ்ட் எனப்படும் இயற்கை உயிர் உரங்களைத் தயாரிக் கலாம். விவசாயிகளுக்கு நம்பிக்கைத் தரக்கூடிய இதுபோன்ற முறைகளை நாட்டின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் இவற்றை அறிமுகப்படுத்த வேண்டும். அவர்கள் செய்யவில்லை... அதனால் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.''

''இந்த மாற்றத்தை விவசாயிகள் ஏற்றுக் கொள்வார்களா..?''

''கண்டிப்பாக ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். நீங்கள் விவசாயம் செய்தால் உரச்செலவு, மருந்து செலவு என்று பணத்தைக் கொட்டி... குறைந் தளவு வருமானம் கிடைத்தால், அந்த விவசாயத்தையே தொடர்ந்து செய்து கொண்டிருப்பீர்களா..? இன்றைக்கு நம் விவசாயிகள் அதைத்தான் செய்து கொண்டி ருக்கிறார்கள். அவர்களின் வாழ்க் கைத் தரமும் உயர வேண்டாமா..? பசுமைப் புரட்சியில் இருந்து வெளியேறி, புதிய முறைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டாலே அவர்களின் தரம் உயர்ந்துவிடும்.

பசுமைப் புரட்சி என்ற பெயரில், உரத்துக்கான மானியத் தொகையாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஓதுக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்னொருபுறம் தற்கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைகள் மாற வேண்டும் என்றால் பசுமைப் புரட்சியை கைவிட்டே ஆகவேண்டும்.''

''உங்களுக்கு நம் அரசின் ஆதரவு இருக்கிறதா?''

''மிகப்பெரிய மாற்றத்தை அரசின் உதவி இல்லாமல் கொண்டு வரவே முடியாது. திருந்திய நெல் சாகுபடி முறையைக் கொண்டு வர முதல்வரும், வேளாண் அமைச்சரும் முக்கிய ஊக்கமாக இருந்தார்கள். அதேபோல் தற்போது நடந்து கொண்டிருக்கும் விவசாயத்தின் சாதக, பாதகங்கள் அவர்களுக்கும் தெரியும். அதனால்தான் நாங்கள் முன்னெடுக்க இருக்கும் மாற்றங்களையும் ஆதரிக்கிறார்கள்.''

''அப்படியென்றால், விரைவில் வரப்போகும் தமிழக பட்ஜெட்டில் இது தொடர்பாக ஏதாவது அறிவிப்புகள் இருக்குமா..?

''பட்ஜெட்டு சமர்ப்பிக்கபடுவதற்கு முன்பாக அதைப்பற்றி நான் எதையும் கூறமுடியாது. ஆனால், தமிழக அளவில் விவசாயத்துறையிலும் விவசாயத்திலும் மிகப்பெரிய மாற்றம் வரப்போ கிறது. அந்த மாற்றம் விவசாயிகள் மேம்படக்கூடிய... அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய வகையில் இருக்கும் என்பது நிச்சயம். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விடைகொடுத்தார் சௌத்ரி.

“பதில் சொல்ல முடியாது!”

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்த, 95-வது இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டம் குறித்து பிப்ரவரி 20-ம் தேதியன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. இச் சந்திப்பு முடிந்த பிறகு, எம்.எஸ்.சுவாமி நாதனை தனியே சந்தித்தோம். கலகலப்பாக வரவேற்றவரிடம், ''வேளாண்துறை செயலர் சுர்ஜித் கே சௌத்ரி பசுமைப் புரட்சியைக் குறை கூறியிருக்கிறாரே?'' என்றோம். சட்டென்று முகம் மாறிய சுவாமிநாதன், ''அவர் எவ்வளவு நாட்களாக விவசாயத்தில் இருக்கிறார்..? அவருடைய கருத்துக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது'' என்று சீறினார்.

(பசுமை விகடன்: 10.03.2008)
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பசுமைப் புரட்சிக்கு எடுத்துக்காட்டாக பசுஞ்சோலை
» 50 சென்ட்... மாதம் ரூ.30 ஆயிரம்... பட்டதாரி இளைஞர்களின் பசுமைப் புரட்சி .!
» புரட்சியை ஏற்படுத்தியுள்ளேன் : மாஜி அமைச்சர் ராஜா
» தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய புளூடூத் என்ற பெயர் எப்படி வந்தது?
» குடும்பத்திற்க்கு முழுவதும் ஒரு கண்ணாடியுடன் முடியும்...இந்த கண்டுபிடிப்பு உண்மையிலே ஒரு பெரும் புரட்சியை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum