TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


புலித்தடம் தேடி……..! – மகா. தமிழ்ப் பிரபாகரன் (பயணக்கட்டுரை – பாகம் 01)

Go down

புலித்தடம் தேடி……..! – மகா. தமிழ்ப் பிரபாகரன் (பயணக்கட்டுரை – பாகம் 01) Empty புலித்தடம் தேடி……..! – மகா. தமிழ்ப் பிரபாகரன் (பயணக்கட்டுரை – பாகம் 01)

Post by மாலதி Thu Dec 27, 2012 7:44 am

புலித்தடம் தேடி……..! – மகா. தமிழ்ப் பிரபாகரன் (பயணக்கட்டுரை – பாகம் 01)

இதுதான் நீங்கள் கேட்ட கண்ணி வெடிகள் அகற்றும் பகுதி!’ என்று ஓட்டுனர் இயல்பாகத்தான் சொன்னார். ஆனால், எனக்கு கண்ணில் வெடித்ததுபோல் இருந்தது. எத்தனை உயிர்களைக் காவுவாங்கிய இடம்!



கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு பரந்தன் சந்தியைக் கடக்கையில், மனதில்
பெரும் வெறுமை. அந்தச் சாலையின் வலதுபுறமாகச் செல்வதுதான் முல்லைத்தீவை
அடையும் வழி. ‘சின்ன உப்பளம்’ பகுதியில் நின்றது பேருந்து.

நான் இறங்கிய இடத்தில் ஓர் உணவகம். இராணுவத்துக்குச் சொந்தமானது என்ற மிலிட்டரி மிடுக்கு அந்த உணவகத்துக்கு இருந்தது.



ஆயுதம் ஏந்தியபடி புலி பதித்த தடத்திலும், ஆக்கிரமிப்பாய் இன்று சிங்கள
இராணுவம் குவிந்துள்ள பாதையிலும் கண்ணி வெடிகள் இருக்கின்றன. இனியும்
யாருக்காக என்ற வேதனைக் கேள்வியுடன், மரண நெடுஞ்சாலையான ‘ஏ9’ சாலையில்
நடக்கிறேன்.



கண்ணி வெடிகளை அகற்றும் பணி நடக்கிறது.
எல்லா வேலைகளையும் சிங்களவர்களுக்கே தரும் இலங்கை அரசாங்கம், உயிருக்கு
ஆபத்தான கண்ணி வெடிகள் அகற்றும் பணியில் தமிழர்களை மட்டுமே
பயன்படுத்துகிறார்கள்.

நொடி கவனம் சிதறினாலும் உயிர் போகும் வேலை.
அதைப் படம்பிடித்துக்கொண்டே நகர்ந்தேன். தூரமாய் ஒரு கூடாரம் தெரிந்தது.
இன்னும் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்த்தபோது அங்கேயும் இராணுவம்.



நான் நின்றுகொண்டு இருந்த இடத்தைப் பார்த்தேன். மணல் நிறைந்த தடம் அது.
கண்ணுக்கெட்டும் தூரத்தில் தண்ணீரும் இராணுவத்தின் யுத்த வெற்றிச்
சின்னமும் தென்பட்டது.



எந்த மக்களையும் பார்க்க
முடியவில்லை. நடந்தே தண்ணீரை ஊடறுத்துச் சென்று பாதையை கடக்க முடிவெடுத்து,
கொஞ்ச தூரம் நடந்திருப்பேன். ஒரு பேருந்து வந்தது. அதில் ஏறினேன்.



சில நிமிடங்களில் வந்தது, சிங்களர்களுக்கான வெற்றிச் சின்னம். அப்போது மணி
காலை 9.30. இராணுவ டெம்போவில் இருந்த ஆயுதங்கள் இறக்கப்பட்ட நேரத்தில்,
நான் தனி ஆளாக அந்த இடத்தில் நின்றேன். என் மீது இராணுவப் பார்வைகள்.



யார் நீ? என்றது ஒரு குரல்.



இலங்கைக்குச் சுற்றுலா வந்துள்ளேன் என்றேன் சாதாரணமாக.



போ” என்று கை அசைத்தனர். நான் நுழைவதற்குள் சிங்களச் சுற்றுலாவாசிகள்
சுமார் 30 பேர் ஒரு வானில் வந்து இறங்கினர். அவர்களோடு நானும் நுழைந்தேன்.



இராணுவத்தைச் சேர்ந்த மூன்று பேர் செல்போன் பேசியவாறே எங்களுடன் வந்தனர்.



சிங்களவர்களைப் போன்றே, நானும் அந்த வெற்றிச் சின்னத்தைப் படம் எடுத்தேன்.
இராணுவத்தினர் சிங்களவர்களுக்கு எதையோ சொல்லிக்கொண்டு இருந்தனர்.

அவர்களுக்குச் சிங்களத்தில் சொன்னதை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ எனக்குச் சொல்ல முடியுமா? என்று கேட்டேன்.



சிங்களம் தவிர எதுவும் தெரியாது என்றனர்.



சிங்களப் பயணி ஒருவர் என்னிடம், ”இது நம் மண்ணை ஆக்கிரமித்து இருந்த
புலித் தீவிரவாதிகளிடம் மீட்ட இடம். இங்கு நம் போர் வீரர்கள் பெரும்
தியாகத்தைச் செய்து புலித் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றி
உள்ளனர்.



நமது மண்ணை நாம் மீட்டெடுத்து உள்ளோம்.
நீங்கள் எல்லாம் தென் இலங்கையில் இருந்து வந்துள்ளீர்கள். இது ஆபத்து
நிறைந்த இடம். சாலையை விட்டு உள்பகுதிக்குள் செல்லாதீர்கள். வெடிக்காத
குண்டுகள் நிறையப் புதைக்கப்பட்டு உள்ளன” என்று இராணுவ வீரர் சொன்னதாக
ஆங்கிலத்தில் சொன்னார்.



மனித நாமத்தினால் தேசத்தின்
புண்ணியத்துக்குத் தோன்றிய ஆயுதம் தாங்கிய படைத் தலைவர் அதிமேதகு மகிந்த
ராஜபக்ச அவர்களின் தலைமையிலும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச
அவர்களின் வழிகாட்டலிலும் ஒருங்கிணைப்பிலும் ஏனைய இராணுவப் பிரிவுகளின்
பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையால் வடக்கையும்
தெற்கையும் இணைத்ததன் நினைவாய் சமாதான நினைவுத் தூபி இங்கு
எழுப்பப்பட்டுள்ளது’ என்று பொறிக்கப்பட்டதை என் கண்கள் வாசித்தன.



என்னை நெருங்கிய இராணுவத்தினர் மூவர், என்னைப் பற்றி விசாரிக்கத்
தொடங்கினர். நான் சொன்ன அனைத்தையும் குறித்துக்கொண்டனர். ”ஓகே மச்சான்”
என்று இரண்டு பேர் விலகிச் செல்ல, ஒருவர் மட்டும் அந்த இடத்திலேயே
நின்றார்.

சில நிமிடங்களில் இருவரும் மீண்டும் வந்தனர். ‘வாங்க
பேசலாம்’ என்று அழைத்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பேசும் விதம்
விசாரணையை நோக்கிச் செல்வதை உணர முடிந்தது. நடந்தே என்னை இராணுவச்
சிற்றுண்டிச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.



கொஞ்ச நேரம் உட்காருங்கள். எங்கள் ஆமி மேஜர் வருவார்” என்றார்கள்.

நான் ஏன் அவரைப் பார்க்க வேண்டும்?” என்று கேட்டேன்.

அவர்தான் உங்களைப் பார்க்க வேண்டுமாம்” – கிண்டலாய் சினந்தனர். அப்போது,
என்னைச் சுற்றி இராணுவத்தைச் சேர்ந்த ஏழு பேர் இருந்தனர். அடுத்து பொலிஸைச்
சேர்ந்த இருவர் வந்து, என்னைப் பற்றிய தரவுகளை எடுத்தனர். காக்கவைத்து ஒரு
மணி நேரத்துக்கும் மேலானது. கழிவறை செல்லும்போதும் என்னைக் காவல்
காத்தனர்.



இடையில் வந்த ஒருவர், ”முள்ளிவாய்க்கால்
போனீங்களா? பிரபாகரன் செத்த இடம் நந்திக் கடல் போய்ப் பார்த்தாச்சா..?’
என்று எதையோ சொல்லிச் சென்றார்.

அடுத்த ஒன்றரை மணி நேரத்தில்
கிளிநொச்சிப் பக்கம் இருந்து, இராணுவ ஜீப் ஒன்று வந்தது. ஐந்து பேரோடு
வந்து இறங்கினார் ஓர் அதிகாரி. அவர்களுக்குப் பின்னே மொபட்டில் இருவர்
வந்தனர்.



விசாரணை தொடங்கியது. முழுக்கவும் ஆங்கிலத்தில் பேசினர்.

எங்கு இருந்து வருகிறீர்கள்… எதற்காக வந்துள்ளீர்கள்?”



இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து சுற்றிப்பார்க்க வந்துள்ளேன்.”



நீங்கள் இலங்கையைத் தேர்வு செய்யக் காரணம் என்ன?”



என்ன சொல்ல? ” ‘லோன்லி பிளானட்’ இணையதளம் 2013-க்கான சிறந்த 10 சுற்றுலா
நாடுகளில் இலங்கையைத் தேர்வுசெய்துள்ளது. அதன் காரணமாகவும் பயணச்செலவு
குறைவு என்பதாலுமே இலங்கையைத் தேர்வுசெய்தேன்” என்றேன் மையமாக.



என்று வந்தீர்கள்… என்ன பணியில் உள்ளீர்கள்?”



நவம்பர் 13 அன்று வந்தேன். ஆய்வுப் பணியில் உள்ளேன்.



இங்கே வேறு எங்கு போனீர்கள்?



யாழ்ப்பாணத்தில் உள்ள டச் கோட்டை, முருகன் கோயில்” என்று சொல்லிக்கொண்டு
இருக்கும்போதே ஒருவர், ”நைஸ் போன். தாங்க பார்ப்போம்” என்று கிட்டத்தட்ட
பறித்துக்கொண்டார்.



நீங்கள் எங்கள் நாட்டில் எங்கு
வேண்டுமானாலும் செல்லலாம். நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ளத்தான்
இப்படிக் கேட்டோம். ஏன் தனியாக வந்தீர்கள்? என்று மறுபடியும் கேட்டனர்.



அதுதான் ஏற்கெனவே சொன்னேனே! என்றேன்.



அவர் என்னைவிட்டு விலகி, தன் மேல் அதிகாரிக்கு சிங்களத்தில் என்னைப்
பற்றிய விவரங்களைச் சொன்னார். 40 நிமிடங்கள் போனது. அவர்கள் என்னைப் படம்
எடுத்துக்கொண்டனர். மொபட்டில் வந்த இருவரும் மறுபடியும் என்னைப் பற்றிய
விவரங்களைக் கேட்டனர். என் கடவுச்சீட்டைப் பரிசோதித்தனர். கடவுச்சீட்டில்
என் பெயர், தமிழ்ப் பிரபாகரன் என்று இருந்தது.



தமிழ்ப் பிரபாகரன் என்று பெயர். அதுவும் தனியாக வந்திருக்கிறாய்?” என்றார்கள்.

என்னைப் பற்றி பேசும்போது ஏன் உங்களுக்குள் சிங்களத்தில் பேசுகிறீர்கள்.
இருவருக்கும் பொதுவான மொழியில் பேசுங்கள். நான் உங்கள் நாட்டுக்கு வந்த
விருந்தாளி. சுற்றுலாவாசியை ஒரு தீவிரவாதிபோல் விசாரிக்கிறீர்கள்.

நான் இந்தக் கேள்வியை வீசிய நேரம், பொலிஸிடம் இராணுவ அதிகாரி கடும் கோபத்துடன் பேசிக்கொண்டு இருந்தார்.



அவர் சிங்களத்தில் பொலிஸிடம், எங்களுக்குச் சந்தேகம் இருக்கும்
பட்சத்தில், யாரையும் கைதுசெய்யலாம். உன்னிடம் அதைச் சொல்லவேண்டிய அவசியம்
இல்லை என்றார்.



அதாவது என் மீது நடவடிக்கை எடுப்பதில்
இராணுவம், பொலிஸ் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதை என்னால் உணர
முடிந்தது. இராணுவ அதிகாரி தன் அதிகாரியிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது
என்னிடம் தங்கள் நிலையைப் பேசிய பொலிஸ், உங்கள் பக்கம் தப்பு இல்லை
என்றாலும், இராணுவத்தை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது. அவர்கள்
எங்களை மிரட்டுகிறார்கள்.



வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்
இந்த இடத்தைப் படம் எடுக்கக் கூடாது. நீங்கள் தனியாக வந்ததைத்தான் இராணுவம்
பெரிய பிரச்சினையாகப் பார்க்கிறது. உங்களை இராணுவப் பெரியவர் கைதுசெய்யச்
சொல்லி இருக்கிறார். உங்களிடம் ஆங்கிலத்தில் நன்றாகத்தான் பேசுகிறார்.
ஆனால் எங்களிடம் சிங்களத்தில் கைது செய்யச் சொல்கிறார் என்றார்.



டீ குடிச்சிட்டே கதைப்போம் வாங்க என்றார் இடையில் வந்த சி.ஐ.டி அதிகாரி.
அனுமதிபெற்று நுழைந்த பிறகும் மணிக்கணக்காய் விசாரணை செய்யும் உங்களை
எப்படி நம்புவது? என்றேன்.



பதில் பேசாமலே
அவர்களுக்குள் சிங்களத்தில் பேசினர். யாருக்கோ என்னைப் பற்றிய தகவலைப்
பகிர்ந்தனர். இலங்கையில் தங்கியிருக்கும் முகவரியை மீண்டும்
வாங்கிக்கொண்டு, போகலாம் என்றார் சி.ஐ.டி. அதிகாரி திடீரென.

எழுந்து நடக்க ஆரம்பித்தேன். என்னை விசாரித்த இராணுவ மேஜர் நான் பேருந்து ஏறும்வரை என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.



புலிகள் என்றாலும் கேமரா என்றாலும் சிங்கள இராணுவத்துக்கு இன்றும் அவ்வளவு
பயம். அந்தப் பயத்தால்தான் தமிழ் நிலம் இன்றும் இராணுவ வசிப்பிடமாக
இருக்கிறது.



ஐந்து லட்சம் சிங்களவர்களை உள்ளடக்கிய
இலங்கை இராணுவம், தனது மொத்தப் பங்கில் 80 சதவிகிதப் படையினரை (நான்கு
லட்சம் பேர்) தமிழர் நிலத்தில் புலிகளுக்காகக் காவல் வைத்துள்ளது.



அப்படியான சிங்கள இராணுவத்தின் கேமரா பயத்தால்தான், இந்தியக்
குடியுரிமைபெற்ற தமிழனாகிய நானும், இலங்கையில் இரண்டு முறை இராணுவ
விசாரணைக்காக மூன்று மணி நேரம் வைக்கப்பட்டேன்!

ஆனால், தமிழர்கள் அனைவரும் 24 மணி நேரமும் இராணுவ விசாரணையில் இருப்பதைப் போலவே இருக்கிறார்கள்.



கொழும்புவில் மிகக் கோரமானது பூசா சிறை முகாம். எந்த விசாரணையும் இல்லாமல்
20 ஆண்டுகளைக் கடந்தும் தமிழர்கள் சிறை வைக்கப்பட்டு இருக்கும் இடம்.
இங்கேதான் என் மகன் இருக்கிறானா என்று எந்தத் தாயும் உறுதி செய்ய முடியாத
அளவுக்கு இருட்டான இடம்.



இன்னொன்று, இலங்கை
இராணுவத்தில் 4-வது மாடி விசாரணை. அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அனைவரையும்
உயிரோடு சிறுகச்சிறுகச் சித்திரவதை செய்து கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்லும்
இடம் அது.

இவை இரண்டும் இன்னும் உலகத்தின் மனச்சாட்சிக்கு
முன்னால் வெளிச்சத்துக்கு வராத இடங்கள். உண்மையைச் சொன்னால், ஈழத்தின்
மொத்த நிலப்பரப்புமே அப்படித்தான் இருக்கிறது!




நாலைந்து தமிழர்கள் சேர்ந்து நிற்க முடியாது. சந்தேகக் கண்கள் உங்களை
நோட்டமிட்டபடி நிற்கும். சொந்தங்கள் பக்கத்து ஊரில் இருந்து வந்தால்கூட,
பதிவுசெய்த பிறகுதான் நுழைய முடியும்,



வெளிநாட்டில் இருந்து வருவதைப் போல. வெளிநாட்டில் இருந்து உறவுகளைப் பார்க்க வருபவர்களுக்கு முழுமையான விசாரணை உண்டு.

கிளிநொச்சியில் ஒரு காட்சி… கோயில் திருவிழாவில் பக்திப் பரவசத்துடன்
தமிழ் பக்தர்கள் நடந்து செல்கிறார்கள். சுற்றிலும் பாதுகாப்புக்கு
இராணுவமோ, பொலிஸோ போனால் பரவாயில்லை. ஆனால், பக்தர்கள் தலைகளைவிட
இராணுவத்தினர் எண்ணிக்கைதான் அதிகம்.



தமிழர்கள்
சாமியைச் சொல்லித் திரண்டாலும் புலிகளாகவே நினைக்கிறது இராணுவம். சுயமாய்
நடமாடவும், சுயமாய் பொருள் தேடவும், சுயமாய்ச் செயல்படவும் அனுமதிக்காத
அவசர நிலை இன்னமும் அப்படியே இருக்கிறது.

தமிழர்களைக்
கண்களுக்குத் தெரியாத கயிறால் கட்டிப்போட்டுவிட்டு, அவன் சுதந்திரமாய்
அலைந்த பூமியை சுற்றுலாத் தலங்களாக மாற்றி விட்டனர்.





புலித்தடம் தேடி……..! – மகா. தமிழ்ப் பிரபாகரன் (பயணக்கட்டுரை – பாகம் 01) 15897_508924239147577_1300495536_nசிங்களவர் பெருமை பேசும் நினைவகங்கள், இராணுவத்தின் வீரம் சொல்லும்
முகாம்கள், புத்தரின் புகழ்பாடும் கோயில்கள், கேளிக்கை விடுதிகள் என ஈழப்
பிரதேசம், தமிழ் அடையாளங்களைத் தொலைத்து விட்டது. தமிழர்களைப் போலவே
துடைக்கப்பட்டு விட்டது!



ஆனையிறவுக்கு முன் ஒரு பகலைக் கொழும்புவில் தொடங்கினேன். எனது பயணமும் அங்கு இருந்துதான் ஆரம்பம் ஆனது!

ஊடறுத்துப் பாயும்……



ஜூனியர் விகடன்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum