TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன்

Go down

மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Empty மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன்

Post by அருள் Sun May 05, 2013 1:15 pm

மீன் குழம்பு


தேவையானப் பொருட்கள்



  • மீன் – அரைக் கிலோ
  • துருவிய தேங்காய் – அரைக் கோப்பை
  • வெங்காயம் – ஒன்றரை
  • பச்சை மிளகாய் – நான்கு
  • தக்காளி – ஒன்று
  • பூண்டு – ஆறு பற்கள்
  • புளி – ஒரு எலுமிச்சை அளவு
  • மிளகாய்த்தூள் – நான்கு தேக்கரண்டி
  • தனியாத்தூள் – இரண்டு தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – அரைத் தேக்கரண்டி
  • கடுகு – ஒரு தேக்கரண்டி
  • மிளகு – அரைத்தேக்கரண்டி
  • சீரகம் – அரைத்தேக்கரண்டி
  • வெந்தயம் – அரைத்தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • கொத்தமல்லி – ஒரு கட்டு
  • உப்பு – மூன்று தேக்கரண்டி
  • எண்ணெய் – அரைக் கோப்பை

மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Sal1




மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். தேங்காய் பூவுடன் அரை வெங்காயத்தை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.


மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Sal2




புளியை இரண்டு கோப்பை தண்ணீரில் ஊற வைத்து நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பச்சைமிளகாய், பூண்டு ஆகியவற்றை

நசுக்கி கொள்ளவும். தக்காளியை புளி கரைசலில் கரைத்துக் கொள்ளவும்.


மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Sal3




அடி கனமான ஒரு சட்டியில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும், கடுகு,
சீரகம், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு
நறுக்கின வெங்காயத்துடன், நசுக்கி வைத்ததையும் சேர்த்துப் போட்டு
வதக்கவேண்டும்.


மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Sal4




பிறகு உப்புத்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் அனைத்து தூள்களையும் போட்டு நன்கு பிரட்டிவிடவும்.


மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Sal5




சற்று வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும்.


மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Sal6




அத்துடன் கரைத்து வைத்துள்ள புளி, தக்காளி கரைசலை ஊற்றவும்.


மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Sal7




அத்துடன் ஒரு கோப்பை நீரைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.


மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Sal8




குழம்பு சற்று கெட்டியானவுடன் நறுக்கி வைத்துள்ள மீன் துண்டுகளைப் போடவும்.


மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Tuna91




பிறகு அரிந்த கொத்தமல்லியை தூவி விட்டு கொதிக்க விடவும்.


மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Sal10




ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.


மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Sal11




இப்போது சுவையான மீன் குழம்பு தயார்.


அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Empty Re: மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன்

Post by அருள் Sun May 05, 2013 1:16 pm

மீன் புலாவ்
தேவையானப் பொருட்கள்


  • பாஸ்மதி அரிசி-இரண்டு கோப்பை
  • மீன் -அரைக் கிலோ
  • பெரிய வெங்காயம்-ஒன்று
  • பச்சைமிளகாய்-ஒன்று
  • இஞ்சி-ஒரு துண்டு
  • பூண்டு-நான்கு பற்கள்
  • பட்டை-இரண்டு துண்டு
  • கிராம்பு-நான்கு
  • சீரகம்-ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை-ஒரு கொத்து
  • மிளகாய்த்தூள்-ஒரு தேக்கரண்டி
  • கரம்மசாலா-ஒரு தேக்கரண்டி
  • பச்சை பட்டாணி-கால் கோப்பை
  • மக்காச் சோளம்-கால் கோபை
  • எலுமிச்சைரசம்-இரண்டு மேசைக் கரண்டி
  • கொத்தமல்லி-ஒரு பிடி
  • உப்புத்தூள்-நான்கு தேக்கரண்டி
  • சுடு தண்ணீர்-நான்கு கோப்பை
  • எண்ணெய்-இரண்டு மேசைக்கரண்டி
  • நெய்-இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை

  • மீனை முட்கள் இல்லாத சதை பற்றுள்ள மீனாக பார்த்து வாங்கிக்
    கொள்ளவும்.பிறகு வேண்டிய அளவு துண்டுகள் போட்டு சிறிது மஞ்சத்தூளை
    போட்டு கழுவி வைக்கவும்.
  • வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி பூண்டை மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
  • அரிசியை கழுவிய உடன் வடிகட்டிக் கொள்ளவும்.வாய்யகன்ற பாத்திரத்தை
    காயவைத்து எண்ணெய்யையும்,நெய்யையும் கலந்து ஊற்றி பட்டை, கிராம்பு,
    சீரகம் போட்டு வறுக்கவும்.
  • தொடர்ந்து வெங்காயம், பச்சைமிளகாய் கறிவேப்பிலை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.
  • பிறகு மிளகாய் தூள், கரம்மசாலாவை போட்டு வறுத்து அரிசியை கொட்டி கிளறவும்.
  • பிறகு பச்சை பட்டாணி, மக்காச் சோளத்தை போட்டு சுடுதண்ணீரை ஊற்றி உப்பை தூவவும்.
  • இந்த கலவையை மின்சாரத்தில் இயங்கும் அரிசி குக்கரில் ஊற்றி மீன் துண்டுகளை போடவும்.
  • நன்கு கிளறி விட்டு வேகவிடவும்.அரிசி வெந்து நீர் முழுவதும் வற்றியவுடன் குக்கர் தானாக மித சூடு பதத்திற்க்கு வந்துவிடும்.
  • இப்போழுது மூடியை திறந்து எலுமிச்சைரசத்தை ஊற்றி பரிமாறும் பாத்திரதிற்கு மாற்றவும்.கொத்தமல்லியை தூவி அலங்கரிக்கவும்.
  • சிறிது சூடு ஆறிய பிறகு பரிமாறவும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Empty Re: மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன்

Post by அருள் Sun May 05, 2013 1:17 pm

மீன் பிரியாணி
தேவையானப் பொருட்கள்


  • சீலா மீன் – அரை கிலோ
  • அரிசி – முன்று கப்
  • மீனை தாளிக்கவும்
  • வெங்காயம் – முன்று பெரியது
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – முன்று தேக்கரண்டி
  • தக்காளி – ஐந்து பெரியது
  • பச்ச மிளகாய் – ஏழு
  • மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
  • பட்டை,ஏலம்,கிராம்பு – ஒன்று ஒன்று
  • எண்ணை – கால் கப்
  • நெய் – ஒரு மேசை கரண்டி
  • எண்ணை – மீன் பொரிக்க தேவையானது
  • கேரட்,பீன்ஸ்,பீஸ், – ஒரு கப்
  • எலுமிச்சை – ஒன்று
  • ரெடி கலர் பொடி – ஒரு பின்
  • கொத்து மல்லி, புதினா – கொஞ்சம்
  • மீன் – கால் கிலோ – லேசாக பொரித்து போடவும்
  • கீ ரைஸ்
  • எண்ணை – கால் கப்
  • பட்டை – சிறியது ஒன்று
  • வெங்காயம் – ஒன்று
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேகரண்டி
  • கொத்து மல்ல்லி புதினா – கொஞ்சம்
  • மீன் – கால் கிலோ(நல்ல வருக்கவும்)




செய்முறை

  • மீனை கழுவி சுத்தம் செய்து முள்ளை எடுத்து விடவேண்டும்,
  • கால் கிலோவை சிறு துண்டுக்ளாக போடவும். மீதியை நாலா வெட்டவும்.
  • மீனில் உப்பு,மஞ்ச பொடி,கொஞ்சமா இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பொடியாக
    அரிந்ததை லேசா பொரித்தால் போதும், மீதிய நல்ல பொரிக்கவும்.
  • இதற்கு தயிர் தேவையில்லை ,கடல் உணவுடன் தயிர் சேர்த்தால் சிலருக்கு அலர்ஜி வரும்.
  • முதலில் அரிசியை ஊறவைத்து விடுங்கள்.
  • நல்ல வாயகன்ற சட்டியாக இருந்தால் நல்லது.
  • பாதி எண்ணையை காய வைத்து பட்டை ,கிராம்பு,ஏலம் போட்டு வெங்காயத்தை போட்டு வதக்குங்கள்.
  • வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல கிளறி சிம்மில் வைக்கவும்.
  • பிறகு கொது மல்லி புதினா போட்டு இரண்டு நிடம் கழித்து தக்காளி,பச்சமிளகாய் போட்டு வதக்கவும்.
  • இப்போது தக்காளியில்,மிள்காய் தூள்,மஞ்சல் துள் போடு வதக்கவும்.
  • பிறகு தக்காளி கூட்டாக வெந்ததும் லேசக பொரித்து வைத்த மீனை சேர்த்து லேசாக கிளறி, அரை லெமென் பிழியவும்.
  • இப்போது தனியாக உதிரியாக கீரை தயாரிக்கவும்.
  • இப்போது கிரேவியை முன்றாக பிரிக்கவும்.
  • கீரைஸையும் மூன்றாக பிரிக்கவும்.
  • மீனை ரண்டாக பிரிக்கவும்
  • முதலில் கொஞ்சம் கிரேவி,ரைஸ், பொரித்த மீன். கொஞ்சம் நெய்.
  • அடுத்து கொஞ்சம் கிராஅவி ,சாதம் பொரித்த மீ, கொஞ்சம் நெய்.
  • அடுத்து கொஞ்சம் கிரேவி,மீதி ஊள்ள சாதம் மேலே ரெட் கலர் பொடியை கரைத்டு
    தெளித்து மீதி நெய் தெளித்டு சமப்படித்தி ஐந்து நிமிடம் தம்மில்
    வைக்கவும்.
  • கீரைஸ் முதலே செய்து விட்டதால், ஐந்து நிம்டிஅம் முக்கால் வேக்காடு வடித்து போடுவதாக இருந்தால் இருபது நிமிடம் தம் போடனும்.
  • இரக்கியதும் உடையாமல் நல்ல கிளறி சாப்பிடவும்.
  • சுவையான் மீன் பிரியானி ரெடி
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Empty Re: மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன்

Post by அருள் Sun May 05, 2013 1:17 pm

கூந்தள் ரோஸ்ட்(squid)

தேவையானப்பொருட்கள்


  • கூந்தள் மீன் – 1 கிலோ
  • வெங்காயம் – 3
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி&பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  • தக்காளி – 1
  • கறிவேப்பிலை – 2 கொத்து
  • சோம்பு – 1/2 ஸ்பூன் பொடித்தது
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்

செய்முறை

  • முதலில் கூந்தள் மீனில் உப்பு கலந்து வைய்யுங்கள் அப்பொழுது தோல்
    எளிதாக உரிந்து வரும்..பிறகு தோலை லேசாக இழுத்தால் அப்படியே உரிந்து
    வரும்..மேலுள்ள பகுதியை தோல் நீக்கி அப்படியே எடுக்கலாம்..உள்ளில்
    இருந்து வரும் பகுதியில் கடைசி பகுதியை மட்டும் எடுக்கலாம்..மீனின்
    உள் வருபவற்றை நீக்கி களைந்து விடலாம்.பிறகு மீனை நன்கு கழுகி
    தண்ணீர் வடிய விடவும்.(இல்லையென்றால் வேகும்பொழுது அதிக தண்ணீர்
    பெருகும்)
  • பிறகு ஒரு குக்கரில் எண்ணை 3 ஸ்பூன் காயவைத்து அதில் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு இஞ்சி&பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
  • அதன் பின் தக்காளி ,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பின் மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,சோம்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி
    கூந்தள் மீனை சேர்க்கவும்.பிறகு குக்கரை மூடி 1 விசில் விடவும்
  • இப்பொழுது மீன் வெந்திருக்கும் அதிகம் தண்ணீர் காணப்படும்..மூடியைத் திறந்து தண்ணீர் வற்றி ரோஸ்டாக வரும்வரை கொதிக்க விடவும்
  • சுமார் 10 நிமிடம் வற்றவிட்டால் மிக சுவையான கூந்தள் ரோஸ்ட் தயார்

குறிப்பு:

இதனை வேறு விதத்திலும் செய்யலாம்.வெங்காயம் முதல் எல்லா பொடிகளையும்
குக்கரில் கணவாயுடன் சேர்த்து 1 விசில் விட்டு வற்றவைத்து கடைசியில் 1
ஸ்பூன் எண்ணையில் கறிவேப்பிலை,2 சின்ன வெங்காயம் தாளித்து ஊற்றலாம்.குறைந்த
எண்ணையில் எண்ணையில் மிகவும் சுவையாக,சுலபமாகக் கூட சமைக்கலாம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Empty Re: மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன்

Post by அருள் Sun May 05, 2013 1:18 pm

மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.விருந்துகளில் starter ஆக வைக்கலாம்.




கட்டில் ஃபிஷ் ரிங்(squid rings)


தேவையானப்பொருட்கள்


  • squids(cuttle fish)கனவாய் மீன் -1/2கிலோ
  • சோளமாவு-3தேக்கரண்டி
  • கடலைமாவு-3தேக்கரண்டி
  • அரிசிமாவு-2தேக்கரண்டி
  • மிளகாய் தூள்-1தேக்கரண்டி
  • முட்டை வெள்ளைக்கரு-1
  • ப்ரெட் தூள்-1கப்
  • உப்பு-தேவையான அளவு
  • எண்ணெய் -பொரிப்பதற்கு

செய்முறை

  • கனவாயை சுத்தம் செய்து வட்ட வளையங்களாக வெட்டவும்.
  • ப்ரெட் தூள் எண்ணெய் தவிர எல்லா பொருட்களையும் கனவாயுடன் கலந்து வைக்கவும்.
  • 10 நிமிடம் ஊற விடவும்.
  • வாணலியில் எண்ணெய் சூடாக்கி வளையங்களை ப்ரெட் தூளில் புரட்டி பொரிக்கவும்.
  • பொன்னிறமானதும் கிச்சன் டவலில் வடிகட்டவும்.
  • சில்லி சாஸ்,தக்காளி சாஸுடன் பரிமாறினால் ப்ளேட் ம்ட்டும்தான் மீதமிருக்கும்,

குறிப்பு:

எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.அதிகமாக சூடாகி விட்டால்
ரிங்ஸ் கருகி விடும்.சூடு போதவில்லையென்றால் மொறு மொறுப்பாக
இருக்காது.கனவாயும் ரப்பர் போல் ஆகிவிடும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Empty Re: மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன்

Post by அருள் Sun May 05, 2013 1:20 pm

கருவாட்டுக் குழம்பு
பொதுவாக
கருவாட்டுக் குழம்பில் கருவாடுகள் வாசனைக்காகத்தான் சேர்க்கப்படும்.
மிகச் சிறிய அளவிலான நெத்திலி, சன்னாக்குண்ணி கருவாடுகளை, மீன் போல
யாரும் எடுத்துச் சாப்பிடுவது இல்லை. கறிவேப்பிலைப் போல் வாசனைக்கு
சேர்த்துக் கொண்டு, சாப்பிடும்போது விலக்கிவிடுவார்கள். கருவாடு
சிலருக்குப் பிடிக்காது. சிலர் அதற்காக உயிரையும் கொடுக்கத் தயாராக
இருப்பார்கள். கருவாடு பிடிக்காதவர்களையும் சுவை பார்க்கச் செய்யும்
அளவிற்கு, சுவையான கருவாட்டுக் குழம்பு செய்முறையை நமக்குத்
தருகின்றார், திருமதி. செல்வி செந்தில்.
தேவையானப் பொருட்கள்



  • நெத்திலிக் கருவாடு – 30
  • கத்திரிக்காய் – 2
  • முருங்கைக்காய் – 2
  • சின்ன வெங்காயம் – 10
  • தக்காளி – ஒன்று
  • பச்சை மிளகாய் – 3
  • மொச்சைக் கொட்டை – அரை கப்
  • புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
  • மிளகாய் தூள் – 1 1/2 மேசைக்கரண்டி
  • மல்லி தூள் – 2 மேசைக்கரண்டி
  • வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
  • உப்பு – அரை தேக்கரண்டி
  • எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Untitled1




நெத்திலிக் கருவாடு இந்த வகைக் குழம்பிற்கு மிகவும் சுவையாக
இருக்கும். சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கவும். முருங்கைக்காயை இரண்டு
அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நான்கு பாதியாக
நறுக்கிக் கொள்ளவும்.


மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Untitled2


வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மொச்சைக்
கொட்டையை போட்டு 2 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.




மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Untitled3


புளியில் 3 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து, பிறகு அதில் மிளகாய்
தூள், மல்லி தூள், உப்பு போட்டு கலக்கி வைக்கவும். அதிலேயே இரண்டாக
கீறின் பச்சை

மிளகாய், நறுக்கின தக்காளி, வறுத்து எடுத்த மொச்சை சேர்க்கவும்.




மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Untitled4




ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் தாளித்து பின்னர் நறுக்கின சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.




மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Untitled5




பிறகு அதில் கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்றவும்.




மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Untitled6




அத்துடன் நறுக்கின கத்திரிக்காய், முருங்கைக்காய் துண்டங்களை சேர்க்கவும்.




மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Untitled7
z



வாணலியை மூடி வைத்து வேகவிடவும். சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.




மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Untitled82




அதன் பின்னர் கொதிக்கும் குழம்பில் கருவாட்டைச் சேர்க்கவும். லேசாக கிளறிவிட்டு வேகவிடவும்.




மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Untitled9




கருவாடு வெந்து நல்ல மணம் வர ஆரம்பித்தவுடன் இறக்கவும். வாசனை
ஊரையே விருந்துக்கு அழைக்கும். சுவையோ மீண்டும் மீண்டும் சாப்பிட
தூண்டும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Empty Re: மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன்

Post by அருள் Sun May 05, 2013 1:20 pm

வாளை கருவாடு பிரை

தேவையானப்பொருட்கள்


  • வாளை கருவாடு – ஒன்று
  • மஞ்சள் தூள் – கால் தெக்கரண்டி
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை தேக்கரண்டி
  • மிளகாய் தூள் முக்கால் தேக்கரண்டி
  • உப்பு தேவைக்கு

செய்முறை

  • வாளை கருவாடை விரல் அளவுக்கு துண்டுகளாக போட்டு நல்ல கழுவி மெலே
    குறிப்பிட்டுள்ள மசாலாக்களை போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து பொரிக்கவும்.
  • பிளெயின் தாலுக்கு நல்ல இருக்கும்.

குறிப்பு:

கருவாடு கழுவும் முறை — வாளை கருவாடு என்பது நீளமாக இருகுமே அது.
கருவாடில் உப்பு இருக்கும் கொஞ்சமா போட்டா போதும். நல்ல் கல்லில் உரைத்து
கழுவனும், லேசான சுடுதண்ணீரில் மஞ்சள் துள் (அ) வினிகர் போட்டு பத்து
நிமிடம் ஊறவைத்து பிறகு உரைத்து கழுவனும். எல்லா மீனுக்கும் வினிகரும் ஒரு
டிராப் விட்டு ஊறவைத்து கழுவலாம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Empty Re: மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன்

Post by அருள் Sun May 05, 2013 1:28 pm

நெத்திலி கருவாடு சுக்கா

தேவையானப்பொருட்கள்


  • நெத்திலி கருவாடு – 200 கிராம்
  • முந்திரி – 10
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • பூண்டு – 10 பல்
  • மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
  • உப்பு – ஒன்றரை தேக்கரண்டி
  • கான்பிளவர் – 2 தேக்கரண்டி
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

செய்முறை

  • வெங்காயத்தை பொடியாக வெட்டி வைக்கவும்.
  • முந்திரியை சிறு சிறு துண்டாக உடைத்து வைக்கவும்.
  • நெத்திலிக் கருவாடை ஒரு மணிநேரம் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  • ஊறிய பிறகு கருவாடை மண் போக அலசி பிழிந்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் உள்ள நடு முள்ளை உருவி சதை பகுதியை எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் அதில் மிளகாய் தூள், உப்பு அரை தேக்கரண்டி கான்ஃப்ளார் போட்டு பிசறிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முதலில் பொடியாக வெட்டிய
    வெங்காயத்தையும், கால் தேக்கரண்டி உப்பு போட்டு பொன் வறுவலாக மொறு
    மொறுப்பாக வறுத்து எண்ணெயை நன்கு வடித்துக் கொள்ளவும்.
  • அதே போல் பூண்டை உப்பு போட்டு சிறு தீயில் மொறு மொறுப்பாக வறுக்கவும்.
    அதையும் எண்ணெய் பிசுப்பு போக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு முந்திரி வறுத்து எடுத்து அந்த எண்ணெயில் நெத்திலி கருவாடை மொறு, மொறுப்பாக பொரித்து எடுத்து பேப்பரில் போடவும்.
  • பிறகு ஒரு கைப்பிடி கறிவேப்பிலை பொரித்து போட்டு மிளகாய், உப்பு
    வறுத்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கையினால் கலந்து வைக்கவும்.

குறிப்பு:

மிதமான தீயில் தான் வறுக்க வேண்டும். அதிக தீயில் பொரித்தால் கருகிவிடும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Empty Re: மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன்

Post by அருள் Sun May 05, 2013 1:29 pm

நெத்திலி கருவாட்டு குழம்பு

தேவையானப்பொருட்கள்


  • கருவாடு-ஒரு கோப்பை
  • கத்திரிக்காய்-நான்கு
  • கருணைகிழங்கு-கால் கிலோ
  • வெங்காயம்-ஒன்று
  • தக்காளி-ஒன்று
  • துறுவிய தேங்காய்-அரைக் கோப்பை
  • புளி-ஒறு எலுமிச்சை அளவு
  • மிளகாய்த்தூள்-இரண்டு-தேக்கரண்டி
  • மஞ்சத்தூள்-ஒருத்தேக்கரண்டி
  • தனியாத்தூள்-ஒருதேக்கரண்டி
  • மிளகுத் தூள்-அரை தேக்கரண்டி
  • சீரகத் தூள்-அரைத் தேக்கரண்டி
  • வறுத்த அரிசி மாவு-ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய்-அரைக் கோப்பை.
  • கறிவேப்பிலை-ஒரு கொத்து.
  • கடுகு-ஒரு தேக்கரண்டி
  • பூண்டு-நான்கு பற்கள்
  • உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி.




செய்முறை

  • கருவாடை அரை மணி நேரம் ஊறவைத்து,நன்கு கழுவி கொள்ளவும்.
  • கருனைகிழங்கை,தோல் சீவி துண்டுகளாக்கி கொதிக்கும் நீரில் போட்டு அரைவேக்காடு வேகவைத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊறவைத்து மூன்று
  • கோப்பை தண்ணில் கரைத்துக் கொள்ளவும்.பிற்கு தேங்காய், வெங்காயத்தை
    அரைத்து, உப்பு, தக்காளியை சேர்த்து புளி தண்ணிரில் கலக்கி வைக்கவும்.
  • பூண்டை நசுக்கி கொள்ளவும். கத்திரிக்காயை நறுக்கி கொள்ளவும்.
  • சட்டியில் எண்ணெயை ஊற்றி கடுகு,கறிவேப்பிலை,பூண்டு போட்டு நன்கு
    வறுத்து கத்திரிக்காயை போட்டு நன்கு வதக்கவும். கூடவே கருவாடையும்
    போட்டு சிறிது நேரம் வதக்கி எல்லாத் தூள்வகைகளையும் போட்டு நன்கு
    வதக்கவும்.
  • பிறகு கலக்கி வைத்துள்ள் புளி கரைசலை ஊற்றி,கருணைகிழங்கு துண்டுகளையும்
    போட்டு கொதிக்கவிட வேண்டும்.அனலை குறைவாக வைக்க வேண்டும்.நன்கு
    கொதித்து பச்சை வாசனை நீங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  • இதே போல் எல்லா கருவாடு வகைகளிலும் செய்யலாம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Empty Re: மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன்

Post by அருள் Sun May 05, 2013 1:29 pm

சுரைக்காய் நெத்திலி கருவாடு

தேவையானப்பொருட்கள்


  • சுரைக்காய்-அரைக்கிலோ
  • நெத்திலி கருவாடு-ஒரு கோப்பை
  • வெங்காயம்-இரண்டு
  • தக்காளி-ஒன்று
  • பூண்டு-நான்கு பற்கள்
  • கடுகு சீரகம்-ஒரு தேக்கரண்டி
  • உ.பருப்பு-ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை-ஒரு கொத்து
  • மிளகாய்த்தூள்-இரு தேக்கரண்டி
  • தனியாத்தூள்-ஒரு தேக்கரண்டி
  • மஞ்சத்தூள்-அரைதேக்கரண்டி
  • உப்புத்தூள்-ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய்-கால்க்கோப்பை
  • கொத்தமல்லி-ஒரு பிடி

செய்முறை

  • சுரைக்காயை தோலை சீவி சிறிய துண்டுகளாக நருக்கிக் கொள்ளவும்.அதன் உள்ளிருக்கும் விதைகளை நீக்க வேண்டாம்.
  • கருவாடை அரைமணி நேரம் ஊற வைத்து நன்கு கழுவிக் கொள்ளவும்.
  • சட்டியை காய வைத்து எண்ணெயை ஊற்றி தாளிப்புச் சாமான்களை போட்டு தாளித்து வெங்காயம்,தக்காளி, பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.
  • பிறகு அதில் கருவாடை போட்டு வதக்கி தொடர்ந்து எல்லாத்தூளையும் போட்டு நன்கு வதக்கவும்.
  • பிறகு நறுக்கிய காயை போட்டு கிளறி விட்டு இரண்டு கோப்பை தண்ணிரை ஊற்றி மூடி போட்டு வேகவிடவும்.
  • நீர் முழுவதும் வற்றியவுடன் கொத்தமல்லியை தூவி கலக்கி விட்டு இறக்கி விடவும்.

அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Empty Re: மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன்

Post by அருள் Sun May 05, 2013 1:30 pm

கருவாடு அவியல்

தேவையானப்பொருட்கள்


  • நெத்திலி கருவாடு அல்லது ஏதேனும் கருவாடு-200கிராம்
  • பரங்கிக்காய்-1சிறு துண்டு
  • முருங்கைக்காய்-1
  • வாழைக்காய்-1(சிறியது)
  • மாங்காய்-1(சிறியது)
  • பச்சை மிளகாய்-3
  • புளி-1நெல்லிக்காய் அளவு
  • கறிவேப்பிலை-1கொத்து
  • தேங்காய் எண்ணெய்-2தேக்கரண்டி
  • உப்பு-தேவைக்கு
  • அரைக்க:
  • தேங்காய் துருவல்-1கப்
  • சின்ன வெங்காயம்-8
  • மிளகாய் தூள்-1மேசைக்கரண்டி(காரத்துக்கு ஏற்ப)
  • மஞ்சள்தூள்-1/2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை-1கொத்து

செய்முறை

  • கருவாடை சுத்தம்செய்யவும்.
  • அரைக்க வேண்டியவற்றை தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைக்கவும்.
  • காய் கறிகளை நீளவாக்கில் வெட்டவும்.
  • புளிக்கரைசல்,உப்பு,அரைத்த மசாலா எல்லாவற்றையும் 2கப் தண்ணீரில் கலந்து சட்டியில் ஊற்றவும்.
  • இதில் காய்கறிகள்,கருவாட்டை சேர்த்து அடுப்பில் ஏற்றவும்.
  • சட்டியை மூட வேண்டாம்.
  • காய்கள்,கருவாடு வெந்து தண்ணீர் வற்றி வரும்போது 1கொத்து கறிவேப்பிலை தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கவும்.
  • மண் சட்டியில் செய்தால் சுவையே தனி.

குறிப்பு:

மாங்காயின் புளிப்பை பொறுத்து புளிக்கரைசல் சேர்க்கவும்.கருவாட்டில்
அதிகம் உப்பிருந்தால் உப்பை குறைவாக சேர்க்கவும். ஒன்றிரண்டு காய்கள்
இல்லாவிட்டாலும் இதே போல் செய்யலாம். காய் போடாமல் கூட செய்யலாம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Empty Re: மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன்

Post by அருள் Sun May 05, 2013 1:31 pm

கூனிப்பொடி பொரியல்

கூனிப்பொடி என்பது ஒருவகை மீன்.பார்ப்பதற்கு மிகசிறிய இறால் போல இருக்கும்.ஆனி ஆடி மாதங்களில் கிடைக்கும்.






தேவையானப்பொருட்கள்

  • கூனிப்பொடி-1/4கிலோ
  • முருங்கைக்கீரை-1கப்
  • தேங்காய் எண்ணெய்-2மேசைக்கரண்டி
  • கடுகு-1/2தேக்கரண்டி
  • உப்பு-தே.அ
  • கறிவேப்பிலை-2இனுக்கு
  • அரைக்க:
  • தேங்காய் துருவல்-1/2கப்
  • சீரகம்-1/2 தேக்கரண்டி
  • பூண்டு-1பல்
  • மிளகாய்வற்றல்-3
  • மஞ்சள்தூள்-1/4தேக்கரண்டி

செய்முறை

  • கூனிப்பொடியை நன்றாக அலசி தண்ணீரை பிழிந்து வைக்கவும்.
  • முருங்கை கீரையை சுத்தம் செய்யவும்.
  • அரைக்க வேண்டியவற்றை தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து கூனிப்பொடி,முருங்கைக்கீரை சேத்து 5நிமிடம் வதக்கவும்.
  • 1/4 கப் தண்ணீர்,உப்பு சேர்த்து வேக விடவும்.
  • நன்கு வெந்து தண்ணிர் வற்றியதும் அரைத்ததை போட்டு கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கவும்.

குறிப்பு:

தேங்காய் எண்ணெய் விருப்பமில்லாதவர்கள் சாதாரண எண்ணெய் பயன் படுத்தலாம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Empty Re: மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன்

Post by அருள் Sun May 05, 2013 1:32 pm

கருவாடு பொடி

தேவையானப்பொருட்கள்


  • காரப் பொடி கருவாடு – 100 கிராம்
  • கசடசா – 3 தேக்கரண்டி
  • தனியா – 6 தேக்கரண்டி
  • மிளகாய் வற்றல் – 10
  • உப்பு – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி




செய்முறை

  • காரப்பொடி கருவாடை தலை நீக்கி கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சுத்தம் செய்த கருவாடு, தனியா, மிளகாய் வற்றல் போட்டு வறுக்கவும்.
  • பிறகு வெறும் கடாயை அடுப்பில் வைத்து கசகசாவைப் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் வறுத்த கசகசாவை மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
  • அதன் பின் வறுத்த கருவாடு, மிளகாய், தனியா, கசகசா எல்லாம் போட்டு நைசாக தூள் செய்துக் கொள்ளவும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Empty Re: மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன்

Post by அருள் Sun May 05, 2013 1:33 pm

மாசிக் கருவாட்டு சம்பால்
மாசிக்
கருவாடு பார்ப்பதற்கு மரக்கட்டை போல் இருந்தாலும், அதை உடைத்து பொடி
செய்து, செய்யக் கூடிய முறைப்படி செய்தால், அதுவும் ரசம் வைத்து
சாப்பிடும்போது இதை கறியாக சேர்த்துக் கொண்டால் மிகவும் அருமையாக
இருக்கும்! இது தஞ்சை,நாகை வட்டார இஸ்லாமியர்கள் மிகவும் விரும்பி
சாப்பிடக்கூடிய ஒரு கறி வகை!




தேவையானப்பொருட்கள்

  • மாசிக் கருவாடு ( இடித்து, பொடி பண்ணியது) – 2 கப்
  • தேங்காய் துருவல் – 1கப்
  • காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6
  • முழு மிளகு – 1 ஸ்பூன்
  • நாட்டு வெங்காயம் – 6 அல்லது 7
  • உப்பு – தேவைக்கு

செய்முறை

  • காய்ந்த மிளகாயை நெருப்பில் சுட்டு எடுத்துக் கொண்டு, அத்துடன் இடித்து
    பொடியாக்கிய மாசி கருவாட்டை வைத்து (மிளகாய் பொடியாகும்வரை)
    மிக்ஸியில் அரைத்து, பிறகு முழு மிளகை சேர்த்து ஒன்றிரண்டாக பொடியாக்கி,
    தேங்காய் துருவலை சேர்த்து லேசாக ஒரு சுற்று விட்டு, கடைசியாக
    நாட்டு வெங்காயம்,தேவைக்கு உப்பு சேர்த்து (வெங்காயம் முழுமையாக
    அரைந்துவிடாமல்) எடுத்துவிடவேண்டும்.
  • காரம் அதிகம் தேவைப்பட்டால், மிளகாயை அதிகமாக்கிக் கொள்ளலாம்.

குறிப்பு:

1.பச்சை மிளகாய் விரும்புபவர்கள் காய்ந்த மிளகாய்க்கு பதிலாக அதை
பயன்படுத்திக் கொள்ளலாம்.ஆனால் அதை கடைசியாக வெங்காயத்தோடு சேர்த்துதான்
வைக்க வேண்டும்.

2.பொடி பண்ணி ரெடிமேடாக இருப்பதைவிட, வெயிட்டாக இருக்கக்கூடிய
மாசிக்கருவாடாக பார்த்து வாங்கி,இடித்து,தூள் பண்ணி செய்வதுதான் ருசி
கூடுதலாக இருக்கும்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Empty Re: மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன்

Post by அருள் Sun May 05, 2013 1:34 pm


பூசணிக்காய் கருவாடு பிரட்டல்
தேவையானப்பொருட்கள்


  • மஞ்சள் பூசணிக்காய் – 1/2 கிலோ
  • வஞ்சிரம் கருவாடு – 2 துண்டுகள்
  • வெங்காயம் – 2
  • வற்றல் மிளகாய் – 5
  • மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
  • சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
  • கெட்டியான புளி விழுது – 2 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் – 2 ஸ்பூன்
  • உப்பு – 1/4 ஸ்பூன்( தேவைப்பட்டால் )

செய்முறை

  • பூசணிக்காயை சதுரத்துண்டுகளாய் நறுக்கி கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
  • கருவாட்டை நன்கு கழுவிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிள்ளிய மிளகாய் வற்றல் போடவும்.
  • வெங்காயத்தை சேர்க்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமானதும் கருவாட்டை சேர்த்து கிளறவும்.
  • கருவாடு பச்சைவாடை போக வதக்கவும்.
  • பின் அதில் பூசணிக்காய் சேர்த்து கிளறவும்.
  • சீரகத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டவும்.
  • சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேகவிடவும்.
  • வெந்ததும் புளிவிழுது சேர்த்து கிளறவும்.
  • தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

குறிப்பு:

கருவாட்டில் உப்பு ஏற்கனவே இருக்கும் அதனால் சுவைத்து பார்த்து தேவையென்றால் மட்டும் உப்பு சேர்க்கவும்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன் Empty Re: மீனைக் கொண்டு செய்யப்படும் பல்வேறு வகையான உணவுச் செய்முறைக் குறிப்புகள் படங்களுடன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பல்வேறு துறைகளில் மாணவர்கள் முதல் அனைவருக்கும் குறிப்புகள் (Notes) கொடுக்கும் பயனுள்ள தளம்.
» தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.
» இராணுவ உணவுச் சாலைகளில் கரும்புலிகளின் சீருடைத் துணிகளில் மேசைவிரிப்புக்கள் (படங்கள்)
» இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தி கொண்டு வந்த தீர்மானத்தை தி.மு.க., ஆதரிக்கவில்லை.
»  எளிய வைத்திய குறிப்புகள் (அழகு குறிப்புகள் ,பாட்டி வைத்தியம் ..) HOME REMEDIES

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum