TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-

3 posters

Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-

Post by அருள் Fri Jan 11, 2013 3:32 pm

பாகம் 01


இதுதான் நீங்கள் கேட்ட கண்ணி வெடிகள்
அகற்றும் பகுதி!’ என்று ஓட்டுனர் இயல்பாகத்தான் சொன்​னார். ஆனால், எனக்கு
கண்ணில் வெடித்தது​போல் இருந்தது. எத்தனை உயிர்களைக் காவு​வாங்கிய இடம்!



கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு பரந்தன்
சந்தியைக் கடக்கையில், மனதில் பெரும் வெறுமை. அந்தச் சாலையின் வலதுபுறமாகச்
செல்வதுதான் முல்லைத்தீவை அடையும் வழி. 'சின்ன உப்பளம்’ பகுதியில் நின்றது
பேருந்து.

நான் இறங்கிய இடத்தில் ஓர் உணவகம். இராணுவத்துக்குச் சொந்தமானது என்ற மிலிட்டரி மிடுக்கு அந்த உணவகத்துக்கு இருந்தது.

ஆயுதம் ஏந்தியபடி புலி பதித்த தடத்திலும், ஆக்கிரமிப்பாய் இன்று சிங்கள
இராணுவம் குவிந்துள்ள பாதையிலும் கண்ணி வெடிகள் இருக்கின்றன. இனியும்
யாருக்காக என்ற வேதனைக் கேள்வியுடன், மரண நெடுஞ்சாலையான 'ஏ9’ சாலையில்
நடக்கிறேன்.

கண்ணி வெடிகளை அகற்றும் பணி நடக்கிறது. எல்லா வேலைகளையும்
சிங்களவர்களுக்கே தரும் இலங்கை அர​சாங்கம், உயிருக்கு ஆபத்தான கண்ணி
வெடிகள் அகற்றும் பணியில் தமிழர்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

நொடி கவனம் சிதறி​னாலும் உயிர் போகும் வேலை. அதைப் படம்பிடித்துக்கொண்டே
நகர்ந்தேன். தூரமாய் ஒரு கூடாரம் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் உன்னிப்பாகப்
பார்த்தபோது அங்கேயும் இராணுவம்.

நான் நின்றுகொண்டு இருந்த இடத்தைப் பார்த்தேன். மணல் நிறைந்த தடம் அது.
கண்ணுக்கெட்டும் தூரத்தில் தண்ணீரும் இராணுவத்தின் யுத்த வெற்றிச்
சின்னமும் தென்பட்டது.

எந்த மக்களையும் பார்க்க முடியவில்லை. நடந்தே தண்ணீரை ஊடறுத்துச் சென்று
பாதையை கடக்க முடிவெடுத்து, கொஞ்ச தூரம் நடந்திருப்பேன். ஒரு பேருந்து
வந்தது. அதில் ஏறினேன்.

சில நிமிடங்களில் வந்தது, சிங்களர்​களுக்கான வெற்றிச் சின்னம். அப்போது
மணி காலை 9.30. இராணுவ டெம்போவில் இருந்த ஆயுதங்கள் இறக்கப்​பட்ட
நேரத்தில், நான் தனி ஆளாக அந்த இடத்தில் நின்றேன். என் மீது இராணுவப்
பார்வைகள்.

யார் நீ? என்றது ஒரு குரல்.

இலங்கைக்குச் சுற்றுலா வந்துள்ளேன் என்றேன் சாதாரணமாக.

போ'' என்று கை அசைத்தனர். நான் நுழை​வதற்குள் சிங்களச் சுற்றுலாவாசிகள்
சுமார் 30 பேர் ஒரு வானில் வந்து இறங்கினர். அவர்களோடு நானும் நுழைந்தேன்.

இராணுவத்தைச் சேர்ந்த மூன்று பேர் செல்போன் பேசியவாறே எங்களுடன் வந்தனர்.

சிங்களவர்களைப் போன்றே, நானும் அந்த வெற்றிச் சின்னத்தைப் படம்
எடுத்தேன். இராணுவத்தினர் சிங்களவர்களுக்கு எதையோ சொல்லிக்கொண்டு
இருந்தனர்.

அவர்களுக்குச் சிங்களத்தில் சொன்னதை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ எனக்குச் சொல்ல முடியுமா? என்று கேட்டேன்.

சிங்களம் தவிர எதுவும் தெரியாது என்றனர்.

சிங்களப் பயணி ஒருவர் என்னிடம், ''இது நம் மண்ணை ஆக்கிரமித்து இருந்த
புலித் தீவிரவாதிகளிடம் மீட்ட இடம். இங்கு நம் போர் வீரர்கள் பெரும்
தியாகத்தைச் செய்து புலித் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றி
உள்ளனர்.

நமது மண்ணை நாம் மீட்டெடுத்து உள்ளோம். நீங்கள் எல்லாம் தென் இலங்கையில்
இருந்து வந்துள்ளீர்கள். இது ஆபத்து நிறைந்த இடம். சாலையை விட்டு
உள்பகுதிக்குள் செல்லாதீர்கள். வெடிக்காத குண்டுகள் நிறையப் புதைக்கப்பட்டு
உள்ளன'' என்று இராணுவ வீரர் சொன்னதாக ஆங்கிலத்தில் சொன்னார்.

மனித நாமத்தினால் தேசத்தின் புண்ணியத்துக்குத் தோன்றிய ஆயுதம் தாங்கிய
படைத் தலைவர் அதிமேதகு மகிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையிலும் பாது​காப்புச்
செயலர் கோத்தபாய ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலிலும் ஒருங்கிணைப்பிலும் ஏனைய
இராணுவப் பிரிவுகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட இராணுவ
நடவடிக்கையால் வடக்கையும் தெற்கையும் இணைத்ததன் நினைவாய் சமாதான நினைவுத்
தூபி இங்கு எழுப்பப்பட்டுள்ளது’ என்று பொறிக்கப்பட்டதை என் கண்கள்
வாசித்தன.

என்னை நெருங்கிய இராணுவத்தினர் மூவர், என்னைப் பற்றி விசாரிக்கத்
தொடங்கினர். நான் சொன்ன அனைத்தையும் குறித்துக்கொண்டனர். ''ஓகே மச்சான்''
என்று இரண்டு பேர் விலகிச் செல்ல, ஒருவர் மட்டும் அந்த இடத்திலேயே
நின்றார்.

சில நிமிடங்களில் இருவரும் மீண்டும் வந்தனர். 'வாங்க பேசலாம்’ என்று
அழைத்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பேசும் விதம் விசாரணையை நோக்கிச்
செல்வதை உணர முடிந்தது. நடந்தே என்னை இராணுவச் சிற்றுண்டிச்சாலைக்கு
அழைத்துச் சென்றனர்.

கொஞ்ச நேரம் உட்காருங்கள். எங்கள் ஆமி மேஜர் வருவார்'' என்றார்கள்.

நான் ஏன் அவரைப் பார்க்க வேண்டும்?'' என்று கேட்டேன்.

அவர்தான் உங்களைப் பார்க்க வேண்டுமாம்'' - கிண்டலாய் சினந்தனர்.
அப்போது, என்னைச் சுற்றி இராணுவத்தைச் சேர்ந்த ஏழு பேர் இருந்தனர். அடுத்து
பொலிஸைச் சேர்ந்த இருவர் வந்து, என்னைப் பற்றிய தரவுகளை எடுத்தனர்.
காக்க​வைத்து ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. கழிவறை செல்லும்போதும்
என்னைக் காவல் காத்தனர்.

இடையில் வந்த ஒருவர், ''முள்ளிவாய்க்கால் போனீங்​களா? பிரபாகரன் செத்த
இடம் நந்திக் கடல் போய்ப் பார்த்தாச்சா..?' என்று எதையோ சொல்​லிச்
சென்றார்.

அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் கிளிநொச்சிப் பக்கம் இருந்து, இராணுவ ஜீப்
ஒன்று வந்தது. ஐந்து பேரோடு வந்து இறங்கினார் ஓர் அதிகாரி. அவர்​களுக்குப்
பின்னே மொபட்டில் இருவர் வந்தனர்.

விசாரணை தொடங்கியது. முழுக்கவும் ஆங்கிலத்​தில் பேசினர்.

எங்கு இருந்து வருகிறீர்கள்... எதற்காக வந்துள்​ளீர்கள்?''

இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து சுற்றிப்பார்க்க வந்துள்ளேன்.''

நீங்கள் இலங்கையைத் தேர்வு செய்யக் காரணம் என்ன?''

என்ன சொல்ல? '' 'லோன்லி பிளானட்’ இணை​யதளம் 2013-க்கான சிறந்த 10
சுற்றுலா நாடுகளில் இலங்கையைத் தேர்வுசெய்துள்ளது. அதன் காரணமாகவும்
பயணச்செலவு குறைவு என்ப​தாலுமே இலங்கையைத் தேர்வுசெய்தேன்'' என்றேன்
மையமாக.

என்று வந்தீர்கள்... என்ன பணியில் உள்ளீர்கள்?''

நவம்பர் 13 அன்று வந்தேன். ஆய்வுப் பணியில் உள்ளேன்.

இங்கே வேறு எங்கு போனீர்கள்?

யாழ்ப்பாணத்தில் உள்ள டச் கோட்டை, முருகன் கோயில்'' என்று
சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஒருவர், ''நைஸ் போன். தாங்க பார்ப்போம்''
என்று கிட்டத்தட்ட பறித்துக்கொண்டார்.

நீங்கள் எங்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நீங்கள் யார்
என்று தெரிந்துகொள்ளத்தான் இப்படிக் கேட்டோம். ஏன் தனியாக வந்தீர்கள்?
என்று மறுபடியும் கேட்டனர்.

அதுதான் ஏற்கெனவே சொன்னேனே! என்றேன்.

அவர் என்னைவிட்டு விலகி, தன் மேல் அதிகாரிக்கு சிங்களத்தில் என்னைப்
பற்றிய விவரங்களைச் சொன்னார். 40 நிமிடங்கள் போனது. அவர்கள் என்னைப் படம்
எடுத்துக்கொண்டனர். மொபட்டில் வந்த இருவரும் மறுபடியும் என்னைப் பற்றிய
விவரங்களைக் கேட்டனர். என் கடவுச்சீட்டைப் பரிசோதித்தனர். கடவுச்சீட்டில்
என் பெயர், தமிழ்ப் பிரபாகரன் என்று இருந்தது.

தமிழ்ப் பிரபாகரன் என்று பெயர். அதுவும் தனியாக வந்திருக்​கிறாய்?'' என்றார்கள்.

என்னைப் பற்றி பேசும்போது ஏன் உங்களுக்குள் சிங்களத்தில் பேசுகிறீர்கள்.
இருவருக்கும் பொதுவான மொழியில் பேசுங்கள். நான் உங்கள் நாட்டுக்கு வந்த
விருந்தாளி. சுற்றுலாவாசியை ஒரு தீவிரவாதிபோல் விசாரிக்கிறீர்கள்.

நான் இந்தக் கேள்வியை வீசிய நேரம், பொலிஸிடம் இராணுவ அதிகாரி கடும் கோபத்துடன் பேசிக்கொண்டு இருந்தார்.

அவர் சிங்களத்தில் பொலிஸிடம், எங்களுக்குச் சந்தேகம் இருக்கும்
பட்சத்தில், யாரையும் கைது​செய்யலாம். உன்னிடம் அதைச் சொல்ல​வேண்டிய
அவசியம் இல்லை என்றார்.

அதாவது என் மீது நடவடிக்கை எடுப்பதில் இராணுவம், பொலிஸ் இருவருக்கும்
கருத்து வேறுபாடு இருப்பதை என்னால் உணர முடிந்தது. இராணுவ அதிகாரி தன்
அதிகாரியிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது என்னிடம் தங்கள் நிலையைப் பேசிய
பொலிஸ், உங்கள் பக்கம் தப்பு இல்லை என்றாலும், இராணுவத்தை மீறி எங்களால்
எதுவும் செய்ய முடியாது. அவர்கள் எங்களை மிரட்டுகிறார்கள்.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த இடத்தைப் படம் எடுக்கக் கூடாது.
நீங்கள் தனியாக வந்ததைத்தான் இராணுவம் பெரிய பிரச்சினையாகப் பார்க்கிறது.
உங்களை இராணுவப் பெரியவர் கைதுசெய்யச் சொல்லி இருக்கிறார். உங்களிடம்
ஆங்கிலத்தில் நன்றாகத்தான் பேசுகிறார். ஆனால் எங்களிடம் சிங்களத்தில் கைது
செய்யச் சொல்கிறார் என்றார்.

டீ குடிச்சிட்டே கதைப்போம் வாங்க என்றார் இடையில் வந்த சி.ஐ.டி
அதிகாரி. அனுமதிபெற்று நுழைந்த பிறகும் மணிக்கணக்காய் விசாரணை செய்யும்
உங்களை எப்படி நம்புவது? என்றேன்.

பதில் பேசாமலே அவர்களுக்குள் சிங்களத்தில் பேசினர். யாருக்கோ என்னைப்
பற்றிய தகவலைப் பகிர்ந்தனர். இலங்கையில் தங்கியிருக்கும் முகவரியை மீண்டும்
வாங்கிக்கொண்டு, போகலாம் என்றார் சி.ஐ.டி. அதிகாரி திடீரென.

எழுந்து நடக்க ஆரம்பித்தேன். என்னை விசாரித்த இராணுவ மேஜர் நான் பேருந்து ஏறும்வரை என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.

புலிகள் என்றாலும் கேமரா என்றாலும் சிங்கள இராணுவத்துக்கு இன்றும்
அவ்வளவு பயம். அந்தப் பயத்தால்தான் தமிழ் நிலம் இன்றும் இராணுவ
வசிப்பி​டமாக இருக்கிறது.

ஐந்து லட்சம் சிங்களவர்களை உள்ளடக்கிய இலங்கை இராணுவம், தனது மொத்தப்
பங்கில் 80 சதவிகிதப் படையினரை (நான்கு லட்சம் பேர்) தமிழர் நிலத்தில்
புலிகளுக்காகக் காவல் வைத்துள்ளது.

அப்படியான சிங்கள இராணுவத்தின் கேமரா பயத்தால்தான், இந்தியக்
குடியுரிமைபெற்ற தமிழனாகிய நானும், இலங்கையில் இரண்டு முறை இராணுவ
விசாரணைக்காக மூன்று மணி நேரம் வைக்கப்பட்டேன்!

ஆனால், தமிழர்கள் அனைவரும் 24 மணி நேரமும் இராணுவ விசாரணையில் இருப்பதைப் போலவே இருக்கிறார்கள்.

கொழும்புவில் மிகக் கோரமானது பூசா சிறை முகாம். எந்த விசாரணையும்
இல்லாமல் 20 ஆண்டுகளைக் கடந்தும் தமிழர்கள் சிறை வைக்கப்பட்டு இருக்கும்
இடம். இங்கேதான் என் மகன் இருக்கிறானா என்று எந்தத் தாயும் உறுதி செய்ய
முடியாத அளவுக்கு இருட்டான இடம்.

இன்னொன்று, இலங்கை இராணுவத்தில் 4-வது மாடி விசாரணை. அழைத்துச்
செல்லப்பட்டவர்கள் அனைவரையும் உயிரோடு சிறுகச்சிறுகச் சித்திரவதை செய்து
கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்லும் இடம் அது.

இவை இரண்டும் இன்னும் உலகத்தின் மனச்சாட்சிக்கு முன்னால்
வெளிச்சத்துக்கு வராத இடங்கள். உண்மையைச் சொன்னால், ஈழத்தின் மொத்த
நிலப்பரப்புமே அப்படித்தான் இருக்கிறது!

நாலைந்து தமிழர்கள் சேர்ந்து நிற்க முடியாது. சந்தேகக் கண்கள் உங்களை
நோட்டமிட்டபடி நிற்கும். சொந்தங்கள் பக்கத்து ஊரில் இருந்து வந்தால்கூட,
பதிவுசெய்த பிறகுதான் நுழைய முடியும்,

வெளிநாட்டில் இருந்து வருவதைப் போல. வெளிநாட்டில் இருந்து உறவுகளைப் பார்க்க வருபவர்களுக்கு முழுமையான விசாரணை உண்டு.

கிளிநொச்சியில் ஒரு காட்சி... கோயில் திருவிழாவில் பக்திப் பரவசத்துடன்
தமிழ் பக்தர்கள் நடந்து செல்கிறார்கள். சுற்றிலும் பாதுகாப்​புக்கு
இராணுவமோ, பொலிஸோ போனால் பரவாயில்லை. ஆனால், பக்தர்கள் தலைகளைவிட
இராணுவத்தினர் எண்ணிக்கைதான் அதிகம்.

தமிழர்கள் சாமியைச் சொல்லித் திரண்டாலும் புலிகளாகவே நினைக்கிறது
இராணுவம். சுயமாய் நடமாடவும், சுயமாய் பொருள் தேடவும், சுயமாய்ச்
செயல்படவும் அனுமதிக்காத அவசர நிலை இன்னமும் அப்படியே இருக்கிறது.

தமிழர்களைக் கண்களுக்குத் தெரியாத கயிறால் கட்டிப்போட்டுவிட்டு, அவன்
சுதந்திரமாய் அலைந்த பூமியை சுற்றுலாத் தலங்களாக மாற்றி விட்டனர்.

சிங்களவர் பெருமை பேசும் நினைவகங்கள், இராணுவத்தின் வீரம் சொல்லும்
முகாம்கள், புத்தரின் புகழ்பாடும் கோயில்கள், கேளிக்கை விடுதிகள் என ஈழப்
பிரதேசம், தமிழ் அடையாளங்களைத் தொலைத்து விட்டது. தமிழர்களைப் போலவே
துடைக்கப்பட்டு விட்டது!

ஆனையிறவுக்கு முன் ஒரு பகலைக் கொழும்புவில் தொடங்கினேன். எனது பயணமும் அங்கு இருந்துதான் ஆரம்பம் ஆனது!

ஊடறுத்துப் பாயும்......

ஜூனியர் விகடன்

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Vikatan_image01

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Vikatan_image02

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Vikatan_image03

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Vikatan_image04
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty Re: புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-

Post by அருள் Fri Jan 11, 2013 3:34 pm

புலித்தடம் தேடி...! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 02

இலங்கை ஒரு சொர்க்க பூமி. மனித குலம் நிறைந்து
வாழ​வேண்டிய அற்புத பூமி. ஆனால், இன்று அப்படி இல்லை. இனவாதம் அந்த சொர்க்க
பூமியை சுடுகாடு ஆக்கிவிட்டது!
ஒரு மனிதன், மனிதப் பிறப்புக்குரிய அன்போடும், அறிவோடும், பண்போடும் இலங்கையில் வாழ முடியாது என்று ஒரு பத்திரிகையாளர் எழுதினார்.

இது, தமிழர்களுக்கு மட்டுமான நியதி அல்ல, சிங்களவர்களுக்கும் தான்.

அந்த பூமியில் தீபாவளி அன்று காலை கால் ஊன்றினேன். அரக்கம் மிகுந்த
நரகாசுரனை வதம் செய்ததால் தீபாவளியைக் கொண்டாடுகிறோம் என்பது இதிகாசக் கதை.
அதே தீபாவளி தினத்தன்று தமிழர் நிலைமையை அறியச் சென்றது முரண் சுவை!

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இறங்கினேன்.

சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளால் இரத்தினக் கற்களுக்கு வரி விலக்கு,
அதிகப்படியான பணம் கொண்டு வருபவர்களுக்கு வரி விலக்கு’ என்றெல்லாம்
இப்பொழுது இலங்கையில் பல விலக்குகள் வெளிநாட்டினருக்கு உண்டு.

சுற்றுலா’ என்ற மந்திரச் சொல்லை வைத்தே சர்வதேசத்திடம் இருந்து இலங்கை
தன்னைக் காத்துக்கொள்கிறது. உள்நாட்டுக் கடவுச்சீட்டுகளின் உடைமைகளுக்குக்
கடுமையான சோதனைகள் இருந்தன.

'இந்தியக் கடவுச்சீட்டு’ என்பதாலும் முதல் முறை செல்வதாலும் பெரிய சோதனைகள் இலங்கைக்குள் நுழையும் போது இல்லை.

அங்குள்ள தமிழ் நண்பர் வரவேற்க, வெளியே வந்தேன். புத்தபிரான் வெண்மை
நிறத்தில் அமர்ந்து இருந்தார். 'இலங்கையில் புத்தபிரான் வீதிக்கு வீதி
அமர்ந்திருப்பார். போருக்குப் பிறகு, தாய்லாந்து கொடுத்த 20,000 புத்தர்கள்
இலங்கை முழுதும் உள்ளனர்’ என்றார் நண்பர்.

விமான நிலையத்தில் இருந்து கொழும்பு 34 கிலோ மீட்டர். கொழும்பு
புறக்கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு புத்தகக் கடைக்குச் சென்றேன். அங்கு
பணியாற்றும் சிங்களப் பெண்ணிடம், 'மகாவம்சம்’, 'புத்தர் வரலாறு’
புத்தகங்கள் உள்ளதா?’ என்றேன். அவர், 'தருகிறேன்’ என்று சொல்லிவிட்டு
பேச்சுவாக்கில் 'நீங்கள் ரெட் க்ரோஸா?’ என்று சந்தேகித்தார். 'எந்த நாடு
நீங்கள்?’ என்றும் விசாரித்தார். எல்லோரும் எல்லோரைப் பற்றியும்
விசாரிக்கிறார்கள்.

இங்கு யார் யாரெல்லாம் புத்தகம் வாங்கினார்கள் என்பதைக்கூட இராணுவம் வந்து விசாரிக்கும். அதனால்தான் கேட்கிறார்'' என்றார் நண்பர்.

இங்கே எல்லாமே புலிதான். அரசாங்கத்தை எதிர்ப்பவர் தமிழராக இருந்தால்
தமிழ்ப் புலி. சிங்களவராக இருந்தால் சிங்களப் புலி என்றுதான்
சொல்கிறார்கள்.

இப்படி இலங்கை அரசின் பாசிசக் கோட்பாடுகளை எதிர்த்து அதன் பாதிப்பால்
வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட
பத்திரிகையாளர்கள் பாஷ்னா அபிவர்தனே, பிரட்ரிகா ஜான்ஸ் போன்றோர்தான்
சிங்களப் புலிகளுக்கான எடுத்துக்காட்டு. அதனால்தான் யாரைப் பார்த்தாலும்
சந்தேகமாகப் பார்க்கிறார்கள்... பயப்படுகிறார்கள்!'' என்றார் நண்பர்.

இலங்கைக்கு இந்தியா நட்பு நாடுதானே. அதனால் இந்தியாவில் இருந்து
வருபவர்களுக்கு மரியாதை அதிகம் இருக்கும் அல்லவா?'' என்று நண்பரைக்
கேட்டேன்.

இலங்கையை இந்தியா வேண்டுமானால் நட்பு நாடு என்று சொல்லிக்கொள்ளலாம்.
ஆனால், நடைமுறை நடவடிக்கைகள் அப்படி இல்லை. ஒரே ஒர் உதாரணம் சொல்கிறேன்.
ஏற்றுமதி செய்யும் இந்திய மகிழுந்து (கார்) நிறுவனங்களுக்கு ஓர்
முட்டுக்கட்டையை இலங்கை அரசாங்கம் போடப்போகிறது.

இப்போது, இலங்கையில் சாதாரண டாடா நானோ காரின் விலை 16 லட்சம். (இலங்கை
ரூபாய்க்கு) அடேங்கப்பா என எச்சில் விழுங்காதீர்கள். இலங்கையில்
மகிழுந்துக்கான வரி 200 சதவிகிதம். இந்திய நிறுவனங்களுக்கு வரியை மேலும்
உயர்த்தப் போகிறார்கள்.

ஆனால், ஜப்பான் நிறுவனங்களுக்குக் குறைக்கப் போகிறார்கள். இலங்கை அரசு
தன் பங்காக தங்கள் நாட்டிலேயே ஒரு மகிழுந்து நிறுவனத்தையும் கொண்டு
வந்துள்ளது.

இதனால், இந்தியாவின் மகிழுந்து நிறுவனங்களுக்கும் அரசுக்கும் பொருளாதார
வழியில் பெரும் அடிவிழப் போகிறது. நட்புநாடு இப்படித்தான் நடந்துகொள்ளப்
போகிறது என்றார்.

கொழும்பு புறக்கோட்டை வீதியில் நடந்து​கொண்டே, சில புகைப்படங்கள்
எடுத்தேன். ஒரு பேருந்தைக் கடக்கும்போது பேருந்துக் கண்​காணிப்​​பாளர்
ஒருவர் தமிழில், ''நில்லுங்க'' என்றார். நான் விழித்தேன். இது நகரப் பகுதி.
இப்படி எல்லாம் படம் பிடிக்கக் கூடாது. வெளி​நாட்டி​னரும்
பத்திரிகையாளர்களும் மட்டும்​தான் மக்கள் அதிகமுள்ள இடத்தில் படம் எடுக்க
அனுமதிக்கப்படுவர் என்றார்.

மாலையில் கொழும்புக் கடற்கரைக்குச் சென்றேன். வழியில்தான் இலங்கையின்
பழைய நாடாளுமன்றமும் மகிந்த ராஜபக்‌சவின் அலரி மாளிகையும் இருக்கின்றன.

சாலை ஓரங்களில் மணல் மூட்டைகள் மெகா உயரத்துக்கு அடுக்கி வைக்கப்பட்டு
இருந்தன. சுனாமி முன்னெச்சரிக்கைக் கட்டமைப்பாக இருக்கும் என்று முதலில்
நினைத்தேன். பின்னர்தான் தெரிந்தது அது கார் பந்தயத்துக்கான ஏற்பாடாம்.

சிறந்த சர்வதேச இளைஞன் என்று 2012-ம் ஆண்டு இந்திய அரசின் விருதைப்
பெற்ற நாமல் ராஜபக்‌ச தான் (மகிந்தாவின் மகன்) இந்த விளையாட்டுகளை
இலங்கையில் அறிமுகப்படுத்திப் பங்கேற்கிறார். இந்த இரவு நேர கார் பந்தய
ஏற்பாட்டால் கொழும்பு சாலைகள் எல்லாம் மணல் மூட்டைகளால் நிரம்பிக் கிடந்தன.


உயர் பாதுகாப்புப் பகுதியான காலிச் சாலையில் (Galle Road) பயணிக்கிறேன்.
பழைய இலங்கை நாடாளுமன்றத்துக்கு மிக அருகிலேயே 'ஷரிங்லா’ என்ற ஹாங்காங்
நட்சத்திர சொகுசு விடுதியின் கட்டுமானப் பணி நடந்துகொண்டு இருந்தது.
2015-ம் ஆண்டு திறக்கப் போகும் அந்த சொகுசு விடுதி இலங்கைக்கு வந்த கதை
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்கள்.

பொதுவாகச் சொன்னால் இலங்கை குறிப்பாக கொழும்பு நகரம், இப்போது
மெல்லமெல்ல சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்கிறது. தொழில் முதலீடுகள்
என்ற பெயரால் இந்தியாவின் பகை நாடான சீனா, முழுமையாக தனது ஆக்டோபஸ் கரங்களை
இலங்கையில் ஊன்றி விட்டன.

இந்த விடுதி கட்டப்பட்டுவரும் மொத்த இடம் 10 ஏக்கர். இதை, இலங்கை
அரசிடம் இருந்து 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் வாங்கினார்கள். இலங்கை அரசின்
கணக்குப்படி 408 மில்லியன் டொலர்களை சொகுசு விடுதி கட்டுமானத்துக்கு
முதலீடு செய்துள்ளது, ஷரிங்லா என்ற சீன நிறுவனம்.

அதேபோல் அம்பாந்தோட்டையில் 115 ஏக்கரில் ஒரு விடுதியைத் திறக்க
இருக்கிறார்கள். அதற்கு 120 மில்லியன் டொலர்களை ஒதுக்கி உள்ளது. இந்த
நன்றிக்கடன் எல்லாம் போதாது என்று கொழும்பின் பெரும் கடல் பகுதியையே சீன
அரசுக்கு விற்றுவிட்டது மகிந்த அரசு.

சீனாவின் அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் சீனர்கள்தான் தொழிலாளர்கள்.
இலங்கை ஆட்களை வேலைக்கு வைப்பது இல்லை. விரைவில் குட்டிச் சீனாவாக இலங்கை
உருவெடுக்கும். அதற்கான அடித்தளத்தை சீனா அமைத்து விட்டது என்கிறார்கள்.

கொழும்பு கடற்கரையில் என்னைச் சந்தித்த இலங்கைப் பத்திரிகையாளர் ஒருவர்
இதுகுறித்து சில விரிவான தகவல்களைத் தந்தார். ''புலிகளுடனான யுத்தம்
2009-ம் ஆண்டு முடிந்து விட்டது. தமிழர்கள் தங்களது உரிமைகளை இழந்து அனாதை
ஆக்கப்பட்டது குறித்து இலங்கை அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை.

ஆனால், இலங்கையில் அடுத்த சில ஆண்டுகளுக்குள் ஒரு பெரும் யுத்தம் நடக்க
இருக்கிறது. அது பொருளாதார யுத்தம். அதில் மனித இழப்புகள் இருக்காது.
ஆனால், இலங்கையே சிங்களவர்கள் கையில் இருந்து கைநழுவப் போவதைத் தவிர்க்கவோ,
தடுக்கவோ முடியாது.

ஒரு பக்கம் சீனாவும் இன்னொரு பக்கம் அமெரிக்காவும் நின்று இலங்கையைக்
கபளீகரம் செய்யப் பார்க்கின்றன. சமீபத்தில் சீனா - இலங்கைக்கு இடையே 16
ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

ஏற்கெனவே, அம்பாந்தோட்டை விமான நிலையம், துறைமுகம், நுரைசோலையில் அனல்
மின் நிலையம், கொழும்பு துறைமுகம் விரிவாக்கம், ரயில் பாதை புனரமைப்பு
வேலைகளை சீனா செய்துவருகிறது.

இதை சீனாவிடம் கொடுக்க வேண்டாம். நாங்கள் செய்துதருகிறோம்’ என்று
இந்தியா முன்வந்தது. அப்போது, இந்தியாவுக்கும் சில திட்டப் பணிகளை
ஒதுக்கினர். சம்பூர், காங்கேசன்துறை, பலாலி, வட பகுதிப் புனரமைப்பு
ஏற்பாடுகளை இந்தியா செய்து கொடுத்தது. சீனாவைக் காட்டி இந்தியாவிடமும்,
இந்தியாவைக் காட்டி சீனாவிடமும் அபிவிருத்திப் பணிகளுக்கான பணத்​தைச்
சுரண்டிவருகிறது இலங்கை.

இந்தநிலையில், எப்படியாவது உள்ளே நுழைந்து விட அமெரிக்காவும் துடிக்கிறது.

இலங்கையில் எண்ணெய் வளம் உள்ளதா?’ என்பதை ஆராய்ச்சி செய்ய அமெரிக்கா
விரைவில் வர இருக்கிறது. அவர்கள் வந்தால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும்
நேரடி மோதல் நடக்கும். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா
சில முயற்சிகளை எடுப்பதே இலங்கையை அச்சுறுத்துவதற்காகத்தான்.

புலிகள் அமைப்பை அழித்து விட்டதாக இலங்கை அரசு வெற்றிச் சின்னங்களை
அமைத்தாலும் அடுத்து எதிர்கொள்ளப் போகும் பேராபத்துகளை இலங்கை அரசாங்கம்
உணர்ந்ததுபோல் தெரியவில்லை.

இந்தப் பன்னாட்டுத் திட்டங்களுக்காக அரசுக்கு நெருக்கமான முக்கிய
குடும்பத்துக்கு தரப்பட்டுள்ள கையூட்டு மட்டும் பல ஆயிரம் கோடிகளைத்
தாண்டும் என்பதால், ஆபத்தை உணராமலேயே தலையாட்டியபடி தாரை வார்க்கிறார்கள்''
என்கிறார். இதைக் கேள்வி கேட்பவர்கள் அனைவரும் இலங்கை அரசாங்கத்தின்
எதிரிகளாகப் பார்க்கப்படுகிறார்கள். அதில் தமிழர், சிங்களவர் என்ற
வித்தியாசம் இல்லை.

மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார, 'முன்னாள் ஜனாதிபதி
பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம்,
ராஜபக்‌சவின் காலத்திலும் கட்ட​விழ்க்கப்பட்டு உள்ளது. தங்களுக்கு
அழுத்தத்தைக் கொடுப்பவர்களுக்கு எதிராக அரசு தன் பயங்கர​வாதத்தைக்
கட்டவிழ்க்கிறது. இதனால் வடக்கில் தமிழ் இளைஞர்கள், நீதித்துறை பிரமுகர்கள்
அடக்குமுறைக்கு ஆளாகின்றனர். பிரேமதாச தன் காலத்தில் நடந்த அரசப்
பயங்கரவாதத்தின் வன்முறைகள் பற்றி ஊடகங்களிடம், 'தனக்கு எதுவும் தெரியாது’
என்றே திரும்பத் திரும்பச் சொல்வார். அதேபோல் இப்போதுள்ள அரச பயங்கரவாதம்
பற்றியும் ராஜபக்‌ச 'எதுவும் தெரியாது’ என்று சொல்லப் போகிறாரா?'' என்று
ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.

இதுதான் இன்றைய கொழும்புவின் அரசியல் யதார்த்தம்.

அனைத்தும் அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்டது. அரசாங்கம் ராஜபக்சவுக்குக்
கட்டுப்பட்டது என்பதுதான் இன்று இலங்கையில் அமுலில் இருக்கும் ஒரே கொள்கை.

இதற்குக் கட்டுப்படாததாக நீதித்துறை இருப்பதால், அந்த நீதித் துறையையும்
வளைக்கும் காரியங்கள் தொடங்கி விட்டன. நீதித் துறையை நாடாளுமன்றத்தின்
கீழ் கொண்டுவர மகிந்த அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அப்படி மாறினால் நீதிவான்கள் அரசியல்வாதிகளின் கட்டுப்பாடுகளுக்கு இணங்க வேண்டும் என்ற நிலைமைக்கு இலங்கை நீதித்துறை சென்றுவிடும்.

நீதித்துறையில் அரசின் தலையீட்டை விமர்சித்துள்ள ஜே.வி.பி. கட்சியின்
பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, ''நாட்டு மக்கள், மகிந்த அரசாங்கத்துக்கு
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்தை வழங்கவில்லை. நாடாளுமன்ற
உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கித்தான் பெரும்பான்மைப் பலத்தைப்
பெற்றுள்ளது மகிந்த அரசு. மக்களால் வழங்கப்படாத பெரும்பான்மை பலத்தை,
அரசாங்கம் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. நீதித் துறையை அரசு தனது
அத்துமீறலுக்குப் பயன்படுத்தினால், சர்வதேச சமுதாயம் பார்த்துக்கொண்டு
சும்மா இராது'' என்று சீறியுள்ளதுதான், சிங்களவர்கள்கூட எத்தகைய சினத்தில்
உள்ளனர் என்பதற்கு உதாரணம்.

மறுநாள் காலை, யாழ்ப்பாண பேருந்தில் என் பயணம் தொடங்கியது. நடுநிசி
நெருங்கிக் கொண்டு இருக்க, இரத்தச் சிவப்புத் துண்டுடன், 'நீடுழி வாழ்க’ என
ராஜபக்ச யாழ்ப்பாணத்துக்குள் வரவேற்றார்.

ஊடறுத்துப் பாயும்...

ஜூனியர் விகடன்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty Re: புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-

Post by அருள் Fri Jan 11, 2013 3:40 pm

புலித்தடம் தேடி...! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 03
மயான மௌனம் நிலவும் யாழ்ப்​பாணத்தில் நிற்​கிறேன்.
இன்று அது கட்​-அவுட் நகரம். எங்கே திரும்பினாலும் மகிந்த ராஜ​பக்ச
சிரிக்கிறார், 'நீடூழி வாழ்க’ என்று வாழ்த்துகிறார். ராஜபக்ச மட்டுமே
வாழ்ந்​தால் போதுமா?
காலையில் தொடங்கிய பயணத்தில் முதலில் கண்டது
யாழ்ப்பாண நூலகம். தமிழனின் அறிவையும் ஆற்ற​லையும் ஆளுமை​யையும்
வரலாற்​றையும் படைப்புத் திறனையும் பறைசாற்றிய கருவூலம். உலகத்தரம் வாய்ந்த
நூலகம்.

ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அந்த இனம் பேசும் மொழியை முதலில்
அழியுங்கள். மொழிக்கு அடித்தளமாக இருக்கும் புத்தகங்களைக் கொளுத்துங்கள்’
என்பதுதான் இனவாதத்தின் தாரக மந்திரம்.

நூல் ஒன்று எரிக்கப்பட்டால், அந்த நூலுக்​கான மொழி எரிக்கப்படுகிறது என்பார்கள். சிங்கள இன​வாதமும் அப்படித்தான் நடந்து​கொண்டது.

ஜெயவர்த்தனா இதனுடைய சூத்ரதாரியாக அன்று இருந்தார். 'சிங்கள தேசத்தில் தமிழ் நூலகமா?’ என்று கொக்கரித்தார்.

1981-ம் ஆண்டு வைக்கப்பட்ட தீயில் 97 ஆயிரம் புத்தகங்கள் எரிந்து
சாம்பலாகின. தமிழனின் அடை​யாளம் அனைத்தும் அழிக்கப்​பட்டதாக அன்று
கருதப்​பட்டது. தமிழ்த் தாய் கண்ணீர் வடித்த ஆண்டு அது.

அரசியல் மாற்றங்கள், பேச்சு​வார்த்தைகள் என காலம் மாறியதும் 2003-ம்
ஆண்டு நூலகம் சீரமைக்கப்பட்டது. சிங்கள அரசாங்கமே ஐந்து கோடி ரூபாயைச்
செலவு​செய்து மராமத்து செய்து தர​வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது.

தமிழகம் உட்பட உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் புத்தகங்கள் அனுப்பி
வைக்கப்பட்டன. இவை அனைத்தும் புதிய புத்தகங்கள். ஆனால், யாழ் நூலகத்தில்
இருந்தவை அனைத்​தும் பழைய பனுவல்கள். உலகத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காத
பொக்கிஷங்கள். ஆனாலும், இதுவாவது கிடைத்​ததே என்று தமிழன் மகிழத்தக்​கதாக
அந்த நூலகம் இப்போது அமைந்துள்ளது.

ஆனால் இன்று, புத்தகங்கள் படிக்கவும் ஆராய்ச்சி செய்யவும்
தேடுதலுக்காகவும் என்று இல்லாமல் அரசு விழாக்களுக்கும்
மாநாடுகளுக்கும்தான், இந்த நூலகம் அதிகம் பயன்படுகிறது.

மாநாடு நடக்கும் அன்று நூலகத்துக்கு விடுமுறை. நான் சென்ற அன்றும்
15-வது ஆளுநர்கள் மாநாடு நடந்தது. அதன் காரணமாக நூலகம் மூடப்பட்டு,
இராணுவம் காவலுக்கு நின்றது.

தமிழ் ஆர்வலர் ஒருவர் வந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன்
திரும்பிக்கொண்டு இருந்தார். 'ஏதோ ஒப்புக்குத் திறக்கிறாங்க... மூடுறாங்க’
என்று வருந்தினார்.

அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஒரு கண் காட்சி. 'வடமாகாண கண்காட்சி -
ஒன்றிணைந்து முன்னேற்றத்தை நோக்கி’ என்று அதற்குத் தலைப்பு
கொடுத்திருந்தனர்.

2009-ம் ஆண்டில் இருந்து 2012 வரை வடக்கு மாகாணம் எப்படி முன்னேறி உள்ளது என்பதை விளக்கும் கண்காட்சியாம்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வட மாகாணத்தை 2009-ம் ஆண்டுதான் இலங்கை அரசாங்கம் கைப்பற்றியது.

அதன்பிறகு கல்வியில், சுகாதாரத்தில், பொருளாதாரத்தில் வட மாகாணம் எந்த
வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அரசாங்கக் கணிப்புகள் காட்டியது.

இது, டக்ளஸ் தேவானந்தா முன்னேற்பாட்டுடன் நடக்கும் கண்காட்சி என்பதால்,
அவரது ஆதரவாளர்கள், அதிகாரிகளை இந்தக் கண்காட்சிக்கு அழைத்து இருந்தனர்.

அங்கு இருந்து, யாழ்ப்பாணம் ஒல்லாந்தையர் (டச்) கோட்டையை அடைந்தேன்.
சிதிலம் அடைந்த அந்தக் கோட்டையின் புனர்நிர்மாணப் பணிகள் 2009-ம் ஆண்டு
நவம்பர் 15-ம் தேதி தொடங்கியது.

இந்தப் பணிகளுக்காக 104.5 மில்லியன் (இலங்கை ரூபாய்) செலவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 62.1 மில்லியன் ரூபாய் நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி. 'அரசின்
வாக்குப்படி புனர்நிர்மாணப் பணிகள் இந்த டிசம்பர் 31-ம் தேதியுடன்
முடிவடையும். இது சுற்றுலாவாசிகள் பார்ப்பதற்காக அமைக்கப்படுகிறது.
அதற்காகத்தான் நெதர்லாந்து அரசாங்கமும் நிதி உதவி செய்துள்ளது’ என்றார்
அங்கிருந்த அலுவலர்.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சாலை ஆகிய பகுதிகளில் சாலை அமைப்பதற்கான நிதியை சீனா கொடுத்துள்ளது.

இலங்கையின் 90 சதவிகித சாலைப் பணிகளுக்கு சீனாதான் நன்கொடை. சாலைப் பணியில் ஈடுபடுபவர்கள் அனைவருமே இராணுவத்தினர்தான்.

குழி தோண்டுவது, பாலம் கட்டுவது, அலங்கார மேடைகள் அமைப்பது என அத்தனைக்கும் இராணுவ வீரர்கள்கள்தான் பயன்படுத்தப்படுகிறார்கள்.

ஆரம்ப காலத்தில் இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை 30 ஆயிரம்தான்.
சந்திரிகாவின் ஆட்சியில் ஒரு லட்சத்தைத் தொட்டது. ராஜபக்ச வந்த பிறகு
இன்னும் உயர்ந்தது.

பள்ளிப் பருவத்தை முடித்த இளைஞர்கள் அனைவரையும் இராணுவத்தில் சேர்க்க
ஆரம்பித்தனர். இதனால், .ராணுவத்தினர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது.

போரின்போது நேருக்கு நேரான யுத்தத்தில், முழுமையாகப் பயிற்சி
பெற்றவர்கள் நிறுத்தப்பட்டனர். மற்ற அனைத்து இடங்களிலும் இத்தகைய இளைஞர்கள்
காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.

போர் முடிந்த பிறகு, இத்தகைய இளைஞர்களுக்கு எந்த வேலையும் இல்லை. எனவே
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைப் பணிகளையும் இவர்களே
பார்க்கிறார்கள்'' என்று சிங்களவர்கள் சிலரே வேதனையுடன் சொன்னார்கள்.

அதாவது, நம் ஊர் வழக்கப்படி சொன்னால், சாலைப் பணியாளர்கள் மற்றும்
மக்கள் நலப் பணியாளர்கள் மாதிரியான வேலைகளில் இராணுவத்தினர்
ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அந்த இளைஞர்கள் முறையான பயிற்சி இல்லாத, இன்னும் சிறுவர்களாகவே
இருக்கிறார்கள். அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டு இருப்பதும், கண்காணிக்க
கட்டளைத் தளபதிகள் நியமிக்கப்பட்டு இருப்பதும்தான் வித்தியாசம்.

கோட்டையைச் சுற்றி வருகிறேன். வீரசிங்க மண்டபத்துக்கு எதிரில், 'உலகத்
தமிழாராய்ச்சி மாநாட்டின் நினைவாலயம்’ என்ற எழுத்து காட்சி அளித்தது.

தமிழர் சின்னங்களில் ஒன்றாக எஞ்சி இருந்தது அது. தமிழர் மீதான கோரத்
தாக்குதலின் தொடக்கத்தை கண்ணீர் சின்னமாக இன்னும் காட்டிக்கொண்டு
இருக்கிறது அந்தச் சின்னம்!

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்
நடந்தது. மாநாட்டின் இறுதி நாளில் சிங்களப் பொலிஸார் திடீரெனத் தாக்குதல்
நடத்தியதில், ஒன்பது தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அதற்குக் காரணமான பொலிஸ் அதிகாரிகளைப் பழிவாங்கவே தமிழ் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுத்தனர். அதுவே ஆயுத இயக்கமாக மாறியது.

அந்த இடத்தை நினைவுபடுத்தும் தூணைப் பார்த்து விட்டு, ஸ்ரீ நாக விகாரை
என்ற இடத்துக்குச் சென்றேன். அங்கிருந்த புத்த பிக்குவிடம் இராணுவத் தளபதி
ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார்.

மூன்றாம் நூற்றாண்டில் நாகர்களால் கட்டப்பட்ட இந்த விகாரையை தமிழ்ப்
பௌத்தர்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வந்துள்ளனர். தேவநம்பியதீசன் என்ற சிங்கள
மன்னன்தான் இந்த விகாரையை கட்டி எழுப்பினார் என்று இதற்கு இன்னொரு
வரலாறும் எழுதப்பட்டு இருக்கிறது.

இந்த விகாரையைப் பராமரிக்கும் பணியை இராணுவம் செய்கிறது. அதனால்
அடிக்கடி இராணுவம் வந்து மேற்பார்வையிடும்’ என்று சொன்னார்கள். அங்கிருந்து
தமிழ்க் கோயிலான நல்லூர் முருகன் கோயிலுக்கு நகர்ந்தோம்.

தமிழ் முகங்களை அங்கு​தான் அதிகம் பார்க்க முடிந்தது. எப்படி இருந்த
நாடு தம்பி! இன்னைக்கு இந்தச் சனம் எல்லா வலியையும் புதைச்சுக்​கிட்டு
வாழுது.

குட்டித் தமிழ்​நாடு போல இருந்த யாழ்ப்பாணம் சிங்களவன் கைக்கு கொஞ்சம்
கொஞ்சமாகப் பறிபோகுது. சிங்கள உடுப்புக் கலாசாரம் வேகமாப் பரவுது தம்பி.

இயக்கம் இருந்த காலத்​தில் காலுக்கு மேல எந்தப் பெண்ணும் பாவாடை கட்டுறது இல்லை. ஆனா இன்றைக்கு முட்டிக்கு மேல பாவாடை போயிடுச்சு.

முருகன் கோயிலுக்குக் கூட்டம் குறைஞ்சு, புத்தர் கோயி​​​லுக்கு
அதிகமாயிடுச்சு. எல்லா இடங்களிலும் புத்தர் கோயில் வந்திருச்சு...’ என்று
பதறியபடி சென்றார் ஒரு தமிழர்.

இடையில் வந்த பத்திரிகை நண்பர் யாழில் பரவிவரும் விபசாரம் பற்றிக் கூறினார்.

அனுராதபுரம் என்பது சிங்களக் கலாசார நகரம். போரின்போது இராணுவத்தை
வீட்டுக்கு அனுப்பாமல் இராணுவப் பணியிலேயே வைத்திருப்பதற்காக, சிங்களப்
பெண்களை இங்கே மொத்தமாக வைத்திருந்தனர்.

போருக்குப் பின் விதிகள் தளர்ந்து போனதால், பொலிஸ் உதவியுடன் சிங்களப்
பெண்கள், தமிழ்ப் பகுதிகளில் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர். அதுவே இன்று
யாழிலும் பரவி இருக்கிறது.

இவர்களைப் பற்றி நாம் எழுதினாலோ அவர்களிடம் ஏதாவது பேட்டி எடுத்தாலோ,
அவர்கள் பொலிஸுக்குத் தகவல் கொடுத்து விடுகின்றனர். சுற்றுலா ஊக்குவிப்பின்
ஒரு பகுதியாக இங்கே விபசாரம் பரவி வருகிறது என்றார் அவர்.

அடுத்து, கிட்டு பூங்காவுக்குச் சென்றோம். அந்தச் சாலையில் தமிழ் மன்னன்
சங்கிலியன் சிலை இருந்தது. அந்தப் பூங்கா இராணுவக் கட்டுப்பாட்டில்
இருந்ததால் சீரமைக்கப்படவில்லை.

யாழ்ப்பாணப் பழைய புகைவண்டி நிலையத்துக்குச் சென்ற போது, அங்கு ஒரு சிங்களப் பாம்பாட்டிக் குடும்பம் மட்டும் இருந்தது.

கட்டடங்கள் பாழடைந்து கிடந்தன. ''இதைச் சீரமைப்பது இந்தியாதான். ஒவ்வொரு
முறை இந்தியப் பிரதிநிதிகள் இங்கு வரும்போதும், '15 நாட்களில் பணிகள்
தொடங்கிவிடும்’ என்று கூறிவிட்டுச் செல்வார்கள்.

அவர்கள் அப்படிச் சொல்லத் தொடங்கியே நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால், பணிகள் மட்டும் இன்னும் தொடங்கவே இல்லை.

பளை - காங்கேசன்துறை வரை ஒரு பாதையும், மதவாச்சி - மன்னார் வரை ஒரு
பாதையும் போடப்படும் என்று இந்திய அரசு அறிவித்தது. ஆனால், அதற்கான எந்தப்
பணியும் நடக்கவில்லை.

வலிகாமத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்க வேண்டும் என்று
அங்கிருந்த தமிழ் மக்களை சிங்கள இராணுவம் துரத்தியது. அந்த மக்கள் இந்தப்
புகைவண்டி நிலையப் பாதையில் கூடாரமிட்டுத் தங்கினர். அவர்களையும் இந்தியா
சீரமைப்புப் பணிகளை ஆரம்பிக்கப்போகிறது என்று சொல்லித் துரத்தினர். ஆனால்,
இன்றுவரை பணிகள் தொடங்கவில்லை.

உண்ண, உறங்கக்கூட உரிமை இல்லாமல் தமிழன் அலைக்கழிக்கப்படுகிறான் என்றார் ஒரு தமிழர்.

அடுத்த எனது பயணம் வல்வெட்டித்துறையை நோக்கி...

ஊடறுத்துப் பாயும்....!

ஜூனியர் விகடன்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty Re: புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-

Post by அருள் Fri Jan 11, 2013 3:43 pm

புலித்தடம் தேடி...! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 04

வல்வெட்டித்துறை... வீரம் விளைந்த நிலம். பிரபாகரன்
பிறந்த மண்! மதிய வெயிலில் வெறிச்சோடிக் கிடந்த வீதியின் வழியாக பிரபாகரன்
வீட்டை அடைந்​தேன். ஒரு சுவர் மட்டும்தான் இருந்தது. அதில் ஏதோ
எழுதப்பட்டு, அதுவும் கறுப்பு மையால் அழிக்கப்பட்டு இருந்தது.
அருகில் சென்று மிகவும் சிரமப்பட்டு வாசித்தேன்.
'தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் இல்லம்’ என்று எழுதப்பட்டு
இருந்தது. அதைத்தான் அழிக்க முயற்சித்து இருந்தனர். நான் கவனித்ததைப்
பார்த்த முதியவர் ஒருவர், 'ஒன்றரை வருஷத்துக்கு முன் ஆமிதான் இந்த வீட்டை
உடைச்சது’ என்று ஒற்றை வரி வரலாற்றைச் சொல்லிச் சென்றார்.

இன்று பாழடைந்து, உருக்​குலைந்து கிடக்கும் அந்த வீட்டில்தான் பிரபாகரன்
பிறந்தார். 1972-ம் ஆண்டு மக்கள் இல்லாத அரசுப் பேருந்தை எரித்ததற்காக
பிரபாகரனையும் சில தமிழ் இளைஞர்களையும் போலீஸ் தேடியது. அவரது இருப்பை
அறிந்த போலீஸ், அதிகாலைப் பொழுதில் அந்த வீட்டைச் சுற்றி வளைத்தது. போலீஸ்
பிடியில் சிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்ற பிரபாகரனுக்கு அப்போது வயது
16. அன்றோடு முடிந்தது, அவரின் வல்வெட்டித்துறை வீட்டு வாழ்க்கை.

பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை, மாவட்ட நில வள அதிகாரியாக இருந்தவர்.
அவரின் பணி... இடமாற்றல்களாலும், சிங்கள ராணுவத்தின் சித்திரவதைகளாலும்
கழிந்தது. தனது மகனின் மறை​விடத்தை அறிந்துகொண்டு பார்க்கச் சென்ற
வேலுப்​பிள்ளையிடம் 'இனி நான் உங்களுக்குப் பயன்பட மாட்டேன்’ என்று
சொல்லிவிட்டார் பிரபாகரன். அந்த வீடும் ராணுவக் கண்காணிப்புக்கு இலக்காய்
போனது. இதை, இன்று சிதைத்திருப்பதன் மூலமாக, கரிக்கட்டையால் அவரது பெயரை
அழித்திருப்பதன் மூலமாக தனது ஆத்திரத்தைத் தீர்க்க முயற்சிக்கிறது சிங்கள
இனவாதம்!

அங்கிருந்து, நெல்லியடி மகா வித்தியாலயம். இங்கு நிலைகொண்டு இருந்த
சிங்கள ராணுவ முகாம் மீதுதான் 1987-ம் ஆண்டு, மில்லர் தாக்கு​தல்
நடத்தினார். புலிகளின் 'முதல் கரும்புலித் தாக்குதல்’ என்று அது வரலாற்றில்
பதிவானது. இன்றும் இந்தப் பள்ளியைச் சுற்றி ராணுவம் கண்காணித்து வருகிறது.

'தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன்’ என்றதும், அந்தப் பகுதியில்
இருந்த ஒருவர் ஆர்வமாக வந்து பேசினார். ''போர்க் காலத்துல நாங்கள் சந்திச்ச
வேதனை, போரைவிடக் கொடியது. அஞ்சு மணிக்கு மேல வெளியே வரக் கூடாதுன்னு
இருந்த ராணுவக் கட்டுப் பாட்டாலதான், இப்பக்கூட சன நடமாட்டம் ஏழு மணிக்குள்
அடங்கிப் போயிறது.

'தலையாட்டி விசாரணை’யை யாழ்ப்பாணத்துல தெரியாதவங்க இருக்க மாட்டாங்க.
ஒரு ஆளைத் தலை​யில் கறுப்புத் துணி போட்டு கண் மட்டும் தெரியும் அளவில்
மூடி, மக்கள் முன்னாடி ஆமி நிறுத்திடும். அவன் மக்களில் ஒவ்வொரு ஆளாகப்
பார்ப்பான். யாரையாவது பார்த்து அவன் தலையாட்டினால், அந்த ஆளு புலிக்குத்
தொடர்புடையவர், அவரை புலி என்று ராணுவம் பிடிச்சிடும். அப்புறம் அவங்களைக்
காணாமல் போனோர் பட்டியலில் சேர்த்துடுவாங்க. அந்தத் தலையாட்டி, மக்களோடு
மக்களாக உறவாடியவனாத்தான் இருப்பான். ராணுவத்தின் மிரட்டலுக்கோ,
பணத்துக்காகவோ காட்டிக்​கொடுப்பவனாக மாறி இருப்பான். இதில் அப்பாவிகள்தான்
நிறைய சிக்குவார்கள். அத்தகைய தலையாட்டிகள் இன்னைக்கும் நிறையப் பேர்
இருக்காங்க. அவங்க யாருன்னு தெரியாம, யாரைப் பார்த்தாலும் நாங்க பயந்து
நடுங்கிக்கிட்டு இருக்கோம்'' என்றார் வேதனையாக. இதுதான் இன்றைய
யாழ்ப்பாணத்தின் உண்மையான நிலை.

முன்பெல்லாம் காலை 9 மணிக்குத்தான் தமிழர்கள் வீட்டைவிட்டு வெளியே வர
முடியும். மாலை 5 மணிக்குள் ஊருக்குள் வந்துவிட வேண்டும். வெளியிடத்தில்
வேலை பார்ப்பவர்கள் மாலை 5 மணிக்குள் வீட்டுக்கு வருவது சாத்தியம் இல்லை
என்றாலும் வேறுவழி இல்லை. வந்துதான் ஆக வேண்டும். இந்தக்
கட்டுப்பாடுகள்தான் கடந்த 10 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் பகுதியில்
இருந்திருக்கிறது. இறுதிப்போர் முடிந்த பிறகு இந்த நிபந்தனையைத் தளர்த்தி
இருக்கிறது ராணுவம். ஆனாலும், தமிழர்கள் இரவுக்கு முன்னால் வீட்டை அடைந்து
விடுகிறார்கள். விசாரணையே இல்லா விட்டாலும் இரவு அவர்களைப் பயமுறுத்தும்
விஷயமாக மாறிவிட்டது.

புராதன கதறுகொட விகாரைக்குச் சென்றேன். வட்ட வடிவில் பழங்காலத்து
விகாரைகள் இருந்தன. தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலை இருந்தது. 'இது
இந்திய அரசு அன்பளிப்பாகக் கொடுத்த சிலை’ என்றார் விகாரை காவலாளி. அந்தப்
புத்தரிடமும் ஆயுதம் தரித்த ராணுவம் நின்றது.

அங்கிருந்து வலிகாமம்...

இந்தப் பகுதி விவசாயத்துக்கு ஏற்ற செம்மண் கொண்ட பகுதி. கடல்
தொழில்களுக்கும் உகந்தது. வலிகாம மக்களின் விவசாய நிலங்களையும் வீடுகளையும்
1990-ம் ஆண்டிலேயே ராணுவம் பிடுங்கிக் கொண்டது. அப்போது, ஒரு
லட்சத்துக்கும் மேலான மக்கள் தங்களது வாழிடத்தில் இருந்து விரட்டப்பட்டனர்.
ராணுவம் எல்லா இடங்களையும் தன்வசப்படுத்திக் கொண்டது. அந்தப் பகுதியில்,
பார்க்கும் பக்கம் எல்லாம் இடிந்த வீடுகளும் குண்டுகள் துளைத்த
சுவர்களும்தான் இருந்தன. மின்சாரம் இல்லை. கல்வி இல்லை. மருத்துவமனை இல்லை.
ஊரைச் சுற்றிலும் ராணுவ வளையங்கள் மட்டுமே இருந்தன. ஆங்காங்கே தமிழர்கள்
இருக்கிறார்கள். அவர்கள் இத்தனை வலிகளையும் சுமந்துகொண்டுதான்
வாழ்கிறார்கள். சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. மனிதர்களைப் பார்ப்பதே
அரிதாக இருந்தது.

மீள்குடியேற்றம் பற்றி விவரித்த தமிழ் அரசியல் பிரமுகர், ''ராணுவம்
விடுதலை செய்யும் நிலப்பரப்பு என்பது 10-ல் ஒரு பங்குதான். கீரிமலை,
மயிலிட்டி, வசாவிளான், குப்பிழான் போன்ற கிராமங்களில் சில பகுதிகளை
விடுவித்து உள்ளனர். ஆனால், இன்றும் வலிகாமத்தின் 26 கிராமங்கள் உயர்
பாதுகாப்பு வளையங்களில்தான் உள்ளன. இந்த கிராமங்களின் எல்லைப் பகுதிகளில்
ராணுவம் புதைத்து வைத்த கண்ணிவெடிகள் பெரும் அளவில் இருக்கின்றன. மக்களின்
நிலங்களில் ராணுவம் விவசாயம் செய்கிறது. விவசாயத்தில் கிடைப்பதை சந்தையில்
கொண்டுவந்து மக்களுக்கே விற்​கிறது. வலிகாமத்தின் கடலோரப் பகுதிகளை
சுற்று​லாவுக்காக அரசு மேம்படுத்துகிறது. ஆனால், சுற்றுலா மீது செலுத்தும்
கவனத்தை மக்கள் மீது செலுத்தவில்லை'' என்றார்.

''பலாலி விமானத் தளத்துக்காகவும், காங்கேசன்துறைக் கடற்படைத்
தளத்துக்காகவும் பெரும் நிலப்பரப்பை சிங்கள ராணுவமும் கடற்படையும்
ஆக்கிரமித்து உள்ளன. இந்தியாவின் பலாலி விமானத் தளச் சீரமைப்புத் திட்டத்தை
இலங்கை நிராகரித்து விட்டு தானே செய்கிறது. காங்கேசன்துறைத் துறைமுகம்,
இந்தியாவின் 20 மில்லியன் டொலர் உதவியோடு சீரமைக்கப்படுகிறது. அதே​போல்
யாழ்ப்பாணத்தில் உள்ள அச்சுவேலித் தொழிற்​பேட்டை சீரமைப்புக்கும் இந்தியா
174 மில்லியன் ரூபாயை இலங்கைக்குக் கொடுத்துள்ளது.

காங்கேசன் துறையின் கடலோரப் பகுதியில் ஒரு பெரும் பகுதியை மின்நிலையம்
அமைப்பதற்காக கே.எல்.எஸ். என்ற மலேசிய நிறுவனத்துக்கு 22 ஆண்டுகளுக்கு
இலங்கை அரசாங்கம் குத்தகைக்கு விட்டுள்ளது. அதற்காக அந்த நிறுவனம் 250
மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது.

காங்கேசன்துறையில் இலங்கை அரசுக்குச் சொந்தமான சீமெந்து ஆலைக்கு அருகே
பல ஏக்கர்களை கோத்தபய ராஜபக்‌ஷவின் நண்பர் ஒருவர் சுண்ணாம்புக் கற்கள்
எடுப்பதற்காக ஆக்கிரமித்து வைத்துள்ளார். அவர் ஏற்கனவே ராணுவப்
பாதுகாப்போடு அங்குள்ள நிலங்களை சுண்ணாம்புக் கற்களுக்காக அழித்தவர்தான்''
என்றும் அவர் சொன்னார்.

பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் எங்கெங்கோ நடக்கின்றன என்றாலும்
பசியோடு கிடக்கிறார்கள் தமிழர்கள். வெளிநாட்டு நிதி எதுவும் தமிழர்களின்
வாழ்க்கை வளர்ச்சிக்காக செலவிடப்படவில்லை என்பதைத் தெளிவாக உணர முடிந்தது.

யாழ்ப்பணத்தின் மேற்கு கடலோரப் பகுதிதான் மாதகல். இங்கு சம்பில்துறை
என்ற இடத்தில் கடற்படையால் அமைக்கப்பட்ட புத்த விகாரை உள்ளது. 2009-ம்
ஆண்டு போர் முடிந்த சில தினங்களில் ராஜபக்‌ஷவின் மனைவியால் திறந்து
வைக்கப்பட்டது. இந்த இடத்துக்கு சிங்கள அரசு வைத்துள்ள பெயர்,
'டம்புகொலபட்டுன’. அங்குள்ள ஆசீர்வாதச் சொற்களில் 'சங்கமித்த மஹா றஹத்
தேரணியின் இவ் உருவச்சிலை இலங்கைவாழ் மக்களுக்காக சிறீமதி ஜனாதிபதி
பாரியார் கௌரவ சிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்‌ஷ அவர்களின் பூரண
அனுசரனையுடன் ஜூன் 5, 2009 அன்று சிறீ மஹா போதியின் தென்கிளை
சிறீலங்காவுக்கு எடுத்துவரப்பட்டு சங்கமித்த விகாரை பூமியில் பதிக்கப்பட்டு
உள்ளது’ என்று வரலாறாக எழுதப்பட்டுள்ளது.

1992 முதல் இது முழுக்கமுழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி
ஆகும். சம்பில்துறையில் இருந்து பொன்னாலை வரை சிங்களக் கடற்படைக்காக
நிரந்தர வீடுகள் கட்டப்படுகின்றன. ராணுவத்துக்குக் கண்ணுக்கெட்டும் தூரம்
வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ் மீனவர்கள் யாரும்
மீன் பிடிக்கச் செல்லவே முடியாத நிலை.

20 வருடங்களுக்கும் மேலாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பகுதி​களுக்கான
தேவை, கிராமச் சாலைகள்​தான். ஆனால், அரசு அதை அமைப்பதாக இல்லை. மாறாக,
சுற்றுலா மேம்பாட்டுக்காக நகர்ப்புறச் சாலைகளைத்தான் விரிவு படுத்துகிறது,
அதீதக் கவனமும் நெடுஞ்சாலைப் பணிகளில்தான் காட்டுகிறது. சிங்களக்
கிராமங்களில் 100 பாதைகள் அமைக்கப்படுகின்றன என்றால், தமிழ்ப் பகுதிகளில்
10 பாதைகள் அமைக்கத்தான் ஒப்புதல் கொடுக்கிறது சாலை மேம்பாட்டகம். இப்படி
நல்ல சாலைகளுக்குக்கூட வழி இல்லாமல் இருக்கிறது தமிழர் வாழிடம். ஊர்
முழுக்க ராணுவம், அடிப்படை வசதிக்கு எதுவும் இல்லாத தமிழ் மக்கள் என்பதே
அந்தப் பகுதியின் யதார்த்தம்.

'விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன.
இதனால் ஐ.நா. சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு யாழ்ப்பாணத்தில்
எந்த ராணுவ முகாம்களையும், பாதுகாப்பு வளையங்களையும் அகற்ற முடியாது’
என்று டிசம்பர் 31-ம் தேதி இலங்கை கட்டளைத் தளபதி அறிவித்திருப்பதைப்
படித்தால், புலிப் பூச்சாண்டியைக் காட்டியே மீதம் உள்ள தமிழர்களையும்
சிறுகச்சிறுக மரணிக்க வைக்க, சிங்கள இனவாதம் முடிவெடுத்துவிட்டது!

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Puliththadam-3

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Puliththadam-2

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Puliththadam-1
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty Re: புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-

Post by அருள் Fri Jan 11, 2013 3:44 pm

புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 05

சூன்யப் பிரதேசமாகக் காட்சி அளிக்கிறது முல்லைத் தீவு.
அகோரங்கள் நடந்து முடிந்து அதற்கான ஆதாரங்களோடு உலகத்​திடம், 'நீதி கொடு’
என்று கெஞ்சிக் கிடக்கும் முள்ளிவாய்க்கால், இன்று வாழ்வாதரத்துக்கான
போரில் தவிக்கிறது.
கொடூரப் போர் நடந்ததற்கான சாட்சியங்களை இன்றும்
சாலையின் இருமருங்கிலும் தலை இழந்து நிற்கும் பனை மரங்கள் மூலமாகவும்
குண்டுகளால் சிதைக்கப்பட்டுக் கிடக்கும் வீடுகள் மூலமாகவும் பார்க்க
முடிகிறது.

ஏ 35 நெடுஞ்சாலையின் வழியில் முல்லைத் தீவுக்குப் பயணிக்கிறேன். எத்தனை
பிணங்கள் கிடந்த வீதி, எவ்வளவு உயிர்கள் துடிதுடித்த பாதை என இரத்த
நினைவுகள் மனத்திரையில் ஓடியது. அந்த இடத்தில் எவர் நடந்தாலும் அவர்கள்
தங்களது சுயத்தையே சில நிமிடங்கள் இழக்க வேண்டி இருக்கும்.

வந்தடைந்தது முல்லைத்தீவு பேருந்து நிலையம். அங்குதான் சாலை ஓரத்தில் நான்கு பேருந்துகள் நின்றுகொண்டு இருந்தன.

'சேற்றில் உள்ள அந்தச் சாலை ஓரம்தான் பேருந்து நிலையம்’ என்றார் உடன் வந்திருந்த நண்பர். அவர் ஒரு தொண்டு நிறுவன ஊழியர்.

கருநாட்டுக் கேணி என்ற பகுதிக்குச் செல்லத் தீர்மானித்து இருந்தோம்.
அங்கு செல்வதற்கான பேருந்து இன்னும் ஒரு மணி நேரம் கழித்துதான் வரும்
என்றனர்.

செம்மலை, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் என அந்த வழியே
உள்ள கிராமங்களுக்குச் செல்ல பொதுமக்களும் நிறையவே காத்திருந்தனர்.
பேருந்து வருவதற்குள் அந்த வட்டாரத்தில் உள்ள பகுதிகளைச் சுற்றி வந்தோம்.

ஓர் கடையில் பாதுகாப்புப் படை எச்சரிக்கைப் பிரதி ஒன்று இருந்தது.

அதில், 'ஆயுதம் வைத்திருப்பது சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டு உள்ளது.
ஒருவேளை உங்களிடம் ஆயுதம் உள்ளது என்று அறியப்பட்டால், பிணையில் வராத
தடுப்பில் நீங்கள் வைக்கப்படுவீர்கள். அதனால் உங்கள் குடும்பம், குழந்தைகள்
வாழ வழியின்றித் தவிக்கும் நிலை ஏற்படும். ஆயுதம் வைத்திருப்பவர்களைக்
காட்டிக் கொடுத்தால் பரிசு தரப்படும்’ என்று எழுதப்பட்டு இருந்தது. ஒவ்வொரு
ஆயுதங்களுக்குமான பரிசுத் தொகையும் வகைப்படுத்தப்பட்டு இருந்தது.

அதில், கைக்குண்டுக்கு 2,000 ரூபாய், கைத்துப்பாக்கி, கிளோமோர் ரகக்
கண்ணிவெடி, கவச எதிர்ப்புக் கண்ணிவெடிக்கு 5,000.... ரி56 ரகத் துப்பாக்கி,
ஆர்.பி.ஜி. உந்துகணை செலுத்திக்கு 10 ஆயிரம்... கனரகத் துப்பாக்கிக்கு 15
ஆயிரம் ரூபாய் பரிசு... என்று பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது.

புலிகள் மிகப்பெரிய இராணுவக் கட்டமைப்பை வைத்​திருந்த இடம் அது. அவர்கள்
பயன்படுத்திய ஆயுதங்களில் குறைந்த அளவே இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன.
மீதி எங்கே போயின என்பதே தெரியவில்லை. எனவே, பொதுமக்கள் மூலமாக அதைக்
கண்டுபிடிக்கும் விதமாக இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

அரசு, இராணுவக் கட்டடங்களைத் தவிர, மற்றவை எல்லாம் அழுக்காகவும்,
பாழடைந்தும் கிடந்தன. கழிவறைகள் எங்கும் இல்லை. மருத்துவ வசதி மோசமான
நிலைமையில் இருந்தது. பள்ளிகள் இடிந்து கிடக்கின்றன. அவை இருந்ததற்கான
சுவடு மட்டுமே இருக்கிறது. வளர்ச்சிப் பணிகள் அறிவிப்புகளில் மட்டுமே
அனைத்து இடங்களிலும் உள்ளன.

மிதிவண்டி, பைக், டிராக்டர் என்று எல்லா வாகனங்களிலும் எல்லாவிதமாகவும்
இராணு​வம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. பேருந்துக்கு நேரமாகவே, கிளம்பினோம்.


நாயாற்றுப் பாலத்தை கடந்தது பேருந்து. அங்கு இருந்து பார்க்க
நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கண்ணுக்குத் தட்டுப்பட்டது. 'அது புலிகளின்
நீர்மூழ்கிக் கப்பல்’ என்றார் நண்பர். ''அந்தக் கடலோரப் பகுதி இப்போது உயர்
பாதுகாப்பு வளையமாக உள்ளது. இந்த நாயாற்றுப் பாலம்தான் முன்பு புலிகள்
எல்லைப் பகுதியாக விளங்கியது.

இந்த வழியில் தனியார் வேன்களில் செல்வது ஆபத்து. ஏனெனில், நாம் இப்போது
செல்வது சுற்றுலாப் பகுதி அல்ல. 27 ஆண்டுகளாக இராணுவத்தின் கையில் உள்ள
பகுதி. 'கெமுனு வாட்ச்’, 'சிறப்புப் படைப் பிரிவு’ என ஆறு இராணுவ முகாம்கள்
இந்த வழியே உள்ளது'' என்றார் அவர்.

புதர்கள் மண்டிய பகுதிகளின் உள்ளே முள்வேலிக் கம்பிகளோடு முகாம்கள் தெரிந்தன. 'அதுதான் மணலாற்றுக் காடு’ என்றார் நண்பர்.

பிரபாகரன் முதன் முதலில் கால் ஊன்றிய காடு இது. 1986-ம் ஆண்டில்
பிரபாகரனுக்கும் இந்தியப் படைக்கும் கடுமையான சண்டை நடந்தது இந்தக்
காட்டில்தான்.

கொக்குத்தொடுவாய் தொடங்கி குண்டும்குழியுமான மண் சாலைகள், ஜல்லி
கொட்டப்பட்ட சாலைகள் என்று போக்கு​வரத்துக்கே சிரமமான சாலைகளாக இருந்தன.
மழைக் காலங்களில் இந்த ஊருக்கும் முல்லைத்தீவுக்குமான சாலை இணைப்பு
தண்ணீரால் துண்டிக்கப்பட்டு விடுமாம்.

சுந்தரம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை பயண வழியில் தற்செயலாகச்
சந்தித்தேன். ''துரோகி இல்லாத காலமே கிடையாது. சனத்துல நூத்துக்கு அம்பது
சதம் உயிருங்க துரோகத்தால போனதுதான்.

சிங்களவன்கூட ஒரு நாளும் கதைச்சு வெல்ல இயலாதய்யா. அவன் எல்லாமே
தெரிஞ்சுதான் கொல்றான். இந்த நாட்டுல காட்டிக்கொடுத்தா நல்லா வாழலாம்''
என்றவர், தன் அருகில் இருந்த பெண்ணைக் காட்டினார்.

''அவக புருசன்,
மகன் ரெண்டு பேரையுமே யுத்தத்துல பறிகொடுத்துட்டாங்க. இப்ப அவளுக்கு
இந்தியா வீடு கிஃப்ட் தந்திருக்கு. இவ புருசனையும் மகனையும் கொன்னதுக்கு
கிஃப்ட்டா? எனக்கு இந்திய அமைதிப் படை கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?''
என்று முகத்தில் உள்ள வெட்டையும் உடைந்த காலையும் காட்டினார்.

''இந்தியன் ஆமி ஊர் ஊரா புகுந்து எங்க கிராமங்களை அழிச்​சதய்யா.
அவர்களுக்கு என்ன பாவம் செய்தது எங்கட சனம்? இந்தியன் ஆமியில் குர்காஸ்
மாறி முக அமைப்புல இருந்தவங்க சுட மாட்டாங்க. துவக்கத் (துப்பாக்கி)
திருப்பி முகத்துலே இடிப்பாங்க. அதில் வெட்டுப்பட்டு வலி உயிர் போகும்.
அப்படித் துவக்குல அடிச்சுதான் என் கால் உடைஞ்சது.

அதுக்கப்பறம் தமிழ்நாட்டு முகாமில் அகதி வாழ்வு வாழ்ந்தேன். எங்கட
வாழ்வு இத்தன நாள் ஆயுத யுத்தத்துல இருந்துச்சி. இப்போ அமைதி யுத்தம்
நடக்குது. உரிமையைக் கொடுக்காம புலி பேரச் சொல்லியே எங்கள ஒடுக்குது ஆமி.

ஒண்ணு சொல்றனய்யா... நான் புலி இல்ல... ஆனா, பிரபாகரன் இருக்காரோ
இல்லையோ... அவர் இல்லைனாலும் எங்கட இனத்துல இருந்து ஒருத்தன் எழுவான்.
எங்களுக்குத் தேவையான நிம்மதியை அவன் கொடுப்பான்’ என்று கொந்தளித்தார்.

கருநாட்டுக்​கேணி நெருங்கியது. விடைபெறும்போது கையை பிடித்தவர், ''இங்க
சுயமரியாதையோட பேசுனாவே அவனுக்கு புலிப் பட்டம்தான் தம்பி. கொடுக்காத
நிவாரணப் பொருளக்கூட நாங்க கேட்டு வாங்க முடியல. ஊமப் பொம்மயாதான் இங்க
வாழறம். உசுரு மட்டும் இருக்கு. போய் வாருங்கள் தம்பி'' என்று கையை
இறுக்கமாகப் பிடித்தபடி நின்றார். சொன்னது அனைத்தும் கனத்தது.

காடுபோல கிடந்த இடத்தில் ஆங்காங்கே சிறிய சிறிய கொட்டாய்கள். தொண்டு
நிறுவனங்கள் நிதி வழங்கியதற்கான அறிவிப்புப் பலகைகள். ஆனால், அதில்
போடப்பட்டு இருந்த தொகைக்கும் அங்குள்ள வளர்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை.

27 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதி அது.
அப்படி குடியேற்றப்பட்ட லிங்கம் என்பவரைச் சந்தித்தேன். ''நான் இந்த ஊர
விட்டுப் போகையில எனக்கு 15 வயசு. 42 வயசுல மீண்டும் எங்கட மண்ணுக்குத்
திரும்பி இருக்கேன். விவசாயம் எல்லாம் அழிஞ்சிருச்சி. வீடுனா அது பனங்
கொட்டாய்தான். ராவுல தூங்க முடியாது. அந்த அளவுக்கு பாம்பு மேயுது. பாம்பு
கடிச்சாக்கூட மருத்துவம் பாக்க வழியில்ல.

எங்க காணியோட உரிமப் பத்திரம் எதும் இல்ல. அரசாங்கத்திட்ட கேட்டா, பதில்
இல்ல. எங்கட நில உரிமப் பத்திரத்த எல்லாம் அரசு அழிச்சிருச்சி.
முல்லைத்தீவு மாவட்டத்தோட இருந்த எங்க பகுதியப் பிரிச்சு 'வெலியோயா’னு ஒரு
மாவட்டத்தை உருவாக்கினாங்க. நிலப் பத்திரங்களை எல்லாம் எடுத்து அழிச்சிட்டு
உருவாக்கின மாவட்டத்தை அப்படியே மறுபடியும் முல்லைத்தீவோட சேத்துட்டாங்க.
எங்க காணிக்கான உரிமம் எதும் இப்ப எங்ககிட்ட இல்ல. எங்க வயத்துக்கே தினம்
அல்லாடறம்'' என்று வெதும்பினார்.

இவரைப்போலவே இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ''முல்லைத்தீவு-
திரிகோணமலை சாலையை இணைக்கும் பாலத்தை முகத்துவாரத்தில் இந்தியா கட்டுது.
ஆனால் வயிற்றுக்கு இல்லாமல் காயற எங்களை எந்த நாடு கண்டுக்குது?'' என்று
நொந்தார் இன்னொருவர்.

அப்போது மணி மதியம் இரண்டு. இங்கு சாப்பாட்டுக் கடை எதுவும் இல்லை. 'ஒரு
கி.மீ. நடந்து சென்றால் ஒரு டீ தண்ணிக் கடை இருக்கிறது’ என்று
சொன்னார்கள். நடக்க ஆரம்பித்தோம். வெயில் கொளுத்தியது. வெட்டவெளியாய்
பார்க்கும் தூரத்தில் கடலும் குளங்களும் இருந்தன. மின்சார வசதி எங்குமே
இல்லை. டீக்கடை வர, 'டீத்தூள் தீந்துடுச்சு’ என்று ஒரு சிறுவன் சொன்னான்.
காய்ந்துபோன பன் மட்டும் இருந்தது. அந்த வட்டாரத்து மக்களுக்கு இருக்கும்
ஒரே கடை இதுதான்.

'இனி முல்லைத் தீவுக்கு பேருந்து இல்ல’ என்று சொன்னார்கள். சிறிது
நேரத்தில் ஒரு டிராக்டர் வந்தது. அதில் ஏறிக்கொண்டோம். 'இந்திய அரசாங்கம்
அன்பளிப்பாக கொடுத்த டிராக்டர் இது’ என்றார்கள். அதில் ஏற்கெனவே ஒருவர்
உட்கார்ந்து இருந்தார். தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று
சொன்னதும் அவர் பேசினார். தன்னுடைய ஊர் கொக்கிளாய் என்று அவர் சொன்னார்.

''1984ம்
வருஷத்துல நாங்க இடம்பெயர்ந்து போனோம். அதன்பிறகு, சிங்களக் குடும்பங்கள்
சில வந்து எங்க இடத்துல குடியேறியது. 10 வருஷம் இருந்தா ஒருவருக்கு அந்த
இடம் சொந்தம் என்ற விதிப்படி 'இப்ப உங்க நிலம் அவங்களுக்கு சொந்தம்’னு
சொல்றாங்க.

எங்க மீன் வளம் தொடங்கி எல்லா வளங்களையும் சிங்களர்கள் எடுத்து
அனுபவிக்கிறாங்க. இந்த வளங்களோட ஒட்டுமொத்த லாபமும் சிங்கள
முதலாளிகளுக்குத்தான் போய்ச் சேருது.

இன்னைக்கு 300 சிங்களக் குடும்பம் கொக்கிளாய்ல இருக்கு. அங்க ஆய்வுக்கு
வந்த அரசு அதிகாரிகளும் எங்க நிலத்தை அவங்களுக்குத் தர்றதா
உறுதியளிச்சிட்டுப் போறாங்க.

எங்க நிலத்தை விட்டுப்போட்டு நாங்க கூலி வேலைக்குப் போறம். சிங்களப்
பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் கான்கிரீட் கட்டடம். ஆனா, எங்க பிள்ளைங்க
படிக்கக் கூர கொட்டாய். இதுதான் இப்போதைய நிலைமை. இந்தக் கூரையாவது
கிடைச்சதேனு நிம்மதிப்பட்டுக் கிடக்கோம்'' என்றார்.

கொக்கிளாயில் இருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் நிலைமை இதுதான்!

முல்லைத்தீவை வந்தடையும்போது, மாலை 6 மணி ஆகிவிட்டது. இன்னும் கொஞ்சம்
தாமதித்தால், அதன் பிறகு பேருந்து சேவை கிடையாது என்றனர். அங்கே தங்கும்
வசதியும் கிடையாது. உடனடியாக கிளிநொச்சி கிளம்பினோம்.

ஊடறுத்துப் பாயும்.....

ஜூனியர் விகடன்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty Re: புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-

Post by mmani Thu Feb 07, 2013 7:46 am

புலித்தடம்
தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை
விளக்குகிறார்!- ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


வந்தடைந்தோம், ஈழத்துக்காக உயிர் கொடுத்தவர்களைப் புதைத்த மண்ணுக்கு!
மாவீரர்கள் புதைக்கப்பட்ட அந்த இடங்களில் இன்று எருக்கஞ் செடிகள் புதராக
முளைத்திருந்தன.
நிராதரவாய் இருக்கும் அந்த மண்ணைப் பார்க்கும்போதே
யாரையும் சோகம் அப்பிக்கொள்ளும். 'நடுகல்� என்று சங்க இலக்கியங்கள்
குறிப்பிடுவதன் நீட்சிதான் 'மாவீரர் துயிலும் இல்லங்கள்�.
புலிகளின் முதல் மாவீரன் சங்கர்.

அவரின் மூச்சு அகன்றது நவம்பர் 27, 1982. நேரம் மாலை 6.05. அவர் சாவதற்கு
முன் உச்சரித்தது.. 'தம்பி... தம்பி� என்பதுதான். அந்த நாளைப் பற்றி
பிரபாகரன் குறிப்பிடும்போது 'இறுதி வரை என் நினைவாக இருந்த சங்கரை எப்படி
மறப்பேன்? அந்த நாளன்று நான் அதிகம் யாருடனும் பேசுவதில்லை.


மூன்று நேரமும் உணவு அருந்துவது இல்லை� எனக் குறிப்பிட்டார். அதன்
அடையாளமாக 1989-ம் ஆண்டில் இருந்து நவம்பர் 27-ம் தேதியை மாவீரர் தினம்
என்று அறி வித்தார் பிரபாகரன். அன்றைய தினம் மாலை 6.05-க்குக் கோயில்கள்
எங்கும் மணிகள் ஒலிக்கும். பிரபாகரன் மாவீரர் தின உரையை வழங்குவார்.

தளபதிகள் முதல் சாதாரணப் போராளிகள் வரை எத்தனையோ பேர் இந்த மண்ணுக்காக
இறந்துள்ளனர். இதில் அனைவருமே முக் கியமானவர்கள்தான். இவர் பெரியவர், இவர்
சிறியவர் என்ற வேறுபாடு இல்லை. அந்த வேறுபாடு ஏற்பட்டு விடக்கூடாது
என்பதற்காக அனைவருக்குமான தினமாக இது அமையும்� என்றார்.

அத்தகைய
மாவீரர் கல்லறைகள் உள்ள இடம், ஈழத் தமிழ் மக்கள் எப்போதும் வணங்கும்
கோயிலாக இருந்தது. இன்று, அவை முழுமையாகச் சிதைக்கப்பட்டுவிட்டன.
எங்களுக்காக உயிர ஈகம் செஞ்சவர்களுக்குக்கூட மரியாத செலுத்த முடியாத
நிலைமையிலதான் இந்த மண்ணுல வாழறம். சிங்கள ராணுவம் தமிழ்ப் பகுதிகளை
ஒவ்வொரு முறை கைப்பற்றும்போதும் துயிலும் இல்லங்கள் அழிக்கப்படும்.

புலிகளால் மீட்டு மீண்டும் சீரமைக்கப்படும். இப்போது மொத்தமாக
அழிக்கப்பட்டு விட்டது� என்று சொன்னார் நண்பர். அவர் குறிப்பிடுவதுபோல்,
ராணுவத்தின் கணக்குப்படி அத்தனை துயிலும் இல்லங்களும் இப்போது
அழிக்கப்பட்டு விட்டன.

கிளிநொச்சியில் கனகபுரம், விசுவமடு,
முழங்காடு, யாழ்ப்பாணத்தில் சாட்டி தீவகம், கோப்பாய், எல்லங்குளம்,
உடுத்துறை, கொடிகாமம், முல்லைத்தீவில் முள்ளியவளை, அலம்பில், ஆலங்குளம்,
வன்னிவளாங்குளம், ஜீவன்முகாம், டடிமுகாம், வவுனியாவில் ஈச்சங்குளம்,
மன்னாரில் பண்டிவிரிச்சான் திருகோணமலையில் ஆழங்குளம், தியாகவனம்,
பெரியகுளம், உப்பாறு, மட்டக்களப்பில் தாவை, தாண்டியடி, கல்லடி, மாவடி,
அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு என அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களின்
சுவடுகளும் அழிக்கப்பட்டு விட்டன.

அனைத்து துயிலும் இல்லங்களின்
நிலங்களும் இப் போது ராணுவச் சொத்து. பல பகுதிகளில் தங்கள் படைப்
பிரிவுகளுக்கான நிரந்தரக் கட்டடத்தை இந்த நிலங்களில்தான் கட்டி இருக்கிறது
ராணுவம். புலிகள் புதைக்கப்பட்ட இடத்தில் ராணுவம் நிலை நிலைநாட்டப்பட்டு
விட்டது என்பதே உலகத்துக்குச் சொல்லும் செய்தி.

கனகபுரம் துயிலும்
இல்லத்தின் எல்லைகளில் உடைந்த நடுகற்களும், இடித்து நொறுக்கப்பட்ட
கற்களின் எச்சங்களும் ஆங்காங்கே கிடந்தன. அதை வேதனையோடு பார்த்தபடியே
கிளம்பினேன். இந்த இடங்களைச் சுற்றி ராணுவக் கண்காணிப்பு உள்ளது.


உட்புறச் சாலையில் இருந்து 'ஏ-9� நெடுஞ்சாலையை அடைந்தேன். ராணுவத்தின்
உட்புற முகாம்களை சாதாரணமாக அந்த வீதியில் காண முடிந்தது. விளையாட்டுக்
கூடத்தின் கட்டுமான வேலையும் நடந்துகொண்டு இருந்தது. அங்கு ஒரு பெரிய
தண்ணீர்த் தொட்டி உடைந்து கிடந்தது.

இந்தத் தொட்டிக்கு உள்ளும்
பிரபாகரன் வாழ்ந்தார் என்று ஒரு கதை சொல்கிறது ராணுவம்� என்று நண்பர்
கூறினார். ராணுவம் எறிகனையில் தாக்கி அழித்த அந்தத் தண்ணீர் தொட்டியையும்
வெற்றிச் சின்னமாகவே வைத்துள்ளது. போர் வடுக்களின் அடையாளங்கள்தான், சிங்கள
தேசத்தின் வெற்றிச் சின்னங்கள்.

அவர்களின் இந்தச் செயல்கள்
வரலாற்றை அழித்தல் என்பதாக நீள்கிறது. என் உடனிருந்த நண்பர், புத்தகப்
பிரியர். போரின்போது அவரும் கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு
நகர்ந்தவர். அவரிடம் பொக்கிஷங்களாய் இருந்த 5,000-க்கும் மேற்பட்ட
புத்தகங்களைப் போரில் இழந்தவர். அவர் எனக்கு ஒரு சம்பவத்தை நினை
வூட்டினார்.

முள்ளிவாய்க்காலின் இக்கட்டுக்குள் சிக்கவைக்க
ராணுவம் நகர்த்திக்கொண்டே வந்தபோது, வீடு வீடாய்ப் புகுந்த ராணுவத்தினர்
புத்தகங்களை வெளியில் வீசி எரித்தனர். படங்களை எல்லாம் கொளுத்தினர்.
கிடைத்தவற்றை எல்லாம் சூறையாடினர்'' என்றார். அவர் சொன்னதைக் கேட் டபடியே
கந்தசாமி கோயிலை நெருங்கினேன்.

தமிழ் மக்கள் தங்கள் குறையை மனதிலே
வைத்துப் புலம்பும் இடமாக இருப்பவை இந்தக் கோயில் கள்தான். 'வெந்த
புண்ணில் வேல் பாய்ச்சுவது போல� அந்தக் கோயில்களையும் விடவில்லை இலங்கை
ராணுவம். இதுகுறித்து, கடந்த மார்ச் 2012-ல் 'இண்டர்நேஷனல் பாலிசி டைஜஸ்ட்�
என்ற இணையதளம் 'சால்ட் ஆன் ஓல்ட் வவுண்ட்ஸ் (Salt on Old wounds) என்ற
தலைப்பில் வடகிழக்கு மற்றும் மலையகங்களில் திட்டமிட்ட சிங்களமயமாக்கல்�
என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையின்படி, தமிழர்
பகுதிகளில் இருந்த 367 கோயில்கள் இடிக்கப்பட்டு உள்ளன. உயர் பாதுகாப்பு
வளையங்களில் இருந்த கோயில்கள் இடிக்கப்பட்டு புத்த விகார்கள்
கட்டப்பட்டுள்ளன. புத்த விகார்கள் அதிகரித்து இருப்பதற்கான ஆதாரங்கள் ஏ- 9
சாலையில் உள்ளன.

யாழ்ப்பாணத்தில் 208 கோயில்கள், திருகோணமலையில்
17 கோயில்கள், மட்டக்களப்பில் 61 கோயில்கள், அம்பாறையில் 11 கோயில்கள்,
கிளி நொச்சியில் 46 கோயில்கள், முல்லைத்தீவில் 6 கோயில்கள், மன்னாரில் 6
கோயில்கள், வவுனியாவில் 12 கோயில்கள் என மொத்தம் 367 கோயில்கள்
அழிக்கப்பட்டு உள்ளன.

மலையகப் பகுதி ரத்னபுராவில் சிவனொளி பாதமலை
(அடம்ஸ் பீக்) என்ற தமிழர்களின் வரலாற்று பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது.
1900-ம் ஆண்டு முதல் இது இந்துக்களின் புனித ஸ்தலம். ஆனால், 1970 முதல்
இந்தப் பகுதி சிங்கள தரப்புக்கு முக்கியமானதாக ஆக்கப்பட்டது.


இப்போது, அதன் பெயர் ஸ்ரீபாட. இப்போது இதை அரசாங்கம் புத்தர்களின் புனித
ஸ்தலமாக அறிவித்து விட்டது. மலையின் அதிகார மேற்பார்வைகளையும் இப் போது
புத்த பிக்குகளே கவனிக்கின்றனர்� என்ற தகவல்களை ஆதாரங்களுடன்
வெளியிட்டுள்ளது இன்டர்நேஷனல் பாலிசி டைஜஸ்ட்.

சமீபத்தில், இந்த
மலைக்கு நாமல் ராஜபக்ஷே புனித ரத யாத்திரை சென்றதை சிங்கள அரசுசார்
பத்திரிகைகள் புகழ்ந்தன. ராஜபக்ஷேவோ தமிழர் பகுதிகளில் இருந்த கோயில்களை
இடித்துவிட்டு, திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்க வருகிறார், புத்த
கயாவுக்குப் பாவம் கழுவ வருகிறார்.

மக்களை போர் சிதைத்து விட்டது,
நான் பார்த்தவரை இந்தத் தலைமுறை நிச்சயம் மீள முடியாத நிலைமையில் உள்ளது''
என, வீட்டுக்கு வந்ததும் நண்பரிடம் சொன்னேன். 'இதோடு சாதியும் இங்கு தலை
தூக்கத் தொடங்கி இருக்கிறது� என்ற வேதனைச் செய்தியைச் சொன்னார் அவர்.

புலிகள் காலத்தில் சாதியப் பாகுபாடுகள் பெரும்பாலும் இல்லை. ஒரு ஆள்
இயக்கத்தில் சேருகிறார் என்றால், அவர் பெயர் முதலில் மாற் றப்படும். அது
எந்த சாதி, எந்த மதத்தையும் குறிக்காது. அப்படியான பிரபாகரன் தன் மகனுக்கு
சார்லஸ் ஆன்டனி என்று பெயர் சூட்டினார்.

அது, 1983-ல் வீரச்
சாவடைந்த போராளி சார்லஸ் ஆன்டனி நினைவாக வைத்தது. ஆனால், அதை வைத்து உங்கள்
நாட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கம், புலிகளை கிறிஸ்தவ ஆதரவு இயக்கம்
என்று வகுத்துக் கொண்டது. அதையே இன்று ராஜபக்ஷேவும் பயன்படுத்திக்
கொள்கிறார்.

2009-க்குப் பிறகு, சாதிய ரீதியான கட்டமைப்புகள்
மீண்டும் துளிர்க்கத் தொடங்கி உள்ளன. அதைக் கட்டுப்படுத்த சாதிக்கு எதிரான
அமைப்போ, ஆட்களோ இங்கு இல்லை� என்று வேதனைப்பட்டார்.

கிளிநொச்சியை
விட்டு வவுனியா ஊடாக மன்னார் நோக்கிக் கிளம்பினேன். ஆங்கிலேயர் காலத்தில்
மலையகத்துக்கு சென்றால், 'உழைப்புக்கு மேல் ஊதியம் கிடைக்கும்� என்று
ஏமாற்றப்பட்டு இழுத்து வரப்பட்ட தமிழகத் தமிழர்கள், இந்த வழியேதான்
ஏக்கங்களை சுமந்தபடியே தோட்டத் தொழிலுக்காக கங்காணிகளின் பின்னால் நடந்து
சென்றனர்.

ஊடறுத்துப் பாயும்...
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 6

Post by logu Sun Aug 11, 2013 5:51 pm

எச்சங்களே மிச்சங்களாய் ஆன மண்ணாய் உள்ளது முள்ளிவாய்க்கால். பதறிய மனங்கள், கதறிய குரல்கள், மரண ஓலங்கள், குண்டடிச் சத்தங்கள் எனப் படுகொலைகளின் காட்சிகள் கண்ணை​விட்டு அகலவே இல்லை.
இரத்தம் படிந்த வழிகளிலும் நந்திக்கடலை ஒட்டியும் நிற்கிறேன். முல்லைத்தீவுக்கு வந்திருந்த தொண்டு ஊழிய நண்பரே அன்றும் என்னுடன் இருந்தார்.
அவர் சுற்றுலாப் பேருந்துகளைப் பார்த்துவிட்டு, ''போரின்போது மக்கள் எப்படிக் கொல்லப்பட்டனர் என்பது நமக்குத் தெரியும் அளவுக்குகூடச் சிங்கள மக்களுக்குத் தெரியாது. 'புலிகள் நம் நாட்டை ஆக்கிரமித்து இருந்​தனர், அவர்களை நாம் விரட்டிவிட்டோம்’ என்ற கதைதான் அவர்களுக்கு வரலாறாகச் சொல்லப்​படுகிறது.
உடைத்து நொறுக்கப்பட்ட நிலையில் குவிந்து கிடக்கும் வாகனங்களின் முன் நின்று இந்த மக்கள் படம் எடுத்துக்கொள்கின்றனர். எத்தனை பேர் செத்தனர், எவ்வளவு மரண ஓலங்கள் கேட்டது என்பதுகூடத் தெரியாமல், இந்த மண்ணைக் கண்டு ரசிக்க வார விடுமுறைகளில் பேருந்துகளில் கூட்டம் கூட்டமாய் சுற்றுலா வருகின்றனர்.
புலிகளை வெற்றிகொண்ட இராணுவ பூமி இது, நம் நாட்டின் வீரம் சொல்லும் கதை இது என்ற கற்பனை மட்டுமே அவர்களிடம் உள்ளது. எப்படிப்பட்ட நச்சுக் குண்டுகள் வீசப்பட்டன என்றெல்லாம் இவர்களுக்குத் தெரியாது.
இராணுவத் தலைமைப் பீடத்தில் இருந்து வரும் காணொளிகள் மட்டுமே போர்க் காலத்தில் சிங்கள மக்களுக்குக் காட்டப்பட்டன. இனரீதியான பாகுபாட்டையும், இலங்கை சிங்கள தேசம் என்ற நிலைப்பாட்டையும் சிங்கள மக்கள் மனதில் திணித்துக்கொண்டே இருக்கிறது சிங்கள அரசு என்றார்.
அப்போது நாங்கள் இருந்த இடம் 'போர் அருங்காட்சியகம்’. விளக்கங்கள் அனைத்தும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மட்டும்தான் இருந்தன. அதில் ஆயுதங்களின் விளக்கம் சிங்களத்தில் மட்டும்தான். 'தீவிரவாதிகளின் தற்கொலைப் படகு’ தொடங்கி நிலவன், இசையரசி, பரந்தாமன், ஊடுருவி போன்ற கடல் புலிகளின் படகுகள் அங்கு இருந்தன.
சாதாரணமாக ஒரு என்ஜினை வைத்தாலே படகில் நிற்க முடியாது. ஆனால், கடல் புலிகள் நான்குக்கும் மேலான என்ஜின்களை பொருத்தி நின்று செல்வார்கள். அந்தப் படகுகள்தான் இவை என்று கூறினார்.
இந்தப் பகுதிகள் எல்லாம் கடல் புலிகளின் கையில் இருந்த பகுதிகள். அப்போது பழுதான படகுகளை இங்கு சரிபார்ப்பார்கள். இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள எல்லாமே பழுதானவை. செயல்பாட்டில் இருந்தவை என்ன ஆகின என்பது இராணுவத்துக்கே தெரியாது.
புலிகளின் நீர்மூழ்கி, ஆட்லறி, பீரங்கி, விமானப் பாகங்கள், குண்டுகள், துப்பாக்கிகள், கண்ணி வெடிகள் என்று பலவிதமான ஆயுதங்கள் இருந்தன. அதில் ஆட்லறி, பீரங்கி போன்றவை புலிகளின் சொந்தத் தயாரிப்புகள். இதைப் பார்க்கத்தான் கூட்டம் கூட்டமாக சிங்கள சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
தமிழர்களுக்கு சிங்களத்தின் கொடூரத்தை சொல்லும் 'வெற்றிச் சின்னம்’ நந்திக்கடலில் இருந்தது. அந்த இடத்தைப் பார்க்கும் முன், ஓர் வயல்வெளியைக் காட்டி, 'இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதைப்பற்றிச் சொல்கிறேன்’ என்று நண்பர் கூறி இருந்தார்.
அதை நினைவுபடுத்திக் கேட்​டேன். ''புலிகள் கடைசியாக ஓர் விமானத் தாக்குதல் நடத்தினர். அந்த விமானத்தை அந்த வயல்வெளியில்தான் டேக்-ஆப் செய்தனர்'' என்றார். ஆனால், அந்த வயல்வெளி ஓர் ஓடுதளம் போலவே இல்லை. விவசாய நிலம்​போலத்தான் இருந்தது.
யுத்தக் காலத்துல நானும் இங்கதான் இருந்தன். எத்தனை பிணங்கள்... கால் தனியா கை தனியா தலை தனியா... எல்லாம் இரத்தமும் சதையுமா இருந்தன. மூட்டையும் முடிச்சுமாக இந்த வழியே​தான் நடந்தோம்.
நடந்துகொண்டு இருக்க பிடரி​யில் வந்து செல் விழும்... கிபீர் விழும். செத்த பிறகுகூட அந்தப் பிணங்களை கிபீரும் செல்லும் தாக்கிக்​கொண்டு இருந்தன'' என்று கம்மியான குரலில் சொல்லிக்கொண்டே இருந்தார் நண்பர். ஒவ்வொரு இடங்களுக்கும் அவர் கொடுக்கும் விளக்கம், கண்ணில் நீரைத் ததும்ப வைத்தது.
இங்குதான் அண்மையில் விடுமுறைக் கால 'போர் சுற்றுலாத் துறை’ ஹோட்டலை மகிந்த ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும் திறந்து வைத்தனர். இது​குறித்து கருத்து வெளியிட்டுள்ள நோமடிக் தாட்ஸின் சுற்றுலா இயக்குநர் ஜுனோ வேனன் பவல்,
ஐக்கிய நாடுகளால் கொலைகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடத்தில், சிங்கள இராணுவம் போர்க் குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்படும் இடத்தில் சுற்றுலாவை ஊக்கப்படுத்துவது மனிதாபிமானத்துக்கு எதிரான செயல் என்று கண்டித்துள்ளார்.
நந்திக்கடலில் உள்ள அனைத்துக் கடைகளும் விடுதிகளும் இராணுவத்துக்குச் சொந்தமானவை. சுற்றுலாப் பகுதிகள் யாவும் இராணுவ வசமே உள்ளது. இது இராணுவத்தை சுற்றுலாத் துறைக்குள் கொண்டுவரும் முயற்சி என்று வெளிநாட்டு ஊடகங்கள் விமர்சித்துள்ளன.

நந்திக்கடல் கடற்கரைக் காயலில் 'மூன்று படுக்கை கொண்ட வசதியோடு 15 ஆயிரம் ரூபாயில் ஓய்வறைகள்’ என்றும் 'பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் விடுமுறையைக் கழிக்க வாருங்கள்’ என்றும் சிங்களப் பத்திரிகைகளில் விளம்பரங்களும் வெளியாகி வருகின்றன.
அதாவது, புலிகளை வென்றதை தனது வீரமாகவும் புலிகள் இருந்த இடத்தை சுற்றுலாத் தளமாகவும் மாற்றிவிட்டது இலங்கை அரசாங்கம்!
கொழும்பில் விக்கிரமபாகு கருணரட்னவைச் சந்தித்தபோது அவர் இந்தக் குற்றச்சாட்டைப் பகிரங்கமாக வைத்தார். ''இன்றைக்கு இந்த அரசாங்​கத்தின் ஒரே இலக்கு, மக்கள் அல்ல. சுற்றுலாவை ஊக்குவிப்பதுதான்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடூரத்தை முழுமையாக மறைப்பதற்கு இந்த சுற்றுலா உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். 2009 மே மாதம் போர் முடிந்ததில் இருந்து நான் இதை எழுதி வருகிறேன்.
முள்ளிவாய்க்காலின் கொடூரப் போரில் குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் பேர் செத்திருப்பார்கள் என்பது என்னுடைய கணிப்பு. ஆனால், ஐ.நா-வின் அறிக்கை 40 ஆயிரம் பேர் என்கிறது. நான் சொல்லும் கணக்கு தவறு என்றால், என்னை அரசு கைது செய்து இருக்கலாமே?  என்று கொதித்தார்.
அவர் சொல்வது போல், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் என்பது ஐ.நா-வின் கண்துடைப்புக் கணக்கு. போர் இறுதி நேரத்தில் ஐ.நா. இந்த இடத்தைவிட்டு வெளியேறி விட்டதாகச் சொல்லும்போது எப்படி 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்று எப்படி ஐ.நா-வால் கணக்கிட முடியும்?
ஆக, இது இலங்கை அரசின் கணக்கு. இலங்கை அரசுக்குத் துணையாக உள்ள இந்தியாவின் மதிப்பீடு. இந்தியாவின் முடிவை வைத்தே ஐ.நா-வின் முடிவு அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முள்ளிவாய்க்கால் எங்கும் சிதறிக்கிடக்கும் வாகனங்களைக் கண்டாலே, லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள் என்பது புரியும்.
மலைபோலக் குவிந்து கிடந்த வாகனங்கள். சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், பஸ், வான், லொறி, அம்புலன்ஸ், உழவுயந்திரம் என்று எண்ணிக்​கையே லட்சத்தைத் தொடும். இன்று அத்தனை வாகனங்களும் பழைய இரும்புக்குத்தான் போகிறது. அதையும் வந்த விலைக்கு விற்றுக்கொண்டு இருக்கிறது இராணுவம்.

பனை மரங்கள் எல்லாம் குண்டு மழைத் தாக்குதலில் முறிந்து அழிந்து கிடந்தன. கரை முள்ளிவாய்க்கால், வெள்ள முள்ளிவாய்க்காலின் அகோரங்களைக் கண்டுவிட்டு, மீண்டும் கிளிநொச்சி திரும்பினேன்.
அங்கு செல்லும் வழியில் ஓர் மூத்த ஆண் போராளியைச் சந்தித்தோம். அவர் தனது போர்​ வாழ்க்கை, புனர்வாழ்க்கையைப் பற்றி விபரித்தார்.
புனர்வாழ்வுல ஒன்டுமே பண்ணல ஆமி. நாங்க​ளாகத்தான் எங்களைத் தயார்படுத்திக்கொண்டமே ஒழிய, அவங்களாக எதையும் செய்யவில்லை. நான் இரண்டு ஆண்டு காலம் புனர்வாழ்வுல இருந்தன். எங்களையே தயார்படுத்திக்கொள்ள ஓவியம் தீட்டுவம், கவிதை எழுதுவம், பூந்தோட்டம் செய்வம். பின் எங்களுக்கு என்ன வேல தெரியும் என்று கேட்டு செய்ய வைத்தனர்.
கண்டல் காடு பகுதிக்குக் கூட்டிச்சென்று சில காலம் விவசாயம் செய்ய வைத்தனர். மரணக் குழிக்குள் இருந்து பிழைத்து வந்த எங்களுக்கு அப்போது தேவையாக இருந்தது உளவியல் ரீதியான புனர்வாழ்வு.
ஆனால், அதை ஆமி செய்யலை. மாறாக அவர்களின் வீர தீரச் செயல்களைப் புகழ்ந்தும், 'நாங்க அடிச்சு நீங்க தோல்வி கண்டிங்க’ என்று கேலி செய்தும், அடிமையாக நடத்தும் மனநிலைதான் அவங்களிடம் இருந்தது.  நாங்க உடுப்பு கழுவிக் காயப்போடுவதைக்கூட அவர்கள் விரும்பலை. தினம் ஏதோ ஒரு விதத்துல பிரச்சினை வரும்.
2009-ம் வருஷம் மே 18-தான் எங்களப் பிடிச்சாங்க. 16, 17-ம் தேதி எல்லாம் கடைசி நிலைமைக்கு வந்துட்டோம். அந்த நேரத்துல ஐ.நா-வோ அமெரிக்காவோ உதவி செய்யும்னு எதிர்பார்த்திருந்தம். தமிழ்நாட்டு அழுத்தத்துல இந்தியா நிலைமை மாறும்னுகூட நினச்சம். ஆனா, எதுவும் நடக்கல.
கனரக ஆயிதம் பயன்படுத்த மாட்டோம்’னு ஆமி சொன்ன நேரத்துல பயங்கரமான யுத்தம் நடந்து கொண்டிருக்கு. நாங்க இருந்த பங்கரில் நாலா பக்கமும் செல் அடிச்சுக்கொண்டிருக்கான் ஆமி. செய்தித் தொடர்புகள் சட்டலைட் போன் வழியாக இருந்துகொண்டே இருந்தன.
யார் யார்கிட்ட செய்தி அனுப்பணுமோ அனுப்பிக் கொண்டேயிருந்தது எங்களோட தலைமைப்பீடம். ஆனா எதும் நடக்கல. சனமும் போராளிகளும் கொத்துக் கொத்தா செத்துக்கொண்டுதான் இருந்தனம். எங்களுக்கு வெளியுலகத் தொடர்பு இருந்ததே ஒழிய, உள்ளகத் தொடர்பு முழுமையா துண்டிக்கப்பட்டுருச்சி.
செல் குண்டுகள் மழைபோல் கொட்டிக்கொண்டே இருந்தது. போரின் கடைசி நேரத்துல வரி உடுப்புலாம் (சீருடைகள்) இல்ல. தலைவரோட இருந்தவங்க மட்டும்தான் வரி உடுப்புல இருந்தாங்கள்.
எனக்கு அருகால இருந்த பங்கரில் இசைப் பிரியா இருந்தவள். அவள் எனக்கு நன்கு அறிமுகம். என் மணிக்கூடு பழுதானததால மணிக்கூடு வாங்குவதற்கு அவளிடம் போனேன். 'நீங்க போயிட்டு நாளைக்கு வாங்கள். நான் தேடி எடுத்து வைக்கறன்’ என்றாள்.
நான் அடுத்த நாள் போனபோது, 'மணிக்கூடு கிடக்கலைன்ணா’ என்றுபோட்டு கொஞ்சம் அவுல் பிரட்டி தந்தாள். 'அடுத்து என்ன செய்யப் போறீங்கள். நிலவரம் மோசமாகிட்டு வருது... வாங்க, எல்லோரும் சேர்ந்து போகலாம்’ என்றேன். 'அவர் (இசைப்ரியாவின் கணவர் சிறீராம்... தளபதி) வந்து முடிவு சொல்லும் வரை பாத்திருக்கிறன்’ என்றாள். நான் என் பங்கருக்குள் வந்து விட்டேன்.
இசைப்பிரியாவின் மூன்று மாதக் குழந்தை சுகவீனம் காரணமாக மூன்று மாதத்துக்கு முன் மாத்தளனில் இறந்துபோனது. அவள் அக்காவின் கணவரும் இரண்டு மாதத்துக்கு முன் கிபீர் தாக்குதலில் செத்துட்டார்.
நான் இசைப்பிரியாவைக் கண்டது மே 18 தேதின்னு நினைக்கேன். ஒரு கொட்டிலிடம் பின்னுக்குக் கையை குத்திக்கொண்டு கால் முன் நீட்டிக்கொண்டு கட்டப்பட்டதுபோல் உட்கார்ந்து இருந்தவள். பின், அவளை நான் கண்டது 'சனல் 4’-ல்தான்...'' அதற்கு மேல் அவரால் பேசவே முடியவில்லை.
ஊடறுத்துப் பாயும்...
ஜூனியர் விகடன்
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Maha_praba6_01
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Maha_praba6_02
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Maha_praba6_03
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Maha_praba6_04
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Maha_praba6_05
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 07

Post by logu Sun Aug 11, 2013 5:54 pm

இசைப்பிரியாவின் அதிர்ச்சியில் மௌனித்து இருந்த போராளி, அடுத்த சில நிமிடங்களில் போரின் உக்கிரமானத் தருணங்​களை மீண்டும் சொல்லத் தொடங்கினார்.
இசைப்பிரியாவின் இறுதி நாட்களைப் போலவே, கேணல் ரமேஷையும் நான் முழுமையாக அறிந்தவன். அவர் எங்களோட இருந்தவர். கருணா துரோகம் செய்து போன பிறகு கிழக்கு மாகாணத்தைக் கட்டிக் காத்தவர். இறுதியில் சரண் அடையவே அவர் முடிவெடுத்தார்.
தன்னோடு இருந்த பொடியனிடம் (அவருக்கு மெய்க்காவலர்போல் இருந்தவர்), 'காசு இருந்தா தாங்கடா’ என்று கேட்டார்.  பொடியனும் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தான். அதில் 5,000 ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு, 'தளபதிகள் சரணடையும் இடம்’ என்று இராணுவம் அறிவித்த இடத்தை நோக்கிப் போனார். அவரும் சித்ரவதைசெய்து கொல்லப்பட்ட தகவல் பல நாட்கள் கழித்து​தான் தெரியவந்தது.
இப்படி நம்பிக்கைத் துரோகத்​துடன் கொல்லப்பட்ட போராளிகள்தான் அதிகம். அவர்கள் கொல்லத்தான் செய்வார்கள் என்பதை அறிந்ததால்தான், நான் சரண் அடையவில்லை!
சரண் அடையாமல் நீங்கள் என்ன மாதிரி நடந்துகொண்டீர்கள்?
நானும் சனத்தோடு சனமாக நடந்து போனேன். அப்ப ஜீன்ஸ் பேன்ட் போட்டு இருந்தேன். நடந்த​படியே அதை அவிழ்த்துவிட்டு சாரத்தைக் கட்டிக்​கொண்டே நகர்ந்தேன். ஜீன்ஸ் போட்டிருந்தா போராளின்னு நினைப்பாங்க. பொதுசனம் மாதிரி சாரம் கட்டிக்கிட்டேன்.
முல்லைத்தீவை நோக்கிப் போனோம். நந்திக்கடல் வாவியில் பிணங்கள் அப்படியே மிதந்துகொண்டு இருந்தன. இராணுவம் சுட்டுச்சுட்டு உடுப்பை உருவி​விட்டு தண்ணிக்குள் தூக்கி எறிஞ்சுகொண்டு இருந்ததைப் பாத்துக்கிட்டே இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் நகர்ந்தோம்.
உயிர் போகாமத் துடிதுடிச்சவங்களோட சத்தம் கேட்டுட்டே இருந்தது. தண்ணிக்குள்ள இருந்து கையை மட்டும் தூக்கிட்டு யாரோ கூப்பிடுற மாதிரி​யும் இருந்தது. இந்த வாவியில செத்துக்கிடந்த சனம் மொத்தம் எவ்வளவு இருக்கும்னு சொல்ல முடியாது. அவ்வளவு சனம்!
இதைப் பார்த்துக்கிட்டே இராணுவத்திடம் போனம். ஏதோ சாப்பிடணும் போல இருந்தது. தண்ணி குடிக்கணும்போல இருந்தது. நாய்க்குப் போடற மாறி எதையோ தூக்கிப் போட்டாங்க. சின்ன போட் நிறுத்தி தண்ணிய அதுக்குள்ள விட்டாங்க. தண்ணி குடிக்கற நெரிசல்லயே பல சனம் செத்துப்போச்சு.
இராணுவப் பகுதிக்குள்ள அரசியல் துறை பொறுப்பாளர் கரிகாலனையும், நீதி நிர்வாகத் துறை பொறுப்பாளர் பர.ராஜசிங்கத்தையும் சந்தித்தன். அவங்க, 'வாங்க... இராணுவ மேஜர்ட்ட பேசி அங்கால போலாம்’ என்றார். 'நான் வரல... சனத்தோடவே நிக்கறன்’ என்றேன். அவர்கள் கொஞ்சம் நேரம் கழிச்சு, இராணுவ மேஜர்ட்ட பேசி கம்பிக் கூட்டுல இருந்து வெளியில் போயிட்டாங்க.
அவங்களுக்கு பனந்தோப்புல வெச்சு பிஸ்கட் பாக்கெட்கள், தண்ணி போட்டல்கள் தந்தாங்கள். அதைப் பார்த்ததும், 'போயிருந்தா தண்ணியாவது குடிச்சிருக்கலாம்’ என்று ஆச வந்தது. அங்கால எனக்குத் தெரிஞ்ச போராளிகளும் நெறைய இருந்தனர். கொஞ்ச நேரத்துல ஒரு வண்டி வந்து, அவங்கள ஏத்திக்கொண்டு போய்விட்டது.
இதுவரைக்கும் அவங்க என்ன ஆனாங்கன்னு தெரியாது. இருக்காங்களா செத்தாங்களான்னு ஏதும் தெரியல. மூணு வருஷம் ஆச்சு.
அரசியல் பொறுப்பாளர் நடேசனும் பலரோடு கதைச்சுக்கிட்டு முல்லைத்தீவு நோக்கிப் போனார். என்னைப் பாத்தவர், என் பேரச் சொல்லிக் கூப்பிட்டார். 'வாங்க போலாம்’ என்றார். 'சரண​டையப் போறோம்’ என்று சொல்லவே இல்லை. அவங்களோட போக எனக்கு விருப்பம் இல்ல. 'சனத்​துக்கு என்ன நடக்குதோ, அதுவே எனக்கும் நடக்கட்டும்’ என்று போகாமல் சனத்தோடவே நின்டன்.
ஒருவேளை இராணுவத்திட்ட சொல்லி அவங்களோட போயிருந்தனா இன்​றைக்கு உங்களோட பேசுறதுக்கு நானும் இருந்திருக்க மாட்டன்'' என்று சொல்லும்​போது அவர் முகம் இருண்டுகிடந்தது.
சண்ட முடிஞ்ச பிறகு ரெண்டு நாள் கழிச்சு கையில் இருந்த பணம், பொருள எல்லாம் பிடுங்கிக்​கிட்டு பேருந்துல ஏத்துனாங்க. ஓமந்தைக்கு (தமிழீழ எல்லையாக முன்பு இருந்தது) கொண்டுபோய் பொதுமக்களையும் போராளிகளையும் தரம் பிரிச்சாங்க. அங்க இருந்துதான் முகாம்களுக்குப் பிரிச்சு அனுப்பினாங்க.
முள்ளிவாய்க்கால்ல இருந்து ஓமந்தைக்குப் போக ரெண்டு நாள் பிடிச்​சது. கிட்டத்தட்ட 3,000 பேருந்துகள்... லட்சக்கணக்கான சனம். பேருந்துல ஏறுன பிறகுதான் வழியில தொண்டு நிறுவனங்கள உணவு கொடுக்க அனுமதிச்சாங்க. அவங்க எங்களுக்கு பிஸ்கட், தண்ணி போட்டல் எல்லாம் தந்தாங்கள்.
ஓமந்தை செக் பாயின்ட்ல எங்களுக்கு ஆசை வார்த்தை காட்டினாங்க. ''ஒரு நாள் இயக்கத்துல இருந்தாலும் இங்க வந்து பதிஞ்சுபோட்டு போங்க. கருணா 25 வருசமாக கேணல் நிலையில இயக்கத்துல இருந்தவர். இப்ப அரசாங்கத்தோடு சேந்து நல்ல நிலைமையில இருக்கார். அவரப்போலதான் உங்களையும் நல்லா வெச்சிருப்பம். பதிஞ்சிட்டு நீங்க போய் உங்க குடும்பத்தோடு சேர்ந்துக்கலாம்'' என்று அறிவிச்சுட்டு இருந்தது இராணுவம்.
தரம் பிரிச்சப் பின்ன போராளிகளான எங்களை இராணுவக் கேணல் சந்திரசிறீ வந்து பார்த்தார். 'உங்கள நாங்க போராளிகளாகப் பார்க்கலை. பொது​மக்களாகத்தான் பார்க்கறம். உங்கள யாராவது அடிச்சு துன்புறுத்தனா என்கிட்ட வந்து சொல்லுங்க’ என்றார்.
எங்கள அடிச்சுக் கொடுமைப்படுத்தின சம்பவங்கள அவரிடம் சொன்னம். அவரும் அந்த இராணுவ அதிகாரியக் கூப்பிட்டுக் கண்டிச்சிட்டுப் போயிட்டார். மறுபடியும் இராணுவ அதிகாரி, 'நீங்க கேணலிடம் சொல்றீகளா?’ என்று மீண்டும் அடிச்சுப்போட்டுப் போனார்.''

''உங்களைப்போலவே மற்ற முக்கியப் போராளிகளும் வந்துவிட்டார்களா? அதில் தப்பித்தவர்கள் உண்டா?
இறுதியில் நந்திக்கடலில் இராணுவ அரணை உடைத்துத் தப்பும் முயற்சி நடந்துச்சு. சண்ட இறுதிக் கட்டத்தை நெருங்கறபோது, எல்லாரும் தப்ப முடியாது என்ற நிலைமை வந்தது. மே 14 போல தப்புவது என்று முடிவுசெய்து, இராணுவ அரணை உடைச்சு வெளியில போகணும் என்ற திட்டம் இருந்தது.
ஆனா அந்த பாதையின் ஊடாக எல்லோரும் போக முடியாது, சிலர் மட்டும்​தான் போக முடியும் என்று முடிவானது.
தலைவர், பொட்டு அம்மான், சூசைனு இன்னும் பல முக்கியப் போராளிகள் போவதா முடிவானது. அவங்​களோட சில போராளிகள் சேர்ந்தாங்கள். சில மணி நேர இடைவெளியில மூன்று தடவ இராணுவ அரணைத் தாக்கினாங்கள். மூணுமே தோல்வியில முடிஞ்சது. ஆனா அதுக்கப்பறம் தாக்கனாங்களா, தப்பிச்சாங்களான்னு எனக்குத் தெரில.
இறுதி முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன?
மக்களோடு இருப்பது, இராணுவத்திடம் சரண் அடைவது, தப்புவது ஆகிய மூன்று நிலைகள் எடுக்கப்பட்டன. இது போராளிகளின் முடிவுக்கே விடப்பட்டது என்று அவர் விளக்கம் சொல்லி வந்தபோது, எனக்கு இலங்கைத் தளபதி அளித்த பழைய பேட்டி ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.
மே 19, 2009 அன்று 53-வது டிவிஷனின் கட்டளைத் தளபதி கமல் குணரட்ன அளித்த பேட்டியில், ''எனக்கு ஆள் பற்றாக்குறை உள்ளது, எனக்கு மேலும் படைகள் தேவை என்று கிளிநொச்சியில் உள்ள 58-வது டிவிசனின் கட்டளைத் தளபதி சவேந்திர சில்வாவிடம் கேட்டேன். அவர் தன் படையை அனுப்பினார். கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அவர்கள் வர, கிட்டத்​தட்ட இரண்டரை மணி நேரம் பிடித்தது. அதன் பிறகுதான் நாங்கள் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளை மீட்டோம். ஆனால், இரண்டரை மணி நேர இடைவெளியில் இராணுவ அரணை உடைத்துக்கொண்டு புலிகளின் இரண்டு ட்ரூப் வெளியே தப்பிவிட்டது. அதில் யார் இருந்தார்கள் என்பது தெரியவில்லை'' என்று சொல்லி இருந்தார். அதாவது, புலிகளின் முக்கியத் தளபதிகளில் பலர் சரண் அடைந்தார்கள். பலர் தப்பினார்கள். அதில் யார் யார் இருந்தார்கள் என்பதே இன்று வரை மர்மமாக இருக்கிறது.
அந்த சந்திப்போடு முடிந்தது அன்றைய இரவு. அடுத்த நாள் விடிந்ததும் மீண்டும் குருதிபடிந்த நந்திக்​கடல் பரப்புக்கே செல்ல வேண்டிய கட்டாயம். மனதில் அந்த அழிவுகளைப் பார்க்கும் தெம்பு இல்லை என்றாலும்!
புதுமாத்தளன், அம்பலவன் பொக்கனை, வலை​ஞர் மடம் போன்ற பகுதிகளை சுற்றிவந்தேன். ஊர் பெயர்ப் பலகைகள் அனைத்திலும் சிங்களப் பெயருக்கு முன்னுரிமை தந்தும், தமிழில் எழுதுவதை​யும் சிங்களச் சொல்லாடலில் எழுதி இருந்தனர்.
இந்த புதுமாத்தளன் வழியேதான் புலிகளின் கட்டுக்கரை இருந்தது. அதற்கு இராணுவம் தீவிரவாதிகளின் கட்டுக்கரை (Terrorist ditch cum bund) என்று பெயரிட்டு இருந்தது. 'இங்குதான் புலிகள் பொதுமக்களை மனிதக்கேடயமாகப் பிடித்துவைத்து இருந்தனர்’ என்று எழுதப்பட்டு இருந்தது.
இந்தக் கட்டுக்கரையை 20 ஏப்ரல் 2009 அன்று இராணுவம் பிடித்த பிறகுதான், 1,70,000 மக்களை கொடூரத் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து இராணுவம் மீட்டது’ என்று ஒரு இராணுவச் சாதனைப் பட்டியலாக, அந்த முகப்பு விளக்கம் விளங்கியது.
தொலைக்காட்சிகளில் நாம் மீண்டும் மீண்டும் பார்த்த இடத்தில், மௌனமாக நிற்கிறேன்!
ஊடறுத்துப் பாயும்....
ஜூனியர் விகடன்
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam7_01
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam7_02
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam7_03
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 08

Post by logu Sun Aug 11, 2013 5:55 pm

வெற்று உயிர்களாக, வெந்த உடல்களாகத் தமிழர்கள் இலங்கையிலே துடிதுடிக்​கின்ற​னர் என்று, நான்கு சுவர்களுக்​குள் நாம் அழுதபோது, உடம்பிலே நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஒருவன் தெரு​வுக்கு வந்தான். அவன் பெயர் முத்துக்குமார். அந்தப் பெயர் ஈழத்து மண்ணில் மக்களின் மனதில் கல்​வெட்டாக வாழ்கிறது.
இதுவரை இறந்த மாவீரர்களின் பெயரோடு முத்துக்குமார் பெயரும் இணைந்துவிட்டது. ''இனியும் எங்களுக்காகத் தமிழ்நாட்டில் ஓர் உயிரும் போகக்கூடாது என்று எங்கள் அவலங்களுக்கு மத்தியிலும் அவருக்காகத் தீபம் ஏந்தினோம். என்றும் அவருக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்கள்'' என்று என்னிடம் ஒரு ஈழத்தமிழர் கையைப் பற்றிக் கொண்டு சொன்னபோது, கண்கள் பனித்தன.
போர்க்குணத்தோடும் நன்றி உணர்வோடும் இருக்கும் அந்த மக்கள் கண் முன்னாலேயே தமது சொந்த பந்தங்களைப் பறிகொடுத்த வடுக்களை மட்டும் மறக்க முடியாமல் தவிக்கின்றனர். ஒரு போர் முடிந்த பிறகும் அவர்களின் மனதில் அது உளவியல் போரை நிகழ்த்துவதைப் பார்க்க முடி​கிறது. மனரீதியாக எதையோ இழந்தவர்களைப் போலத் தான் இப்போது அவர்கள் உலா வருகிறார்கள்.
தொண்டு நிறுவன ஊழியர் ஒருவர் என்னிடம் இதுபற்றி விவரித்தார்.
2009-ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை தமிழ் மக்களின் உளவி​யல் நிலைகள் தொடர்பாக 'அமெரிக்க மருத்துவக் கூட்டமைப்பு’ என்ற அமைப்பினர் ஓர் ஆய்வு நடத்தினர். அமெரிக்க மருத்துவர் பராசெய்ன் இந்த ஆய்வுக்குத் தலைமை வகித்தார். வடக்கு மாகாணம் மற்றும் இடம்பெயர் முகாம்​களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 92 சதவிகித மக்கள் உளவியல் ரீதியான பிரச்சினைகளில் பாதிக்கப்படும் மோசமான நிலையில் உள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த ஆய்வுக் கருத்தைப் போன்றே வவுனியாவைச் சேர்ந்த உளவி​யல் மருத்துவரும் ஓர் கருத்தை முன் வைத்தார். 'யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மனோநிலை சீரடைய இன்னும் இருபது ஆண்டுகளாவது தேவைப்படும்’ என்று அவர் சொல்லி இருக்கிறார்'' என்று அந்த ஊழியர் சொன்னார்.
ஏக்கம் நிரம்பிய விழிகள், அச்சம் போர்த்திய முகங்கள், தயங்கித் தயங்கி வரும் பேச்சுக்கள் அனைத்துமே ஒருவகையில் விரக்தியையே வெளிப்​படுத்துகின்றன. சிலநேரங்களில் வீரமாகவும் பல நேரங்களில் விரக்தியாகவும் பேசுகிறார்கள். உளவியல் போர் கண்ணுக்குத் தெரியாமல் நடந்து கொண்​டிருப்பதையே இது காட்டுகிறது.
புதுமாத்தளனில் இருந்து புதுக்குடியிருப்புக்கு நகர்ந்தேன். சுதந்திரபுரம், உடையார்கட்டு, வள்ளிபுனம் என பரந்தன் முதல் முல்லைத்தீவு வரை உள்ள 'ஏ35’ நெடுஞ்சாலையில் எல்லாமே அழிவுகளின் காட்சிகள்தான். ஓடு வேய்ந்து இருந்த கூரைகள் எல்லாம் இன்று கீற்றுக் கூரைகளாக உள்ளன. புதுக்குடியிருப்பு  நகர் மட்டுமே ஊர் போலத் தெரிந்தது. மக்கள் கூட்டமும் ஓரளவுக்குத் தென்பட்டது.
தொண்டு ஊழிய நண்பர் அவசர வேலை காரணமாக விடைபெற்றுக் கொண்டார். அவரே ஒரு கிளிநொச்சி நண்பரை எனக்கு வழிகாட்ட ஏற்பாடு செய்திருந்தார். ஏனெனில், நம் தமிழ்​நாட்டின் பேச்சு வழக்கு எளிதில் காட்டிக் கொடுத்து​விடும். தனியே சென்றால் பேச இயலாதவர்போல செல்ல வேண்டும். முன்பின் அறிமுகம் இல்லாத மக்கள் நம்மிடம் பேசுவதும் சிரமம். தவிர, நாம் யார் என்று தெரியாமல் நம்மையே சந்தேகத்தோடும் பயத்தோடும் பார்ப்பார்கள். எனவேதான் யாராவது ஒரு ஈழ நண்பரை உடன் வைத்துக்கொண்டே என்னுடைய பயணத்தைத் தொடர வேண்டி இருந்தது.
தொண்டு ஊழிய நண்பர் சொன்ன உளவியல் பிரச்சினைகள் பற்றி கிளிநொச்சி நண்பரிடம் கேட்​டேன்.
பிள்ளையின் முன்னே தாயும், தாயின் முன்னே பிள்ளையும் கற்பழிக்கப்படும்போது மனம் எப்படி தாங்கும்? சொந்தங்கள் எல்லாம் உறுப்புகளை இழந்து துடித்தபோதும் கண்முன்னே உயிர்களைவிட்ட போதும் பார்த்துப் பார்த்துத் துடித்தது எங்கள் சனம்... தங்களோட உற்றவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்பது தெரியாமல் வாழும் மனசு எப்படி நன்றாக இருக்கும்?'' என்றார்.
உளவியல் என்பது உயிர்ப் பிரச்சினை. தனிப்பட்ட மக்களின் பிரச்சினை என்று இதை சாதாரணமாக நினைக்க முடியாது. இது ஒரு காலகட்டத்தின் சமூகத்தையே பாதிக்கும் அல்லவா? இதை இலங்கை அரசாங்கமோ, இராணுவமோ உணர்ந்ததாகத் தெரியவில்லை. இராணுவ வெற்றியின் இருப்பையும் தங்கள் கருத்துப்படி பிரபாகரனின் இறப்பையும் நினைவுப்படுத்தி தொடர்ந்து பெரும் உளவியல் போரை மக்கள் மீது தொடுத்து வருகிறது.
இப்பொழுது இராணுவம் புதிதாக வரைப்படக் கண்காட்சி நிலையம் ஒன்றைப் புதுக்குடியிருப்பில் திறந்துள்ளது. அதில் 2009 போரின்போது ராணுவ நகர்வுகள் எப்படி எல்லாம் இருந்தன, எந்தெந்த படையணி எந்தெந்த வழியில் முள்ளிவாய்க்காலை சுற்றி வளைத்தது, நந்திக்கடல் ஓரத்தில் எங்கு பிரபாகரனைக் கண்டெடுத்தோம் என வரைபடத்தோடு விளக்கி அந்தத் தகவல் நிலையத்தில் விளக்கி வருகின்றனர்.
இராணுவம் போரின் வடுக்களைப் போக்காமல் போர் முறைகளையே மீண்டும் மீண்டும் காட்டி, மக்களின் மன ரணத்தை கீறிக் கீறி மகிழ்ந்தபடி இருக்கிறது.
ஆனால், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் பகுதி களில் மருத்துவர்களோ, மனநல மருத்துவர்களோ அவ்வளவாக இல்லை.
இதைப்பற்றி புதுக்குடியிருப்பு ஊர்வாசி ஒருவரிடம் கேட்டேன்.
அவர், ''மருத்துவமனைகளே இல்லாத இடத்தில் மருத்துவர்கள் எப்படி இருப்​பார்​கள்? இருக்கிற தமிழ் மருத்துவர்களையும் சிங்களப் பகுதிகளில் நியமித்துவிட்டு, சிங்கள மருத்துவர்களை தமிழ் பகுதிகளில் நியமிக்கிறது அரசு.
உயிரைக் காப்பத்துற மருத்துவர்கிட்டகூட எங்கப் பிரச்சினை என்னன்னு சொல்ல முடியல. அதுலகூட சிங்கள திணிப்பு. அரசு பணியில இருக்கிறதால தமிழ் மருத்துவர்கள் சிங்களம் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், சிங்கள மருத்துவர்கள் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. நாங்க தமிழ் மருத்துவர்களைக்கூட கேட்கலை. தமிழ் தெரிந்த மருத்துவரைத்தான் கேட்கறம்'' என்றார்.
'போருக்குப் பிறகும் இன முரண்பாட்டை காட்டிக்கொண்டிருந்தால் அது இன்னொரு போராளிக் குழு உருவாக்கத்துக்கு வழி வகுக்கும்’ என்னும் சந்திரிகா குமாரதுங்கவின் பேச்சை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, 'அயோ ஒகுலஜா (AYO OKULAJA)’ என்ற நைஜீரிய ஊடகத்துக்கு அளித்த பேட்டி 'இலங்கை எப்படி உள்ளது?’ என்பதை நிதர்சனமாக உணர்த்துகிறது.
தமிழ்ப் புலிகளுக்கு எதிரான மகிந்த ராஜபக்சவின் தாக்குதல் இப்போது அனைத்துலக சமூகத்தில் மிகப் பெரிய விவகாரமாக உள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அதை இன்னமும் விசாரித்துக் கொண்டிருக்கிறது. நாம் போரை முடிவுக்கு கொண்டுவந்த போதிலும், இது வேறொரு போருக்​கான ஒரு நீண்ட ஆயத்தமாக இருக்கக்கூடும் என்றே நம்புகிறேன். தமிழ்மக்கள் நீண்ட காலமாகவே பாரபட்சமாக நடத்தப்பட்டனர். அவர்கள் தமது உரிமைகளைக் கேட்டனர்.
அவர்களின் உரிமை​களை வழங்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற எனது அரசாங்கம் முதன்முதலாக ஒப்புக்கொண்டது. முழு உரிமைகளையும் கொண்ட ஒரு சமமான ஆட்சியை நிறுவ ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், ராஜபக்ச சிறுபான்மையினரின் உரிமைகளில் நம்பிக்கை கொண்டவரல்ல. அவர் ஒருவரே எனது அமைச்சரவை பேச்சுக்களுக்கு எதிராக இருந்தார். அவரது தேவை, தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது.
இப்போது ஒட்டுமொத்த உலகமுமே, இராணுவத் தாக்குதலுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் இணைகிறார்கள். தாக்குதல்களைக் கண்டிக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் தனது திட்ட வகுத்தலின்படியே தொடர்ந்து நடக்குமானால், இன்னும் சில ஆண்டு​களில் இன்னொரு போராளிக்குழு உருவாகும். இறுதித் தாக்குதலின்போது பொதுமக்களின் மனித​உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் நிறையவே இடம்பெற்றன.
என் தாய் தந்தைக்குப் பிறகு, அரசியல் தேவை​யில்லை என்று நான் ஒதுங்கியபோதும் மூன்று ஆண்டுகளுக்குப் பின் அரசியலுக்குள் இழுத்து வரப்​பட்டேன். அப்போதே என்னுடன் இந்த வம்சஆட்சி முடிவுறும் என்று கூறினேன். என் பிள்ளைகளை அரசியலுக்குக்கொண்டு வர எனக்கு விருப்பமில்லை. வம்ச அரசியல், எல்லாவற்றையும் ஒரு குடும்பத்துக்குள் அபகரிக்க இடமளிக்கிறது.
இலங்கையின் இப்போதைய ஜனாதிபதி மிகப் பெரிய ஊழல்களை செய்துள்ளார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் அரசாங்கப் பதவிகளில் உள்ளனர். நான்கு சகோதரர்கள் அமைச்சரவையில் இருக்கின்றனர். அவர்களின் பிள்ளைகள் நாடாளுமன்றத்தில் பதவி வகிக்கின்றனர். இந்தமுறையில் இங்கு தீமைகளே அதிகம் நடக்கிறது'' என்று அவர் கூறி இருக்கும் உண்மை யோசிக்கத்தக்கது.. குறிப்பாக ராஜபக்ச.
அன்று மாலை மீண்டும் கிளிநொச்சிக்குத் திரும்பினேன்.
அடுத்த நாள் காலை, அதே புதுக்குடியிருப்புப் பகுதிக்குத்தான் பயணம் என்றாலும் செல்லக்கூடியது புலிகள் வலுவாக நிலை கொண்டிருந்த காட்டுக்கு. அந்தக்காட்டில்தான் பிரபாகரனின் நிலத்தடி வீடு உள்ளது. 'நீங்கள் செல்வது இப்போது சுற்றுலா தலமாக உள்ள பகுதிகள் என்பதால் நீங்கள் தனியாகச் செல்லலாம்.
ஆனால், யாரிடமும் எதையும் பேச வேண்டாம். பேருந்திலிருந்து இறங்கியதும் ஆட்டோ பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று எனக்குச் சொல்லப்பட்டு இருந்தது. புதுக்குடியிருப்பில் இறங்கியதும் ஆட்டோ பிடித்துக் கிளம்பினேன்.
நகரைக் கடந்து மண்பாதையில் ஆட்டோ சென்றது. மீண்டும் காட்டுக்குள் ஒரு பாதை. அந்தப் பாதை ஓரங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி இன்னமும் நடக்கிறது. அடுக்கடுக்காய் பதுங்குக் குழிகளோடு காவல் அரண்கள். ஆறு அடுக்கு பாதுகாப்பு அரண்கள் உள்ளதை இராணுவம் கண்டறிந்ததாக ஆட்டோ ஓட்டுநர் சொன்னார். '
இந்தக் காட்டுப்பாதையின் ஒரு கிலோ மீட்டருக்கு முன்னால்தான் மக்கள் குடியிருந்தனர். ஆனால் புதுக்குடியிருப்பில் வாழ்ந்த மக்களுக்கோ, நகரில் வாழ்ந்த எங்களுக்கோ இப்படி ஒரு வீடு இருந்தது தெரியாது.
முன்பு இது ஒத்தையடிப் பாதையாகப் புதர் மண்டிக் கிடக்கும். ஆனால், இப்போது இராணுவம் வந்து பாதையை அகலப்படுத்தி விட்டது'' என்று சொல்லியபடியே ஆட்டோவை ஓட்டினார்.
பிரபாகரன் இருந்த வீடு நெருங்கிக்கொண்டு இருந்தது.
ஊடறுத்துப் பாயும்...
ஜூனியர் விகடன்
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam08_01
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam08_02
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam08_03
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam08_04
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 09

Post by logu Sun Aug 11, 2013 5:58 pm

பிரபாகரனின் வன வீடு, உளவுநோக்கிகளின் (ரேடார்) கண்களுக்கே தென்படாத நிழல் பகுதியாக இருந்தது. புதுக்குடியிருப்பு நகரில் இருந்து ஒட்டுசுட்டானுக்குச் செல்லும் வழியே உள்ள காட்டிலேதான் இந்த வீடு இருந்தது.
வரி உடுப்பின் கிழிசல்கள் பசுமைப் போர்வைபோல் வீட்டின் காற்றுவெளிகளில் மூடப்பட்டு உள்ளது. இந்த வனமும் போருக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு இலங்கை இராணுவம் கொடுத்துள்ள பெயர்: 'தீவிரவாதியின் நிலத்தடி மறைவிடம்’. (Terrorist Under Ground Hideout) இந்த அறிவிப்புப் பலகை அந்த இடத்தில் பளிச்சிடுகிறது.
கிடைத்த தகவல்படி முள்ளிவாய்க்காலுக்கு முன்னான தீவிரவாதத் தலைவர்களின் குடும்பத்தின் இருப்பு இங்குதான் இருந்தது. புலனாய்வுப் பிரிவின் தகவல்படி ஒட்டுசுட்டான், விசுவமடு பகுதிகளை இலங்கை இராணுவம் கைப்பற்றியதற்குப் பின் தலைவர் இவ்விடத்தைக் காலி செய்து​விட்​டார் என்றும் அங்கு எழுதப்பட்டு உள்ளது.
இடமும் வலமும் துவக்கு மண்ணை நோக்கி வணங்குவதுபோல் நிற்க, ஈழ வரைபடத்தின் நடுகில் மெழுகு​வர்த்தி எரிவதுபோல் முன் அரண் கம்பிகளால் வடிவமைக்கப்பட்ட குடில் ஒன்று இருந்தது. வீட்டின் நுழைவாயிலுக்கு முன்னே இருக்கிற இந்தக் குடில்தான் பிரபாகரன், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இடம்.

மரக்குச்சிகளில் அமர்விடம், மரங்களின் அடர்த்திகள் இடையே புகுந்து வரும் ஒளிக்கீற்றுகள், இயற்கையை சீர்குலைக்காத கட்டமைப்பு, மரங்களோடு ஒன்றிய முள்வேலிகள் என அந்த வீட்டின் புவியியல் அமைப்பு அவ்வளவு கச்சிதமானது.
வீட்டைச் சுற்றியுள்ள மூன்றடுக்கு முள்வேலிகளை மீறி உள் காட்டுப்பகுதியில் இருந்து இன்று நகர்ந்தாலும்கூட இந்த வீட்டை அடைய முடியாது என்றார் ஆட்டோ ஓட்டுநர்.
சிறப்புக் காவல் அரணோடு வீட்டின் முகப்பு. உள்ளே நுழைய சாதாரண வீடுபோலதான் தெரிந்தது. 'அங்குள்ள ஒரு கதவைத் திறந்தால், மேல் இருந்து கீழே உள்ள மூன்று மாடிகளுக்குச் செல்லலாம்’ என்றார் ஓட்டுநர்.
சிங்களவர்களுக்கு இராணுவம் வீட்டின் அறிமுகத்தை கொடுத்துக் கொண்டிருக்க... திறந்தே வைக்கப்பட்டு இருக்கும் கதவின் வழியாக நுழைந்தோம்.
கீழே இறங்கும் படிகள் ஓரம் உள்ள சுவர்கள் துப்பாக்கிக் குண்டுகளால் துளை போடப்பட்டு இருந்தன. முதல் மாடி நுழைவில் உள்ள கதவு மரத்தால் ஆனதாகவும், இரண்டாவது மாடி நுழைவில் உள்ள கதவு இரும்பால் ஆனதாகவும், மூன்றாவது மாடியில் உள்ள கதவு கடும் இரும்பால் ஆனதாகவும் இருந்தன.
தரையில் இருந்து கீழே செல்லச் செல்ல, சுவாசிக்க சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஏனெனில், சுவாசிக்க ஏதுவாக வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதன வசதிகள் அனைத்தும் இராணுவத்தின் கைப்பற்றலுக்குப் பின் அகற்றப்பட்டு விட்டன.
இரண்டாவது, மூன்றாவது மாடிகளில் இருந்து நேரடியாகத் தப்பி மேல் வர சுரங்கப் பாதைகளும் இருந்தன. நடவடிக்கை அறை, உரையாடல் கூடம், பிரபாகரன் அறை என சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டு இருந்தன. வீட்டைச் சுற்றி துப்பாக்கிப் பயிற்சி இடம், ஜெனரேட்டர் அறை, சமையல் அறை, தண்ணீர்தொட்டி, நிலத்தடி வாகன நிறுத்துமிடம் என சகலமும் இருந்தன.
இலங்கையில் இப்படி ஒரு வீடு வேறு எங்கும் இல்லையாம்’ என்றும், 'ஜப்பான் முறைப்படி கட்டப்பட்ட வீடு’ என்றும் சிங்களவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
புலிகள் இருந்தபோது, இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்காக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பகிரப்பட்டது. புலிகள் நினைத்து இருந்தால் காட்டுக்குள்ளே மின்சார இணைப்புகளைக் கொண்டுவந்து இருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் ஜெனரேட்டரைத்தான் மின் தேவைக்குப் பயன்படுத்தி உள்ளனர்’ என்றார் ஓட்டுநர்.
சிங்களவர்களின் முக்கியமான சுற்றுலாத்தலமாக இதுதான் இப்போது இருக்கிறது.
பிரபாகரன் வீட்டைவிட்டு வெளியே வந்து திரும்பும் முனையில், இராணுவத்தால் கடைசி நேரத்தில் அழிக்கப்பட்ட புலிகளின் இரும்புக் கவச வாகனம் வெற்றி அறிவிப்போடு காட்சிப் பொருளாக உருக்குலைந்து கிடந்தது.
அடுத்து, இரணப்பாலை காட்டுப் பகுதியில் இருந்த புலிகளின் நீச்சல் குளத்தை நோக்கி புதுமாத்தளன் ஊடாகச் சென்றோம். இடையில் இடிந்தும் உடைந்தும் கிடைக்கும் பள்ளிகளைப் பார்க்கும் போது மூத்த போராளி கூறிய போர்க்கால சம்பவம் ஒன்று நினைவில் சிறைப்பட்டது.
முள்ளிவாய்க்கால்ல ஒரு பள்ளிக்கூடத்தைதான் ஹோஸ்பிட்டலாக வைச்சிருந்தாங்க. என்னோடு இருந்த பொடியனோட மனைவி காயப்பட்டுட்டா. உடனே அவங்களை இந்தப் பள்ளிக்கூட ஹோஸ்பிட்டலுக்குதான் கொண்டுபோனம். அவளுக்கு வயத்துல காயம். கர்ப்பிணியா இருந்தவ.
டாக்டர்லாம் பங்கர்க்குள்ள இருந்தாங்க. நான் சொன்னன்... 'ஒரு தடவ வந்து பாருங்க’னு. டாக்டர் வரல. 'நீங்க போங்க’ என்றார். நான் எப்படியாவது காட்ட​​ணோம்னு சொல்ல, அவர் டீ குடிச்சுக்கொண்டே 'நீங்க போங்க வாரன்’ என்றார்.
அதுக்குள்ள அப்பிள்ளை செத்துடுச்சு. அந்தப் பிள்ள செத்து ஒரு நிமிஷத்துக்குள்ள டாக்டர் இருந்த பங்கர்குள்ள செல் விழுந்து, அவங்க குடும்பத்தோட இறந்து போனாங்க. நான் சொன்னதைக் கேட்டு அவர் வந்திருந்தா, தப்பி இருக்கலாமோ என்று தெரியல. அவரும் பயத்துல பங்கர்ல இருந்துட்டார்.
செத்த பிள்ள பேர் தமிழ்கவி. இயக்கத்தில் போராளியா இருந்த பெண்'' என்றார். பள்ளிக்கூடங்களைப் பார்த்தபோது இந்தச் சம்பவம்தான் எனக்கு ஞாபகம் வந்தது.

இறுதி நேரத்தில் மருத்துவ வசதி இன்றி மருத்துவமனையாக மாறிய பள்ளிக்கூடத்தையும் அம்புலன்ஸ் வான்களையும் இராணுவம் குறிவைத்துத் தாக்கியதன் வெளிப்பாடுதான் இந்தச் சம்பவம்.
இந்தக் கதைகளைச் சொல்ல முடியாமல் அமைதியாய் நிற்கின்றன அந்தக் கட்டடங்கள்.
ஆட்டோ ஓட்டுநர், தன்னுடைய அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
புதுக்குடியிருப்பை இயக்கம் தன் கட்டுப்பாட்டுல வெச்சிருந்த காலத்தில், நான் மளிகைக் கடை வெச்சிருந்தன். கடைப் பொருட்களை கொழும்புல இருந்து வாங்கி வந்தா, ஓமந்தை எல்லையில இயக்கத்துக்கு வரி கட்டணும். மறுபடியும் கடைக்குக் கொண்டுவந்த பிறகும் வரி கட்டணும். வரி விதிப்பு எல்லாவற்றுக்கும் அதிகம்.
ஆனா, இயக்கக் காலத்துல களவு பயம் இல்லை. களவு எடுத்தவன் பிடிபட்டால், தண்டனை பயங்கரமானதாக இருக்கும். களவு நடந்தால் 24 மணி நேரத்துக்குள்ள களவு எடுத்தவன் சிக்கிடுவான். ஆனா, இன்னைக்கு பொலீஸுக்கு சாராயப் பாட்டிலும் காசும் தந்துட்டே களவு நடக்குது.
போலீஸுகிட்டயோ ஆமிக்கிட்டயோ களவு போச்சுனு சொன்னா, எங்களைத்தான் கடுமையா விசாரிக்கிறாங்க. இயக்கக் காலத்துல சட்டம்னா எழுத்துல இல்ல, நடப்பு வாழ்க்கையில இருந்துச்சி. ஆனா, இன்னைக்கு அப்படி இல்லை'' என்று சொல்லிக் கொண்டே வந்தார்.
அதற்குள் காட்டுக்குள் உள்ள புலிகளின் நீச்சல் குளத்தை வந்தடைந்தோம். 2001-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீச்சல் குளம் 83 அடி நீளமும் 22 அடி ஆழமும் கொண்டது.
நமக்குத் தகவல் கொடுத்தவர்களின் கூற்றுப்படி, இது கடற்புலிகளின் பயற்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இலங்கை கடற்படை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தும் கடற்புலிகளும் இங்குதான் முழுப் பயிற்சி எடுப்பார்கள்'' என்ற இராணுவத் தரப்பு விளக்கம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.
அந்தக் காட்டுக்குள் அமைந்திருக்கும் நீச்சல் குளத்துக்குள் ஒரு புத்தக் கோயில் இப்போது கட்டப்பட்டு உள்ளது. அரச மரமும் மண்ணில் ஊனப்பட்டு உள்ளது. ஆளே இல்லாத காட்டில் எதுக்கு புத்த கோயில்னு புலம்பினார் ஓட்டுநர்.
புத்தக் கோயில்கள் அனைத்தும் சிங்களத்தின் வெற்றியை குறிப்பதாகவும், தமிழர்களின் தோல்வியை கேலிப்படுத்துவதாகவும் தான் விளங்கின.
நாங்கள் கிளம்பியபோது வந்த ஆமி கப் போட்ட ஒரு ஆள், 'எதுக்குப் பெரிய கமராவில் படம் எடுக்கிறீர்கள்?’ என்றார். நான் ஆங்கிலத்திலேயே பேச, மொழித் தடுமாற்றத்தில் 'ஓகே ஹரே’ (போகலாம்) என்று சொன்னார். ஆங்கி​லத்தில் பேசினால், எளிதில் தப்பிக்கலாம் என்று தெரிந்தது.
அடுத்துச் சென்றது, கடற்புலிகளின் தளபதி சூசை வீடு.
சுற்றியும் ஈ மொய்ப்பது போல பொம்மைக் கடைகளும் தின்பண்டக் கடைகளும் நிறைந்து இருந்தன. உள்ளே நுழையும்போது ஒருவர் இடையில் வந்து, 'எப்படி இருக்கீங்க?’ என்றார்.
நீங்கள் யார்னு தெரியலயே?’ என்றேன். 'தம்பி, நான் உங்கள ரெண்டு நாளைக்கு முன்னாடி முல்லைத்தீவு பஸ்ல பாத்தன். நீங்க பக்கத்துல ஒருத்தர்ட்ட பேசிட்டு இருந்திங்க. தமிழ்நாடு போல இருந்துச்சு. எப்படியும் இங்க வருவீங்க... பேசிக்கலாம்னு இருந்தேன். நினைச்சது​போலவே வந்திட்டங்க. நானும் இங்கதான் கடை போட்டிருக்கன் என்றார்.
புன்னகைக்க... மேலும் தொடர்ந்தவர், ''நானும் தமிழ்நாட்டுல மதுரைதான் தம்பி. மலையகத்துல இருந்து எங்கள அடிச்சுத் துரத்தன காலத்துல இந்தப் பக்கம் வந்துட்டம். எங்க சொந்தக்காரங்க நிறையப் பேர் சேலம், திருச்சி​யிலலாம் இப்பவும் இருக்காங்க'' என்றார். நம்மவர் யாராவது வருவார்களா, அவர்களிடம் ஊரைப்பற்றிப் பேசலாமா என்ற ஏக்கம் உள்ள மனிதரின் குரலாக அது இருந்தது.


அவரிடம் பேசிவிட்டு சூசையின் வீட்டுக்குள் நுழைந்தோம். வீட்டின் முகப்பில் 'எதிரிகளே நமது நல்ல ஆசிரியர்கள்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.
உள் அறையில் ஓர் கதவு பீரோ போல் இருந்தது. அதுதான் பங்கர்க்குச் செல்லும் வழி. அதைப் பார்க்க வந்த ஒரு சிங்கள மூதாட்டி தவறி விழுந்து இறந்து விட்டாராம். அதனால், இப்போது அதை மூடி விட்டார்களாம்.
போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது தமிழகத்​துக்குப் பேசிய சூசை, 'கடைசி மணித்தியாலங்கள் தாக்குதல் நடந்துகொண்டு இருக்கு. நிறைய சனம் செத்துக்கொண்டு இருக்கு. இரண்டு கி.மீ. அகலத் துண்டுக்குள்ள கடுமையான யுத்தம் நடந்துகொண்டு இருக்கு. எல்லா இடமும் பிணக் குவியல்கள்தான்.
கே.பி.பத்மநாபன் ஊடாக ஜெனிவாவோடு தொடர்பு கொண்டு வெள்ளவாய்க்கால் வழியாக காயப்பட்டுக்கொண்டு இருந்த மக்களை எடுக்கச் சொன்னம். ஆனா, எடுக்கல. அந்த மொத்தச் சனமும் இப்ப செத்திட்டுது.
நாங்களும் இராணுவத்த எதிர்த்து சண்ட பிடிச்சுக்கொண்டு இருக்கம். கடைசி வரை நாங்கள் அடிபணிய மாட்டம். ஆனா, எங்க மக்கள் செத்துக்கொண்டு இருக்கினம்.
சர்வதேசம் திரும்பிப் பாக்கையில. மக்கள் எல்லாம் பங்கர்குள்ள இருக்க வெச்சிருக்கனம். சுத்தி வளைக்கப்பட்ட பங்கர்களில் மக்கள் இருக்கினம்.
மக்களை வெளியில எடுக்கச் சொல்லி தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கம்’ என்று சொல்ல, எதிர் முனையில் இருந்தவர் அழ... 'அழாதடா, தமிழன் அழக் கூடாது. வெல்லுவம் வெல்லுவம்’ என்ற குரல் என்னுடைய ஞாபகத்துக்கு வந்தது.
அந்த வீட்டுக்குள் சூசையின் சூரிய முகம் பளிச்சிடுவதாகவே உணர முடிந்தது. மக்களை பங்கர்குள் இருக்க வெச்சிருக்கம் என்று சூசை குறிப்பிட்ட மக்களைத்தான் விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாக போரில் பயன்படுத்தினர் என்று சர்வ​தேசமும் ஐ.நா-வும் குறிப்பிடுவது.
இருள் கவ்விக்கொண்டு இருந்த வேளையில் புதுக்​குடியிருப்பில் இருந்து கிளிநொச்சிக்குச் செல்கிறேன்.
கந்தசாமி கோயில் அருகே ஒரு காலத்தில் புலிகளின் சமாதானச் செயலகம் இருந்தது. அதைக் கடந்து விரைகிறேன்.
அடுத்த நாள் காலை இரணைமடு குளத்தை நோக்கி இரு சக்கர வாகனத்தில் உள்ளூர் நண்பரோடு நகர்ந்தேன். அந்த இரணைமடுவில்தான் அன்டன் பாலசிங்கம்...
ஊடறுத்துப் பாயும்.......
ஜூனியர் விகடன்
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam9_01
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam9_02
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam9_03
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam9_04
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam9_05
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 10

Post by logu Sun Aug 11, 2013 6:00 pm

ஆயுதப் போராட்டம் மெல்ல அடங்கி சமாதானச் சம்மதங்களில் அகிம்சையை ஈழம் பின்பற்றிய காலம். அன்றுதான் உயிருக்கும் உடலுக்கும் இடையேயான போரில் இருந்து மீண்டு, ஈழத்துக்குத் திரும்பினார் அன்டன் பாலசிங்கம். அவர் வந்து இறங்கிய இடம், இரணைமடு. அந்த இடத்தில் நான் இப்போது நிற்கிறேன்.
பாலசிங்கத்தோடு அவரது மனைவி அடேல் பாலசிங்கமும் கொழும்பு நோர்வே தூதரகத்தைச் சேர்ந்த தோமஸும் வந்திருக்க, அவர்களை வரவேற்க பிரபாகரன், அவரது மனைவி மதி​வதனி, சூசை, நடேசன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மூத்த புலி உறுப்பினர்களும் வந்திருந்தனர்.
பாலசிங்கம் மீது பிரபாகரன் எத்தகைய பாசத்தையும் மரியாதையையும் வைத்துள்ளார் என்பதை அடையாளப்படுத்தும் புகைப்படங்கள் அவை. புலிகளின் இணையதளங்கள் இவற்றை அந்தக்காலத்தில் பெருமையாக வெளியிட்டன. அத்தகைய படங்களை இன்று, சிங்கள அரசே காட்சிப்படுத்தி இந்த இடத்தில் வைத்துள்ளது.
இரணைமடு என்ற இடத்துக்கு என்ன பெருமை தெரியுமா? பாலசிங்கம் வந்து இறங்கிய இடம், பிரபாகரன் அவரை வரவேற்ற இடம் என்பதை பெருமைக்குரிய வரலாற்றுச் சம்பவமாக அவர்களே சொல்லி இருக்கிறார்கள்.
1998-ம் ஆண்டின் இறுதியில் கடுமையான சிறுநீரகப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டு இருந்தார் பாலசிங்கம். அவருக்குச் சிகிச்சை அளிக்க வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல நோர்வே அரசாங்கமும் செஞ்சிலுவைச் சங்கமும் முயற்சித்தது.
ஆனால், அப்போதைய சந்திரிகா அரசு கடுமையான நிபந்தனைகளைப் புலிகளுக்கு முன்வைக்க, பாலசிங்கத்தையும் அவரது மனைவியையும் கடல் வழியாக தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன்.
அங்கிருந்து தன் இங்கிலாந்து கடவுச்சீட்டின் மூலம் லண்டன் சென்றார். 'தாயகத் தேசத்தில் மீண்டும் நான், அதுவும் உயிரோடு என்ற நிலையில் அடைந்த மகிழ்வுக்கு அளவே இல்லை’ என்று தன்னுடைய புத்தகத்தில் சொல்லும் அளவுக்கு, அப்போது பாலசிங்கம் நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலைமையில் இருந்தார்.
அவர் வெளிநாடுகளில் இருந்த மூன்றாண்டுகளில் சந்திரிகா ஆட்சியில் இருந்து ரணில் விக்கரமசிங்க ஆட்​சிக்கு இலங்கை மாறி இருந்தது. சமாதானக் காலமும் நடைமுறையில் இருந்தது. ஆனாலும், பாலசிங்கம் கொழும்பு வழியாக வருவதை புலிகள் விரும்பவில்லை.
ஏனென்றால், சிங்கள அரசு மீது அவர்களுக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை. அதனால், நோர்​வேயின் ஏற்பாட்டில் லண்டனில் இருந்து மாலைதீவுக்கு வந்து, அங்கிருந்து மாலைதீவின் கடல் விமானத்தில் இரணைமடு குளத்தில் வந்திறங்கினார். அந்த இரணைமடு குளம் இப்போதும் அப்படியே இருக்கிறது.
கிளிநொச்சியின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் குளம் அது. இதன் அருகே காடு தென்படுகிறது. அங்குதான் புலிகள் 1993-ம் ஆண்டில் விமான ஓடுதளத்தை அமைத்தனர். அது இப்போது இராணுவ வசம். அதைப்பற்றி கூறிய நண்பர், ''சீரமைப்பை காரணம் காட்டி நீர்த் தேக்க அளவை இராணுவம் குறைச்சிருச்சு.
கிளிநொச்சிக்கே நீர்த் தேவை இருக்கு. அதைப் பூர்த்தி செய்யாம, யாழ்ப்பாண குடிநீர்த் தேவைக்கு இங்கே இருந்து நீர் கொண்டு போறதா அரசு சொல்லி இருக்கு. இது யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் சண்டை மூட்டிவிடும் வேல. இன்னுமும் இரணைமடு குளத்தைச் சுத்தியுள்ள இடங்கள இராணுவம் உயர் பாதுகாப்பு வளையங்களாகதான் வச்சிருக்கு'' என்றார்.
நான் சென்றிருந்தபோது குளத்தின் நீர்மட்டம் மிகக் குறைவாகத்தான் இருந்தது. அந்தக் குளம் அருகே ஒரு இராணுவச் சிற்றுண்டி, புத்த கோயில் ஆகியவை இருந்தன. குளத்தின் மேம்பாட்டு அலுவலகம் எல்லாம் இராணுவ அலுவலகமாக மாறி இருந்தது. துப்பாக்கி ஏந்திய ஆமியின் ஒரு ஆள், வந்து போகிறவர்களை கவனித்துக்கொண்டு மட்டும் இருக்கிறார்.
இரணைமடு குளத்தைப் பார்த்துவிட்டு நண்பரும் நானும் கிளம்பினோம். அங்கே வரும் வழியில் இராணுவ முகாம்கள் இருந்தன. அதன் முன் அரண்களில் புலிகளின் பீரங்கிகள், ஆட்லறி தாக்கிகள் எல்லாம் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால், அங்கு எல்லாம் நின்று பார்க்கக் கூடாது; போகிற போக்கில் பார்வையில் பதிவு செய்துகொள்ள வேண்டியதுதான்.
இராணுவத்தின் கடைநிலை ஆட்கள் பனங்கன்றுகளை ஊன்றிக்கொண்டு இருந்தனர். போரில் பல ஆண்டுகள் பழைமை கொண்ட பனைமரங்களை குண்டுகளாலும் செல்களாலும் அழித்த இராணுவம், 'தேசிய மர நடுகைத் திட்டத்தின்’ கீழ் பனங்கன்றுகளை நடுகிறது. இது சிங்களத்தில் 'தெயட செவன’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கென்று பனை அபிவிருத்திச் சபையும் அமைக்கப்பட்டு உள்ளது.
இது, அழித்த மரங்களை நடும் திட்டமல்ல இதன் நோக்கம் பனை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு சந்தைப்படுத்துவதுதான். இதைப்பற்றி கொழும்பில் இருக்கும் நண்பர் ஒரு நிகழ்வை குறிப்பிட்டு இருந்தார். 'பனை மரத்தை சிங்கள தேசிய அடையாளமாகக் காட்டுவதற்கு கொழும்பு கடற்கரையில் முழு பனைமரத்தை அப்படியே கொண்டுவந்து வைத்தனர். அது இறந்து விட்டது.
இப்போது முழு தென்னை மரத்தை கொண்டு வந்து வைத்து உள்ளனர்’ என்றார். அப்படியான மரங்களின் பிடிப்புக்கு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளதை நானே கொழும்பில் கண்டேன். அந்த மரங்களும் காய்ந்து சாகும் நிலைமையில்தான் இருந்தன. ராஜபக்ச அரசுக்கு தேவை எல்லாம், 'இலங்கை மண்ணில் தன் அரசு நினைப்பதைதான் இயற்கையுமே செய்தாக வேண்டும்’ என்பதுதான்.
இப்படியான சம்பவங்களை நானும் நண்பரும் பேசிக்கொண்டே வர, இரணைமடு சந்தி வந்தது. அங்கும் இராணுவத்தின் வெற்றிச் சின்னம் ஒன்று உள்ளது. அந்த வெற்றிச் சின்னத்தின் சுவரில் குண்டு பாய்ந்து சுவர் பிளந்துள்ளதைப் போன்றும், பிளந்துள்ள இடுக்கில் சிங்கள தேசிய மலரான 'நீல அல்லி’ உதித்தது போன்றும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்தியப் படைகளை எதிர்த்துப் போரிட்ட மாலதி 1987-ல் மரணம் அடைந்தார். இவரே புலிகளின் முதல் பெண் மாவீரர். மாலதியின் நினைவாக இரணைமடுச் சந்தியில் ஒரு நினைவிடத்தை புலிகள் அமைத்து இருந்தனர். அந்த நினைவிடத்தைப் பற்றி நண்பரிடம் கேட்டேன். அவர் காட்டிய இடத்தில், அப்படி ஒரு நினைவிடம் இருந்ததற்கான அடையாளமே இல்லை.
அந்தச் சந்தியில் இருந்து சாலையைக் கடக்க... பொலிஸ்காரர் நிறுத்தினார். அப்போதுதான் கவனித்தேன், தலைக்கவசத்தை அணியாமல் நான் கையில் வைத்திருந்ததை. ஆம்! இலங்கைச் சட்டப்படி இரு சக்கர வாகனத்தில் பயணிக்க கூடிய இருவருமே தலைக்கவசம் அணிய வேண்டும். அரை மணி நேரம் நிற்க வைத்து, பிறகு போக அனுமதித்தார் அவர்.
வண்டியில் போகும்போது நண்பர், 'தமிழீழ வாகனச் சட்டம்’ பற்றி கூறினார். ''இலங்கைச் சட்டப்படி 'இவ்வளவு கி.மீ. வேகம்’ என்ற கட்டுப்பாடு உள்ள இடத்தில் எவ்வளவு வேகம் போனாலும் ஒரே அபராதம்தான். ஆனால், புலிகளிடம் அப்படி இல்லை, ஒவ்வொரு கி.மீ. வேக அதிகரிப்புக்கும் தனித் தனியாக அபராதம் விதிப்பார்கள்.
ஒரு முறை இலங்கை நீதிபதி ஒருவர் குடித்துவிட்டு அதிவேகத்தில் வாகனத்தை செலுத்தியுள்ளார். அந்த வாகனத்தை புலிகளின் வாகனப் பிரிவு பொலிஸார் நிறுத்தி அபராதம் விதித்துள்ளனர்.
உடனே அவர், தமிழ்ச்செல்வனுக்கு அழைத்து முறையிட, 'நானே அவ்விடத்தில் வேக​மாகச் சென்றதற்காக அபராதம் செலுத்தி உள்ளேன்’ என்று கூறியுள்ளார். நீதிபதி, 'கட்ட முடியாது’ என்று சொல்ல... 'இல்லை என்றால், நீங்கள் போக முடியாது’ என்று கூறியுள்ளார். 'உங்களிடம் பணம் இல்லை என்று சொல்லுங்கள். நான் தருகிறேன்.
ஆனால், கட்ட முடியாது என்று பிடிவாதம் பிடித்தால், நீங்கள் போக முடியாது. நான் இதில் தலை​யிட முடியாது’ என்று கூறிவிட்டார் தமிழ்ச்செல்வன். பணத்தைச் செலுத்திய பிறகுதான் சென்றுள்ளார் நீதிபதி. இந்தக் கடுப்பில் அதே நீதிபதி ஒரு வழக்கில் பிரபாகரனுக்கு கடுமையான தண்டனைகள் விதித்துள்ளார்’ என்று சொல்லிச் சிரித்தார் நண்பர்.
அதற்குள், நண்பர் ஒருவரின் வீட்டை அடைந்​தோம். நல விசாரிப்புகளுக்குப் பிறகு இப்போதைய நிலைமைகளை அவர் குறிப்பிட்டார். ''எல்லோரும் சமாதானப் போர், பொருளாதாரப் போர் என்று எது எதோ சொல்றாங்கள். ஆனால், உண்மையில் இங்கு நடந்துகொண்டு இருப்பது கலாசாரப் போர். அனுராதபுரம் என்பது சிங்கள கலாசார நகரம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது.
இப்போ நீங்க வந்த சந்திப் பக்கம் போருக்கு முன்ன 'பாண்டியன் ஐஸ்கிரீம் கடை’ இருந்தது. அவ்விடம் இன்னும் சில ஆண்டுகளில் சிங்கள கலாசார இடமாக மாறும். அனுராதபுரத்துல இருந்து கற்களை இங்க கொண்டுவந்து போட்டிருக்காங்க. அதில் கழிவு நீர ஊத்தறது என் கண்கூட பாத்திருக்கன். கழிவு நீர ஊற்ற ஊற்ற அது பழைய கல்போல ஆகும்.
அதன் பின் ஆய்வாளர்களை அழைத்து அனுராதபுர கல்லையும், இரணைமடு சந்தியில கொண்டு வந்து போட்ட கல்லையும் ஒப்பிடுவாங்க. அதன் தொடர்ச்சி இங்கிருக்குனு சொல்லி 'சிங்களத்தின் பூர்வீக நிலம்’னு நினைவிடம் கட்டுவாங்க'' என்றார்.
தமிழ்ப் பகுதிகள் சிங்களத்தின் பூர்வீகம் என்ற அடையாளம் காட்டப்படுவதற்கு இவர் குறிப்பிட்டது​போல் பல வேலைகள் தமிழர் பகுதிகளில் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அதனால்தான் இராணுவத்தை தமிழர் பகுதிகளில் இருந்து விலக்க மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவிக்கிறது இலங்கை அரசு.
இப்போது நாங்கள் கனகபுரம் துயிலும் இல்லத்தை நோக்கி நகர்கிறோம். உடன் வந்திருந்தவர் ஒரு கவிஞர். ''பொதுவாகவே நவம்பர் மாத இறுதியில் துயிலும் இல்லங்களுக்குச் செல்லும் வீதிகள் கண்ணீரால் நனைக்கப்பட்டு இருக்கும். தமிழீழமே சோக கீதத்தை இசைத்துக் கொண்டு இருக்கும்.
போராளிகளை நினைவுகூரும் நினைவிடங்கள் ஈழத்தில் இருந்ததுபோல், எந்த நாடுகளின் விடுதலைப் போராட்டத்தின் முனைப்பிலுமே இருந்தது இல்லை. அப்படிப்பட்ட புலிகள், சிங்கள இராணுவத்தை நிராயுத பாணிகளாக பிடித்தால், ஒரு அடிகூட அடிக்க மாட்​டார்கள்.
இவ்வளவு ஏன், முள்ளிவாய்க்கால் முடிவுக்கு முன்னர்கூட, எட்டு சிங்கள இராணுவச் சிப்பாய்களை விடுதலை செய்தனர். ஆனால் இன்று மாவீரர் துயிலும் இடங்களை அடையாளம் இல்லாமல் ஆக்கி விட்டனர்'' என்ற அவர், தமிழில் மொழி பெயர்க்கப் பட்ட பாலஸ்தீன மாவீரர் பாடல் ஒன்றை நினைவு படுத்தினார்.
''ஓ! மரணித்த வீரனே... உன் சீருடைகளை எனக்குத் தா, உன் பாதணிகளை எனக்குத் தா, உன் ஆயுதங்​களை எனக்குத் தா, ..... எவருமே காணாத உன் இரு துளி கண்ணீரை... தப்பி ஓடும் உன் இருப்பை, தனித்து நிற்கும் தீர்மானத்தை உன் தோழன் இருக்கூராய் உண்டாடப்பட்டதனால் உன் துன்பம் என்னவென்று நான் அறிந்து​கொள்வதற்கு...'' என்று விடுதலைப் போரின் வலியை சொல்லும் அப்பாடலை நினைத்தவாறு மாவீரர் துயிலும் கல்லறைகளை நோக்கி நகர்கிறேன்.
ஊடறுத்துப் பாயும்..
ஜூனியர் விகடன்
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam10_01
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam10_02
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam10_03
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam10_04
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam10_05
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 11

Post by logu Sun Aug 11, 2013 6:02 pm

வந்தடைந்தோம், ஈழத்துக்காக உயிர் கொடுத்த​வர்களைப் புதைத்த மண்ணுக்கு!  மாவீரர்கள் புதைக்கப்பட்ட அந்த இடங்களில் இன்று எருக்கஞ் செடிகள் புதராக முளைத்திருந்தன.
நிராதரவாய் இருக்கும் அந்த மண்ணைப் பார்க்கும்போதே யாரையும் சோகம் அப்பிக்கொள்ளும். 'நடுகல்� என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடு​வதன் நீட்சிதான் 'மாவீரர் துயிலும் இல்லங்கள்�.
புலிகளின் முதல் மாவீரன் சங்கர்.
அவரின் மூச்சு அகன்றது நவம்பர் 27, 1982. நேரம் மாலை 6.05. அவர் சாவதற்கு முன் உச்ச​ரித்தது.. 'தம்பி... தம்பி� என்பதுதான். அந்த நாளைப் பற்றி பிரபாகரன் குறிப்பிடும்போது 'இறுதி வரை என் நினைவாக இருந்த சங்கரை எப்படி மறப்பேன்? அந்த நாளன்று நான் அதிகம் யாருடனும் பேசுவதில்லை.
மூன்று நேரமும் உணவு அருந்துவது இல்லை� எனக் குறிப்பிட்டார். அதன் அடையாளமாக 1989-ம் ஆண்டில் இருந்து நவம்பர் 27-ம் தேதியை மாவீரர் தினம் என்று அறி வித்தார் பிரபாகரன். அன்றைய தினம் மாலை 6.05-க்குக் கோயில்கள் எங்கும் மணிகள் ஒலிக்கும். பிரபாகரன் மாவீரர் தின உரையை வழங்குவார்.
தளபதிகள் முதல் சாதாரணப் போராளிகள் வரை எத்தனையோ பேர் இந்த மண்ணுக்காக இறந்துள்ளனர். இதில் அனைவருமே முக் கியமானவர்கள்தான். இவர் பெரியவர், இவர் சிறியவர் என்ற வேறுபாடு இல்லை. அந்த வேறுபாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அனைவருக்குமான தினமாக இது அமையும்� என்றார்.
அத்தகைய மாவீரர் கல்லறைகள் உள்ள இடம், ஈழத் தமிழ் மக்கள் எப்போதும் வணங்கும் கோயிலாக இருந்தது. இன்று, அவை முழுமையாகச் சிதைக்கப்​பட்டுவிட்டன. எங்களுக்காக உயிர ஈகம் செஞ்சவர்​களுக்குக்​கூட மரியாத செலுத்த முடியாத நிலைமையில​தான் இந்த மண்ணுல வாழறம். சிங்கள ராணுவம் தமிழ்ப் பகுதிகளை ஒவ்வொரு முறை கைப்பற்றும்போதும் துயிலும் இல்லங்கள் அழிக்கப்படும்.
புலிகளால் மீட்டு மீண்டும் சீரமைக்கப்படும். இப்போது மொத்த​மாக அழிக்கப்பட்டு விட்டது� என்று சொன்னார் நண்பர். அவர் குறிப்பிடுவதுபோல், ராணுவத்தின் கணக்குப்படி அத்தனை துயிலும் இல்லங்களும் இப்போது அழிக்கப்பட்டு விட்டன.
கிளிநொச்சியில் கனகபுரம், விசுவமடு, முழங்​காடு, யாழ்ப்பாணத்தில் சாட்டி தீவகம், கோப்பாய், எல்லங்குளம், உடுத்துறை, கொடிகாமம், முல்லைத்தீவில் முள்ளியவளை, அலம்பில், ஆலங்​குளம், வன்னிவளாங்குளம், ஜீவன்முகாம், டடிமுகாம், வவுனியாவில் ஈச்சங்குளம், மன்னாரில் பண்டிவிரிச்சான் திருகோணமலையில் ஆழங்குளம், தியாகவனம், பெரியகுளம், உப்பாறு, மட்டக்களப்பில் தாவை, தாண்டியடி, கல்லடி, மாவடி, அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு என அத்தனை மாவீரர் துயிலும் இல்லங்களின் சுவடுகளும் அழிக்கப்பட்டு விட்டன.
அனைத்து துயிலும் இல்லங்களின் நிலங்களும் இப் போது ராணுவச் சொத்து. பல பகுதிகளில் தங்கள் படைப் பிரிவுகளுக்கான நிரந்தரக் கட்டடத்தை இந்த நிலங்களில்தான் கட்டி இருக்கிறது ராணுவம். புலிகள் புதைக்கப்பட்ட இடத்தில் ராணுவம் நிலை நிலைநாட்டப்பட்டு விட்டது என்பதே உலகத்துக்குச் சொல்லும் செய்தி.
கனகபுரம் துயிலும் இல்லத்தின் எல்லைகளில் உடைந்த நடுகற்களும், இடித்து நொறுக்கப்பட்ட கற்களின் எச்சங்களும் ஆங்காங்கே கிடந்தன. அதை வேதனையோடு பார்த்தபடியே கிளம்பினேன். இந்த இடங்களைச் சுற்றி ராணுவக் கண்காணிப்பு உள்ளது.
உட்புறச் சாலையில் இருந்து 'ஏ-9� நெடுஞ்சாலையை அடைந்தேன். ராணுவத்தின் உட்புற முகாம்களை சாதாரணமாக அந்த வீதியில் காண முடிந்தது. விளையாட்டுக் கூடத்தின் கட்டுமான வேலையும் நடந்துகொண்டு இருந்தது. அங்கு ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டி உடைந்து கிடந்தது.
இந்தத் தொட்டிக்கு உள்ளும் பிரபாகரன் வாழ்ந்தார் என்று ஒரு கதை சொல்கிறது ராணுவம்� என்று நண்பர் கூறினார். ராணுவம் எறிகனையில் தாக்கி அழித்த அந்தத் தண்ணீர் தொட்டியையும் வெற்றிச் சின்னமாகவே வைத்துள்ளது. போர் வடுக்களின் அடையாளங்கள்தான், சிங்கள தேசத்தின் வெற்றிச் சின்னங்கள்.
அவர்களின் இந்தச் செயல்கள் வரலாற்றை அழித்தல் என்பதாக நீள்கிறது. என் உடனிருந்த நண்பர், புத்தகப் பிரியர். போரின்போது அவரும் கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு நகர்ந்தவர். அவரிடம் பொக்கிஷங்களாய் இருந்த 5,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் போரில் இழந்தவர். அவர் எனக்கு ஒரு சம்பவத்தை நினை வூட்டினார்.
முள்ளிவாய்க்காலின் இக்கட்டுக்​குள் சிக்கவைக்க ராணுவம் நகர்த்திக்கொண்டே வந்தபோது, வீடு வீடாய்ப் புகுந்த ராணுவத்தினர் புத்தகங்களை வெளியில் வீசி எரித்தனர். படங்களை எல்லாம் கொளுத்தினர். கிடைத்தவற்றை எல்லாம் சூறையாடினர்'' என்றார். அவர் சொன்னதைக் கேட் டபடியே கந்தசாமி கோயிலை நெருங்கி​னேன்.
தமிழ் மக்கள் தங்கள் குறையை மனதிலே வைத்துப் புலம்பும் இடமாக இருப்பவை இந்தக் கோயில் கள்தான். 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல� அந்தக் கோயில்களையும் விடவில்லை இலங்கை ராணுவம். இதுகுறித்து, கடந்த மார்ச் 2012-ல் 'இண்டர்நேஷனல் பாலிசி டைஜஸ்ட்� என்ற இணையதளம் 'சால்ட் ஆன் ஓல்ட் வவுண்ட்ஸ் (Salt on Old wounds) என்ற தலைப்பில் வடகிழக்கு மற்றும் மலையகங்களில் திட்ட​மிட்ட சிங்களமயமாக்கல்� என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிக்கையின்படி, தமிழர் பகுதிகளில் இருந்த 367 கோயில்கள் இடிக்கப்பட்டு உள்ளன. உயர் பாதுகாப்பு வளையங்களில் இருந்த கோயில்கள் இடிக்கப்பட்டு புத்த விகார்கள் கட்டப்பட்டுள்ளன. புத்த விகார்கள் அதிகரித்து இருப்பதற்கான ஆதாரங்கள் ஏ- 9 சாலையில் உள்ளன.
யாழ்ப்பாணத்தில் 208 கோயில்கள், திருகோண​மலையில் 17 கோயில்கள், மட்டக்களப்பில் 61 கோயில்​கள், அம்பாறையில் 11 கோயில்கள், கிளி நொச்சியில் 46 கோயில்கள், முல்லைத்தீவில் 6 கோயில்​கள், மன்னாரில் 6 கோயில்கள், வவுனியாவில் 12 கோயில்கள் என மொத்தம் 367 கோயில்கள் அழிக்கப்பட்டு உள்ளன.
மலையகப் பகுதி ரத்னபுராவில் சிவனொளி பாதமலை (அடம்ஸ் பீக்) என்ற தமிழர்களின் வரலாற்று பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது. 1900-ம் ஆண்டு முதல் இது இந்துக்களின் புனித ஸ்தலம். ஆனால், 1970 முதல் இந்தப் பகுதி சிங்கள தரப்புக்கு முக்கியமானதாக ஆக்கப்பட்டது.
இப்போது, அதன் பெயர் ஸ்ரீபாட. இப்போது இதை அரசாங்கம் புத்தர்களின் புனித ஸ்தலமாக அறிவித்து விட்டது. மலையின் அதிகார மேற்பார்வைகளையும் இப் போது புத்த பிக்குகளே கவனிக்கின்றனர்� என்ற தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது இன்டர்நேஷனல் பாலிசி டைஜஸ்ட்.
சமீபத்தில், இந்த மலைக்கு நாமல் ராஜபக்ஷே புனித ரத யாத்திரை சென்றதை சிங்கள அரசுசார் பத்திரிகைகள் புகழ்ந்தன. ராஜபக்ஷேவோ தமிழர் பகுதிகளில் இருந்த கோயில்களை இடித்துவிட்டு, திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்க வருகிறார், புத்த கயாவுக்குப் பாவம் கழுவ வருகிறார்.
மக்களை போர் சிதைத்து விட்டது, நான் பார்த்தவரை இந்தத் தலைமுறை நிச்சயம் மீள முடியாத நிலைமையில் உள்ளது'' என, வீட்டுக்கு வந்ததும் நண்பரிடம் சொன்னேன். 'இதோடு சாதியும் இங்கு தலை தூக்கத் தொடங்கி இருக்கிறது� என்ற வேதனைச் செய்தியைச் சொன்னார் அவர்.
புலிகள் காலத்தில் சாதியப் பாகுபாடுகள் பெரும்பாலும் இல்லை. ஒரு ஆள் இயக்கத்தில் சேருகிறார் என்றால், அவர் பெயர் முதலில் மாற் றப்படும். அது எந்த சாதி, எந்த மதத்தையும் குறிக்காது. அப்படியான பிரபாகரன் தன் மகனுக்கு சார்லஸ் ஆன்டனி என்று பெயர் சூட்டினார்.
அது, 1983-ல் வீரச் சாவடைந்த போராளி சார்லஸ் ஆன்டனி நினைவாக வைத்தது. ஆனால், அதை வைத்து உங்கள் நாட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கம், புலிகளை கிறிஸ்தவ ஆதரவு இயக்கம் என்று வகுத்துக் கொண்டது. அதையே இன்று ராஜபக்ஷேவும் பயன்படுத்திக் கொள்கிறார்.
2009-க்குப் பிறகு, சாதிய ரீதியான கட்டமைப்புகள் மீண்டும் துளிர்க்கத் தொடங்கி உள்ளன. அதைக் கட்டுப்படுத்த சாதிக்கு எதிரான அமைப்போ, ஆட்களோ இங்கு இல்லை� என்று வேதனைப்பட்டார்.
கிளிநொச்சியை விட்டு வவுனியா ஊடாக மன்னார் நோக்கிக் கிளம்பினேன். ஆங்கிலேயர் காலத்தில் மலையகத்துக்கு சென்றால், 'உழைப்புக்கு மேல் ஊதியம் கிடைக்கும்� என்று ஏமாற்றப்பட்டு இழுத்து வரப்பட்ட தமிழகத் தமிழர்கள், இந்த வழியேதான் ஏக்கங்களை சுமந்தபடியே தோட்டத் தொழிலுக்காக கங்காணிகளின் பின்னால் நடந்து சென்றனர்.
ஊடறுத்துப் பாயும்...
ஜூனியர் விகடன்
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  P18
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  P19
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty புலித்தடம் தேடி...!இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 12

Post by logu Sun Aug 11, 2013 6:03 pm

சிங்கள ஆண் தமிழ் பெண் திருமணங்கள். இதுவே, மிச்சம் மீதி ஈழத் தமிழ் சமூகத்தின் அடையாளங்களையும் அழிப்பதற்கான புதிய ஆயுதம் என்பதை பயணத்தில் அறிய முடிந்தது.
கிழக்கு திமோர் பழங்குடிகளை அழிக்க நினைத்த இந்தோனேசிய இராணுவம், கருத்தடை ஊசிகளை திருமணம் ஆகாத பழங்குடி இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் போட்டது. அந்த வகையான சிந்தனைதான் இதுவும்.
'தமிழ்ப் பெண்களை சிங்கள இராணுவத்தில் சேர்ப்பதும், இராணுவத்தினர் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்வதும் ஆகிய இரண்டு வழிகளின் மூலமாக இதனை நிகழ்த்திக் காட்ட நினைக்கிறார்கள்’ என்று பத்திரிகையாள நண்பர் ஒருவர் கூறினார். இதை இன நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் நடத்துகிறது இராணுவம்.
தமிழ்ப் பெண்களை சிங்கள இராணுவத்தின் இச்சைக்கு இரையாக்கி, அதன் மூலம் அவர்களைத் திருமணம் செய்யும் ஏற்பாடு. அதுவும், முன்னாள் பெண் போராளிகளின் நிலைமை இதனிலும் மோசம். அவர்கள் எங்கு சென்றாலும் இராணுவம் தொடர்கிறது. அவர்களது வீட்டுக்கு இரவில் செல்கிறது. 'காதலி'க்கும்படி கட்டாயப்படுத்துகின்றனர்! இதற்கு சிங்கள அரசின் அறிவிப்பே ஆதாரமாக உள்ளது.
'தமிழ்ப் பெண்களை திருமணம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம்’ என்கிறது அரசாங்கத்தின் அறிவிப்பு. அதாவது 30 ஆயிரம் ரூபா சம்பளம் உள்ள இராணுவ ஆள், தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்தால் 60 ஆயிரம் ரூபா கிடைக்கும். இந்த சம்பள உயர்வு 'இனக்கலப்பின் விதைக்காக’! போர்க் காலத்தில் இராணுவத்தில் போர் நிதி என்று வழங்கப்பட்டது. அது இப்போது நிறுத்தப்பட்டு விட்டதால், இப்படியாவது சம்பள உயர்வை பெறலாம் என இராணுவ இளைஞர்கள், தமிழ்ப் பெண்களுக்கு அலை​கின்றனர்.
மன்னாரில் உள்ள ஆயர் ஜோசப்பைச் சந்திக்க நண்பரோடு கிளம்பினேன். இடையில் ஒரு மூத்த தமிழ் தொல்பொருள் ஆய்வாளரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இன்றைய நிலையில் தமிழர் பகுதிகளில் நிகழ்ந்துவரும் தொல்பொருள் ரீதியான சிங்கள ஆக்கிரமிப்புகள் பற்றிக் கூறினார்.
'என்னைப்பற்றி தெரிந்துகொண்டு வாரத்துக்கு ஒருமுறையேனும் என்ட வீட்டுக்கு அரசு தொல்பொருள் பணியாளர்கள் வந்து போகினம். நான் அவர்களிடம் கதைப்பதை இயன்ற வரை எப்படியோ தவிர்த்து விடறன். மீறி அப்படி நான் அவர்களிடம் கதைக்கும்போது, தெரியாமல் எனக்குத் தெரிந்த பழைமையான தமிழ் வரலாற்று இடத்தை உளறிட்டா, அதை எப்படியோ தேடிப்பிடித்து அங்கே புத்த சிலையை புதச்சிடுவாங்கள். மூணு மாசமோ ஆறு மாசமோ கழிச்சு அந்த இடத்தத் தோண்டி புத்த சிலைய எடுத்து, தொல்பொருள் துறைக்கு சொந்தமான காணினு அறிவிச்சிருவாங்க’ என்றார் வேதனை பொங்க.
அவரிடம் இருந்து விடைபெற்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பைச் சந்தித்தேன். அவரிடம் இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு பற்றி பேசியபோது,
''மிஷனரிக்குச் சொந்தமான காணியைக்கூட கைப்பற்றி விட்டனர். குறிப்​பிட்ட இடத்தைக் குறிவைத்து விட்டால், அதற்கான கைமாற்றுப் பத்திரத்தையும் தயார் செய்து கொண்டு வந்தே இராணுவத்தினர் காணியைக் கேட்கின்றனர். காணியைக் கொடுப்​பதா, இல்லையா என்பதை அதற்கு உரியவன்தானே முடிவு எடுக்கணும்? இராணுவம் யாரு முடிவு எடுக்க?'' என்றார் கோபக்கனல் வீச.
காணாமல் போனோர், புகலிடம் கோரியவர்​கள் பற்றி இவர் வெளியிட்ட கருத்துகளுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையும் நடத்தி உள்ளது. அரசு தரவுகள்படி 2008-09 ஆண்டு​களில் 1,46,679 பேர் காணாமல் போய் உள்ளனர். அதைக் கண்டுபிடித்துத் தருவதற்கான எந்த முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை.
அடுத்து, மன்னாரில் உள்ள இலங்கை - ஜப்பான் நட்புறவு பாலத்தை நோக்கிச் சென்​றோம். மன்னாரின் நிலப்பரப்பையும் தீவுப்பகுதியையும் இணைக்கும் பாலம் அது. 'போர் வெற்றியின் பிரதிபலனாய் இந்தப் பாலத்துக்கு ஜப்பான் உதவி செய்து இருந்தாலும், இந்தப் பாலம் நாட்டுக்கு தேவையான ஒன்றுதான்’ என்றார் நண்பர்.
தண்ணீருக்கு மேலே இரு வழிப் பாதையாக அமைக்கப்பட்டு இருக்கும் இந்த நட்புறவு பாலச் செலவுக்கு ஜப்பானும் இலங்கையும் ஒதுக்கிய தொகை 1836 மில்லியன் யென் (ஜப்பான்), 640 மில்லியன் ரூபாய் (இலங்கை) ஆகும்.
அந்தப் பாலத்தின் கீழே உள்ள மணல் திட்டை அடைந்தோம். மன்னாரில் பொருளா​தார வளர்ச்சி கடலை நம்பி மட்டுமல்ல... விவசாயத்தை நம்பியும் உள்ளது. கடல் தொழி​லுக்கு இணையான விவசாய வளங்களும் மன்னார் நிலப்பரப்பில் உள்ளது.
மன்னார் கடல் எண்ணெய் வளம் மிக்கது என அறியப்​பட்டதும்... சீனா, அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, மலேசியா என பல நாடுகள் தங்கள் நாட்​டுக்கு எழுதிக் கொடுக்கும்படி முட்டி மோதின. எந்தளவு எண்ணெய் வளம் இருக்கும் என்று ஆதாரபூர்வமாக இலங்கை அரசு அறிவிப்​பதற்கு முன்னரே, இந்த முட்டல் மோதல் நடந்தது.
இறுதியில் வாய்ப்பு கிட்டியது இந்தியாவுக்கும் சீனாவுக்கும்தான். அமெரிக்கா இலங்கையை எதிர்ப்பதுபோல் காட்டிக்கொண்டு இருக்கும் செயல்களுக்குப் பின்னால் எண்ணெய் அரசியலும் இருக்கிறது.
பெற்றோலிய வள முன்னேற்ற செயலகத்தின் இயக்குநர் சலிய விக்கிரமசூரியாவின் கூற்றுப்படி - எண்ணெய் வளம் மன்னார் படுகையில் ஐந்து தொகுதிகளும், காவிரி படுகையில் ஐந்து தொகுதி​களும் உள்ளது. (இலங்கையில் காவிரி படுகையா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். தமிழகத்தில் உள்ள பல ஊர்களின் பெயர்கள் ஈழத்தில் உள்ளது போலவே, யாழ் குடா பகுதியில் காவிரி படுகையும் இருக்கிறது.)
அதன்படி, 2008-ம் ஆண்டு ஏல அடிப்படையில் கெய்ன் லங்காவுக்கு மன்னார் தேக்கத்தில் எண்ணெய் ஆராய்ச்சி செய்ய அனுமதி அளித்தது இலங்கை அரசு. இது, இந்திய தனியார் நிறுவனம். இதுவரை அந்த நிறுவனம் மூன்று எண்ணெய் கிணறுகளைத் தோண்டி உள்ளது. அதில் இரண்டில் இயற்கை எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்போது நான்காவது எண்ணெய் கிணறு அகழ்வுக்கும் இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இதுவரை எண்ணெய் அகழ்வாராய்ச்சிக்காக 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்​பட்டுள்ளது. இத்தகைய இயற்கை வளங்களைக் குத்தகைக்கு எடுத்துக் கைப்பற்றத்தான் பல நாடுகளும் இலங்கையின் அட்டூழியங்களுக்கு துணை நிற்பதை உணர முடிந்தது.
அடுத்து, பூநகரி வழியாக யாழ்ப்பாணம் செல்வதாகத் திட்டம். அடுத்த நாள் காலை யாழ்ப்பாணத்துக்குக் கிளம்பினேன். இரவு கலந்துரையாடலின்போது, மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு காடுகளில் வசிக்கும் நிலைமையைப் பற்றிச் சொன்னார் நண்பர். '2007 யுத்தக் காலத்துல முள்ளிக்குளம் சனம் இடம்பெயர்ந்து சென்றது.
2010 மீள்குடியேற்ற வேலைகள் நடந்துச்சி. ஆனா, இப்ப சனத்தோட வீட்டில கடற்படையைச் சேர்ந்த குடும்பங்கள் வசிக்குது. அவங்களுக்கு மக்கள் நெருங்காத அளவுக்கு பாதுகாப்பும் கொடுக்குது இராணுவம். மீள் குடியேற்றம்னு பேருல தமிழ் சனத்த காட்டுக்குள்ள குடியமர்த்தி இருக்குது அரசு. சிங்கள மீனவர்களுக்கு மீன்பிடியில் முன்னுரிமை கொடுத்து மீன் பிடிக்கச் செய்கிறது இராணுவம்’ என்றார்.
இவர் சொல்வதுபோல் சிங்களக் குடியேற்றம் என்பது வெறும் வாழ்வாதார பிரச்சினை மட்டும் அல்ல. இது எதிர்காலத்தில் தமிழர்களின் உரிமைக்கு மொத்தமாக முட்டுக்கட்டை போடும் வேலை. இலங்கை அரசின் மனநிலைப்படி, 'சிங்கள குடியேற்றம் என்பது சிங்களவர்களை இலங்கையின் நிலப்பரப்பு எங்கும் பரவச் செய்வதாகும்.
வெளிநாடுகளிலும் ஐ.நா-விலும் தமிழர்களுக்கு உரிமைக் கொடுப்பதற்கான தனி வாக்கெடுப்பு பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டே இருக்கும். வாக்கெடுப்புக்கான நாளை நாம் நெருங்குவதற்கு முன், சிங்களக் குடியேற்றங்கள் முடிந்திருக்கும். சிங்களக் குடியும் தமிழ்க் குடியும் ஒன்றோடு ஒன்று கலந்து, தமிழர்களுக்கான பிரதிநிதித்துவமே இல்லாதபடிக்கு அவர்களின் உரிமைத் தேவைகள் நசுக்கப்பட்டிருக்கும்.
எப்படியோ, ஐ.நா-வின் மனசாட்சியை உலுக்க சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு நடக்​கிறது என்றே வைத்துக் கொள்வோம். முன்பு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த வடகிழக்​கிலும் வாக்கெடுப்பு நடக்கும். சிங்கள இனம் சமநிலைமைப் படுத்தப்பட்ட இடத்தில் 'தனி நாடு’ கோரிக்கைக்கு எதிராகவே அதிக வாக்குகள் விழும்.
அப்போது, சிங்கள அரசியல் இனம், 'தமிழர்களே தனி நாட்டுக்கு எதிராக இருக்​கிறார்கள். அதற்கு சான்று வடகிழக்கில் இந்த கோரிக்கைக்கு எதிராக வாக்குகள் பெரும் சதவிகிதம் விழுந்ததுள்ளது’ என பிரசாரம் நடத்தும். அதை ஐ.நா-வும், உலக நாடுகளும் தெரிந்தே தெரியாததுபோல ஏற்கக் கூடும். அப்போது தமிழர்களுக்கான உரிமை மொத்தமாக பாழ்படும்.
தமிழர்கள் வாழ்ந்த, நடைப் பிணங்களாக வாழ்ந்து​கொண்டு இருக்கிற வடகிழக்கில், சிங்கள அரசு உச்ச நிலையான ஆக்கிரமிப்புகளை செய்துகொண்டு இருக்​கிறது. அந்த வழிநிலையின் செயலாக இப்போது தமிழ் ஊர் பெயர்களை அதிகாரபூர்வமாக அரசு சட்ட ஆவணங்களில் சிங்களத்துக்கு மாற்றி இருக்​கிறது.
’பொத்துவில் - பொத்துவிலா, வாகரை - வாகரா, ஆனையிறவு - அலிமன்கடுவா, பரந்தன் - பரந்தேனா, இரணைமடு - ரணமடுவா, மணலாறு - வெலிஓயா, வவுனியா - வன்னிமவா, புளியங்குளம் - கொட்டி​யாவேவா, மாங்குளம் - மா யூ ரவேவா’ இப்படி 89 தமிழ் ஊர்ப் பெயர்கள் முதன்மையாக மாற்றப்பட இருக்கிறது.
தூக்கம் ஒரு தெளிவைத் தரும்’ என்பது ஆரோக்கியத்தின் கூற்று. ஆனால், துக்கம் கொண்ட உள்ளத்துக்கு தூக்கம் ஏது?
இருள் விடிவதற்கு முன்னரே யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டேன். லட்சம் லட்சமாக மக்களை 50 ஆண்டு காலம் தொடர்ச்சியாகக் கொன்றுவிட்டு... இன்று சமாதானம் என்ற பெயரிலும் தந்திரமாகச் சித்திரவதை செய்யும் சிங்களவர்கள் - 'ஒரே நாடு, ஒரே இனம்' என்று அறை​கூவாத குறையாக தங்களுக்குத் தாங்களே வெற்றிச் சின்னங்கள் எழுப்புவதைப் பார்த்தால் துக்கம் எப்படி தாக்காமல் இருக்கும்?
ஊடறுத்துப் பாயும்..
ஜூனியர் விகடன்
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam12_01
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam12_02
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam12_03
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam12_04
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty புலித்தடம் தேடி...!இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 13

Post by logu Sun Aug 11, 2013 6:05 pm

சிரித்துக்கொண்டே மரணத்தை வென்றவன். அப்படி வென்றவனின் நினைவு ஸ்தூபி (யாழ்ப்பாண நல்லூர் கோயில் அருகே) இடிக்கப்பட்டது என நான் தமிழ்நாட்டில் வந்திறங்கிய டிசம்பர் 7-ம் தேதி செய்தி கிடைத்தது. . அந்தச் செய்தி 2010-ல் திலீபன் சிலை இடிக்கப்பட்டபோது ஈழநாதம் நாளிதழ் வெளியிட்ட கருத்தை மனதில் நினைவு கூர்ந்தது.
நம்புங்கள்... நல்லூர் கோயிலும் நாளை இடிக்கப்படும், நம்புங்கள்... சங்கிலியன் சிலை தூக்கி எறியப்படும், நம்புங்கள்... நாளை மீண்டும் நூலகம் எரிக்கப்​படும்.
மாவீரர் துயிலும் இல்லங்களை இடிக்கும் போது தான் பேசாமல் இருந்தோம். சரி, அவர்கள் பாணியில் சொன்னால் வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள். ஆனால், தியாக தீபம் திலீபனும் அப்படியா?
இவ்வளவு காலமும் இடிக்கப்படாமல் இருந்த தியாக தீபத்தின் சிலை ஏன் இப்போது இடிக்கப்பட்டது?'' என்ற அந்தக் கருத்து என்னை வாட்டியது.
அமைதி வழியானாலும் ஆயுத வழியானாலும் எந்த வழியானாலும் தமிழர்கள் எதற்காகவும் போராடக் கூடாது என்ற நினைப்பைத்தான், இந்த இடிப்பு சம்பவங்கள் குறிப்பிடுகின்றன.
மன்னாரில் இருந்து துக்கத்தோடு யாழ்ப்​பாணத்துக்குச் சென்றதும், திலீபன் காலத்​துக்கு முன்னிருந்து உள்ள ஒரு மனிதரைச் சந்தித்தேன்.
அந்த மனிதர் உண்மையில் இன்றையத் தமிழ் இளைஞர்களுக்கு எல்லாம் தேவையான ஒருவர். இராணுவத்​தின் அதிகாரங்கள் அவரையும் அடக்கி​ வைத்துள்ளது.
யாழ்ப்பாண நல்லூர் கோயில் அருகே உண்ணாநிலை இருந்த திலீபனின் நினைவுகளைப் பகிர்ந்தார்.
உலகின் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திலும் அரசியல் போராட்​டத்திலும் 'ஒற்றை மனிதனின் உண்ணாநிலை’ நடந்தது இல்லை.
ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக அகிம்சையைப் பிரயோகித்த காந்தியே, நீரோடும் பாலோடும்தான் உண்ணாவிரதம் இருந்தார்.
ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல், 265 மணி நேரம் (12 நாட்கள்) உண்ணாவிரதம். 'என் சுயநினைவை இழந்தால்​கூட குளுக்கோஸ், தண்ணீரைத் தந்துவிடாதீர்கள்’ என்று தோழர்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்ட திலீபனின் உயிர், செப்டம்பர் 26, 1987 காலை 10.48-க்கு பிரிந்தது. லட்சக்கணக்கான தமிழ் மக்களின் கண்ணீர் சிந்திய பாதைகளில் திலீபனின் மரணக் கோரிக்கைகள் புதைந்து போயின.
மருத்துவ​னான திலீபன் ஈழவர்கள் நெஞ்சில் உயிராய் பதிந்து​விட்டான். இந்தியாவோ இலங்கையோ, காந்தி வழியே இறந்த திலீபனுக்காக துளியும் வருந்தவில்லை.
இதற்கு முன் சென்னையில் பிரபாகரனும்கூட ஒரு முறை தகவல் தொடர்புக் கருவிகளைப் பறித்ததைக் கண்டித்து, நீர் அருந்தாத உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி இருந்தார்.
ஆயுதம் தாங்கிகளான இவர்களுக்கு அகிம்சை​யின் மீதும் தீராக் காதல் உண்டு என்பதை மெய்ப்பிக்கும் சாட்சியங்கள் அவை'' என நினைவூட்டினார்.
திலீபனின் உயிர் அணு அணுவாய் பிரிந்து​கொண்டு இருந்தபோது... நார்வே, ஸ்வீடன், இங்கி​லாந்து, அவுஸ்திரேலியா நாட்டுத் தூதுவர்கள் வந்து பார்த்துச் சென்றார்கள்.
ஆனால் இந்தியாவோ, அமைதிப் படையின் அதிகாரிகளையும் தூதுவர்​களையும் வைத்து மிரட்டிக்கொண்டு இருந்தது.
உண்ணாநிலை நடந்துகொண்டு இருந்த நேரத்தில் புலிகள் பிரதிநிதிகளைச் சந்தித்த இந்திய உதவி தூதர் நிருபம் சென், 'உண்ணாவிரதப் போராட்டங்களால் இந்தியாவை நிர்ப்பந்திக்க முடியாது’ என எச்சரித்தார்.
திலீபனின் ஐந்து கோரிக்கைகள்:
1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்​பட்டோர் விடுவிக்கப்பட வேண்டும்.
2. புனர்வாழ்வு என்று தமிழர் தாயகத்தில் நடத்தப்​படும் சிங்களக் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை 'புனர்வாழ்வு’ என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
4. வட கிழக்கு மாகாணங்களில் போலீஸ் நிலையங்​கள் திறப்பதை உடனே நிறுத்த வேண்டும்.
5. இந்திய அமைதிப் படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோர்க்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப்பெற்று, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடி​கொண்டுள்ள இராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

25 ஆண்டுகள் கடந்தும் திலீபன் வைத்த கோரிக்கைகள் இன்னும் பழைமையாகாமலே இருக்கிறது. புதிதாக எந்தக் கோரிக்கைகளையும் இந்தியா முன்வைக்கத் தேவை இல்லை. இதையே இப்போதும் முன்வைத்தாலே போதும்.
இந்தியாவின் உதவிகள்தான் இன்று இலங்கையை ஒரு இராணுவ நாடாக உருவாக்கி உள்ளது. அந்த விருட்சங்களே தமிழர் பகுதிகளில் உள்ள இராணுவ ஆக்கிரமிப்புகள்.
அதனால்தானே ராஜபக்ச வருகையின்போது பாதுகாப்புக்கு காவல்துறை, சிறப்புப் படை என 50 ஆயிரம் பேரை இந்தியா காவலுக்கு வைத்தது.
யாழ்ப்பாணத்தை விட்டு கிளிநொச்சி வழியே வவுனியாவுக்குச் சென்றேன். ஓமந்தையில் என் கடவுச்சீட்டு பதியப்பட்டது.
இன்றும் ஓமந்தை (முன்பு புலிகளின் எல்லைப் பகுதி) தமிழ் - சிங்களப் பகுதிகளைப் பிரித்துக் காட்டும் அடையாளமாகவே விளங்குகிறது.
அங்கு இராணுவத்திடம் சிங்களவர்​களுக்கும் தமிழர்களுக்கும் வேறு வேறு விதிகள். வவுனியாவை அடைந்ததும் ஓமந்தை பற்றி உள்ளூர் தோழரிடம் கேட்டேன்.
அவர் ''இங்க ஐ.சி. (அடையாள அட்டை) இல்லாம எங்கையும் நடந்து​கூட போக இயலாது. அப்படி இல்லாம இராணுவம் பிடிச்​சதுனா, சந்தேகப் பிரிவுலதான் போடுவினும். சிலமுறை அப்படித் தப்பிக்க காசு கொடுக்கக்கூட வேண்டியது இருக்கும்’ என்றார்.
தோழர் குறிப்பிடுவதுபோல சிங்கள இராணுவத்தில் உள்ள இடைநிலை ஆட்களுக்குத் தேவை, பணம்​தான். இதற்காகவே பலர் சந்தேக வழக்கில் கைதுசெய்யப்படுகின்றனர்.
நம்ம ஊரில் எப்படி கஞ்சா வைத்திருந்தான் என்று காவல்துறை கைது செய்யுமோ, அதுபோல் அங்கே 'வெடிமருந்து வைத்திருந்தான்’ என்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்வார்கள்.
பலரையும் மிரட்டுவது இந்தச் சட்டம்தான். ''ஐ.நா. சபையை நம்பித்தான் நாங்க இருக்கோம். எங்களுக்கு வேறு எந்த நம்பிக்கையும் இல்லை'' என்றும் அந்த மக்கள் சொல்கிறார்கள்.
2013 தொடக்கத்தில் ஐ.நா. எடுத்துள்ள ஒரு முடிவு மீண்டும் தமிழ் மக்களை சித்திரவதைக்குள் சிக்கவைக்கும் ஒரு முடிவாக உள்ளது.
ஐ.நா. எடுத்த அந்த முடிவு என்னவென்றால், 'இந்த வருடத் தொடக்கத்தில் இருந்து ஐ.நா. தனது பணிகளைக் குறைக்க முடிவெடுத்துள்ளதுடன், வருட இறுதிக்குள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுவது எனவும் திட்டமிட்டு உள்ளது’. இது அந்த மக்களுக்குத் தெரியாது.
'ஐ.நா-வின் மனித உரிமை சார்ந்த செயல்பாடுகளுக்கு இங்கு வேலை இல்லை’ என்றும், 'நிதிப் பற்றாக்குறைக் காரணங்களுக்காக வெளியேறப்போகிறது’ என்றும் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
ஆனால் உண்மையில், ஐ.நா-வின் மனித உரிமை சார்ந்த பணிகளுக்கு யாழ்ப்பாணத்தில் இன்னும் தேவை உள்ளது என்பதை மனித உரிமைப் பணியாளர் ஒருவர் என்னிடம் விளக்கினார்.
யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களில் இன்னும் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. உயர் பாதுகாப்பு வளையங்களாகவே உள்ள அந்தப் பகுதியில் உள்ள கண்ணி வெடிகளை அகற்ற இன்னும் ஐந்து வருடங்களாவது தேவைப்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் பணிகளே இன்னும் முடியாத நிலையில் ஐ.நா. யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினால், கண்ணி வெடி அகற்றல் பணி பாதுகாப்புச் செயலகத்திடம் ஒப்படைக்கப்படும் என அறியப்படுகின்றது.
அரசின் கண்ணி வெடிகள் அகற்றல் நிறுவனமான 'டாஷ்’, இந்தப் பணியில் ஏற்கெனவே உள்ளது.
இந்தியாவைச் சார்ந்த 'சர்வத்ரா’வும் கண்ணி வெடிகள் அகற்றலில் ஈடுபடுகிறது. இதோடு மற்ற நாடுகளைச் சார்ந்த 'ஹலோ டிரஸ்ட்’ போன்ற அமைப்புகளும் இதில் ஈடுபடுகிறது.
ஐ.நா. வெளியேறிவிட்டால், இப்படியான பணிகளை மேற்பார்வை செய்வதற்குக்கூட ஆட்கள் இல்லை. ஐ.நா. வெளியேறுகிறது என்ற பிம்பம் 'இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்’ என்ற பொய்யான நிலையைப் பரப்பும்.
போர் முடிந்த பிறகும் காணாமல் போதல், பயங்கரவாதப் பிரிவில் கைது, அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் போன்றவை ஐ.நா-வின் தேவையை இன்னும் வலியுறுத்திக்கொண்டே உள்ளது.
மனித உரிமை சார்ந்த குற்றங்களை மனித உரிமைகள் சபையில் பதிவுசெய்தால், யார் அதைப் பதிவுசெய்தார்கள் என்ற விவரங்கள் புலனாய்வு பிரிவுக்கும் இராணுவத்​துக்கும் பகிரப்படும்போது, மனித உரிமை மீறல்கள் குறைந்துவிட்டது என்று எப்படி ஐ.நா. குறிப்பிட இயலும்?'' என்று அவர் என்னிடம் கேட்டார்.
2009 போரின்போது வெளியேறிய ஐ.நா. செய்த தவறை 2012 நவம்பரில் வெளியிடப்பட்ட சார்லஸ் பெட்ரி (ஐ.நா. அதிகாரி) தலைமையிலான குழுவின் ஆய்வறிக்கை உணர்த்துகிறது. ஐ.நா. வெளியேறியதால் நடந்த படுகொலைகள் உலகை அதிரவைத்தன.
பான் கி மூன் 2009 இலங்கைப் போரில் ஐ.நா. செய்த தவறுக்கு வெளிப்படையாக மன்னிப்பு கோரினார்.
2009-ல் நடந்த படுகொலைகள் 'பான் கி மூனின் ருவாண்டா’ எனவும் கூறப்பட்டது.
அப்படியான ஐ.நா. தவறை உணர்ந்ததுபோல் நடித்து, அதே தவறை மீண்டும் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறும் முடிவால் செய்ய இருக்கிறது.
தமிழர்களை முதுகில் குத்தும் இப்படியான ப(லி)ழி வாங்கல் வேலைகளே இலங்கையில் படுவேகமாக நடந்து வருகின்றன.
ஊடறுத்துப் பாயும்...
ஜூனியர் விகடன்
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam13_01
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam13_02
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம்14

Post by logu Sun Aug 11, 2013 6:06 pm

தமிழனின் கறி இங்கு கிடைக்கும் என்று 1983 ஜூலை படுகொலைகளின்போது பலகை​யில் எழுதிவைத்து ரத்தம் குடித்த சிங்கள ராணுவம்தான், இன்று தமிழரைக் காக்கும் சமாதானத்தை நிலைநிறுத்தும் படையாகவும் காட்டிக்கொள்ள ஆரம்பித்துள்ளது.
அந்தப் படை யின் கட்டுப்பாட்டில்தான் அனைத்து ஊர்களும் இருக்கின்றன. நான் வவுனியாவை அடைந்த இந்நேரம், ஓரள வுக்குப் பழக்கப்பட்ட ஊராக கிளிநொச்சியும் புதுமாத் தளனும் எனக்கு அடையாளப்பட்டது. வவுனியாவில் இப்போது நான் இருந்தாலும், அவ்வூர்களை விட்டு பிரிந்த என் இருப்பு இன்றுவரை வெகுவாக பாதிக் கிறது. கடலைக் கண்டால் அழும் அளவுக்கு நந்திக்கடல் என்னை மாற்றிவிட்டது.
 
 ஏ9 மரண நெடுஞ் சாலை மீண்டும் மீண்டும் தமிழ் மண்ணில் ராணுவம் நிலைகொண்டு உள்ளதை எண்ணச் செய்து நெஞ்சில் எரிமூட்டிக்கொண்டே இருந்தது. அந்த எரிமூட்டலின் விளைவாகக் கிடைத்த ராணுவ ஆக்கிரமிப்பு ஆதாரங்கள், புலிகளோடு சமாதானம் பேச வந்த அரசாங்கங்களின் பேச்சுகளையே என் மனத்திரையில் ஒளிரச் செய்தது.
 
 தமிழர்களின் பிரதிநிதிகளாக நாங்கள் இருக்கி றோம் என்று சொல்லிக்கொண்ட புலிகள், நியாயமான தீர்வுகளுக்கு ஒப்புக்கொள்ளவே இல்லை - இலங்கையும் இந்தியாவும் தங்க ளுக்கு இடையேயான ஒப்பந்தங்களை புதுப்பிக்கும்போது எல்லாம் இப்பேச்சை பேசாமல் இருக்காது. இனிமேல் நான் தமிழர் களின் அபிப்ராயம் பற்றி கவலைப்படப் போவ தில்லை. அவர்களுடைய உயிர்களோ கருத்துக்களோ எங்களுக்குப் பொருட்டல்ல.
 
 தமிழர்களைப் பட்டினி போட்டால், சிங்கள வர்கள் சந்தோஷப்படுகிறார்கள் என்று இலங் கையின் ஜனாதிபதி ஜெயவர்த்தனே அளித்த பேட்டியே, தமிழர்களுக்கு எப்படியான தீர்வை அன்றும் இன்றும் இலங்கை அரசாங்கம் முன்வைத்திருக்கும் என்பதற்கான ஒப்புதல் ஆதாரம். இப்படி சிங்களர்களுக்கு இனவாதத்தைத் தூண்டித் தூண்டியே, இன்று வரை சிங்கள அரசுக் குடும்பங் கள் இலங்கையில் அரசியல் செய்து வருகிறது. அந்த அரசுக் குடும்பங்களின் ஏவல் படைகளாக சிங்கள ராணுவம் கொக்கரித்து ஆடுகிறது.
 
 இலங்கை அரசின் கணக்குப்படி ராணுவப் பலத்தின் எண்ணிக்கை 1970-ல் 8,500 பேர், 1983-ல் 12 ஆயிரம் பேர், 1986-ல் 30 ஆயிரம் பேர், 1987-ல் 40 ஆயிரம் பேர், 1990-ல் 50 ஆயிரம் பேர், 1994-ல் 1,04,000 பேர், 1996-ல் 90 ஆயிரம் பேர், 2001-ல் 95 ஆயிரம் பேர், 2002-ல் 1,18,000 பேர், 2009-ல் 2,40,000 பேர். பாதுகாப்புச் செய லகம் 2010-ல் வெளியிட்ட கணக்குப்படி 4,50,000 பேர் இலங்கை ராணுவத்தில் இருக்கின்றனர்.
 
 தமிழ் அரசியல் நண்பர் ஒருவர் ஒரு கணக்கீட்டைச் சொன் னார். 2012-ல் இலங்கை ராணுவம் ராணுவத்தில் இருந்து ஓடியவர்கள் பற்றி ஒரு கணக்கீட்டை வெளியிட்டு இருந்தது. அதில் 71,458 பேர் ராணுவத்தைவிட்டு ஓடி விட்டதாகவும், அவர்களைத் தேடும் பணி தொடர் கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதான் சிங்கள ராணு வத்தின் உண்மையான நிலை. அவர்கள் போராடுவது என்பது சம்பளத்துக்காக. ஆனால், தமிழர்கள் போராடு வது உரிமைக்காக.
 
 இப்போது வேண்டுமானால் சம்பளத்துக் காகப் போராடியவர்கள் வென்றதாக இருக்கலாம். ஆனால், தமிழர்கள் மீண்டு வருவது உறுதி. பிரபாகரனை (1983 - 2009) எதிர்த்து தமிழர்களைப் பின்னடைவு செய்ய இலங்கையின் ஐந்து ஜனாதிபதிகள் (ஜெயவர்த்தனே, பிரேமதாச, பண்ட விஜேதுங்க, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்‌ஷே) வரவேண்டி இருந்தது என்றால், அவர்களின் வீரம் எப்படிப்பட்டது என்பது உலகுக்கே தெரி யும். எல்லா நாட்டிடமும் உதவிகள் பெற்றுத்தான் தமிழர்களைத் தோற்கடிக்க முடிந்தது என்றால், இந்த உலகமே தமிழனை அழிக்க போரிட்டு உள்ளது. அப்படி என்றால் 2009-ல் புலிகளை எதிர்த்து நடந்தது மூன்றாவது உலகப் போர்தானே என்றார் அந்த நண்பர்.
 
 இன்று, புலிகள் மீது சர்வதேச அளவில் வைக்கப்படும் பெரும் குற்றச்சாட்டு கட்டாய ஆள்சேர்ப்பு, சிறுவர்களை படையில் சேர்த்தல். இதைப் பற்றி புலிகள் காலத்தில் இருந்தே பத்திரிகையாளராக இருந்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன். இயக்க காலத்தில் ஆள் பற்றாக்குறை காரணமாக கட்டாய ஆள்சேர்ப்பு நடந்தது உண்மைதான். ஆனால், இலங்கை அரசு காட்டுவது போல உலக நாடுகள் சொல்வது போல 10 வயதுக்குக் கீழான சிறுவர்களை எல்லாம் சேர்க்கவில்லை. அந்தக் குழந்தைகள் புலி உடுப்பு அணிந்திருந்ததை வைத்து, அவர்களை போராளிகள் என்று கணித்துக் கொண்டனர்.
 
 அந்தக் குழந்தை களுக்கு புலி உடுப்பு அணி வது என்பது மாவீரர் தினத்தில் தனது தந்தைக்கோ தாய்க்கோ உறவி னருக்கோ வீரத்துக்கான மரியாதையை செலுத் துவதற்காக. அதை ஒரு போர்க்குற்றமாக அடையாளப் படுத்துகிறார்கள். புலிகள் இவர்களைப் பிடித்துச் சென்றனர், அவர்களைப் பிடித்துச் சென்றனர் என்கிறதே அரசாங்கம்... அப்படிப் புலிகள் பிடித்துச் சென்று பின்னர் வீட்டுக்கே திருப்பி அனுப்பிவிட்ட பெண்ணை, ஏன் ராணுவம் தேடிப்பிடித்து கற்பழித்தது? வீட்டுக்கு ஒரு வீரன் என்ற பேரில்தான் இயக்கம் ஆட்சேர்ப்பு செய்தது.
 
 அப்படியே இந்தப் பெண்ணையும் அழைத்துப் போயிருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் குடும்பத்தில் அப்பா, சித்தப்பா, பெரியப்பா, மாமா, அக்கா என்ற பல விதத்தில் 13 மாவீரர்கள். வீட்டுக்கு மீதி இருப்பது அந்த ஒரு பெண் மட்டும்தான் என்றதால், புலிகள் வீட்டுக்கு திருப்பி அனுப்பி உள்ளனர். அந்தப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்த ராணுவம், நீ கொட்டியா (புலி)தானே என்று கேட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
 
 18 வயது அடைந்த மனதளவில் முதிர்ச்சி இல்லாத சிங்கள இளைஞர்கள் பலர் பள்ளி முடித்ததும் இலங்கை ராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள். அப்படி என்றால் ராணுவத்தில் சேர 18 வயது ஆகிவிட்டால் போதுமா? பிரபாகரனே 16 வயதில் போராட வந்தவர். அப்படி எனில் சர்வதேச மனித உரிமை விதிப்படி பிரபாகரன் சிறுவர் போராளி என்றால் தகுமா? நாங்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். போராட வயதைப் பார்த்துக்கொண்டு இருந்தால் நாங்கள் வாழவே முடியாது. என்னடா, ஒரு பத்திரிகையாளனா இருந்து புலியப்பத்தி பேசறனு நினைக்காதீங்க. இந்த மண்ணுல வந்து வாழ்ந்து பாத்தாதான் தெரியும், நாங்க அனுபவிக்கும் வேதனை. பத்திரிகை சுதந்திரத்தில் கடைசி வரிசை நாடாக உள்ள சிங்கள தேசத்துக்கு புலிகளைப்பற்றி பேச அருகதையே இல்லை என்று வெம்பினார்.
 
 போரில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைத்திருந்த செட்டிக்குளத்தை நெருங்குகிறேன். அடைத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் பிள்ளைகளுக்கு பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் விதமாய் சிங்கள தேசிய கீதத்தை கற்றுக்கொடுத்து, சிங்களம் அறியா பிஞ்சுகளை சிறீலங்கா மாத அப சிறீலங்கா நமோ நமோ நமோ நமோ மாத என உளற வைத்துள்ளனர்!
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  P18b
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  P20%281%29
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  P20a
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  P20b
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  P22
ஊடறுத்துப் பாயும்...
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம்15

Post by logu Sun Aug 11, 2013 6:07 pm

சரணடைந்த தமிழ் மக்களை, வதை முகாம்களில் அடைத்து உயிரைக் குடைந்து உதிரம் உறிஞ்சிய மாணிக்கம் பண்ணையில் நடக்கிறேன். இப்படிச் சொன்னால் இந்த இடத்தைப்பற்றி உலகுக்குத் தெரியாது... தமிழர்களான நமக்கும் கூட தெரியாது. ஆம், இந்த மாணிக்கம் பண்ணைதான், மெனிக் பார்ம் என அழைக்கப்படுகிறது.
சாலையில் இருந்து உள்ளே நுழையும் போதே ஆளரவமற்ற இடமாகக் காட்சியளித்தது.
இந்த செட்டிக்குளம் பகுதியில்தான் லட்சக்கணக்கான மக் களை அடைத்து வைத்து இருந்தார்களா என்பதை நம்ப முடியாமல் உடன் வந்த நண்பரிடம், ''இங்குதான் முள்வேலி முகாம்கள் இருந்தனவா?'' என்று பலமுறை கேட்டேன்.
இந்த இடத்தைப் பார்த்தால் உங்களுக்கும் இந்தக் கேள்வி தோன்றும். இந்தப் பகுதியில்தான் ஆனந்த குமாரசாமி, இராமநாதன், அருணாசலம், ஜோன் 4, ஜோன் 6, உளுகுளம், மருதமடு என்ற முகாம்கள் இருந்தன.
போரில் இடம்பெயர்ந்த மக்கள் இங்குதான் கழிவுக் குப்பைகளைப்போல கொட் டப்பட்டனர். இந்த முகாம்கள் 'வதை முகாம்கள்’ என்ற முன்மொழியோடுதான் வெளி உலகுக்கு அடையாளப்படுத்தப்பட்டன.
2012-ல் இந்த முகாம்களை இராணுவம் அகற்றியது. ஆனால், வதைகளை நடத்திய முகாம்களை விடுவதற்கு மனம் இல்லாமல், இந்த முகாம்களின் நிலம் தங்களுக்கு வேண்டும் என்று உரிமை கோருகிறது இலங்கை இராணுவம்.
தொழில் நிறுவனங்களும் இந்த இடத்துக்குப் போட்டி போடுகின்றன. ''இரத்தம் குடித்த முகாம்களின் காணிகளில் அப்படி என்னதான் உள்ளதோ, இவர்கள் இன்னும் அடைவதற்கு?'' என்று கடிந்து திட்டினார் உதவிக்கு வந்த நண்பர்.

மெனிக் பார்மில் உள்ள ஒரு தமிழ்ப் பெண்ணைச் சந்தித்தேன். அவர், ''எங்களுக்குக் கொடுத்தது எல்லாம் பள்ளக் காணிகள். எனக்கு நாலு பிள்ளைகள். மழ காலத்துலலாம் தற்காலிக வீட்ல இருக்கவே முடியாது. படுக்க இடமில்லாம தம்பி வீட்லயும் அம்மா வீட்லயும்தான் தூங்குவம். இன்னும் எங்களுக்கெல்லாம் வீடே கொடுக்கலை.
ஆனா, அதிகாரிகள்ட்ட போய் கேட்டா, 'மெனிக் பார்ம்க்கு வீடுகள் கொடுத்தாச்சு... இனி வீடுகள் இல்லை’னு சொல்றாங்கள். எங்களுக்கு எல்லாம் வீடே வரலைன்னு கேட்டா, 'வரும்... வரும்’னு தப்பவே வழி பார்க்கிறாங்கள்.
யுத்தத்துல பாதிச்சு குடும்பத்தை இழந்தவங்களா இருந்தாலும், வீடு இல்லைன்னு சொல்றாங்க. குடும்பத்துல நாலு பேரு இருந்தாதான் வீடுனு சொல்றாங்கள். இந்தியன் வீட்டுத் திட்டத்துல நிறையக் குளறுபடிகள் நடக்குது'' என்றார் வேதனையுடன்.
போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு உதவவில்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அறிவிக்கப்பட்ட திட் டம்தான் 'இந்திய வீட்டுத் திட்டம்’. ஆமை வேக செயல்பாடுகளும், நடக்கும் முறைகேடுகளும் அதை நிரூபிக்கிறது.
முதலில் ஒரு வீட்டுக்கு ஒன்பது லட்ச ரூபாய் (இலங்கை ரூபாய்) என அறிவிக்கப்பட்டது. பின் ஏழு லட்சத்துக்கு வந்துள்ளது. இப்போது ஐந்து லட்சத்துக்கு வந்து விட்டது. ஆனால், இன்னும் சில ஆயிரம் வீடுகளைக்கூட முழுமையாக கட்டி முடிக்கவில்லை.
வீட்டை யாருக்குக் கொடுப்பது என்பதை முடிவுசெய்வது அரசு முகவர்கள். இவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு வீடுகளை ஒதுக்குகிறார்கள். 1,000 வீடுகளைக் கட்டத் திட்டம் போட்டால், 50 வீடுகள்தான் கட்டப்படுகின்றன. உண்மையில் இந்த நிவாரணப் பணம் மொத்தமும் இலங்கை அரசுக்குத்தான் போய்ச் சேருகிறது.
நேரடியாகக் கொடுத்தால் எதிர்ப்புக் கிளம்பும் என்பதற்காக, 'தமிழ் மக்களின் பெயரால்’ இலங்கை அரசுக்கு இந்தியா உதவுகிறது. அதேபோல், 'இந்திய அரசு மற்றும் மக்களின் அன்பளிப்பாக’ சென்ற சைக்கிள்கள் அனைத்தும் சிங்களர்கள் வாழும் தென் இலங்கைக்குத்தான் அதிகபட்சமாக சென்று அடைந்தது.
மெனிக் பார்மில் உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரைச் சந்தித்தேன். அவர், 'மெனிக் ஃபார்ம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு பிரிவுக்கு நான் பொறுப்பு. நான் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் உள்ளேன். மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அரசின் பக்கமும் தமிழ் கூட்டமைப்பின் பக்கமும் உள்ளனர்.
இப்போது இங்கு இருக்கிறதில் யார் நல்லவன், கெட்டவன்னு பார்க்க முடியவில்லை. அதனால், நான்கு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு பக்கம் உள்ளோம். எப்படியாவது ஒருவகையில் மக்களுக்கு உதவி கிடைக்காதா என்றுதான் யார் யார் பக்கமோ உள்ளோம். அப்படித்தான் சில உதவிகளை மக்களுக்குச் செய்து வருகிறேன்.
மக்களுக்கு அத்தியாவசியத் தேவையே இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மின்சாரம் இல்லை. பள்ளி க்குப் போகும் பிள்ளைகள், காலை ஆறு மணிக்கே இங்கிருந்து பேருந்துக்கு நடந்து செல்றாங்கள். பேருந்து இல்லாமையால் பள்ளியைவிட்டு சீக்கிரமே திரும்பி விடுகிறார்கள்.
இங்கே ஒவ்வொரு குடும்பத்துக்கும் நான்கு ஏக்கர் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அது அவர்களுக்குச் சொந்தமானது அல்ல. அதற்கு எந்தவிதமான சான்றுகளும் இல்லை. அரசோ, ராணுவமோ இது தேவை என்றால், கதைக்காமல் தந்துவிட்டுப் போகணும். மக்கள் வாழும் நிலத்துக்கான சான்றைக்கூட கொடுக்க அரசு ஒப்புக்கொள்ளவில்லை’ என்றார்.
மகன் காணாமல் போய் பிணமாகக் கண்ட ஒரு தாயைச் சந்தித்தேன். அவர், ''2007-ம் ஆண்டு என்ட மகன் காணாமல் போனான். தலை மயிர் வெட்டிட்டு வரன் என்று சொல்லி செட்டிக்குளம் போனவன், இரவாகியும் வரலை. அந்த நேரத்துல எங்களுக்கு போன் தொடர்பும் இல்ல.
போனவர் காணலை என்று எல்லா இடத்திலும் தேடினம். போலீஸ் இடமும் பொடியனை காணயில என்று சொன்னோம். எங்காவது தகவல் அறிஞ்சு பாருங்கள் என்று சொன்னது போலீஸ். செட்டிகுளத்தில் இருந்த இராணுவத்திடம்கூட பொடியனோட போட்டோவக் காட்டி, காணலை என்று கேட்டோம்.
என்ட மகனோடு மன்னார்ல இருந்த எங்கட வீடு கட்ட வந்த பொடியனும் போனது. அவனையும் காணயில. அவங்களத் தேடிப்போன இன்னொரு ஆளும் காணலை. பெரிய பெரிய ராணுவ முகாம்கள்லகூட போய் கேட்டுப் பாத்தம். எந்தத் தகவலும் இல்ல. மூன்றாம் நாள் விடிய பாடி கிடக்குதுன்னு தகவல் வந்தது.
யார் வம்புதும்புக்கும் போகாத பொடியன். மளிகக் கடைதான் வெச்சிருந்தான். இதுவரைக்கும் என்ட மகனை எதுக்கு யார் காட்டிக் கொடுத்தா, யார் கொன்னானுகூட எனக்குத் தெரியல. இன்னும் அந்த கடவுள்ட்ட மன்றாடிக்கிட்டுதான் இருக்கன், யார் என்ட பிள்ளைய கொன்னான்னு காட்டம்மான்னு'' கலங்கினார்.
அருகில் இருந்த நண்பர், ''நானும் இதற்குப் பயந்துதான் ஈராக் சென்று அங்கு இரண்டு வருடம் ஓட்டுநராக வேலைபார்த்தேன்'' என்றார்.
தகரமும் முள்வேலிக் கம்பிகளும் ஆங்காங்கே கிடந்தன. முகாம்களின் பெயரோடு நிவாரணக் கிராமங்கள் என்ற பலகைகள் இருந்தன. ஒற்றை இராணுவர் மட்டும் மூடப்பட்ட முகாம்களின் நுழைவாயிலில் உட்கார்ந்திருந்தார். முகாம்களின் வழிகள் தடுக்கப்பட்டிருந்தன. உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.
வவுனியாவுக்குத் திரும்பினேன். அங்கே தமிழ்க் கைதியாக இருந்து, விடுவிக்கக் கோரி உண் ணாவிரதம் இருந்தவேளையில் தாக்கப்பட்டு, உயிர் தப்பிய ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. உயிர் தப்பியவர் என்று குறிப்பிடக் காரணம், இவரோடு இருந்த தமிழ்க் கைதி நிமலரூபன் சிறையிலேயே கொல்லப்பட்டார்.
அவர், ''விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களைத் திருப்பிக் கொண்டு வரணும். இனி யாரும் அழைத்துச் செல்லப்படக் கூடாது என்றுதான் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினோம். இந்த வேளையில் நாங்கள் அதிகாரிகளிடம், 'நீங்கள் விசாரணைக்குக் கூட்டிச் செல்வது என்றால், நீதிமன்றம் ஊடாகக் கூட்டிப் போங்கள்’ என்றோம்.
அதிகாரிகள், 'அப்படி எல்லாம் சட்டம் இல்ல. நாங்க செய்வதுதான் சட்டம்’ என்று சமாதானம் பேசுவதுபோல் வந்துதான் கண்ணீர் புகைக்குண்டு அடிச்சுத் தாக்கினாங்கள். அப்பதான் வெலிக்கடா சிறையில இருந்த எங்கள மகர சிறைச்சாலைக்கு மாத்தனாங்கள். அங்கதான் நிமலரூபன் செத்தது.
கால், கை எல்லாம் எனக்கு உடைஞ்சது. இடிப்பு முறிஞ்சது. அது ஸ்குரு பூட்டப்பட்ட நிலையில்தான் இப்ப உள்ளது.
2008-ம் ஆண்டும் அக்டோபர் 28-ம் தேதி 10.45-க்கு இதே வீட்ல இருந்துதான் 'கொஞ்ச வேல இருக்கு... வாங்க, போய்ட்டு வருவம்’ என்றுதான் கூட்டிப் போனார்கள். கொஞ்ச தூரம் சென்று கையில் விலங்கை மாட்டி, கண்களைக் கட்டித் தாக்கினார்கள். பின் பாதுகாப்புச் செயலர் நீதிமன்ற அனுமதியோடு 90 நாட்கள் மேலதிக விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அனுராதபுர சிறையில் தனிமையில் அடைக்கப்பட்டேன்.
அங்கதான் என்னைச் சித்திரவதை செஞ்சாங்கள். அதுலதான் என்னோட கண் பார்வை பாதிக்கப்பட்டது. 2010-ல் நீதிமன்றத்துக்கு அழைத்துப் போனாங்கள். ஆயுதம் வைத்திருந்ததாகச் சொல்லி பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் என்னைக் கைது செய்துள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
உண்மையில் அப்படி என்னிடம் இருந்து எந்த ஆயுதத்தையும் எடுக்கவில்லை. எப்படியோ இப்ப நான் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கன். ஆனா, என்னால என்ட குடும்பத்துக்கு எந்தப் பயனும் இல்லை. ஒரு நடைப் பிணமாகத்தான் உள்ளன்'' என்று நொந்தார்.
இப்படியான அத்துமீறல் சட்டங்கள்தான், எல்லாத் தமிழர்களையும் ஊமையாக்கி, ஊனமாக்கி உலவ விட்டிருக்கிறது.
ஊடறுத்துப் பாயும்...
ஜூனியர் விகடன்
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam15_01
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam15_02
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam15_03
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம்16

Post by logu Sun Aug 11, 2013 6:08 pm

துரோகத்தால் பறிக்கப்பட்ட உயிர்தான் பாலச்சந்திரனதும். பாலகனைப் பாதகர்கள் கொன்று தீர்த்த படங்களைப் பார்த்து உலகம் இன்று வெம்பித் துடிக்கிறது. எல்லாப் பிள்ளைகளையும் போலவே தன் பிள்ளையையும் தேசத்துக்காகக் கொடுத்துவிட்டார் பிரபாகரன்.
நான் ஈழத்தில் இருந்தபோது பாலச்சந்திரன் பற்றிக் கேள்விப்பட்டதை இன்று படங்களாகப் பார்க்கும்போது இதயம் ரணமாகிறது!
வவுனியாவை விடுத்து திருகோண​மலையை அடையும்போது, மாலை 6.30. அடுத்த நாள் பிரபாகரன் பிறந்த நாள். திருகோணமலையின் உட்புற வீதிகள் இராணுவப் பரபரப்போடு இருந்தது.
இரவு ஓய்வு நண்பரின் வீட்டில் என்பதால், ஒரு வாடகை உந்தியில் கிளம்பினோம். வீட்டை அடை​வதற்கு சிறிது தூரத்துக்கு முன், இராணுவ சோதனைச் சாவடியில் சோதனை நடந்தது.
நவம்பரின் இறுதி வாரம் என்பதால், தமிழரின் வீரம் எங்காவது பதுங்கி​யுள்ளதா என்று நோட்டமிட சைக்கிளில் வந்த இராணு​வத்தினர் வீட்டுக்குள் டார்ச் அடித்துப் பார்த்தபடியே சென்றனர். நாங்கள் வீட்டை அடைந்தோம்.
கருணாவுக்கு இணக்கமான ஓர் ஆளை நான் சந்தித்த வேளையில் அவர், ''பிரபாகரன் உடலைக் கண்டறிய கருணாவைத்தான் அரசு அழைத்து வந்தது. அப்போது அவரது மகன் பாலச்சந்திரனைக் கண்டதாக கருணா எங்கள் சிலரிடம் கூறினார்.
'யாரோடு வந்தாய்?’ என்று பாலச்சந்திரனிடம் கருணா அப்போது கேட்டிருக்கிறார். 'அப்பாவோடுதான் வந்தேன்’ என்றானாம் அந்தச் சிறுவன். 'அப்பா எங்கே?’ என்று கருணா கேட்டிருக்கிறார். 'அப்பா எங்கேனு தெரியல’ என்று பாலச்சந்திரன் கூறியதாகக் கருணா சொன்னார்.
தன்னுடைய தந்தைக்கு என்ன ஆனது என்று தெரியாத, அறியாத, புரியாதவனாகத்தான் பாலச்சந்திரன் இருந்துள்ளான்’ என்று அவர் சொன்​னார்.
சனல் 4 இப்போது வெளியிட்ட புகைப்படத்தைப் பார்க்கும்போது, பாலச்சந்திரன் உட்கார வைக்கப்பட்டு இருக்கும் இடத்துக்கு வந்து கருணா பார்த்திருக்கலாம். அதன்பிறகுதான், அந்தப் பாலகனை சிங்கள கயவர்கள் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்றே முடிவுக்கு வர​வேண்டி உள்ளது.
தமிழன்... அதுவும் பிரபாகரனின் இரத்தம் என்றால், பத்து வயதுச் சிறுவன்கூட உயிரோடு இருக்கக் கூடாது என்று இனவாதம் முடிவெடுத்ததை இப்போதுதான் உலகம் உணர ஆரம்பித்துள்ளது. ஆனால், கருணாக்களுக்கு என்ன தண்டனை?
புலிகள் இயக்கத்தில் இருந்த வேளையில் கருணா பேசியது... ''போர் என்பதும் பேச்சுவார்த்தை என்பதும் அவர்களுக்குப் பழக்கப்பட்ட விடயம். பல தடவை நாங்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம். ஒவ்வொரு தடவையும் சிங்கள அரசு எங்களை ஏமாற்ற முற்படும்போது, நாங்கள் ஒவ்வொரு படி வளர்ந்து இருக்கிறோம்.
'இலங்கை என்ற தீவுக்குள் தமிழர்களின் சுயநிர்ணயம், தேசியம், எங்களது தாயக பூமி என்ற அடிப்படையில் தீர்வினைக் கேட்டுள்ளோம். அந்தத் தீர்வு தர வேண்டும். அல்லாவிட்டால், நாங்கள் பிரிந்து செல்வோம்’ என்ற விடயத்தை தலைவர் கூறியுள்ளார்.
ஆகவே அதைத் தருவதா, இல்லையா என்பது சிங்கள அரசாங்கத்தைப் பொறுத்தது. அவர்கள் தரா​விட்டால், நாங்கள் எடுப்போம். அதில் மாற்றம் இல்லை.'' அதே கருணா 2009 போருக்குப் பின்னர் பேசிய வார்த்தைகள் இவை...
''அமெரிக்கப் படைகளும் பிரிட்டிஷ் படைகளும் ஈராக்கிற்குள் நுழைந்தபோது மனிதாபிமான நடவடிக்கை என்றனர். அந்த மக்களை மீட்கப் போகிறோம் என்றனர். இதேபோல்தான் ஆப்கானிஸ்தானுக்குள் போகும்​போதும் கூறினர். ஆனால், அதைவிட பெரிய மனிதாபிமான நடவடிக்கைதான் எமது பிரதேசத்​தில் நடக்கிறது.
வன்னியிலே பிரபாகரனின் கொடிய பிடிக்குள் சிக்கி இருந்த தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமானப் பணியைத்தான் இராணுவம் (சிங்கள இராணுவம்) செய்து வருகிறது. இன்று வட கிழக்கில் வாழ்கிற மக்கள், எமது ஜனாதிபதி (மகிந்த ராஜபக்ச) கரங்களைப் பலப்படுத்தத் தயாராக இருக்கிறார்கள்.''
கருணா போன்றவர்களின் துரோகச் சுவடுகள்​தான் லட்சக்கணக்கான தமிழர்களைக் காவு வாங்கியது என்பதை நான் சந்தித்த பலரும் சொன்னார்கள். 'இந்தத் துரோகங்கள் இன்று வேண்டு​மானால் மறைக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், காலமும் வரலாறும் மறைக்காது; மன்னிக்​காது’ என்று, ஈழத் தமிழர்கள் பலர் கூறிய 'துரோகம்’ என்ற வார்த்தைதான் என் செவி ஓட்டங்களில் சத்தமாய் ஒலித்துக் கொண்டுள்ளது.
மறுநாள்... பிரபாகரன் பிறந்த நாளின் பகல் பொழுது. பகல் வேளை என்பதால் இராணு​வத்​தின் நடமாட்டம் சற்று தாழ்ந்திருந்தது. கன்னியா வெந்நீர் ஊற்றை நோக்கிச் சென்றோம். இது, இந்துக்களின் பிரசித்திபெற்ற ஸ்தலமாக இராவணன் வரலாறு கொண்டதாக இருந்தது.
இங்கு இயற்கையாகவே ஏழு வெப்ப நிலைகளில் ஏழு வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. ஆனால், அதுவும் இப்போது புத்த வரலாறுகள் கொண்டதாகி விட்டது. அங்கு செல்லும் வழியில், பெயர்ப் பலகையில் தமிழில் இருந்த தெருப் பெயர்களை அழித்திருப்பதைக் கண்டேன்.
கன்னியா வெந்நீர் ஊற்றை அடைந்தேன். அது, பௌத்த ஸ்தலமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. வரலாற்றுபடி, 'பத்துத் தலை படைத்த ராவணன் தன் தாயாருக்கு இறுதிக் காரியங்கள் செய்வதற்காக தன் உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்திய​தாகவும், அந்த இடங்களில் இருந்து வெந்நீர் ஊற்று உருவாகியதாகவும்’ கூறப்படுகிறது.
அந்த வெந்நீர் ஊற்றுகள் தமிழர்களின் மனங்களைப்போல ஒவ்வொரு கொதிநிலையில் கொதித்துக்கொண்டு இருந்தன. இறந்தோரின் 31-ம் நாள் காரியங்களை இந்துக்கள் இங்கு செய்யும் வழக்கம் உள்ளது என்று அருகில் இருந்த நண்பர் கூறினார்.
சிவன் கோயில் அருகே கழிவறை இருந்தது. சதுரமாக இருந்த விநாயகர் கோயிலின் அடித்​தளம் இடிக்கப்பட்டு, இடிக்கப்பட்ட இடம் வட்ட வடிவில் புத்தவிகாரை வடிவம் போல மாற்றப்பட்டு இருந்தது. புத்த ஆக்கிரமிப்புக்கு மேலாக, தமிழர்கள் சார்ந்ததை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே தூக்கலாக உள்ளது.
கன்னியா வெந்நீர் ஊற்றுத் தலத்தை எப்படி எல்லாம் சிங்களர்கள் ஆக்கிர​மித்தனர் என்பதை, அதைத் தமிழர் வசம் மீட்பதற்காக நீதிமன்றத்தில் வாதாடியவர் கூறினார். 'சமாதானக் காலத்தில்தான் சிங்களவர்கள் கன்னியா ஊற்றுக்கு வரத் தொடங்கினர். அவ்விடத்தை புத்த வரலாறு கொண்டதாக அவர்கள் எண்ணு​கின்றனர்.
 அப்படி வந்த ஒரு புத்த பிக்கு, அங்கு கோயில் கட்டுமான வேலைகள் நடந்ததைக் கண்டுவிட்டு, 'புத்த புனித ஸ்தலத்தில் ஆக்கிரமிப்பு வேலைகளும், அதை இடிக்கும் வேலைகளும் நடக்கின்றன’ என்று அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அங்கிருந்த பூசாரி அம்மாதான் இந்த வேலைகளுக்கு எல்லாம் காரணம் என்று பொலிஸ் எண்ணியது. அந்த அம்மாவின் முன்னோர்கள் இதே கோயிலுக்கு சொந்தமானவர்கள்தான் என்பது இங்கு சொல்ல வேண்டிய ஒன்று. ஆனால், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
வழக்கு நீதிமன்றத்துக்கு வந்துபோது சரியான வாதத்தை சிங்களத் தரப்பால் வைக்க முடியாத காரணத்தால், வழக்கு தள்ளுபடியானது. ஆனால், இவ்வளவு காலம் கடந்து சிங்கள அரசின் பிடியில் அதிகாரம் சென்றதால், எப்படியோ அதுவும் இன்று புத்த ஸ்தலமாக மாறிவிட்டது’ என்றார்.
அதேபோல் கன்னியா ஊற்று அருகே 'வில்கம் விகாரை' என்ற புத்த ஸ்தலம். இது சோழர் காலத்தில் தமிழ் பௌத்தர்களுக்காகக் கட்டப்பட்டது என்றும், இங்கு சிவன் கோயில் இருந்தது என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதுவும் சிங்களவர்களுக்கு உரியதாகி விட்டது.
அடுத்து சம்பூர் அனல் மின் நிலையத்துக்காக நிலம் அபகரிக்கப்பட்டு துரத்தப்பட்ட தமிழ் மக்களின் முகாம்களுக்குச் சென்றோம். வெளியாட்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடை​யாது. இடம்பெயர்ந்தோர் முகாம்களே இலங்கையில் கிடையாது என்று கூறிவரும் இலங்கை அரசு, இந்த முகாம்களுக்கு என்ன பெயர் சொல்லப்போகிறது?
தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களையும் சிங்கள முகாம்​களைப் போலே வைத்துள்ள இந்திய அரசு, இலங்கையில் நேரில் ஆய்வுசெய்துவிட்டு முகாம்களே இல்லை என்று சொல்லிய பொய்க்கு என்ன பதில் சொல்லப் போகிறது? எவ்வளவு அப்பட்டமாக இன்னொரு நாட்டின் மக்களை தங்களின் தேவைக்கு காந்தீய தேசம் அடிமைப்​படுத்தி வைத்திருக்கிறது!
இலங்கையின் திரிகோணமலை மாவட்​டத்தைச் சேர்ந்த கடற்கரைச் சேனை, சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித் தீவு ஆகிய கிராமங்களில் இருந்து உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக 'மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம்’ சில கோரிக்கைகளை இந்திய பிரதமருக்கு 12.06.2008-ல் அனுப்பியது. அதில்,
'1. அனல் மின் நிலையத்துக்கான இலங்கை - இந்தியக் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், எமது கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ள ஒதுக்கீட்டை, மீள்பரிசீலனைசெய்து ரத்து செய்யுங்கள்.
2. அதற்குப் பதிலாக கிராமங்கள், குடியிருப்புகளைப் பாதிக்காத வகையில் நில ஒதுக்கீட்டை மேற்கொள்ள உதவுங்கள்.
3. மக்கள் வாழ்வதற்குப் பொருத்தமற்ற பிரதேசங்களில் எம்மைக் குடியேற்றும் முயற்சியைத் தடுத்து, சொந்தக் கிராமங்களிலேயே மீள் குடியேற்றம் செய்யுங்கள்.
காந்தி தேசத்தின் கருணையை தங்கள் மூலமாக எதிர்பார்க்கிறோம், என்று அந்தக் கோரிக்கைக் கடிதம் முடிவுறு​கிறது.
அதேசங்கம் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில், 'இப்படியான நில ஆக்கிரமிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சுமார் 8,000 மக்களின் வாழ்விடங்கள் பறி போகும்.
தனித்தமிழ்ப் பிரதேசமான மூதூர் கிழக்கு படிப்படியாக அபகரிக்கப்பட்டு, இங்கு வாழும் 18 ஆயிரம் மக்களும் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்படுவர்.
எம் தமிழ் மன்னன் இராவணனின் நினைவுகளோடு நிலைத்திருக்கும் திருகோணமலையின் இதய பூமி, சோழ மன்னர்களின் காலடிபட்ட சொர்க்க பூமி, அவர் ஆட்சிக் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்ற வரலாற்றுப் புகழ் மிக்க இந்தப் பிரதேசம் பேரினவாதப் பிடியில் சிக்கி காணாமல் போய்விடும்.
இதைத் தடுத்து நிறுத்தி இந்தப் பேராபத்தில் இருந்து இந்தப் பிரதேசத்தைக் காப்பதற்கும், நாம் மீண்டும் குடியேறி இயல்பு வாழ்வை மீட்டுக்கொள்வதற்கும் தங்களின் தயவை எதிர்பார்க்கின்றோம்.
இந்திய அரசுடன் தாங்கள் கொண்டுள்ள உறவையும், காங்கிரஸ் கட்சிக்குள் தங்களுக்குள்ள தனித்துவமான செல்வாக்கையும் பயன்படுத்தி, இந்த இக்கட்டான நிலையில் இருந்து எம்மை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நம்பிக்கை​யுடன் காத்திருக்கின்றோம்’ என்று அந்தக் கடிதம் நிறைவடைகிறது.
அந்தச் சங்கம் திருகோணமலையில் இப்படியான சிங்கள ஆக்கிரமிப்புகள் நடந்து விடும் என்று எச்சரித்த ஆக்கிரமிப்புகள் இன்று நடந்தே விட்டன. தமிழர்களின் இதய பூமி நாசகதி ஆக்கப்பட்டுள்ளது.
அனல் மின்நிலைய நில ஆக்கிரமிப்புக்காகத்தான் 2006-ல் புலிகள் மீதான தாக்குதல் என்ற பெயரில் சம்பூர் மக்கள் மீது செல்குண்டு தாக்குதல் நடத்தப்​பட்டு உயர் பாதுகாப்பு வளையமாக தமிழர் கிராமங்கள் மாற்றப்பட்டது. அந்த இடத்தில் நிற்கிறேன்!
ஊடறுத்துப் பாயும்...
ஜூனியர் விகடன்
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam16_01
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam16_02
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 17

Post by logu Sun Aug 11, 2013 6:09 pm

வெளிநாட்டுச் சுரண்டல் நிறுவனங்களுக்குக் காடுகளைத் தாரைவார்த்துவிட்டு பூர்வகுடிகளை வெளியேற்றி வரும் இந்திய அரசு, மற்றொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையில் எப்படித் தலையிடுவது என்று சொல்லிக்கொண்டே இலங்கையில் தமிழ் மக்களின் நிலங்களைப் பறிப்பதற்கு உதவியுள்ளதுதான் வேதனை.
அதைப் பற்றிய நிலவரங்களை அறிய, அரசியல் சார்ந்த நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர், 2006 காலப் பகுதியில் சம்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நிலங்கள், அனல் மின் நிலையக் கட்டுமானத்துக்காக� என்று அப்போது கூறப்பட்டது. ஆனால், இந்த ஆறு வருட கால ஓட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன.
இலங்கையின் மின்சார சபையோடு இணைந்து இந்திய நிறுவனம் ஒன்றும் அனல் மின் நிலையப் பணிகளில் ஈடுபடும் என்று சொல்லப்பட்டது.  அதற்கான செலவுகளை இந்தியாவும் இலங்கையும் சரிபாதியாகப் பகிர்ந்துகொள்ளும் என்று ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.
ஆனால், அந்த ஆக்கிரமிப்புப் பகுதிகள் இராணுவத்துக்கு சொந்தமானதாக மாறி விட்டதே தவிர, எந்த அனல் மின்நிலையப் பணிகளும் இப்போது வரை நடப்பதாகத் தெரியவில்லை.
அங்கிருந்து நாங்கள் துரத்தி அடிக்கப்படும்​போது, நிராதரவாகத்தான் ஓடி வந்தோம்.
இந்த ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் அனல் மின் நிலையம் கட்டி அதில் கிடைக்கும் லாபத்தைவிட பல மடங்கு லாபத்தை விவசாயத்திலும் மீன்பிடியிலும் எடுக்கலாம். அந்த அளவுக்கு வளமான விவசாய பூமி இது.
இங்கிருந்த எங்கள் வீடுகள், கோயில்கள், பள்ளிகள், பொதுக் கட்டடங்கள் எல்லாமே இடிக்கப்பட்டு விட்டன. இந்தப் பகுதிகளைப் பார்ப்பதற்குக்கூட அனுமதி கிடையாது. எங்கள் சொந்தக் கிராமங்களை விட்டு அகதி முகாம்களில் இன்று இருக்கிறோம்.
பொட்டல் காணிகளைக் காட்டி அரசும் இராணுவமும் அங்கு குடியேறச் சொல்கிறது. எங்கள் காணிதான் எங்களுக்கு வேண்டும். நாங்கள் ஏன் அடுத்தவர் காணியில் இருக்க வேண்டும்? என்று ஆறு ஆண்டுகளாகப் போராடுகிறோம்.
அதனால், எங்களுக்குக் கொடுத்துவந்த நிவாரணப் பொருட்களையும் நிறுத்தி விட்டனர். நிதிகளும் நிறுத்தப்பட்டு விட்டன. எப்படியெல்லாமோ எங்களைத் துரத்த வழி தேடுகிறது அரசு.
இத்தனை காலம்தான் எங்களை வாழவிடவில்லை. இப்போதுமா? நாங்கள் இந்தியாவுக்கு என்ன பாவம் செய்தோம். இந்தியாவை எங்கள் நாடுபோலத்தானே பார்த்தோம்? இப்போதும்கூட எங்கள் வீட்டுச் சுவர்களில் இந்திய சுதந்திரத்துக்காகப் போராடியவர்களின் படங்களைத்தானே மாட்டிவைத்து இருக்கிறோம்?
ஆனால், ஆறுதலுக்குக்கூட எங்களுக்கு இந்தியா நல்லது செய்ய விரும்பவில்லை என்று வெம்பினார் அவர். கூடவே வானமும் தன் பங்குக்குக் கண்ணீர் சிந்த ஆரம்பித்தது.
மழையிலேயே அங்கிருந்து கிளம்பினோம். வழியில் புலிகள் கட்டி இருந்த நீதிமன்றம் ஒன்றைக் கண்டோம். அது சேதம் அடைந்து இருந்தது. அதன் முன்சுவரில் காரல் மார்க்ஸின் தத்துவ வரிகள் எழுதப்பட்டு இருந்தன.
அப்போது நண்பர்,  உலகத் தலைவர்கள் கனவு கண்ட தேசமாக எங்கள் நாடு இருந்தது. ஓர் பெண் தைரியமாக இரவில் போகலாம். அறிவாளர்களைக் கொண்டாடிய நாடாக இது இருந்தது.
நீதிகளைக் காத்த மன்றம் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? புலிகள் காலத்தில் சொத்து வழக்கே இரண்டு மாதங்களுக்கு மேல் நடக்காது. அனைத்து வழக்குகளும் இரண்டு மாதங்களில் முடிந்து விடும். நான் புலிகள் காலத்தில் வாழ்ந்தது எல்லாம் கனவு போல உள்ளது'' என்றார்.
உப்பாறு பாலத்தைக் கடந்தோம். நண்பர் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். முன்பு இந்தப் பாலத்தின் அந்தப்பக்கம் புலிகளும் இந்தப் பக்கம் இராணுவமும் இருந்தனர். புலிகள் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழையும்போது கடுமையான சோதனைகள் நடக்கும்.
உணவு எடுத்து சென்றால்கூட, ஒரு வருக்குத் தேவையான உணவை மட்டும்தான் எடுத்துச் செல்ல வேண்டும். அந்த அளவுக்குக் கட்டுப்பாடு. இந்தப் பாலத்தின் மையப் பகுதியில் நடந்த சண்டையின் இறுதியில் இராணுவத்தினர் 48 பேர் கொல்லப்பட்டனர்.
அதில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் தப்பித்து தாய்லாந்துக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து பல மாதங்கள் கழித்து வந்த அவர், மீண்டும் இராணுவத்தை அழைத்து வந்து புலிகள் மீது இருந்த கோபத்தைத் தீர்த்துக்கொள்ள மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றார் என்ற போது, சிங்கள வன்மம் எப்படியெல்லாம் ஊட்டப்பட்டுள்ளது என்பதை உணர முடிந்தது.

திருகோணமலை நகரத்தை நெருங்கினோம். திருகோணமலை, தமிழீழத்தின் தலைநகரம் என்று புலிகளால் அறிவிக்கப்பட்ட நகரம். இந்தத் தலைநகரின் துறைமுகத்தைத்தான் அமெரிக்கா, புலிகளிடம் கேட்டதாகக் கூறப்படுகின்றது.
உலகின் மிக முக்கிய இயற்கைத் துறைமுகங்களுள் திருகோணமலைத் துறைமுகமும் ஒன்று. இந்தத் துறைமுகம்தான் இரண்டாம் உலகப் போரின்போது தென்கிழக்கு ஆசியத் தலைமையகமாகச் செயல்பட்டது.
இங்கிலாந்திடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகும், இங்கு இங்கிலாந்தின் கடற்படைத் தளம் இருந்தது. 1957-க்குப் பிறகுதான் அது அகற்றப்பட்டது.
அதேவேளையில், 1951-ல் இலங்கையுடனான ஒப்பந்தப்படி, 'வாய்ஸ் ஒப் அமெரிக்கா நிகழ்ச்சிகள்� சிலோன் ரேடியோ மூலம் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது.
இதன் மூலம் ஆசியக் கண்டத்துடனான தன் தொடர்பை அமெரிக்கா தக்கவைத்து இருந்தது.
இந்தத் துறைமுகத்தைப் புலிகள் அன்று அமெரிக்காவிடம் கொடுத்திருந்தால், இந்தியாவின் பாதுகாப்புப் பிடி அமெரிக்காவின் கையில் 25 ஆண்டுகளுக்கு முன்பே போயிருக்கும். 1987-ல் ஜெயவர்த்தன-ராஜீவ் காந்தி ஒப்பந்தத்தில் திருகோணமலை துறைமுகம் பற்றிய குறிப்புகள் முக்கியமானவை.
இந்திய நலனுக்குக் குந்தகம் விளையும் என்பதால், திருகோணமலையோ அல்லது வேறு எந்த இலங்கைத் துறைமுகமோ, எந்த அயல்நாட்டின் ராணுவ உபயோகத்துக்கும் தரப்படக் கூடாது என்கிறது அந்தக் குறிப்பு.
இலங்கையின் துறைமுகங்கள் மற்ற நாட்டுக்கு சென்றால், இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று அன்றே எண்ணப்பட்டது. ஆனால் இன்று, இலங்கையின் பல துறைமுகங்கள் சீனாவின் வசம்.
இப்படி ஒப்பந்தத்தை மீறி இந்தியப் பாதுகாப்புக்கு ஆபத்தாக சீனாவுக்கு இடம் அளித்துள்ள இலங் கைதான் இந்தியாவுக்கு நட்பு நாடா?
ஊடறுத்துப் பாயும்...
ஜூனியர் விகடன்
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam17_01
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam17_02
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம்18

Post by logu Sun Aug 11, 2013 6:10 pm

திருகோணமலையை அடையும்போது மழை சற்று ஓய்ந்திருந்தது. கடற்கரையை ஒட்டிய பகுதியில் தமிழீழ விடுதலை இயக்கத்தால் (டெலோ)  நிறுவப்பட்ட 'வெலிக்கடைத் தியாகிகள் நினைவுத் திறந்தவெளி அரங்கம்’ இருந்தது. அந்த எழுத்துக்கள் இலங்கையின் 65-வது சுதந்திரத் தினத்தின்போது அழிக்கப்பட்டுவிட்டன.
திருகோணமலையில் உள்ள 'திருக்​கோணஸ்வரம் ஆலயம்’ இலங்கையில் உள்ள மிக முக்கிய கோயில்களுள் ஒன்று. ஆலயத்தின் கீழ் பகுதியில் எல்லாம் இராணுவ மையங்கள்தான் இருந்தன. 'கடவுள் இல்லாத இடமே இல்லை’ என்று ஆத்திகர் கூறுவர். 'தமிழர் பகுதிகளில் இராணுவம் இல்லாத இடமே இல்லை’ என்பதுதான் இப்போதைய நிலை.
அன்று மாலையே மட்டக்களப்புக்குப் புறப்பட்டேன். வழிகளில் காடுகளை நோக்கி இராணுவம் துப்பாக்கி ஏந்தி நின்றது. 'மாவீரர் நாளை’ எங்காவது கொண்​டாடி விடுவார்களா என்ற எச்சரிக்கை உணர்வு. இராணுவ ஆதிக்கத்​தால் தமிழ் மக்களே மாவீரர் நாளை மறக்க நேரிட்டாலும், இராணுவம் மறக்கவிடாது போலும்.
மாவீரர் நாளும் கார்த்திகை விளக்கீடும் ஒரே நாளில் வருவதால், 'விளக்குகள்’ ஏற்றப்படும் என்ற பதற்றம் இராணுவத்திடம் இருந்தது. மட்டக்களப்பை வந்தடைந்தேன்.
விடுதிகளில் அன்று தங்குவது சிரமம். 'உங்கள் பெயர் தமிழ்ப் பிரபாகரன் என்று இருக்கிறது. இந்தப் பெயருக்கு அறை கேட்டால், சந்தேகத்​தோடு பார்ப்பார்கள். ஒருவேளை அவர்கள் இராணுவத்துக்குக்கூட தகவல் தர நேரிடும்’ என்று என்னை இரவு தங்க வைப்பதற்கு உடனிருந்த நண்பர் மிகவும் சிரமப்பட்டார். நண்பர் இந்த அளவுக்கு அஞ்சியதற்குக் காரணம், கருணாவின் ஆட்கள் மட்டக்களப்பு எங்கும் திரிவார்கள் என்பதுதான்.
மாவீரர் நாள் வந்தது. முந்தைய இரவின் நெடுநேரம் வரையில் புலிகள் காலத்தில் மாவீரர் நாள் எப்படியிருக்கும், எவ்வளவு பலத்துடன் புலிகள் நிலைகொண்டு இருந்தார்கள் என்பதைக் கண்கள் கலங்க விவரித்தார்.
அத்தோடு, எங்களின் சுதந்திரத்தை வைத்து தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் எப்படி எல்லாம் அரசியல் செய்கிறார்கள் என்று வேதனையை வெளிப்படுத்தினார். சுதந்திரமற்று வாழ்வது என்பது எவ்வளவு கொடியது என்று தமிழர் நிலங்களில் வாழ்ந்து பார்த்தால் தெரியும்.
உண்மையில் இப்போதைய நிலைமையில் அரசியல் தளத்தில் தமிழ் மக்கள் எந்தக் கட்சியையும் நம்பவில்லை. அவர்கள் எல்லாம் தங்களை​ வைத்துப் பிழைத்துக்கொண்டு உள்ளார்கள் என்பதை இந்த நண்பரைப்போல் பலர் புரிந்துவைத்துள்ளனர்.
அரசியல்வாதிகளுக்குத் தேவை வரும்போது மட்டும் தமிழ் மக்களுக்கு உரிமை என்ற முழக்கம் ஓங்கும். ஆனால், அந்தத் தமிழ் மக்களுக்காகப் போராட ஒருபோதும் அரசியல் தலைமைகள் ஒற்றுமையாக நின்றது இல்லை. சிங்களவர்களோ 'சிறு துளி பெரு வெள்ளமாக’ உள்ளார்கள், தமிழர்களோ 'பெரு துளி சிறு வெள்ளமாக’க்கூட இல்லை'' என்ற வேதனையை, நான் பார்த்த தமிழ் மக்கள் அனைவருமே சொன்னார்கள்.
மாவீரர் நாளும் விடிந்தது. ஆசிரியர் ஒருவரைச் சந்திக்கச் சென்றோம். அவர், ''போருக்குப் பின்னால சமாதானம் என்று சொல்லப்படுகின்றது. மக்கள் ஒற்றுமையா இருக்காங்கள், நிம்மதியா இருக்காங்கள், சமாதானத்தோடு இருக்காங்கள், போராட்டம் இல்லாம இருக்காங்கள் என்று வெளியில் சொல்கிறார்கள்.
ஆனால், சமாதானம் என்ற பெயரில் மிகத் திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம் தமிழர் பகுதிகளில் நடக்கிறது. உண்மையில் தமிழ் ஆட்களுக்கு இன்னும் சரியான தீர்வு கொடுக்கப்படவில்லை. தீர்வைக் கொடுக்காது எந்தளவுக்கு இழுத்தடிக்க முடியுமோ... எந்தளவுக்கு மூடி மறைக்க இயலுமோ... அந்தளவுக்கு தமிழர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். விடுதலைப் புலிகள் இல்லை. அதிகாரத்தைத் தர வேண்டிய அவசியமும் இல்லை. ஆனாலும், இப்பவும் தீர்வுக்கு அரசு எண்ண​வில்லை.
இப்போது கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள், சிங்கள நிர்வாகம் என சிங்களத் தரப்பு ஆக்கிரமிப்புகள் அதிகமாக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகமாக இருந்தது, இன்று சிங்களமயமாக்கப்பட்டு இருக்கிறது. வர்த்தகங்கள், மருத்துவம் பார்க்கக்கூடிய ஆட்கள், மற்ற வேலைக்கு அமர்த்தக்கூடிய ஆட்கள் என மட்டக்களப்பில் எல்லாமும் சிங்கள மயம்.
இன்னைக்கு வடகிழக்கு முழுக்க போலீஸ் ஸ்டேஷன் இருக்கு. ஒரு ஸ்டேஷன்லகூட தமிழ்ல கதைச்சுப் புகார் கொடுக்க முடியாது. இவர்களின் நோக்கம் எல்லாம் தமிழர்களைத் தனித்து வாழவிடக் கூடாது. தனித்து வாழவிட்டால், மீண்டும் போராட்டம் வரும். மீண்டும் உரிமை கேட்பார்கள் என்பதை எண்ணித்தான், இந்த வேலை நடக்கிறது.
ஒரே குடும்பம் என்று சொல்லிக்கொண்டு, எப்படியெல்லாம் எங்களை அழிக்கணுமோ, அப்படியெல்லாம் அழிக்க வேலைகள் நடக்கிறது. தமிழனைத் தலையெடுக்க விடாமல், விழுந்தவனை அப்படியே புதைக்கும் வேலையைத்தான் இன்று சிங்கள தேசம் செய்கிறது. தமிழர்களாகிய நாங்கள் இன்று அனாதைகளாக உள்ளோம்.
மட்டக்களப்பில் இப்போது உள்ள சுற்றுலா பகுதிகள் மிரட்டப்பட்டு, மகிந்த ராஜபக்ச குடும்பத்தால் பறிக்கப்படுது. பாக்கு குடா என்ற இடம், மிகவும் அழகான கடற்கரைப் பகுதி. கடலில் குளித்துக்கொண்டே இருக்கலாம். அலையே அடிக்காது. இது மாதிரியான இடங்கள் ராஜபக்ஷே குடும்பத்தால் மிரட்டி வாங்கப்பட்டு, பெரிய பெரிய சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. பணம் பெருகும் எல்லா இடத்திலும் ராஜபக்ச குடும்பம் இருக்கும். அல்லது கருணா, பிள்ளையான் கும்பல் இருக்கும்.
இந்த நிலத்தில் நாங்கள் 24 மணி நேரக் கண்காணிப்பின் கீழ் வாழ்கிறோம். இன்றைய அளவில் மட்டக்களப்பில் மட்டும் 26 ஆயிரம் விதவைகள் இருக்கின்றனர். வடகிழக்கை மொத்தமாக எடுத்துக்கொண்டால் 89 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாக உள்ளனர். இவர்களில் இப்பவும் பல பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிறார்கள்.
பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. தமிழ்ப் பெண்களை விதவைகளாக்கியது சிங்கள அரசப் பயங்கரவாதம்தான். இன்னும் 100 ஆண்டுகளானால், ராஜபக்சவுக்குப் பின்னால்கூட சிங்கள அரச துவேஷத்திடம் இருந்து எங்களுக்கு விடிவோ, உரிமையோ கிடைக்காது.
என்னோட சிறிய வயசில் நடந்த சில கொடூரமான சம்பவங்கள் என் மனதில் நீங்காத் துயராய் இராணுவத்தின் மிருகத்தனத்தை எனக்கு தினமும் உணர்த்திக்கிட்டே இருக்கு. 1990 காலப்பகுதியில் பெரும்பாலான அழிப்பு சம்பவங்கள் நடந்துச்சு. கொக்குவில் என்ற கிராமத்தைச் சுற்றிவளைச்சு மக்களை கொன்று அங்கேயே புதைத்தாங்கள்.
1990 ஜூன் மாதத்தில் தமிழ் மக்கள் 50 ஆயிரம் பேர் அகதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் தங்கி இருந்தனர். அந்த மாதத்தில் ஒருநாள் விடியற்காலை இராணுவம் பல்கலைக்கழகத்தைச் சுற்றி வளைச்சு, பெண்களையும் ஆண்களையும் தனிமைப்படுத்தினார்கள். ஆண்களை மட்டும் விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்று வரிசையாக உட்காரவைத்தார்கள்.
நானும் ஒருவனாய் அங்கு உட்கார்ந்திருந்தேன். மைதான நுழைவாயிலில் ஆறு தலையாட்டிகள் (முகமூடி அணிந்த காட்டிக்கொடுப்பவர்கள்) வரிசையாக நிறுத்தப்பட்டார்கள். ஒருவர் ஒருவராக நகர்த்தப்பட்டோம். இந்தச் சோதனையில் ஒரு தலையாட்டி தலையாட்டினாலும், சட்டையைக் கழட்டிக் கைகளும் கண்களும் கட்டப்பட்டு இராணுவப் பேருந்தில் ஏற்றுவார்கள்.
தலையாட்டிகளை நெருங்கினேன். ராணுவ ஆள் ஒருவர் என்னை தலையாட்டிகளின் முன் தள்ளினார். ஐந்து தலையாட்டிகள் என்னை சந்தேகிக்கவில்லை. கடைசித் தலையாட்டியிடம் வரும்போது என் இதயம் நடுங்கியது. என்னை சந்தேகப் பார்வையிலேயே பார்த்தான். 'நீ சென்ட்ரல் காலேஜ்தானே’ என்றான்.
நான் 'இல்லை’ என்பதற்குள், என்னைத் தள்ளிவிட்டான். என் உயிர் தப்பியது. ஆனால், இந்த தலையாட்டிகள் சொன்னதால், 153 பேர் ராணுவ பேருந்தில் ஏற்றப்பட்டனர். முனாப் என்ற ராணுவ அதிகாரிதான் இந்த ராணுவப் பிரிவுக்கு தலைமைத் தாங்கினார். ஏற்றப்பட்ட யாருமே விடுதலைப் புலிகள் இல்லை.
எல்லாருமே சாதாரணமானவர்கள், அப்பாவிகள். இவர்கள் நாவலடி என்ற பகுதிக்குக் கொண்டுசென்றதாகத் தகவல். அங்கு 153 பேரும் சித்ரவதை செய்யப்பட்டு மயக்கமுற்ற நிலையில், உயிரோடு டயர்கள் அடுக்கப்பட்டு எரிக்கப்பட்டனர். இது மட்டக்களப்பின் அதிபயங்கர சம்பவங்களுள் ஒன்று.
இளைஞர்களை அழிப்பதன் மூலம் போராளிகள் உருவாகாமல் தடுக்கலாம் என்று சிங்கள இராணுவம் எண்ணியது. இவர்கள் எல்லோரும் பின்னர் காணாமல்போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்துக்கு விசாரணைகள், விசாரணை கமிஷன் என்று எதுவுமே கிடையாது.
மனித உரிமை அமைப்புகள் எதுவும் வாய் திறக்கவில்லை. இதைப் போல் ஆயிரக்கணக்கான சம்பவங்கள் இந்த மண்ணில் நடந்துவிட்டன. நாடு அமைதியாகிவிட்டது என்கிறார்கள். அமைதியாகவில்லை. மயானமாகிவிட்டதால் அமைதியாய் தெரிகிறது'' என்றார்.
அப்படி தங்கள் உரிமையையும் உயிரையும் மண்ணையும் காப்பதற்காக சாவுண்ட மாவீரர்களின் நாள் இது. 'அதே தினத்தில் கார்த்திகை விளக்கீடும் வந்துள்ளது. மாவீரர்களின் ஆசியால் அந்த முருகன் கொடுத்த வரம்தான்’ என்று நாங்கள் பார்க்கச்சென்ற பூசாரி கூறினார்.
வீடுகளிலும் கோயில்களும் கடைகளிலும் ஏற்றப்பட்டு இருந்த விளக்குகளைப் பார்த்து எனக்குக் கண்கள் பனித்தன.
- ஊடறுத்துப் பாயும்
ஜூனியர் விகடன்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம்19

Post by logu Sun Aug 11, 2013 6:11 pm

ஆண் சிங்கம், பெண் மனுசி... இந்தக் கலப்பில் தோன்றியதே சிங்கள இனம். அதாவது, மிருகத்துக்கும் மனிதனுக்கும் இடையேயான பிறப்புதான் சிங்களப் பிறப்பு!  இந்த மகாவம்ச வரலாற்றை பயண இடை​வெளி​களில் சொல்லிக்கொண்டே வந்தார் நண்பர். மகாவம்சம் என்ன சொல்கிறது?
இந்தியாவில் வங்க மக்களுக்குச் சொந்தமான நாட்டில் இருந்த அரசன், கலிங்க நாட்டு அரசனின் மகளை மணக்​கிறான். அவர்களுக்குப் பிறந்த பெண் பருவம் அடையும்போது, சோதிடம் கணிக்கப்படுகிறது.
சோதிடர்கள் அரச​னுக்குக் கூறிய செய்தியால் அவன் அதிர்ச்சி​யடைகிறான். 'இந்தப் பெண் காமத்தின் மிகுதியால் மிருகத்துடன் உறவு கொள்வாள்’ என்று சோதிடர்கள் கணித்ததுதான் அரச​னின் அதிர்ச்சிக்குக் காரணம். அதன்பிறகு, மகளை அரசன் கண்டுகொள்வதே இல்லை.
பிறகு, அவள் ஒரு நாடோடி கும்பலோடு சேர்ந்து ஒரு காட்டைக் கடக்கிறாள். அப்போது அந்தக் கூட்டத்தை மறித்த சிங்கம், எல்லோரையும் விரட்டி​யடிக்கிறது. ஆனால், அவள் மட்டும் செல்லாமல் அங்கேயே இருக்கிறாள். சிங்கத்தைப் பின்​தொடர்ந்து, சோதிடர்கள் கணித்ததுபோல், சிங்கத்தோடு உறவுகொள்கிறாள். சிங்கபாகுவும் சிங்கவல்லியும் அவளுக்குக் குழந்தைகளாகப் பிறக்​கின்றனர்.
அவர்களை சிங்கம் குகையிலேயே வைத்திருக்​கிறது. சிங்க பாகுவின் கைகள் மற்றும் கால்கள் சிங்கத்துடையது போலவே உள்ளது. சிங்க​பாகுவுக்கு 16 வயதாகும்போது தன் தாயிடம், 'ஏன் அம்மா நீயும் அப்பாவும் மிகுந்த வித்தியாசத்தோடு இருக்கிறீர்கள்?’ என்று கேட்க, அவள் நடந்தவற்றை விவரிக்கிறாள்.
அதன்பின் சிங்கத்தின் குகையில் இருந்து அவள், சிங்கபாகு, சிங்கவல்லி மூவரும் தப்பிச் செல்கின்றனர். இலைதழைகளை ஆடைகளாக உடுத்திக்கொண்டு, அவர்கள் காட்டில் செல்கின்றனர். தன் அப்பாவின் படையில் படைத்தலைவனாக இருந்த தன் மாமன் மகனைக்கண்டு அவனோடு செல்கிறாள் சிங்க​பாகுவின் தாய். சிங்கத்தை மறந்து மாமன் மகனைத் திருமணம் செய்கிறாள்.
குகைக்குத் திரும்பிய சிங்கம், தன் மனைவியையும் பிள்ளைகளையும் காணாமல் கோபமுற்று கிராம மக்களைத் தாக்குகிறது. இதை அரசனிடம் மக்கள் கூற, சிங்கத்தை வீழ்த்தினால் பரிசு என்று அறிவிக்கப்படுகிறது.
பயத்தால் யாரும் சிங்கத்தைக் கொல்ல வரவில்லை. இறுதியில் மக்கள், சிங்கபாகுவைத் தேர்வு செய்கின்றனர். சிங்கத்தைக் கொன்​றால் என் ராஜ்யத்தையே தருகிறேன் என்று அரசன் சொல்ல, தன் தந்தையென்றும் பாராது சிங்கத்தைக் கொல்​கிறான் சிங்கபாகு.
ராஜ்யத்தை வென்ற சிங்கபாகு, தன் தாயிடமும் அவளது புதிய கணவனிடமும் ராஜ்யத்தை ஒப்படைக்கிறான். மீண்டும் காட்டுக்கே சிங்கபாகுவும் அவன் தங்கை சிங்கவல்லியும் செல்கின்றனர்.
காட்டுக்குள்ளே நகரத்தை அமைத்து, அண்ணனும் தங்கையும் திருமணம் செய்துகொண்டு 16 முறை இரட்டைக் குழந்தைகளைப் பெறுகின்றனர். அதில் மூத்தவன்தான் விஜயன். விஜயனால் தொல்லையுற்ற மக்கள் சிங்கபாகுவிடம் விஜயனின் அடாவடிச் செயல்களைக் குறிப்பிட்டு, 'அவனைக் கொன்றுவிடுங்கள்,
இல்லையெனில் நாடுகடத்துங்கள்’ என்று கேட்டுக்கொள்ள... விஜயனையும் அவனுடன் இருந்தவர்களையும் திசைக்காட்டியற்ற கப்பலில் நாட்டைவிட்டு அனுப்பி விடுகிறான் சிங்கபாகு. விஜயனும் அவனுடன் வந்தவர்களும் இலங்கையை அடைகிறார்கள். அவன்தான் பின்னர் தமிழர் வாழ்ந்த நிலங்களை ஆக்கிரமிக்கிறான். விஜயன் வழியேதான் சிங்கள இனம் விருத்தியடைகிறது.’ -இந்தக் கதை கொண்ட மகாவம்சம்தான் சிங்களர்களின் புனித நூல்.
சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இனத்துவேஷிகளுக்கும் மிருக குணம் எங்கே இருந்து வந்தது என்று இப்போது புரியும். அந்த மிருக சிங்களவர்களின் செயல்தான் முள்ளிவாய்க்கால்.
முள்ளிவாய்க்காலின் இனப்படுகொலை உலக அரசுகளின் இப்போதைய விவாதப் பொருளாக இருந்தாலும், இலங்கை ராணுவத்​தின் அன்றைய மனித உரிமை மீறல்கள் பற்றிய சம்பவங்களும் இப்போது பேசப்படுகிறது.
அன்றைய இராணுவ மீறல்களில் முக்கியமானது, திருகோணமலையில் நடந்த ஐந்து தமிழ் மாணவர்கள் கொலை, மூதூரில் நடந்த 17 தொண்டு நிறுவன ஊழியர்கள் கொலை. இதைப்பற்றி இப்போது நடக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 22-வது கூட்டத்தொடரில் பேசிய மகிந்த சமரசிங்க, ''திருகோணமலை மாணவர்கள் கொலை மற்றும் மூதூரில் தொண்டு நிறுவன ஊழியர்கள் கொலை ஆகிய சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்​டுள்ளது.
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விதிக்கப்படும்'' என்றார். ராணுவத்தினர்தான் குற்றவாளிகள் என்பது உலகத்துக்கே தெரியும். ஆனால், யார் மீது விசாரணை நடக்கிறது என்று தெரியவில்லை. அதற்கேற்ப உலகமும் ஐ.நா-வும் இன்னமும் இலங்கை அரசு சொல்லும் கதைக்கெல்லாம் தலையாட்டுகிறது.
மட்டக்களப்பில் இருந்து புறப்படும் முன், திரிகோணமலையைச் சொந்த ஊராகக் கொண்ட மனித உரிமை செயல்பாட்டாளர் ஒருவரைச் சந்தித்தேன். அவர், ''2006 ஜனவரி 2, மாலை கடற்கரைக்குச் சென்ற 20 வயதுக்கும் உட்பட்ட தமிழ் மாணவர்களை இராணுவம் கொன்றது. அது என் வாழ்க்கையில் அறிந்த கொடுமையான சம்பவங்களுள் ஒன்று. மாணவர்கள் மாலை நேரத்தில் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அந்த வேளையில் இராணுவம் அவர்களை சந்தேகித்து, சுட்டுக்கொன்றுள்ளது.
அதில் லோகிதாசன் ரோகாந், யோகராஜா ஹேமச்சந்திரன், ரஜிகர் மனோகரன், சஜேந்திரன் சண்முக​நாதன், சிவானந்தா தங்கவடிவேல் என ஐந்து மாணவர்கள் இறந்து​போனார்கள். 'யோகராஜா பூங்குழ​லோன், பரராஜசிங்கம் கோகுலராஜ் என இரண்டு மாணவர்கள் உயிர் தப்பினர்.
ஆனால், அந்தச் சம்பவம் பற்றி செய்தி வெளியிட்ட ராணுவம், 'கை எறி குண்டு தவறுதலாக வெடித்ததால் நேர்ந்த விபத்து இது’ என்றது. ஆனால், பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் கமினி குணதுங்க, 'மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் அடைந்த காயத்தில்தான் இறந்துள்ளனர்’ என்றார்.
தப்பித்த மாணவர்களின் வாக்குமூலத்தில், மூன்று சக்கர வாகனத்தில் வந்த முகம் அறியா நபர் கை எறிகுண்டை வீசியதாகவும், அந்த வாகனத்தின் பின்னே வந்த ராணுவம் தங்களைச் சுட்ட​தாகவும் குறிப்பிட்டுள்ளனர். அப்படியென்றால் ராணுவம் திட்டமிட்டுக் கொன்றுள்ளது. கை எறிகுண்டு தவறுதலாக வெடித்தது என்று வைத்துக்கொண்டால்கூட, மாணவர்களின் உடலில் எப்படித் தோட்டாக்கள் பாய்ந்தன?'' என்றார்.
இறந்த மாணவர் ஒருவரின் தந்தையான டாக்டர் மனோகரன், அண்மையில் மாணவர்களின் நினைவு தினத் தின்போது ஒரு கருத்தை வெளியிட்டார். 'என் குடும்பத்துக்கும் எனக்கும் ஒரே ஆறுதல், இந்தக் கொலைச் சம்பவத்தின் மீதான விசாரணைக்கு நண்பர்களும் சில அமைப்புகளும் ஆர்வத்தோடு இருப்பதுதான். என் மகனைக் கொன்ற கொலை காரர்கள் இலங்கையில் சுதந்திரமாக திரிகிறார்கள்’ என்று வேதனையைக் கொட்டினார்.
இரவு 9 மணி வாக்கில் கொழும்புக்குக் கிளம்பினேன். அடுத்த நாள் இலங்கை நாடாளுமன்றம் சென்றேன். அன்று, 'வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டுடனான உறவுகள்’ பற்றிய விவாதம். அதில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சஜித் பிரமேதாசா, ஜெனிவாவில் இலங்கை பாதிக்கப்படுவதைப் பற்றி அரசாங்கத்துக்கு கேள்வி எழுப்பினார்.
இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்றீர்களே... வாக்களித்ததா? இதுதான் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையா?’ என்று சர்வதேச அளவில் இலங்கை பாதிக்கப்படுவதைப் பற்றியே பேசினார். ஆனால், பாதிக்காமல் இருக்க என்ன மாதிரி கட்டுமானங்களை தமிழர் பகுதிகளில் இலங்கை அரசு செய்ய வேண்டும் என்பதை ஆறுதலுக்குக்கூட பேசவில்லை.
நாடாளுமன்ற விவாதத்தில் தமிழ் மக்கள் விவகாரங்களை பேசத் தொடங்கினாலே, சிங்கள உறுப்பினர்களின் கூச்சல் ஒலிக்கும். தண்ணீர், நிலம், வணிகம், வாழ் வாதாரம் என எந்த நிலையிலான பிரச்சினையைப் பேசினாலும் முதலில் சிங்கள உறுப்பினர்கள் கூச்சலிடும் வார்த்தை... எல்.டி.டி.ஈ. ஆம்... இதைத் தவிர தமிழர் தரப்பின் வாதத்தை முடக்க சிங்கள உறுப்பினர்கள் எதையும் பயன்படுத்த மாட்டார்கள். நாமல் ராஜபக்ஷே உள்ளே நுழையும்போது, தமிழ் உறுப்பினர் ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார்.
அதைக் கிண்டலடிப்பதாக நாமலிடம் சிவப்புத் தொப்பி போட்ட முஸ்லிம் உறுப்பினர் கத்தி சிரித்துக்கொண்டே இருந்தார். இன்னொரு உறுப்பினர் இடைமறித்து, எல்.டி.டி.ஈ. பற்றி சகட்டுமேனிக்குத் திட்டி ஏதோ வீரஉரை நிகழ்த்தியதுபோல் நாமலி​டம் திரும்பி 'எப்படி’ என்று கேட்க... நாமலோ, 'யெஸ்’ எனக் கைகாட்டுகிறார்.
நாமலின் விஷத்தன்மை ராஜபக்சவை விடக் கொடியது. அவுஸ்திரேலியாவில் தமிழர்களைப் படிக்க வைக்க, வேலைக்கு அனுப்ப, தஞ்சம் புக இடைத்தரகர்களை வைத்து ஆள் சேர்க்கும் கும்பலின் தலைவன். அவர்களை கடல் வழியே படகில் அனுப்பி விட்டு, அவுஸ்திரேலியக் கப்பல் படைக்குத் தகவல் கொடுத்துக் கைதுசெய்ய வைக்கும் அதிகாரத்தின் சூத்திரதாரி.
தமிழர்களும் நாமலின் இடைத்​தரகர்களை நம்பி, இருக்கும் நிலத்தை விற்றோ சொத்தை அடமானம் வைத்தோ, பணத்தை அவர்களிடம் கொடுப்பார்கள். தரகர்களோ, மொத்தமாக ஏமாளித் தமிழர்களை ஏமாற்றி விட்டு இன்னும் தமிழர்களை ஏமாற்ற, ஆள் தேடிக்கொண்டு இருப்பார்கள்.
ஆங்கிலேயர்களின் தேவைக்கு, கங்காணிகளால் ஏமாற்றி அழைத்து​வரப்பட்ட தமிழகத் தமிழர்கள் வாழும் நிலத்தை நோக்கி நானும் போகிறேன்.
ஜூனியர் விகடன்
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam19_01
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam19_02
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம்20

Post by logu Sun Aug 11, 2013 6:12 pm

உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது, பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது’ என்ற மகாத்மா காந்தியின் சொற்களே ஹட்டனின் ஒரு வீதியில் பொறிக்கப்பட்டிருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சியில் அழைத்து வரப்பட்ட கூலிகளான மலையகத் தமிழர்கள், ஆங்கிலேயன் சென்ற பிறகும் உழைக்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த இவர்கள் எப்படி இலங்கையின் மலையகத்துக்கு வந்தனர்? இலங்கையின் விடுதலைக்கு முந்தைய காலத்தில், தமிழகத் தமிழர்கள் மட்டும் அங்கு இருக்கவில்லை, மலையாளிகளும் அங்கு இருந்தனர்.
இவர்களின் பெரும்பாலானோர் அன்று வைத்திருந்தது தேநீர் கடைகள்தான். இலங்கையின் விடுதலைப் போராட்டக் காலத்தில் மலையாளிகளும் தாக்கப்​பட்டனர்; கொல்லப்பட்டனர். இலங்கையின் விடுதலைப் போராட்டம் என்பதே உரிமைகள் பெறும் போராட்டமாக இல்லை, உரிமையின் பெயரால் 'புத்த மதத்தைப் பரப்பும்’ போராட்டமாகத்தான் இருந்தது.
1815 முதல் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தமிழர்கள், ராமேஸ்வரம் வழியாக மன்னாரை அடைந்து, பின் ஹட்டன் போன்ற மலையகத்தின் பிற பகுதிகளை அடைவார்கள். இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிறகு, மலையகத் தமிழர்​களை அடிமைப்படுத்தும் விதம் ஆங்கிலேயரிடம் இருந்து சிங்களர்களிடமும் தோட்ட முதலாளிகளிடமும் மாறியது.
நுவரெலியா நோக்கிச் செல்லும்போது, 50 வயது மதிக்கத்தக்க ஒருவரைச் சந்தித்தேன். அவர், ''நான் பிறந்து வளந்தது எல்லாம் இங்கதான். எங்களுக்கு நடந்துவரும் கொடுமைய, நான் பிறந்ததில் இருந்து பார்த்து வர்றன். அந்தக் கொடுமைகள் இன்றும் நிற்கல. எங்கள ஏமாற்றிக்கிட்டே இருக்காங்கள். எங்களுக்கு கிடைக்கும் தலைவர்கள் எல்லோரும் இப்படித்தான் இருக்காங்கள்.
எங்கள் ஊரு அரசியல்வாதி ஒருவரைப் பார்த்து, 'என்ன சார் ஊர் பக்கமே வரதில்ல?’னு கேட்டேன். அதுக்கு அவர், 'இங்க வேல அதிகமா இருக்கு’னு சொன்னார். அவர், தேர்தல் நேரத்துல எங்கள் ஊரே கதின்னு கிடந்தவர்.
மத்த அரசியல்வாதி மாதிரி இல்லாம, நிலமைய மாத்திக்காட்டறன்னு வாக்குறுதி கொடுத்தாரு. அத நம்பி ஓட்டுப்போட்ட எங்கள இப்ப பாக்கக்கூட நேரமில்லன்னு சொல்றாரு. கொடுத்த போன் நம்பர மாத்திட்டாரு'' என்று வேதனையில் வெம்பினார்.
இவரைப்போல் மலையகம் அன்றும் இன்றும் சந்தித்த பிரச்னைகளின் நிலையை, கண்டுகொள்ளப்படாத மலையக மக்​களின் வாழ்வைப் பற்றி, மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர், பல விஷயங்களைக் குறிப்பிட்டார். அவர், ''1948-ம் ஆண்டுக்குப் பிறகு (இலங்கை சுதந்திரம் பெற்ற பின்) திட்டமிட்ட ரீதியாக மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.
சிங்கள அரசின் கொடுங்கோல் அடக்குமுறைகள், முதன் முதலில் மலையகத் தமிழர்களை நோக்கித்தான் பாய்ந்தது, அவர்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்துதான் வடகிழக்கு மக்கள் மீதான தாக்குதலை நடத்தியது சிங்கள அரசு.
இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிறகு, அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதை இந்தியாவோ உலகமோ தட்டிக் கேட்கவில்லை. 1948 முதல் 1983 வரை நடந்த இன வன்முறைகளில் இவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
இவர்கள் தனி நாடு எதுவும் கேட்காதவர்களாக இருந்தாலும், தமிழர்கள் என்ற ரீதியில் இவர்களும் தாக்கப்பட்டனர். அந்த இன வன்முறைகளில் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வடகிழக்கை நோக்கி நகர்ந்தனர்.
1977-ல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த​போது, மிக மோசமான வன்முறைகள் நடந்தன. அதில் பெரும் அளவிலான மலையக மக்கள் இடம்பெயர்ந்தனர். அப்போது ஜனாதி​பதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, 'மலைய​கத்தில் உள்ள தமிழர்களுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்புவது... அல்லது இலங்கை​யின் வடகிழக்குக்கு நகர்த்துவது நல்லது’ என்று சொன்னார்.
இலங்கை மலையகங்களில் உள்ள தமிழர்கள் பெரும்​பான்மையாகப் பெருகிவிடக் கூடாது என்ற குரூரத்துடன் ஆட்சி புரிந்துள்ளனர்.
அப்படி வடகிழக்குக்குச் சென்றவர்கள் சிரமப்பட்டாலும், உழைப்பை உறிஞ்சும் மலையகத் தோட்டப்புறச் சூழலில் இருந்து அவர்கள் விடுதலை பெற்றிருந்தனர். தேயிலைத் தோட்டத்திலும் ரப்பர் தோட்டத்திலும் கூலித் தொழிலாளர்களாக வேலைசெய்தவர்கள், வடகிழக்குக்குச் சென்று விவசாய நிலத்தில் வேலைசெய்தனர்.
அப்படி இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்களுள் பலர், வடகிழக்கில் செயல்பட்டு வந்த விடுதலை இயக்கங்​களிலும் இணைந்திருந்தனர். இந்த வேளையில் சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தப்படி, மொத்தம் இருந்த 9,75,000 பேரில் 6 லட்சம் பேரை இந்தியாவுக்குத் திரும்ப அழைப்பது என்றும், மீதம் இருந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அப்போது குடியுரிமை வழங்கப்பட்டது.
அதன்பிறகு, வடகிழக்கில் போர் நடக்கையில் கொல்லப்படும் சிங்கள ராணுவத்தினரின் உடல் தென்னிலங்கைக்கு போகும்போது எல்லாம், தென்னிலங்கையில் வாழும் குறைந்தளவிலான தமிழர்கள் தாக்கப்படுவார்கள்.
இராணுவத்துக்கு எதிரான போராட்டமோ, தாக்குதலோ வடகிழக்கில் நடந்தால், இன்றும் மலையகத்தின் தோட்டப்புறத் தொழில்களில் சிக்கியுள்ள தமிழர்கள் தாக்கப்​படுவார்கள்; விசாரணைக்கு இழுத்துச் செல்லப்​படுவார்கள்; சந்தேக வழக்கில் பிடித்துச் செல்லப்​பட்டு கொல்லப்படுவார்கள்.
போர் சமயத்தில் தமிழர்கள் வாழ்ந்த அனைத்துப் பகுதிகளும் கண்காணிப்புக் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. போரில் மலையகத்தில் இருந்து இடம்​பெயர்ந்த தமிழர்களும் பாதிக்கப்பட்டனர் என்பதையே யாரும் ஏற்றுக்கொள்வது இல்லை.
போரின்போது மட்டுமல்ல... வதை முகாம்களில் தமிழர்கள் அடைக்கப்பட்டிருந்த காலத்திலும், ஈழத் தமிழர்களுக்கு இணையாக மலையகத் தமிழர்களும் பாதிக்கப்பட்டனர்; கொல்லப்பட்டனர்.
மலையகத் தமிழர்களுக்கு வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்களோடு உள்ள தொடர்பு மிகவும் சொற்பமே. போருக்கு முன்னர் இரணைமடு போன்ற பகுதிகளில் அவர்கள் மீன் பிடியிலும், வடகிழக்கில் இன்னும் பிற தொழில்களையும் செய்துவந்தனர்.
முகாம்களில் இருந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மலையகத் தமிழர்கள், முன்பு இடம்பெயர்ந்து வாழ்ந்த பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுவது இல்லை. அவர்களை ராணுவம் திரும்பவும் மலையகத்தின் தோட்டங்களுக்கே போகச் சொல்கிறது.
வடகிழக்குக்கு இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் முகாம்களில் இருந்தபோது, தென்னிலங்கையில் இருந்த அவர்களின் உறவினர்களே வந்து பார்க்க மாட்டார்கள். 'வந்தால், ராணுவத்திடம் சிக்கிக்கொள்வோமோ’ என்ற பயத்தால் அவர்கள் முகாம்களில் இருந்த உறவினர்களோடு தொடர்பையே துண்டித்துக்கொண்டனர்.
இந்தியா முன்வைத்த 13-வது பிரிவிலும் தோட்டத் தொழிலாளர்களை எந்த வகையிலும் உள்ளடக்கவில்லை. இந்தியாவைச் சேர்ந்த இவர்களையே கைவிட்டுவிட்டு, வடகிழக்கில் உள்ள மக்களை இந்தியா காப்பாற்றப்போகிறதா?'' என்று கேள்வி எழுப்பினார்.
இவரின் குறிப்புகளைப் போலவே போரின் முடிவுக்கு பிறகு, இன்று நடந்துகொண்டு இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கும் விதம் மிகவும் மோசமானது. இப்போது தமிழர்களை, பொதுவாக தமிழர்கள் என்று பதிவது இல்லை. 'கொழும்புச் செட்டி, வணிகத் தமிழர், யாழ்ப்பாணத் தமிழர், மலையகத் தமிழர்’ என்று பிரித்துப் பிரித்துப் பதிவு செய்கின்றனர்.
இதன் வழியே தமிழர்களுக்கு இடையே பெரும் முரண்பாட்டை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் நினைக்கிறது. இலங்கை எங்கும் தமிழர்களை சிறுசிறு குழுக்களாகப் பிரிப்பதன் மூலமாகவும் சிங்களர்களைப் பரவலாக்குவதன் மூலமாகவும் தமிழர்களை சிறுபான்மை இனமாக்கி, அந்த சிறுபான்மைப் பிரிவுக்குள்ளே மேலும் தமிழர்களை சிறுபான்மை ஆக்கும் வேலை நடக்கிறது.
இதன் மூலம் உண்மையில் பல கலப்புகளையும் நிலைகளையும்கொண்ட சிங்கள இனம், பெரும்பான்மை இனம்போல காட்டப்படும் என்பது இப்போதே துல்லியமாகத் தெரிந்தது.
மாவீரர் தினத்தை அனுசரித்த யாழ்ப்பாண மாணவர்களை ராணுவமும் போலீஸும் தாக்கியதற்காக ஓர் அமைதிப் போராட்டம். 'பேச்சுரிமையையும் வாழ்வுரிமையையும் கொடு’ என்ற அந்தப் போராட்டத்தின் நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் நோக்கி நகர்கிறேன்.
ஊடறுத்துப்பாயும்..
ஜூனியர் விகடன்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம்21

Post by logu Sun Aug 11, 2013 6:14 pm

இளைஞர்களே இப்போது இராணுவக் கண்களின் இலக்கு’ என்பதை உறுதிப்படுத்துவதாக நடந்ததுதான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்.
பிரபாகரன் பிறந்த நாளன்று நான் திருகோணமலையில் இருந்தபோதும், மாவீரர் தினத்தின்போது நான் மட்டகளப்பில் இருந்த​போதும், அங்கு இருந்த அதே இராணுவப் பதற்றமும் கண்காணிப்பும் யாழ்ப்பாணத்திலும் இருந்தது.
மாவீரர் நாளில் விளக்கேற்றும் நேரமான மாலை 6.05 நெருங்க நெருங்க, இராணுவம் யாழ்ப்​பாணப் பல்கலைக்கழகத்தை நெருங்கியது. மாலை 5 மணிக்கெல்லாம் ஆண்கள் விடுதிக்குள் ஆயுதங்களோடு புகுந்துவிட்டது. துப்பாக்கியைக் காட்டி மாணவர்கள் மிரட்டப்பட்டனர்.
மாலை 6.05 ஆனதும் பெண்கள் விடுதியில் விளக்கேற்றப்பட்டு விட்டது. ஆவேசத்துடன், பெண்கள் விடுதியின் பூட்டுகளை உடைத்துக்கொண்டு நுழைந்த இராணுவம், பெண்கள் மீதான வெறியை அங்கிருந்த பொருட்​களின் மீது காட்டி அடித்து நொறுக்கியது. சில பெண்களையும் தாக்கியது.
அதே நேரம்... ஆயுதத்தோடு இருந்த இராணுவத்தையும் மீறி ஆண்கள் விடுதி​யில் விளக்குகள் ஏற்றப்பட... அங்கும் தாக்குதல்கள் நடந்தன. மாவீரர் நாள் முடிந்தும் பதற்றம் தீரவில்லை. பல்கலைக்​கழகத்துக்குள் நுழைந்த இராணுவத்தைக் கண்டித்து வாயில் கறுப்புத் துணிக் கட்டி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
'மாணவர்களைப் பாதுகாக்காத துணை​வேந்தர் இங்கு எதற்கு? உள்ளே நுழைந்த இராணுவத்தினரை, நிர்வாகம் ஏன் தடுக்கவில்லை? துணைவேந்தரால் இராணு​வத்தைத் தடுக்க முடியாவிட்டால், வீதியில் இருக்கும் படைச் சிப்பாயை துணைவேந்தர் பதவியில் அமர்த்திவிடுவதுதானே?’ என்று மாணவர்களின் போராட்டக் குரல்கள் ஓங்குகிறது.
இராணு​வத்துக்கு எதிரான குரல்களோடு பல்கலைக்​கழகத்தின் ஒரு நுழைவாயிலில் இருந்து மற்றொரு நுழைவாயிலுக்கு மாணவர்கள் நகர்கின்றனர். அந்த இடைவெளிக்குள் மாணவர்களைத் தடுத்து நிற்கிறது காவல்துறை. 'நீங்கள் வெளியே வர அனுமதி இல்லை’ என்று வாதங்கள் நடக்கும்போதே... திடீரென காவல்துறை தாக்க, இராணுவமும் இணைந்துகொண்டு தாக்கி​யது.
இதில் யாழ்ப்பாணத்தின் 'உதயன்’ பத்திரிகை ஆசிரியரும் தாக்கப்பட்டார். காவல்துறையும் இராணுவமும் மாணவர்களைத் தேடித் தேடிப் பிடித்துச் சென்றது. ஓர் அமைதிப் போராட்டத்தை இரத்தப் போராட்டமாக இராணுவத்தின் தூண்டல் மாற்றிவிட... அடுத்தடுத்த நாட்களில் மாணவப் பிரதிநிதிகள் கைதுசெய்யப்பட்டனர்.
2009 போரின் இறுதிக் கட்டத்தில் சிக்கிய விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு கொடுத்தது போல, மாணவர்களுக்கும் புனர்​வாழ்வு நடவடிக்கைகள் என்று இராணுவம் பிரச்சினையைத் திசைமாற்றியது. இதைக் கண்டித்துதான் தமிழ்க் கட்சிகளும் தமிழர்களுக்கு ஆதரவான சிங்களக் கட்சியும் டிசம்பர் 4-ம் தேதி ஓர் அமைதி ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது. அதற்காகத்தான் யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் சென்றேன்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல் பற்றி அங்கு படிக்கும் சிங்கள மாணவி ஒருவர் இணையத்தில் பதிவுசெய்திருந்தது உண்மை நிலையைப் பிரதிபலிக்கிறது. 'நாங்கள் புலிகளை அழிக்கிறோம் என்று தமிழ் மாணவர்களைப் புலிக​ளாக்கி இருக்கிறோம்.
நவம்பர் 26-ம் தேதி மாலையில் இருந்து சக தமிழ் மாணவி​களின் கண்களில் ஒருவிதமான தாக்கம் இருந்தது. மாணவர்களை இராணுவத்தினர் தாக்க, மாணவிகளே புலிகளுக்கான விளக்குகளை ஏற்றினர். தாமுண்டு தமது படிப்புண்டு என்று திரிந்த தமிழ் மாணவிகள், அன்று திடீரெனப் புலிகளாக மாறியிருந்தனர்... அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை... உணர்வால் புலிகளாகவே இருந்தனர்’ என்பதே அந்தப் பதிவு.
ஆணாகட்டும் பெண்ணாகட்டும்... தமிழ் இளைஞர்கள் மனதில் எப்படியான தீ கனன்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு சிங்கள மாணவியின் பதிவே சான்று. இன்றாகட்டும் அன்றாகட்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்... தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தீ.
சிங்கள இராணுவத்தைக் கண்டித்து தமிழ் மாணவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் தொடங்கியது. கிட்டத்தட்ட 100 பேர் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற, மக்கள் என்னவோ எதுவுமே அங்கு நடக்காததுபோல் பொம்மை​களைப்போல அந்த ஆர்ப்பாட்ட நிகழ்வை கடந்து சென்றனர்.
இராணுவம், ஆயுதத்தோடு குறுக்கும் நெடுக்கும் கடந்துகொண்டு இருந்தது. ஓர் இராணுவ அதிகாரி யுனிசெப் மகிழுந்தில் வந்து ஆர்ப்பாட்டத்தைப் பார்வையிட்டுச் சென்றார். வழக்கத்தைவிட புகைப்படம் எடுப்பவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
நான் அருகில் இருந்த நண்பரிடம், 'யாழ்ப்பாணத்தில் இவ்வளவு பத்திரிகையாளர்கள் இருக்காங்களா?’ என்று கேட்க... அவர், 'படம் எடுக்கிறவர்களில் பெரும்​பாலானோர் ராணுவத்துக்கும் அரசுக்கும் பணத்துக்காக வேலை செய்பவர்கள்’ என்றார். இதுவரை மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவரங்களை விவரிப்பதோடு ஆர்ப்பாட்டமும் முடிவுற்றது.
யாழ்ப்பாணப் பயணத்தின் இறுதியில், மீனவப் பிரதிநிதி ஒருவரிடம் நான் பெற்ற தகவல்கள்,
இலங்கைத் தமிழ் மீனவர்கள் நிலைமையும் தமிழக மீனவர்கள் நிலைமையும் அப்பட்டமாகப் பிரதி​பலித்தன. அவர் பேச்சு, கடல்கூட எவ்வளவு சிங்கள​மயம் ஆக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தியது.
''வடகிழக்கில் 30 வருடங்களுக்கும் மேலான இனப் பிரச்னையில் பாதிக்கப்பட்ட தொழில்களில் மீன்பிடியும் ஒன்று. அந்தக் காலகட்டங்களில் பெருமளவில் நாங்கள் மீன்பிடியில் ஈடுபடவே இல்லை. இன்று, சிங்களக் கடற்படை எவ்வளவோ கட்டுப்​பாடுகளோடும் பாஸ் நடைமுறையோடும்தான் மீன் பிடிக்க அனுமதிக்கிறது.
இன்று, இங்குள்ள மீனவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து, அதன் மூலம் வாங்கிய வலைகளை கடலில் விரிக்கின்றனர். ஆனால், அந்த வலைகளை எங்கள் சொந்தங்களான தமிழக மீனவர்களே அறுத்துவிட்டுச் செல்வது வேதனையிலும் வேதனை.
அதையும் மீறி தமிழகக் கடலோரங்களில் இன்று நடைமுறையில் உள்ள இழுவைப் படகுகளும் அதன் மடிமுறையும் தங்கூசி வலைகளும் மொத்தக் கடல்வளத்தையும் சுரண்டுகின்றன. இந்த இழுவைப் படகுகளின் மடிகள், டிராக்டரைப் போல் மொத்தமாக கடலின் கீழ் பாகத்தில் இருக்கும் மொத்தத்தையும் அள்ளிச் செல்லும்.
இந்த வலைகள் மொத்தமாக தமிழகக் கடலோரத்தின் வளத்தை அழித்துவிட்டது. அதனால், அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வேண்டியுள்ளது. சிங்களக் கடற்படையினர், அதைக் காரணமாக வைத்துக்கொண்டு அவர்களைத் தாக்குகிறார்கள்; கொல்கிறார்கள். எங்களுக்கு உதவுவதுபோல் கடற்படை நடித்து, தமிழக மீனவர்​களுக்கும் எங்களுக்கும் பிரச்சினையைத் தூண்டத் திட்டமிடுகின்றனர்.
எங்கள் அப்பன் காலத்திலும் என் பாலிய காலத்​திலும் தமிழக மீனவர்களும் நாங்களும் கடலில் பார்த்துப் பேசியபடி மீன்பிடித்துள்ளோம். அன்று, அங்கும் இங்கும் கடல் வளத்தை அழிக்காத வலை​களைப் பயன்படுத்தினோம். ஆனால், இன்று தமிழக மீனவர்கள் பயன்படுத்தகிற இழுவைப் படகுகள் கடல் வளத்தை அழிக்கிறது. தங்கூசி வலைகள் நாங்கள் விரித்திருக்கும் வலையை அறுத்துச் செல்கிறது.
எங்களின் நிலைமையைப் புரிந்து​ கொள்ளுங்கள் என்று சிங்கள அரசிடமா நாங்கள் கேட்க முடியும்? எங்கள் சொந்தங்களான தமிழக மீனவர்களிடம்தானே கேட்க முடியும். இழுவைப் படகுகள் நம் எதிர்காலக் கடல் வளத்தை அழிக்கும். எதிர்காலத்தில் இங்கு மீன் பிடிக்கப் போவது நம் சந்ததிதானே?'' என்றவரின் பேச்சை இடைமறித்து, ''இதற்குத் தீர்வுதான் என்ன?'' என்று கேட்டேன்.
அவர், ''இழுவைப் படகுகள் தடைசெய்யப்பட வேண்டும். தமிழகக் கடல் வளம் தொடர்பாக ஆய்வு​கள் செய்யப்பட வேண்டும். தங்கள் கடல் எவ்வளவு அழிந்துள்ளது என்பதை தமிழக மீனவர்கள் புரிந்துகொள்ளும் திறனை இந்தக் கடல் வள ஆய்வுகள் உணர்த்தும். கடல் வளம் அழிந்தால் நம் நிலமும் அழியும் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறோம்?'' என்று தனது ஆதங்கத்தைக் கொட்டி​னார்.
தமிழகக் கடலோரங்களில் மீன் இல்லை என்ற நிலையால், எல்லையற்ற கடலை மீனவர்கள் கடக்​கின்றனர். பிழைப்புக்காக எல்லையைக் கடந்துவரும் மீனவன், சிங்களக் கண்களுக்கு தமிழனாகத்தான் தெரிகிறான். இலங்கை எல்லையில் மட்டும் கடற்படை தாக்கவில்லை.
இந்திய எல்லைக்குள் நுழைந்தும் சிங்களக் கடற்படை தாக்குகிறது. இன அழிப்புப் போரின் நீட்சியாய், மீனவர்களைக் கொல்வதை ஒரு வேலையாகவே வைத்துள்ளது இலங்கைக் கடற்படை. கடல் வளத்தைக் காப்பதோ இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களுக்கு வாழ்வா​தாரத்தை ஏற்படுத்துவதோ கடற்படையின் நோக்கம் அல்ல.
தமிழன் கண்ணில் பட்டாலே, தாக்க வேண்டும். தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்​படையிடம் சிக்கினால் முதலில் திட்டுவது, 'இந்திய வேசி மகனே’ என்றுதான்.
உயிர்க் கொலைகள் சாதாரண நிகழ்வாக, அன்றாட செய்தியாக மாறிவிட்டது. மீன் தேடும் கடலில், தமிழனின் உயிரைத் தேடுகிறது சிங்களக் கடற்படை.
பயணத்தை முடித்துக்கொண்டு, விமான நிலையம் நோக்கி விரைகிறேன்.
அடுத்த இதழில் முடியும்...
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty புலித்தடம் தேடி...இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம்22

Post by logu Sun Aug 11, 2013 6:15 pm

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pokkanai_23409_107
போர் நடத்துவதே குற்றம். அதில், நெறிமுறைகளை மீறுவது அதைவிடப் பெரிய குற்றம். உலகத்தின் குற்றவாளிக் கூண்டில் இலங்கை இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
அங்கே வாழும் மக்களின் மனநிலையை அறிவதற்காகவே எனது பயணம் திட்டமிடப்பட்டது.
இந்த 25 நாட்கள் பயணத்தில் நான் கண்டதும் அறிந்ததும் ஈழத்தின் கொடுமைகளில் கடுகளவே. இலங்கை இனவாதத்தின் சிறுஅளவே.
போரில் மனித வேட்டை நிலமாக இருந்த முள்ளிவாய்க்கால், இன்றும் அந்த சோகத்தை அப்பிக்கொண்டுள்ளது.
வடகிழக்கு நிலம் கண்காணிப்புப் படைகளில் அத்துமீறல்களால் இன்னும் அழுதுகொண்டே இருக்கிறது.
மலையகத் தோட்டங்களை நம்பியுள்ள இலங்கையின் சர்வதேசப் பொருளாதாரம், தமிழர்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறது.
அனாதையான இந்த நிலத்துக்கும் அந்த மக்களுக்கும் இனியும் ஒன்றுபட்ட இலங்கைதான் தீர்வு என்றால், உலகமும் ஐ.நா-வும் எஞ்சிய தமிழர்களையும் கொன்று புதைத்துவிட்டு, ராஜபக்சவை சுடுகாட்டின் ராஜாவாக்கி விடலாம். இலங்கையை உலகின் வியாபார நிலமாக்கிக் கொள்ளலாம்.
கொடூரங்கள் நடந்தது, இராணுவம் இரத்தத்தில் குளித்தது, பிணங்கள்கூட பாலியல் பண்டங்களாக மாற்றப்பட்டன என வரிசையாக போர்க் குற்றங்களின் காணொளிகள் வெளியாகின்றன.
ஆனால், அந்தப் போர்க் குற்றக் களத்தில் பத்திரிகையாளர்களின் மனிதாபிமானச் செய்திப் பரிமாற்றங்கள் இன்னும் நமக்குத் தெரியாத இருட்டுக்குள்ளேதான் இருக்கிறது என்பதே யதார்த்தம்.
அப்படிப்பட்ட பத்திரிகையாளர் ஒருவர், உடைந்த மனதோடும் கண்ணீரோடும் பகிர்ந்து கொண்டது...
''வன்னியின் போர்ச் சூழலில் பணியாற்றிய ஊடகங்களில் இரண்டு முக்கியமானவை. ஒன்று, 'புலிகளின் குரல்’, மற்றொன்று, 'ஈழநாதம்’ நாளிதழ்.
'புலிகளின் குரல்’ வானொலி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, 20-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதற்காகப் பணியாற்றிய பல அறிவிப்பாளர்கள், பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
அப்படியிருந்தும் அந்த வானொலி தன் பணியை மே 16 வரை கடுமையான போர்ச் சூழலிலும் செய்தது. வானொலி ஒலிபரப்பு நிலையம் என்பது ஒரு சிறிய ரக வான் மட்டும்தான்.
மக்கள் இடம்பெயரும்போது மக்களோடு மக்களாக அந்த வேனும் இடம்​பெயரும். வழிகளில் இருக்கும் மரங்களின் கிளைகளில் அன்டெனா பொருத்தப்பட்டு, மரத்தின் கீழே வாகனம் நிறுத்தப்பட்டு, செய்தியும் மற்ற தகவல்களும் ஒலிபரப்பப்படும்.
அந்த நேரத்தில் வாகனத்தின் அருகிலேயே செல்களும் குண்டுகளும் விழும். அந்தச் சத்தம் வானொலி கேட்கிறவர்களுக்கு கேட்கும். அந்த வானொலியில் பணியாற்றியவர்களில் பெரும்பாலானோர் சாதாரண மக்கள்தான்.
'தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி’ பரந்தனின் இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் செயலிழந்தப் பிறகு, 'புலிகளின் குரல்’தான் வன்னியில் செயல்பட்டது.
அதேபோல்தான் 'ஈழநாதம்’ பத்திரிகையும். வன்னி மக்களுக்கு தொலைத் தொடர்பு முற்றும் துண்டிக்கப்பட்ட பிறகு, மக்களிடையேயான தொடர்புகளை 'ஈழநாதம்’தான் செய்தது.
அதாவது, 'புலிகளின் குரல்’, 'ஈழநாதம்’ வழியாகத்தான் ஒருவர் இறந்து போனார், காணாமல் போனார் என்ற செய்தியைத் தெரிந்துகொள்ள முடியும். இதற்கான செய்தி சேகரிப்பின்போது, தாக்குதலில் பல செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
'ஈழநாத’மும் மக்களோடு மக்களாகத்தான் இடம்பெயர்ந்தது. ஒரு கனரக வாகனத்தில் அச்சு இயந்திரம், கணினி, ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருக்கும்.
மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்து செய்தியை அச்சிட்டு வெளியிடும். அந்த போர்ச் சூழலிலும் யார் கொல்லப்பட்டார், அவர் வசித்த பகுதி, பெயர் எனக் கிடைக்கும் விவரங்களை எல்லாம் சரிபார்த்து வெளியிட்டது.
மிகுந்த இக்கட்டான நிலைமை நெருங்க நெருங்க... 'காகிதத் தட்டுப்பாடும் ஏற்பட்டது. அதனால், செய்திகளைக் கிடைத்த காகிதங்களில் (ஒரு பக்கம் பயன்படுத்தப்பட்ட காகிதம்) எல்லாம் அச்சிட்டனர். அந்த அளவுக்கு தனது ஊடகப் பணியை 'ஈழநாதம்’ செய்தது.
இந்தப் போரில் மேரி கெல்வின் போன்ற பல வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள்கூட அக்கறையோடு செயல்பட்டனர்.
அது மட்டுமின்றி 'தமிழ்நெட்’ போன்ற இணையப் பத்திரிகைகளும் கடமைகளை செவ்வனே செய்தன.
இப்போது யுத்த காலக் காணொளிகள் பல வெளியாகின்றன. ஆனால், அந்தக் காணொளிகளை வெளியில் கொண்டு செல்லப் பணியாற்றிய பத்திரிகையாளர்களின் நிலைமைகளை இன்றும் யாரும் அறிய மாட்டோம்.
வன்னியின் கொடூரப் போரில் பத்திரிகையாளர்கள், உயிரைக் கொடுத்துச் செய்த செய்தி சேகரிப்புகள்தான், தமிழர்கள் அழிக்கப்பட்டதற்கான சாட்சிகள்.
2009-ல் நடந்தது இரத்தப் படுகொலைகள். ஆனால், இன்று நடப்பது திட்டமிடப்பட்ட இன அழிப்பு. அந்த இன அழிப்புச் செயல்கள் மொழி, கல்வி, கலாசாரம், பண்பாடு என எல்லாவற்றிலும் பாகுபாடு இல்லாமல் படர்கிறது.
கிளிநொச்சி-முல்லைத் தீவு மாவட்டங்களில் உள்ள 250 சிறுவர் பள்ளிகளும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதாவது, இந்தப் பள்ளிகளுக்கு தலைமை, அரசு பள்ளிக் கல்வித் துறை அல்ல. இராணுவத்தை வழிநடத்தும் பாதுகாப்புச் செயலகம்தான்.
பாதுகாப்புச் செயலகத்தின் குடிமக்கள் பாதுகாப்புப் படையே, இந்த ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் தலைமை வகிக்கும்.
இதுவரை 3,500 ரூபாய் சம்பளம் வாங்கிய ஆசிரியர்களுக்கு இனி சம்பளம் 19,500 ரூபாய்.
மாதத்தின் முதலாவது, மூன்றாவது திங்கட்கிழமைகளில் படைப்பிரிவின் பணியகத்தில் கையெழுத்திட வேண்டும்.
ஒருமுறை அதில் கையெழுத்திடத் தவறினால், மாதச் சம்பளத்தில் 4,500 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.
இந்த ஆசிரியர்கள் வகிக்கும் பதவி நிலை... குடிமக்கள் பாதுகாப்பு அதிகாரிகள் என்பதுதான். ஆசிரியர்கள் என்பது அல்ல.
மதியம் 12 மணி வரை பள்ளியில் பணியாற்றிவிட்டு, அதன்பின் குடிமக்கள் பாதுகாப்புப் படை கொடுக்கும் பணியைச் செய்ய வேண்டும்.
விசுவமடுவில் உள்ள குடிமக்கள் பாதுகாப்புப் படையின் 430-வது படையணியின் தலைமையகம், இதற்கான கட்டுப்பாடு தலைமையாக உள்ளது.
இந்தப் படையணியின் கட்டளை அதிகாரியான கேணல் ரத்னபிரிய, துணைக் கட்டளை அதிகாரி மேஜர் ரஞ்சித் மல்லவராச்சிதான் இந்தப் பள்ளிப் பணிகளுக்கான தலைமைகள்.
இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் பகுதிகள் முழுமையாக சிங்களமயம் ஆகிவிடும். 'தமிழர்’ என்பதே தமிழருக்கு நினைவில்லாமல் போய்விடும்.
இலங்கை தன்னை நிலைநிறுத்த எந்த நாட்டோடும் நட்பு பாராட்டும். ஆனால், ஒருபோதும் இந்தியாவின் கைக்குள் அடங்காது.
சீனா-பாகிஸ்தானை வைத்து இந்தியாவை அடக்குவதுதான் இலங்கையின் திட்டம். அதற்கான முழுக் கட்டுமானத்தை கொழும்பில் இருந்து கச்சதீவு வரை கட்டியெழுப்பிவிட்டது இலங்கை அரசு.
தமிழர்களை மையம்கொண்ட சிங்கள அரசின் படுகொலைகள், இப்போது முஸ்லிம்களை நோக்கித் திரும்பியுள்ளது.
அன்பைப் போதிக்கும் பிக்குகளே, முஸ்லிம்களின் கடைக்குள் புகுந்து இராணுவத்தைப் போல் எல்லாவற்றையும் சூறையாடு​கின்றனர்.
'இது புத்த தேசம், சிங்களர்களுக்கே சொந்தம்’ என்று கோஷமிடுகின்றனர்.
'குரான் ஓதும்போது, ஆயுதங்களையும் தாருங்கள் என முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்ய மாட்டார்களா?’ என்று ஒரு நாட்டின் ஜனாதிபதி பேசுகிறார் என்றால், முஸ்லிம்களும் இலங்கையில் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறாரா?'' என்றார் அந்தப் பத்திரிகையாளர்.
'பொதுபல சேனா’ என்ற புத்த அமைப்பிடம்தான் இலங்கை அரசை ஆட்டி வைக்கும் அதிகாரம் உள்ளது. இந்த அமைப்பின் பிரதிநிதிதான் மகிந்த ராஜபக்ச.
இலங்கையின் புத்த மயத்துக்கு ஓர் உண்மை எடுத்துக்காட்டு... மாவத்தையில் உள்ள முஸ்லிம் சிறுவன் ஒருவன் புத்த பிக்குவாக மாற்றப்பட்டுள்ளான்.
முகமத் சப்ராஸ் என்ற அந்தச் சிறுவன் பெயர் 'தலங்காம நாபித’ என்றும் மாற்றப்பட்டுள்ளது.
இனி, இலங்கை அரசின் அடுத்த போர் என்பது முஸ்லிம்களுடன்தான். பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்ட பிறகும் ஹலால் உரிமை பறிக்கப்பட்ட பின்னரும், பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளே இலங்கையின் பக்கம் நிற்கிறது என்றால், இனி முஸ்லிம்களின் நிலை இலங்கையில் என்னவென்று எண்ணிப் பாருங்கள்.
தமிழர்கள் மட்டுமல்ல... எந்தவொரு இனமும் சிங்கள இனவாதத்தோடு ஒன்றி இனி வாழ முடியாது என்பதே யதார்த்தம்.
சிங்கள தேசத்தோடு வெட்டுண்டு போவதே, இலங்கையில் அடிமைப்பட்டு கிடக்கும் இனங்களுக்கான விதியோ? அந்த மண்ணைவிட்டு வெளியேறும் போது, 12 நாட்கள் ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்த தியாகி திலீபனின் வார்த்தைகள் நினைவுக்கு வந்துவந்து போனது...
''எனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஒருநாள் எம் மக்கள் விடுதலையடைவார்கள். அப்போது என் தேசத்துக்காக என் தேசிய பொறுப்பு நிறைவேறும்!''
புலித்தடம் தேடி....முற்றும்
ஜூனியர் விகடன்
புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Pulithadam22
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-  Empty Re: புலித்தடம் தேடி........! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ்ப் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புலித்தடம் தேடி……..! – மகா. தமிழ்ப் பிரபாகரன் (பயணக்கட்டுரை – பாகம் 01)
» பிரபாகரன் எங்கே விளக்குகிறார் அவர் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன்
» இந்திய எம்.பி.க்கள் இலங்கைக்கு இன்ப சுற்றுலா?
» தனது எம்.எல்.ஏ.க்களுக்கு தெரியாமலேயே சட்டப்பேரவைக்கு வந்து சென்ற விஜயகாந்த்!
» உலக பொது அமைப்பான ஐ நா தனது போர் குற்ற அறிக்கையில் ஒழுக்கமான விடுதலை இயக்கத்தை கட்டியமைத்து வழிநடத்தியவர் மாவீரன் பிரபாகரன் என்று புகழாரம் சூட்டியள்ளது .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum