TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சுவைத்துச் சாப்பிடத் தடுக்கும் பற் கூச்சம்

Go down

சுவைத்துச் சாப்பிடத் தடுக்கும் பற் கூச்சம் Empty சுவைத்துச் சாப்பிடத் தடுக்கும் பற் கூச்சம்

Post by logu Sat Jul 06, 2013 7:14 am

"இந்த வெக்கையுக்கையும் கூல் தண்ணி குடிக்கேலாத பாவி நான்".

சுவைத்துச் சாப்பிடத் தடுக்கும் பற் கூச்சம் Sensitive-Teeth

சூரியன் தன் உக்கரத்தை முழுவீச்சில் காட்டிய கோடையின் மதியத்தில் வேர்வை முத்துக்கள் கழுத்திலும் வெற்றியிலும் பளபளக்க வந்திருந்தாள் அந்த நடுத்தர வயது மாது.

"கூல் தண்ணிக்கு மாத்திரமோ..'"என நான் கேட்க முதலே அவள், "கூலாகவும் குடிக்க முடியவில்லை, ஹொட்டாகவும் முடியவில்லை. தேசிக்காய்தண்ணி குடிக்கிறதை அடியோடைவிட்டு பல நாளாச்சு" என்றாள்.
காரணம் 'பல்லுக் கூசுறது தாங்க முடியவில்லை'; என்றாள்

தனக்கு எவை எவற்றால் பற் கூச்சம் ஏற்படுகிறது என்பதை அவளது அனுபவம் அவளுக்குத் தெளிவாகக் கற்றுத் தந்திருக்கிறது. அவள் கூறியது போலவே குளிரான, சூடான, புளிப்;பான மற்றும் இனிப்பான பானங்களும் உணவு வகைகளும் பற் கூச்சத்தைத் தூண்டி விடக் கூடியவைதான்.

யாருக்கு வருகிறது

பற் கூச்சம் நாங்கள் அடிக்கடி பார்க்கிற பிரச்சனைகளில் ஒன்று. எட்டுப் பேரில் ஒருவருக்கு பற்கூச்சம் இருப்பதாக அண்மையில் அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வு கூறுகிறது. எட்டில் ஒருவருக்கு ஒவ்வொரு நாளும் பல்லுக் கூசிக்கொண்டே இருக்கிறது என்று அர்த்தமில்லை. அடிக்கடியோ இடைக்கிடையோ ஏற்பட்டு மறைந்து மீண்டும் தோன்றுகிறது
.
குழந்தைகளிலும் பதின்ம வயதினரிடையேயும் காண்பது குறைவு. வளர்ந்தோரில் இளவயதினரிடையேதான் அதிகம் இருக்கிறது. அதிலும் 18 முதல் 44 வயதானவர்களுக்கு வயதானவர்களை 3.5 மடங்கு அதிகமாகத் தோன்றுகிறதாம்.

ஆண்களைவிட பெண்களிடையே ஏற்படுவது அதிகம். ஆண்களைவிட 1.8 மடங்கு பெண்களில் அதிகம் என ஓரு ஆய்வு கூறியது. ஆய்வு பற்றிக் கருத்துக் கூறிய ஆய்வாளர்களில் ஒருவரான Cunha-Cruz    சற்றுக் குசும்பு மனிதர் போலிருக்கிறது. 'உண்மையில் பெண்களுக்கு பற்கூச்சம் அதிகமிருந்ததா அல்லது பெண்கள் வலிகள் பற்றிச் சொல்வதில் அதிக அக்கறை உடையவர்களாக இருந்தார்களா என்பது தெளிவில்லை என்றார்.

இவற்றை விட தமது பற்களை வெண்மையாக்குகிறேன் எனச் சுய வைத்தியம் செய்பவர்களிடையே பற் கூச்சம் தோன்றுவது அதிகம்.
சுவைத்துச் சாப்பிடத் தடுக்கும் பற் கூச்சம் Before-After-Teeth
Tooth whitening அவதானம் தேவை
பற் கூச்சம் ஒரு கடுமையான நோயல்ல என்ற போதும் அதன் காரணமாக சிலவகை உணவுகளை அவர்களால் உண்ண முடியாமல் தவிர்க்க நேர்வதனால் அது பற்றி அக்கறை எடுக்க வேண்டி நேர்கிறது.

எவ்வாறு ஏற்படுகிறது

பல்லைச் சுற்றி அதன் பாதுகாப்பிற்காக அதை மூடி இருக்கும் எனாமலுக்கு
(Enamel) ஏதாவது சேதம் ஏற்படும்போதே பெரும்பாலும் எற்படுகிறது.

அல்லது பல்லிற்கும் முரசிற்கும் இடையே, இடைவெளி ஏற்படாது தடுக்கும் மென்சவ்வாகிய சிமென்டம் (Cementum) என்பதில் பாதிப்பு ஏற்படும் போதும் பற்கூச்சம் ஏற்படுகிறது. முரசு கரையும் போது அல்லது முரசில் வேறுநோய்கள் ஏற்படும்போது இவ்வாறான இடைவெளி ஏற்படுகிறது. முரசிற்குள் இருக்கும் பல்லின் மீதிபகுதியான பல்வேரானது மேற்கூறிய எனாமலால் பாதுகாக்கப்பட இல்லை.

சுவைத்துச் சாப்பிடத் தடுக்கும் பற் கூச்சம் Sensitive-teeth-root-exposure
முரசு கரைந்து வேர் வெளிப்படாலும் பல் கூசும்.

மேற் கூறிய இரண்டும் பல்லின் உட்பகுதியில் இருக்கும் நுண்ணிய குழாய்களைத் தாக்குகின்றன. அதனால் பல்லின் நடுப்பகுதியிலுள்ள நரம்புகள் தூண்டப்பட்டு பற்கூச்சம் ஏற்படுகிறது. 

பற்சொத்தை பற்களில் உடைவு போன்றவற்றால் எனாமலுக்கு ஏற்படும் சேதத்தால் வலி ஏற்படுகிறது. இது பற் கூசச்ம் அல்ல. பலர் இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வதில்லை.

பற் கூச்சம் உலகளாவியது. சாதி, மத, இன வேறுபாடுகள் இன்றி எவரையம் தாக்கக் கூடியது. அதிக அமிலத்தன்மையுள்ள உணவு மற்றும் பானங்;களை உட்கொள்பவர்களிடம் அதிகமாயிருக்கலாம். எனவே, வைன், மதுபானம் அதிகம் எடுப்பவர்களிடையே கூடுதலாகக் காணப்படுகிறது.

காரணங்கள் என்ன?

முரசிற்கு அருகே பற்சொத்தை ஏற்பட்டால் கூச்சம் உண்டாவதற்கான சாத்தியம் அதிகம். அதற்குக் காரணம் நரம்புகள் அருகே இருப்பதுதான்.

முரசு கரைதல் பற்றி ஏற்கனவே சொன்னோம். முரசு கரைதலுக்கு நீரிழிவு ஒரு முக்கிய காரணமாகும் ஆயினும் உணவு உண்டபின் வாயைக் கழுவாதிதிருத்தல், ஒழுக்கான தினமும் பிரஸ் பண்ணாமை போன்றவற்றால் பல் முரசு ஆகியவற்றின் சுகாதாரத்தைப் பேணாதிருப்பது மற்றொரு முக்கிய காரணமாகும்
சுவைத்துச் சாப்பிடத் தடுக்கும் பற் கூச்சம் Sensitive-teeth-causes

ஏற்கனவே கூறியதுபோல வாய் சுகாதாரத்தைப் பேணாவிடில் பற்களுக்கிடையே காரை (Tartar) படியும். இது உள்நோக்கிப் பரந்து முரசைக் கரைய வைக்கும்.

சில பிள்ளைகள் இரவில் பல்லை நொறுமுவார்கள். சிலர் கோபத்தில் பல்லை நொறுமுவார்கள். அவ்வாறு பல்லைக் கடித்தல், நொறுமுதல் போன்றவற்றால் பல்லின் எனமாலில் தேய்மானத்தை ஏற்படுத்தி பற்கூச்சத்திற்கு காரணமாகும்.

பல்லை வெண்மையாக்குவுதற்கு உபயோகிக்கும் இரசாயனங்கள் மற்றும் பற்பசைகளும் பற்கூச்சத்திற்கு காரணமாகும்.

சில வாய் கொப்பளிக்கும் மருந்துகள்  (Mouth washes) அசிட்தன்மை மிக்கவை. அவற்றைத் தொடர்ந்து உபயோகித்து வரும்போது டென்னிடன் பகுதி சேதற்று பற்கூச்சம் ஏற்படுவதுண்டு.

சுவைத்துச் சாப்பிடத் தடுக்கும் பற் கூச்சம் Tooth-anatomy

நாம் உண்ணும் பல உணவு மற்றும் பான வகைகளும் அமிலத்தன்மை வாய்ந்தவை. உதாரணமாக எலுமிச்சை அன்னாசி போனற் புளிப்புத்தன்மையுள்ள பழங்கள், தக்காளி, ஊறுகாய், தேநீர் போன்றவையும் எனாமலை சேதமாக்கலாம்.

சில பற்சிகிச்சைகளாலும் பற்கூச்சம் ஏற்படுகிறது. இவை தவிர்க்க முடியாதவை. பல்லுக் கிளீன் பண்ணுதல், பல் முடியை Crown replacement மீளமைத்தல், போன்றவற்றால் ஏற்படும் பற் கூச்சம் தற்காலிகமானது. சில நாட்களில் நீங்கிவிடும்.

சுவைத்துச் சாப்பிடத் தடுக்கும் பற் கூச்சம் Brushing-teeth
பல் துலக்க ஏன் இந்த ஆவேசம்
சிலர் தமது பற்களை பிரஜ் கொண்டு கடுமையாகத் துலக்குவதுண்டு. இவ்வாறான கடுமையான பிரஷிங் பற் கூச்சத்தை ஏற்படுத்தும் என்பதில் உண்மையில்லை.

பற்கூச்சத்தைத் தடுக்க நீங்கள் என்ன செய்யலாம்.

முக்கியமான விடயம் உங்கள் வாய்ச் சுகாதராத்தைப் பேணுவதுதான். தினமும் இரண்டு வேளைகளாவது பிரஸ் பண்ணுங்கள். எதைச் சாப்பிட்டாலும் வாயை நன்கு அலசிக் கொப்பளியுங்கள். இனிப்பான பானங்கள் குடித்த பின்னரும் தண்ணீர் குடிப்பதின் மூலம் வாயைச் சுத்தப்படுத்தலாம்.

சுவைத்துச் சாப்பிடத் தடுக்கும் பற் கூச்சம் Waterl
வாயை அலசிக் கழுவுவது அவசியம்
மாறாக புளிப்புள்ள பானங்களான தேசிச்சாறு, தோடம்பழச்சாறு, வைன் போன்றவற்றைக் குடித்த பின்னர் உடனடியாக தண்ணீர் அருந்துவது நல்லது. இதன் மூலம் அவற்றிலுள்ள அமிலத்தன்மை பற்களைத் தாக்காது தடுக்கலாம்.

அத்துடன் மேற் கூறிய பானங்களை அருந்திய 10-15 நிமிடங்களுக்கு பிரஸினால் பல் துலக்குவதைத்த தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஆயினும் புளிப்பான உணவுகளையும் பானங்களையும் தவிர்ப்பது பற்கூச்சம் உள்ளவர்களுக்கு நல்லதாகும்.

கடுமையாக பிரஸ் பண்ணினாலும் பல் தேய்வதற்கான ஆதாரங்கள் இல்லை என்றபோதும் சரியான பல் துவக்கும் முறையைக் கடைப்பிடிப்பது அவசியம். பிரஸ்சை மேல் கீழாக அசைத்துப் பல் துலக்குவதே நல்லது. பக்கவாட்டிற்கு தேய்ப்பது நல்லதல்ல.

சுவைத்துச் சாப்பிடத் தடுக்கும் பற் கூச்சம் Brushing

பிரஸ் மென்மையாக இருப்பது அவசியம். கடுமையான பிரஸ்கள் எனாமலுக்கு சேதத்தை ஏற்படுத்தி பற் கூச்சத்தை மோசமாக்கலாம்.
தூக்கத்தில் பல் நொறுமுபவர்கள் தமது பற்களைப் பாதுகாப்பதற்கான சாதனங்கள் (Mouth guard) கிடைக்கின்றன.

சுவைத்துச் சாப்பிடத் தடுக்கும் பற் கூச்சம் How-To-Handle-Sensitive-Teeth
மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல்
பற் கூச்சமுள்ளவர்களுக்கென sensodyne,  Colgate's Sensitive Pro-Relief போன்ற விசேட பற்பசைகள் கிடைக்கின்றன. அவற்றைத் தற்காலிகமாகப் பயன்படுத்தலாம். ஓன்று சரிவராவிட்டால் மற்றொரு பிராண்டை உபயோகிப்பதில் தவறில்லை. பொதுவாக புளொரின் கலந்த பற்பசைகள் பற்கூச்சம் உள்ளவர்களுக்கு நல்லது.

ஆறு மாதத்திற்கு ஒரு தடவையாவது பற் கூச்சமுள்ளவர்கள் தமது பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.


டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.0.0.0.0.0.0
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum