TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!

4 posters

Go down

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! Empty குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!

Post by Tamil Thu Sep 12, 2013 8:03 am

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!
குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! 526871_713252645367419_426929846_n
நம் பண்பாட்டில், ஒவ்வொரு விஷயமும் காரணத்தோடு தான் வகுக்கப்பட்டிருக்கின்றது. வீட்டில் விளக்கு ஏற்றுவதும் அது போன்றே. அவ்வகையில், விளக்கு ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகளும், குத்து விளக்கு ஏற்றுவதனால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்பது கீழே விளக்கப்பட்டிருக்கிறது.

எந்த திக்கு நோக்கி விளக்கின் திரி இருக்க வேண்டும்?

கிழக்கு முக விளக்கு பலன்

குத்து விளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும்.

மேற்கு முக விளக்கு பலன்

மேற்கு முகமாக தீபம் ஏற்றினால் கிரக தோஷம் பங்காளி பகை உண்டாகும்.

வடக்கு முக விளக்கு பலன்

வடக்கு முகமாக தீபம் ஏற்றினால் கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும்; திரண்ட செல்வம் உண்டு.

தெற்கு முக விளக்கு பலன்

தெற்கு முகமாக விளக்கு ஏற்றினால் அப சகுனம்; பெரும் பாவம் உண்டாகும்.

எத்தனை முகம் அல்லது திரி ஏற்ற வேண்டும்?

குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலன்.

இரு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை.

மும்முகம் யற்றினால் புத்திர சுகம், கல்வி கேள்விகளில் விருத்தி.

நான்கு முகம் ஏற்றினால் சர்வ பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும்.

எந்த திரியில் விளக்கு ஏற்றினால் என்ன பலன்?

தாமரைத் தண்டு திரி பலன்

தாமரைத் தண்டில் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்.

வாழைத் தண்டு திரி பலன்

வாழைத் தண்டு நூலில் திரி போட்டால் குல தெய்வ குற்றமும், சாபமும் போகும்.

புது மஞ்சள் சேலைத் துண்டு திரி

புது மஞ்சள் சேலைத் துண்டில் திரி போட தாம்பத்ய தகராறு நீங்கும்.

புது வெள்ளை வஸ்திர திரி

புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீரை விட்டு உலர விட்டு போட்டால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் வந்து மூதேவி அகன்று விடுவாள்.

எந்த எண்ணையை திரிக்கு விட்டால் என்ன பலன்?

நெய் 
நெய் விளக்கு ஏற்றினால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்

இலுப்பை எண்ணை
இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் பூஜிப்பவருக்கும், பூஜிக்கப்படும் இடத்திற்கும் விருத்தி

விளக்கு எண்ணை
விளக்கு எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் துன்பங்கள் விலகும்

நல்லெண்ணை
நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் மிகுந்த பலன் இல்லை, மத்திம பலன்

குறிப்பு: கடலை எண்ணையோ இதர தரம் குறைந்த சமையல் எண்ணைகளையோ விளக்கில் உபயோகிப்பது மூதேவி ஆராதனையாகக் கருதப்படுவதால், அவற்றை நீக்குவது நன்மை தரும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! Empty Re: குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!

Post by KAPILS Thu Sep 12, 2013 7:44 pm

அறியா தகவல் நன்றி .
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! Empty Re: குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!

Post by Tamil Fri Sep 13, 2013 7:12 am

KAPILS wrote:அறியா தகவல் நன்றி .
அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! Empty Re: குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!

Post by Tamil Wed Sep 18, 2013 9:14 pm

சென்ற பதிவை பார்த்துவிட்டு சிவக்குமார் என்னும் நண்பர் ‘வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகப் பொலிவு பன்மடங்கு கூடும்’ என்பதை விளக்கி எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். மிகவும் பயனுள்ள பலருக்கும் உபயோகமான தகவல் என்பதால், அதை இங்கு தனி பதிவாக தந்திருக்கிறேன்.
மேலும் விளக்கேற்றுவதற்கு எந்தெந்த எண்ணைகளை பயன்படுத்தலாம், எதை பயன்படுத்தக்கூடாது, என்ன திரிகளுக்கு என்ன பலன், எந்த நேரத்தில் எந்த திசையில் ஏற்றவேண்டும்,போன்ற தகவல்களையும் மேலும் விளக்கேற்றுவது குறித்த வேறு பல தகவல்களையும் திரட்டி எனக்கு தெரிந்த தகவல்களையும் சேர்த்து தந்திருக்கிறேன். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! Kuththu_Vilakkuபெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால் அவர்களின் முகப்பொலிவு கூடும்
நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை  அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு ஏற்றும்படி பணிக்க வேண்டும். இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல் அவர்களின் தேஜசும் (அதாவது முகபொலிவும்) கூடுகிறது.  இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி சொல்லுங்கள். அன்று தங்கள் பெண்ணிடம் அவளது  முக பொலிவை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின் மூலையில் குறித்து வையுங்கள்.
சரியாக 30 நாட்கள் (இதில் வயது வந்த பெண்களின் இயற்கையான உபாதை நாட்களை கணக்கில் கொள்ளாதீர்கள்) கழித்து,  மீண்டும் உங்கள் பெண்ணை கண்ணாடியில் அவளது முகபொலிவினை பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள்.
மீண்டும் 45 வது நாள் இதேபோல் பாருங்கள். நிச்சயமாக ஒரு மாற்றத்தை உங்களால், உங்கள் பெண்ணால் உணர முடியும்.  அதுமட்டுமின்றி  பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் வியப்பூட்டும் வகையில் கூடும்.
விளக்கேற்றவேண்டிய நேரம்
விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம்.
அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால்,  குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம்.
பொதுவான விதிமுறைகள்
1. விளக்கில் எண்ணெய் விட்டு  எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு  திரிகளாவது ஏற்ற வேண்டும்.
2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.
4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.
5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.
7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு.  மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம்.  தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.
குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! N_06shantiniஎந்தெந்த எண்ணைகளில் விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ?
நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.
நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும். விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும்.
வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.
கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.
கணவன்-மனைவி உறவு நலம்  பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது.
அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம்.
எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது.
மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.
மந்திரசித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.
கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம். சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது. குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம்.
கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது.
திசைகள்
கிழக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும்.
மேற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீங்கும்.
வடக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும்.
தெற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது.
என்னென்ன திரிகள் பயன்படுத்தலாம்?
தாமரைப்பூத்தண்டின் திரி: தாமரைப் பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும் வெண்மை கலந்த பகுதியும், தண்டுப் பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய வைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால் முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். பிறவித் தளை நீங்கி மறுபிறப்பற்ற வாழ்வு நிலைத்து நின்று வழிபடுவோர் வாழ்வை வளப்படுத்தும்.
பஞ்சுத்திரி : பொதுவாக பருத்தியினால் திரித்து எடுக்கப்படுகின்ற திரி விளக்குகளுக்கு தீபத்திரியாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானோர் பருத்திப் பஞ்சினைத்தான் திரியாக  பயன்படுத்துகின்றனர். இது தெய்வ குற்றம், பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால் விளக்கேற்றுவது மிகுந்த பயன்தரும். நல்ல பலன்களை பஞ்சுத்திரி ஏற்படுத்தும்.
வெள்ளைத்துணி திரி :  வெள்ளைத் துணியாக எடுத்து, அதைத் திரியாகத் திரித்து பயன்படுத்துவதால் பலவித உத்தமமான பலன்களை பெற முடியும். அதிலும் வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய வைத்து, பின் அதைக் காய வைத்து திரியாக திரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது மேலும் பலன் தரக்கூடியதாகும்.
சிவப்பு வர்ணத் துணி திரி : சிவப்பு துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய பயன்படுத்தப்பட்டால் திருமண தடை நீங்கும் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும் பேறு உண்டாகும்.
மஞ்சள் துணியாலான திரி : இத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம் உண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும் அன்பர்கள் பயன்படுத்த வேண்டிய திரி இது. தேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் வியாதிகள் தீரவும், செய்வினைகள் நீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கவும் இது மிகவும் பயன்படும் திரி எனலாம்.
வாழைத்தண்டின் நாரினால் ஆன திரி : வாழைத்தண்டினை நன்கு காயவைத்து அடித்து பஞ்சு போலக்கி பின்பு அதனை திரியாக எடுத்து விளக்கெரிக்க பயன்படுத்தலாம். இது முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும்  மனசாந்தி, குடும்ப அமைதி, குழந்தைப்பேறு  ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூடியது.
வெள்ளெருக்கந்திரி : வெள்ளெருக்கம் பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து விளக்கிற்கு பயன்படுத்தினால்  செல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வு நீடிக்கும்.
விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
கீடா:பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷõ:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!

பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.
‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!’

rightmantra
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! Empty Re: குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!

Post by Tamil Wed Sep 18, 2013 9:23 pm

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! Dd31ed42-93dd-4381-8142-7c1d263f637e_S_secvpf
1. விளக்கில் எண்ணெய் விட்டு  எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு  திரிகளாவது ஏற்ற வேண்டும்.
 
2.  நெய் வேத்தியங்கள் நிவேதனம் செய்யும் வாழை இலையின் பக்கத்தில் விளக்கேற்றுவது மிகவும் சிறந்தது.
 
3. ஊது பத்திகளை பூஜைக்கு வைத்த  வாழைப்பழங்களின் மேல் குத்தி ஏற்றுதல் கூடாது. ஊது பத்திகளுக்கென்று  உரிய ஸ்டாண்டை பயன்படுத்துதல் நல்லது. இல்லையேல் ஒரு சிறிய பாத்திரத்தில் அரிசியை  நிரப்பி அதில் ஊது பத்திகளைக் குத்தலாம்.
 
4. கற்பூரம் ஏற்றும்  போது தட்டில் சிறிதளவு திருநீறை  வைத்து அதன் மேல் கற்பூரத்தை  ஏற்ற வேண்டும். திருநீறு இல்லையேல் வாழை இலையிலோ வெற்றிலையையோ வைத்து ஏற்றலாம். பூஜைக்குரிய வெற்றிலையை வைத்து கற்பூரம் ஏற்றுதல் தவறு.
 
5. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
 
6. சுபகாரியங்கள் வீட்டில் நடைபெற விளக்கு பூஜை செய்து  வழிபட்டால் நற்பலன்களை கண்டிப்பாக  பெறலாம்.
 
7. விளக்கு பூஜை செய்யும் போது குத்து விளக்கிற்கு முன் சிறிது மஞ்சள்  தூளால் சிறு விநாயகரின் சிலையை செய்து குங்குமமிட்டு அவரை அங்கு வீற்றிருக்க  செய்ய வேண்டும்.
 
8. தீபம் ஏற்ற தூய்மையான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது.
 
9. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.
 
10. விநாயக பெருமானுக்கு-1, 7 தீபம், முருகருக்கு-6 தீபம், பெருமாளுக்கு-6 தீபம், நாக அம்மனுக்கு-4 தீபம், சிவனுக்கு-3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு-2 தீபம், மகாலட்சுமிக்கு-8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
 
11. தீபங்களை வாகனங்களுக்கு முன்பாகவும் ஏற்றலாம். சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்-சிங்கம்-நந்தி முன்பாக, பிள்ளையார்- பெருச்சாளி முன்பாக, பெருமாள்- கருடன் முன்பாக, முருகர்- மயில் முன்பாக ஏற்ற வேண்டும்.
 
12. தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், கடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு-2 அம்மனை தீபம் நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.
 
13. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.
 
14. காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில தீபம் ஏற்ற வேண்டும்.
 
15. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.
 
16. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
 
17. புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை தீயசக்திகள் தொந்தரவுகள் அண்டாது.
 
18. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது.
 
19. தீப சரஸ்வதி என்று மூன்று முறையும், தீப லட்சுமி என்று மூன்று முறையும் குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் என தீபத்தை பன்னிரண்டு முறை வணங்க வேண்டும்.
 
20. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு.  மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம்.  தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.*
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! Empty Re: குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!

Post by Tamil Wed Sep 18, 2013 9:25 pm

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். 


கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி  வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.


வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமயலறை, துளசி மாடம் 
போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.





தீபம் ஏற்றும் நேரம்




தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்). 

காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.



விளக்கு ஏற்றும் முறை


ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும். 


இரு முகம் ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை கிட்டும். 


முன்று முகம் ஏற்றினால்- புத்திரதோஷம் நீங்கும். 


நான்கு முகம் ஏற்றினால் - பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும். 


ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும்,ஐஸ்வர்யம் பெருகும்.


விளக்கேற்றும் திசை


கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி 


மேற்கு - கடன், தோஷம் நீங்கும் 


வடக்கு - திருமணத்தடை அகலும்


தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)



எண்ணெயின் பலன்


தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும். 


நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும் 


நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும் 


தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும் 


இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி 


விளக்கெண்ணெய் - புகழ் தரும் 


ஐந்து கூட்டு எண்ணெய் (விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய்,          நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ) - அம்மன் அருள்

வேப்பெண்ணை - கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் 

ஆமணக்கு எண்ணை - அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது 

கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள். 



எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள் 


விநாயகர் - தேங்காய் எண்ணெய் 


மகாலட்சுமி - பசுநெய் 


குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய் 


பைரவர் - நல்லெண்ணெய் 


அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 
                     5 கூட்டு எண்ணெய் 


பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் – நல்லெண்ணெய்

Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! Empty Re: குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!

Post by Tamil Wed Sep 18, 2013 9:25 pm

திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள்




திரிகள் புதிதாகவும்கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். திரிகளும்,பயன்களும் குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.



  • பருத்திப் பஞ்சு -  குடும்பம் சிறக்கும்நற்செயல்கள் நடக்கும்.
  • வாழைத் தண்டின் நார் -  முன்னோர் சாபம்தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
  • தாமரைத்தண்டு நூல் முன்வினைப் பாவங்கள் நீங்கிநிலைத்த செல்வம் கிடைக்கும்.
  • வெள்ளை எருக்கம்பட்டை - செல்வம் பெருகும்.
  • புதிய மஞ்சள் துணி -  நோய்கள் குணமாகும்.
  • புதிய சிவப்பு வண்ண துணி - குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
  • புதிய வெள்ளை துணி திரி - அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.

(துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.)



விளக்கின் தன்மை 


மண்ணால் செய்யப்பட்ட விளக்கு – பீடை விலகும் 


வெள்ளி விளக்கு – திருமகள் அருள் கிடைக்கும் 


பஞ்ச லோக விளக்கு – தேவதை வசியம் உண்டாகும் 


வெண்கல விளக்கு - ஆரோக்கியம் உண்டாகும் 


இரும்பு விளக்கு – சனி கிரக தோஷம் விலகும்.


திருவிளக்கின் சிறப்பு



திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். 



விளக்கு துலக்க நல்ல நாள்



குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.



விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்


ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல். 






தீபத்தை குளிர வைக்கும் முறை



பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது.  இது கெடுதலைக் கொடுக்கும். தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.



விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. வாயால் ஊதி அணைக்கக்கூடாது.   


பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.



தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை (எண்ணெய் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்ரூபிணே நம என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.



1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்

விளக்கு ஏற்றும் பொழுது :


விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்

விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே


விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து :

இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.


2. தூபம் காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தர் ஆகி

அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர்வீரட்ட னாரே.

Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! Empty Re: குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!

Post by Tamil Wed Sep 18, 2013 9:25 pm

3. தீபம் (ஏகதீபம்) காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்

சோதியே சுடரே சூழலொளி விளக்கே சுரிகுழல் பணைமுலைமடந்தைப்
பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய் பங்கயத்தயனுமாலறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையுள் குருந்தம் மேவிய சீர்எம்
ஆதியே அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்றருளாயே


4. கற்பூரப் பேரொளி காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்

கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
அற்புதக் கோலம் நீடி அருமறை சிரத்தின் மேலாம்
சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி.


5. அமுது படைக்கும் போது பாட வேண்டிய மந்திரம்

அமுது படைக்கும் போது :

வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பாலவி யாமே


எனவும் படைத்து :


பூந்தண் பொழில்சூழ் புலியூர் பொலிசெம்பொன் அம்பலத்தே
வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழை அன்பாகிய பண்டைப் பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே.

(என ஓதி வாயின் புறத்தில் நீர்காட்டி விடுக.)


6.  திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

திருநீறு :

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே.


குங்குமம் :

சிந்துரக் குங்குமம் சேர்த்தனன் போற்றி





கார்த்திகை பெண்களை போற்றும் நன்னாள்


நன்றி மறப்பது நன்றன்று என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். தமிழ்த்தெய்வமான முருகப்பெருமானும் நன்றி மறவாமல் தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் திருக்கார்த்திகைத் திருநாள். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அப்பொறிகளை கங்கை தாங்கிக் கொண்டாள். ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமான் அவதரித்தார். மகாவிஷ்ணு அப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும்படி கார்த்திகைப்பெண்கள் ஆறுபேருக்கு கட்டளையிட்டார். அவர்கள் ஆறுபிள்ளைகளுக்கும் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இதனால் அவர்கள் ஒரே நட்சத்திரமாக மாற்றப்பட்டு வானமண்டலத்தில் இடம் பிடித்தனர். 

இந்த நட்சத்திர நாளில் தன்னை வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வதாக குழந்தை முருகன் வரம் அளித்தார். முருகனுக்குரிய ஜென்ம நட்சத்திரம் விசாகம். ஆனால், அந்த நட்சத்திரத்தில் மாதவிரதம் மேற்கொள்ளும் வழக்கமில்லை. கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனுக்கு அபிஷேக ஆராதனைகளும், விரதமும் மேற்கொள்வதில் இருந்து நன்றி மறவாத நாயகன் முருகன் என்பதை உணர முடிகிறது.


சிவசக்தி தீபம்


தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! Empty Re: குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!

Post by Tamil Wed Sep 18, 2013 9:26 pm

நிலைத்த பலனுக்கு விளக்கு வழிபாடு



கிராமங்களில், திருவிளக்கை தாய் என்றும், நாச்சியார் என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது, விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி, பொட்டுவைத்து, மாலை அணிவித்து, தூபதீபம் காட்டினால் நிலைத்த பலன் கிடைக்கும்.


தீபத்தைப் பெருமைப்படுத்தும்  விதத்தில் முருகப்பெருமானையே அருணகிரிநாதர்""தீபமங்களஜோதீ நமோநம'' என்று திருப்புகழில் பாடுகிறார். 


இறையருள் கைகூட தண்ணீரால் விளக்கெரித்த நமிநந்தியடிகள், தன் உதிரத்தையே எண்ணெயாய் ஊற்றி தீபமேற்ற முயன்ற கலியநாயனார், தலைமுடியை விளக்குத் திரியாக்கிய கணம்புல்லர், அறியாமல் தீபத்தைத் தூண்டிவிட்ட காரணத்துக்காகவே, மறு பிறவியில் சக்ரவர்த்தியாய் பிறந்த மகாபலி ஆகியோரின் புண்ணிய கதைகள் தீப வழிபாட்டின் மகத்துவத்தை உணர்த்தும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் உருவில் அடக்காமல், ஒளி வடிவில் வழிபட்டுப் பலன் பெற தீபங்கள் உதவும். பரஞ்ஜோதியாய் திகழும் பரம்பொருளுடன் ஜீவ ஜோதியாகிய ஆன்மாக்கள் இரண்டறக் கலக்க வேண்டும். இதுவே, தீபங்கள் உணர்த்தும் வழிபாட்டுத் தத்துவம்.


ஆலயங்களில் இறைவனுக்குப் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள். அவற்றுள் தூப - தீபம் சமர்ப்பித்தலும் ஒன்று. தீப சமர்ப்பணத்தில் 16 வகை தீபங்கள் இடம்பெறும். ஒவ்வொரு தீபத்துக்கும் ஒவ்வொரு தேவர்கள் உரிமையானவர்கள். புஷ்ப தீபம்- பிரம்மன்; புருஷாமிருகம் - கலைமகள்; நாகதீபம்-நாகராஜர்; கஜ தீபம் - விநாயகர்; வியாக்ர தீபம்-பராசக்தி; ஹம்ச தீபம் - பிரம்மா; வாஜ்ய தீபம்- சூரியன்; சிம்ம தீபம்-துர்கை; சூல தீபம்-மும்மூர்த்திகள்; துவஜ தீபம்-வாயு; வ்ருஷப தீபம்-ரிஷபதேவர்; பிரமா தீபம்-துர்காதேவி; குக்குட தீபம்-கந்தப்பெருமான்; கூர்ம தீபம்-மகாவிஷ்ணு; ஸ்ருக் தீபம்-அக்னி; சக்தி தீபம்-பராசக்தி.

ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறைவனுக்குக் காட்டும்போது, அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி இறைவனை வழிபடுவதுடன், நமக்கும் அருள்புரிவார்கள். திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசிக்க, 16 பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.





திருவிளக்கு வழிபாடு





குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! TN_110802123842000000


திருவிளக்கு வழிபாட்டின் மேன்மைகள்



நம் இந்து மதத்தில் திருவிளக்கு வழிபாடு உன்னதமான இடத்தைப் பிடித்துள்ளது. வேத காலந்தொட்டு நம் மகரிஷிகள் அக்னி வளர்த்து வேள்வி நடத்தி இறைவனை வழிபட்டனர். இன்று இதுவே எளிமையாக்கப்பட்டு திருவிளக்கு (தீபவழிபாடாக) மாறியுள்ளது.  திருவிளக்கு வழிபாடு செய்வதால் நம் வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகும்.திருவிளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளை அகற்றுவதோடு, மனதின் இருளையும் அகற்றுகிறது. 

திருவிளக்கு வழிபாடு தினந்தோறும் நடைபெறும் இல்லங்களில் தெய்வபலம் பெருகுவதால் கெட்ட சக்திகள், செய்வினைகள் அணுகாதுஎல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை வெள்ளிக்கிழமைகளில்  வாசலில் மாக்கோலம் இட்டு, அதன் மத்தியில் விளக்கை ஏற்றிவைத்துபின்பு அதனை வீட்டு பூசையறைக்குள் கொண்டு வந்து வைத்தால் விளக்குடன் மகாலட்சுமியும் இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம். நம் இல்லத்திலோகோவிலிலோ அல்லது பொது வழிபாட்டு மன்றங்களிலோ எழுந்தருளச் செய்வதே திருவிளக்கு வழிபாட்டின் நோக்கமாகும். இத்திருவிளக்கு வழிபாடு பெண்களுக்கு உரித்தான வழிபாடாகும். தற்போது பெண்கள் குழுவாக சேர்ந்து கோயில்களில் விளக்கு வழிபாடு செய்வது பிரபலமடைந்து வருகிறது. இந்த விளக்கு வழிபாட்டால்,பல ஹோமங்களை நடத்துவதால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனை ஆண்பாலரும் செய்யலாம்.


திருவிளக்கு வழிபாட்டுக்கு ஏற்ற நாள் நேரம்  


பொதுவாக பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் திருவிளக்கு வழிபாடு செய்வது மிகச்சிறந்த  நற்பலன்களைத் தரவல்லது. பல்வேறு தமிழ் மாதங்களில்  திருவிளக்கு வழிபாடு நடத்தப்படும் தமிழ் மாதங்கள் மற்றும் அதற்குண்டான பொதுப்பலன்கள் மாறுபடுகின்றன. இவற்றின் பலன்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:



  • சித்திரை - தானிய வளம் உண்டாகும்.
  • வைகாசி - செல்வம் செழிக்கும்.
  • ஆனி - திருமணபாக்கியம் உண்டாகும்.
  • ஆடி - ஆயுள்பலம் கூடும்.
  • ஆவணி - புத்தித்தடை நீங்கும்
  • புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும்
  • ஐப்பசி - நோய்கள் உண்டாகும்
  • கார்த்திகை - நற்பேறு கிட்டும்
  • மார்கழி - ஆரோக்கியம் கூடும்.
  • தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.
  • மாசி - துன்பங்கள் நீங்கும்.
  • பங்குனி - தர்மசிந்தனை வளரும்.



திருவிளக்கு வழிபாட்டின் போது பின்பற்ற வேண்டிய முறைகள்


1.  திருவிளக்குகளை நன்றாக கழுவி அதனை சுத்தமான தாம்பாளம் அல்லது பலகையில் மட்டுமே வைக்கவேண்டும்.


2. திருவிளக்கு வழிபாட்டின் போது  எவர்சில்வர் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.  பித்தளைவெண்கல விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்;பின்னமடைந்த (உடைந்தகீறல் விழுந்த) விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. 
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! Empty Re: குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!

Post by Tamil Wed Sep 18, 2013 9:26 pm

3. திருவிளக்கேற்றும் பலன்கள்



  •  ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
  • இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
  • மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
  •  நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
  • ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்



4. திருவிளக்கில் பொட்டு வைக்கும் முறைதிருவிளக்கு வழிபாட்டுக்கு எடுத்துக்கொள்ளும் குத்துவிளக்கில்  எட்டு இடங்களில் பொட்டு வைக்கவேண்டும் என்பது மரபு. என் இவ்வாறு செய்ய வேண்டும்?தகுந்த காரணம் இருக்கிறது. உச்சியில் ஒரு பொட்டு,அதனை அடுத்து கீழே சூரியன்சந்திரன்அக்னி ஆகிய மூன்று சக்திகளைக் குறிக்கும் பொருட்டு மூன்று பொட்டுக்கள்அதனையடுத்து தேவியின் கைகளாக கருதி இரண்டு பொட்டுக்கள்மற்றும் திருவடியில் ஒன்று என எட்டு பொட்டுக்கள்  வைக்க வேண்டும். இதனால் திருவிளக்கு வழிபாடு நிறைவாய் இருக்கும்.


5.  திருவிளக்கேற்றும் திசைகள்



  • கிழக்கு - துன்பங்கள் நீங்கி குடும்பம் விருத்தி பெறும்
  • மேற்கு - கடன்தோஷங்கள் நீங்கும்
  • வடக்கு - திருமணத்தடை அகலும்
  • தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.



 திருவிளக்கை கிழக்கு முகமாக வைக்கவும். வழிபாடு செய்பவர் திருவிளக்கிற்கு வலப்புறமாக அல்லது வடக்கு நோக்கி  அமரலாம்.


6. திருவிளக்கிற்கு மலர் சரம்  சூட்டலாம்.  விளக்கு சுடரில் இருந்து ஊதுபத்திமற்றும் கற்பூரம் கொளுத்துவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.


7. குத்துவிளக்கு ஏற்ற பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கேற்ப பலன்களும் மாறுபடுகிறது. சுடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது.திருவிளக்கில் அடிக்கடி எண்ணெய் ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும்.



  • பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
  • நல்லெண்ணெய் - பீடை விலகும்.
  • ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும். 


தெய்வங்களும் எண்ணெய் வகைகளும் 




  • கணபதி - தேங்காய் எண்ணெய்
  • நாராயணன்சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்
  • மகாலட்சுமி - பசுநெய்
  • குலதெய்வம் - வேம்புஇலுப்பைபசுநெய் கலந்த எண்ணெய்
  • ருத்திரர் - இலுப்பெண்ணெய்
  • பராசக்தி - விளக்கெண்ணெய்வேம்புதேங்காய்இலுப்பைபசுநெய் சேர்ந்த எண்ணெய்




8. திரிகள் புதிதாகவும்கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். திரிகளும்,பயன்களும் குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.




  • பருத்திப் பஞ்சு -  குடும்பம் சிறக்கும்நற்செயல்கள் நடக்கும்.
  • வாழைத் தண்டின் நார் -  முன்னோர் சாபம்தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
  • தாமரைத்தண்டு நூல் முன்வினைப் பாவங்கள் நீங்கிநிலைத்த செல்வம் கிடைக்கும்.
  • வெள்ளை எருக்கம்பட்டை - செல்வம் பெருகும்.
  • புதிய மஞ்சள் துணி -  நோய்கள் குணமாகும்.
  • புதிய சிவப்பு வண்ண துணி - குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
  • புதிய வெள்ளை துணி திரி - அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.


(துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.)



9. திருவிளக்கை துணைவிளக்கின் உதவியோடு மட்டுமே ஏற்ற வேண்டும்.தீக்குச்சியால் ஏற்றுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்ஒரு திரி ஏற்றுவதானால் கிழக்கு முகமாக மட்டுமே ஏற்ற வேண்டும்.



10. திருவிளக்கு வழிபாட்டின் போது  விளக்கு ஏற்றிய பின்பு விளக்குஅசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.



11.  திருவிளக்கு வழிபாட்டின் போது மந்திரங்கள்பதிகங்கள் மற்றும் பாசுரங்களை எல்லோரும் சேர்ந்து ஒரே மாதிரியான குரலில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் உயர்த்தியும்ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.



12. திருவிளக்கு வழிபாட்டின் போது  விளக்கு ஏற்றிய பின்பு கையால் வீசியோவாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது அரிசியால் அணைக்கலாம்.



திருவிளக்கு வழிபாட்டுக்கு வேண்டிய பொருட்கள்



திருவிளக்கு வழிபாட்டுக்கு ஆயத்தாமாகும் முன்னரே கீழ்கண்ட பொருட்களை முன்னதாகவே சேகரித்து  வைத்துக்கொள்ளுங்கள். திருவிளக்கு (குத்து விளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கு),தேவையான எண்ணெய்சாம்பிராணிகற்பூரம்கோலமிடுவதற்கு பச்சரிசி மாவுவாழை இலைசந்தனம், குங்குமம்மஞ்சள் பொடிமாலை,அட்சதை அரிசிவெற்றிலைபாக்குவாழைப்பழம்தேங்காய்மஞ்சள் கிழங்குநைவேத்திய பொருட்கள்துணை விளக்குதீர்த்த பாத்திரம்,தாம்பாளம் மற்றும் அமர்ந்து கொள்வதற்கு சிறிய விரிப்பு



செய்யும் முறைகள்

முதலில் வழிபாடு நடத்தும் இடத்தை மெழுகியும்விளக்கை நன்கு துலக்கியும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.



வழிபாடு நடத்தும் முன்பு அவ்விடத்தில் தலைவாழை இலையை விரித்துஅதில் முனை முறியாத அரிசியை (அட்சதை) பரப்பிஅதன் மீது விளக்கை வைத்து சந்தனம்குங்குமம்பொட்டு வைத்து மலர்களாக அலங்கரிக்க வேண்டும்.



பின்பு பூஜைக்கு தேவையான பொருட்களை அருகில் வைத்துக் கொண்டுவிளக்கை வணங்கி விட்டு அமரவேண்டும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! Empty Re: குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!

Post by Tamil Wed Sep 18, 2013 9:27 pm

எல்லோரும் சொல்லுக : ஓம்.


ஸர்வே பவந்து ஸகின :
ஸர்வே ஸந்து நிராமயா :
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாக் பவேத்


திருவிளக்கு ஏற்றி ஆவாஹனம் (எழுந்தருளல்) செய்தல


பின்பு கோவிலிலிருந்து தீபம் கொண்டுவந்து முதல் விளக்கை ஏற்றுக. அதனைத் தொடர்ந்து எல்லோரும் தீபம் ஏற்றவேண்டும். தீபம் ஏற்றும்போது


''ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி''


என்று சொல்ல வேண்டும். ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்


விநாயகர் வழிபாடு


முதலில் விநாயகரை வழிபடவேண்டும் என்பது வழிபாட்டு மரபு என்பதால் மஞ்சளில் சிறிய விநாயகரைப் பிடித்து ஒரு வெற்றிலையில் வைத்து அவரையும் அலங்கரிக்க வேண்டும். கணபதி பாடல்


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.


பின் தொடர்ந்து அம்பாள் துதிப்பாடல்களை பாடியபடி பூஜையை துவங்கிவிடலாம்.




அர்ச்சனை




அம்பாள் வழிபாடு நடக்கிற போது 1008, 108 மந்திரங்களைச் சொல்லி வழிபடுகிற வேளையில் மலர் அல்லது குங்கும அர்ச்சனை நடைபெறும். அவ்வாறு அர்ச்சனை செய்கின்ற போது ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் இணைத்த நிலையில் குங்குமம் அல்லது மலரினையும் எடுக்க வேண்டும்மற்ற மூன்று விரல்களும் நீட்டிய நிலையில் அமைதல் வேண்டும். மந்திரங்களை உரிய முறையில் சொல்லி அர்ச்சிக்க வேண்டும் என்பது விதி.



அம்பாள் வாழ்த்து


ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே
ஸர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பகே கெளரி
நாராயணி நமோஸ்துதே
ஸ்ருஷ்டி ஸ்திதி விநாசானாம்
சக்திபூதே சனாதனி
குணாச்ரயே குணமயே
நாராயணி நமோஸ்துதே
சரணாகத தீனார்த்த
பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி
நாராயணி நமோஸ்துதே


துக்க நிவாரண அஷ்டகம்


மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி

கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்
தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள்
மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே
சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம் குலதேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

இடர் தருதொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.


திருவிளக்கு அகவல்


திருவிளக்கு வழிபாட்டின்போது  பாட வேண்டிய திருவிளக்கு அகவல்
இது. கூட்டு வழிபாடானால் ஆண் பெண் எல்லோரும் கூட்டாகப் பாடுவது நல்லது.


விளக்கே திருவிளக்கே; வேந்தன் உடன்பிறப்பே!
சோதி மணிவிளக்கேசீதேவி பொன்மணியே!
அந்தி விளக்கே; அலங்கார நாயகியே!
காந்தி விளக்கேகாமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய் விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
ஏற்றினேன் நெய்விளக்குஎந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு; மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மாபக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன்தேவி வடிவம் கண்டேன்
வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்முழுப்பச்சைமாலை கண்டேன்
Œவரிமுடி கண்டேன்தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன்பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன்காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிர
கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
அன்னையே அருந்துணையே
அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்.


மேற்கண்ட இந்தப் பக்தி பாடலைப் பாடி முடித்தவுடன்அவரர் நெற்றியில் குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள்.


கலச வழிபாடு


கலசத்திலுள்ள தண்ணீரில் அட்சதை (அரிசிமஞ்சள்) இட்டு உள்ளங்கையால் கலசத்தை மூடிக்கொண்டுஇம்மந்திரம் ஜெபிக்க வேண்டும்.


''கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு''


பின் தீர்த்தத்தை ஆசமனம் பண்ண வேண்டும். (சிறிதளவு உள்ளங்கையில் விட்டுப் பருக வேண்டும். பின் சிறிது நீர்விட்டு கையைச் சுத்தம் செய்ய வேண்டும்.) அதன்பின் ஒரு மலரைத் தீர்த்தத்தில் நனைத்துபுஷ்பங்களிலும் நைவேத்தியத்திலும் நீரைத் தெளிக்க வேண்டும்.


எல்லோரும் இருகரம் கூப்பிதிருவிளக்கில் சுடர்விடும் ஒளியை நோக்கி அம்பிகையை மனமார நினைத்து நூற்றி எட்டு போற்றிகளை ஓதவேண்டும். கண்கள் திருவிளக்கிலும் மனம் அம்பிகையிலும் நிலைபெற்றிருக்க வேண்டும்.







நூற்றியெட்டு போற்றி





அர்ச்சனை செய்து முடித்தவுடன் எல்லோரும் இருகரம் கூப்பிதிருவிளக்கில்சுடர்விடும் ஒளியை நோக்கி அம்பிகையை மனமார நினைத்து நூற்றி எட்டு போற்றிகளை ஓதுவர்.


படையல்
 




நூற்றியெட்டு போற்றி ஓதி முடிந்தவுடன் படையல் பொருள்களை அம்மனுக்குக் காணிக்கையாக்க வேண்டும். எல்லோரும் சொல்லுக.


ஓம் ப்ரம்மார்ப்பணம் ப்ரம்மஹவிர்
ப்ரம்மாக்னெள ப்ரம்மணாஹுதம்
ப்ரம்மைவ தேன கந்தவ்யம்
ப்ரம்மகர்ம சமாதினா


பின் கீழ் ஆறு மந்திரங்களைச் சொல்லி ஆறுதடவை படையல் பொருள்களை வலது கைவிரல்களால் எடுப்பது போலவும் தேவிக்கு ஊட்டுவது போலவும் சைகை காட்டவும்.


ஓம் ப்ராணாய ஸ்வாஹாஅபானாய் ஸ்வாஹா
வ்யானாய ஸ்வாஹாஉதானாய ஹ்வாஹா
ஸமானாய ஹ்வாஹா பிரம்மணே ஸ்வாஹா



தீபாராதனை






எல்லோரும் கீழே விழுந்து வணங்கி எழுந்து நின்று தீபாராதனைக்குத்தயாராகுவர். இப்போது திருவிளக்கிற்கு மூன்று முறை கற்பூரசோதிகாண்பிக்கப்படும். கற்பூர சோதி காட்டும்போது சொல்லப்படவேண்டியது:.


 "திங்கள் ஜோதி நீ தினகரன் ஜோதி நீ|
 அங்கியில் ஜோதி நீ அனைத்திலும் ஜோதி நீ|
 எங்களுள் ஜோதி நீ ஈஸ்வர ஜோதி நீ|
 சுங்கிலா ஜோதி நீ கற்பூர ஜோதியே"


பின்பு திருவிளக்கின் முன் கற்பூர தட்டை வைத்தபடி கையில் மலரெடுத்துகற்பூர சோதியை வலம் சுற்றி திருவிளக்கிற்கு சாற்றி கற்பூர தீபத்தைத் தொட்டு வணங்குவர்.


வலம்வருதல்



அனைவரும் பின்வருமாறு அம்பாள் பெயர் போற்றி கைதட்டிப் பாடிக்கொண்டு திருவிளக்கினை மூன்று முறை வலம் வருக.


நாமம்:-


ஜெய் ஜெய் தேவி
ஜெய் ஸ்ரீ தேவி



மங்களம்



மங்களம் பாடி நிறைவு செய்யப்படும். 



சங்கராய சங்கராய சங்கராய மங்களம்
சங்கரி மனோஹராய சாஸ்வதாய மங்களம்
குருவராய மங்களம்-தத்தாத்ரேயாய மங்களம்
கஜானனாய மங்களம்-ஷடானனாய மங்களம்
ரகுவராய மங்களம்-வேணுகிருஷ்ண மங்களம்
ஸீதாராம மங்களம்-ராதாகிருஷ்ண மங்களம்
அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம்
என்னுளே விளங்கும் எங்கள் ஈசுவரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் சிற்சிவைக்கு மங்களம்
தாழ்விலாத தன்மையும் தளர்சியற்ற வன்மையும்
வாழ்வினால் பயன்களும் என் வாக்கிலே வரங்களும்
பக்தியில் கசிந்தலைந்து பாடுகின்ற பான்மையும்
பாடுவோர்க்கனேக போக பாக்கியங்கள் மேன்மையும்
என்றும் ஓங்க என் கரத்து இயற்கையான சக்தியை
தந்து ஞான மூர்த்தியாய் தனித்து வைத்த சக்தியாம்
நாம கீர்த்தனம் பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெலாம் விளங்கவும்
ஞானதீபமேற்றி என்றும் நாமகீதம் பாடுவோம்
தர்மசக்தி வாழ்கவென்று சந்தததம் கொண்டாடுவோம்



பிரார்த்தனை






அமைதியாக கீழ்வரும் பிரார்த்தனையைக் கேட்டுச் சொல்லுக.


ஓம் ஸர்வே பவந்து ஸுகின:
ஸர்வே ஸந்து நிராமயா:
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாக் பவேத்


எல்லோரும் சுகமாக வாழ்க! எல்லோரும் நோயின்றி வாழ்க! எல்லோருக்கும் மங்களம் உண்டாகுக! ஒருவரும் துன்புறாதிருக்க வேண்டும்!


ஒம் அஸதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய


பொய்யிலிருந்து என்னை மெய்மைக்கு வழி நடத்துவாயாக
அஞ்ஞான இருளிலிருந்து ஞானஜோதிக்கு வழி நடத்துவாயாக
மரணத்திலிருந்து மரணமில்லாப் பெருவாழ்வுக்கு அழைத்துச் செல்வாயாக


ஓம் பூர்ணமத: பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய
பூர்ண மேவாவசிஷ்யதே!


ஓம் சாந்திசாந்திசாந்தி


இரண்டு நிமிஷம் தியானம் செய்க 'ஹரி ஓம் தத் ஸத்எனச் சொல்லி தியானம் நிறைவு செய்க.


பின் சுடர்விடும் தீபங்களை மலரால் நிறுத்தி பிரசாதங்களை அவரவர்களே எடுத்துக் கொள்ளவும் குங்குமத்தை கவனமாக எடுத்துச் சென்று தினமும் பொட்டு இட்டுக் கொள்ளவும் சர்வ மங்களங்களும் உண்டாகும்.


திருவிளக்கை அம்பாளாகக் கருதி, 16 முறை விழுந்து வணங்குவர்.
-srikarpagasakthivinayagar.ப்ளாக்ஸ்பாட்-
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! Empty Re: குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!

Post by mmani Tue Oct 22, 2013 7:37 pm

அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! Empty Re: குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!

Post by KAPILS Tue Oct 22, 2013 8:24 pm

பயனுள்ள தகவல் அறிவிப்பு அறிவிப்பு 
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! Empty Re: குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!

Post by mmani Mon Nov 25, 2013 8:16 am

நல்ல இருக்கு நல்ல இருக்கு நல்ல இருக்கு நல்ல இருக்கு நல்ல இருக்கு
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! Empty Re: குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!

Post by logu Mon Dec 30, 2013 2:54 pm

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.! Empty Re: குத்து விளக்கு ஏற்றும் முறை, ஏற்றுவதனால் பலன்.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum