TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


முருகன் கோவில்கள்

Go down

முருகன் கோவில்கள் Empty முருகன் கோவில்கள்

Post by Tamil Fri Jan 08, 2010 2:40 pm

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானம், பழனி


முருகன் கோவில்கள் Palani
பழனி முருகன் கோவில் முருகனது அறுபடை வீடுகளில் மூன்றாவதாகும். இது
தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 100 கிமீ மேற்கே உள்ள பழனியில்
அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் புராதனமான கோவிலாகும். இது கடல்மட்டத்தை
விட 1500 அடி உயர குன்றின் மீது அமைந்துள்ளது. இங்கு முருகன் தண்டாயுதபாணி
சுவாமி என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார்.


கோவில் வரலாறு
ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை சிவனுக்கு
படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலுருந்த பார்வதி தேவி அந்த
பழத்தை தனது குமாரர்களான விநாயகனுக்கும், குமரனுக்கும் பகிர்ந்து கொடுக்க
விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை
போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை
அறிவித்தார். உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு
ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். குமரன் தனது மயில் வாகனத்தில் ஏறி
உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை
சுற்றி வந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன்
அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினான். அன்றிலிருந்து அவனது இந்த
படை வீடு "பழம் நீ " (பழனி) என அழைக்கப்படுகிறது.




முருகன் சிலையின் சிறப்பு
இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது.
முருகனின் சிலை நவபாஷாணத்தல் வடிக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது
வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களைப் போன்று
செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை பழுதுபட்டுள்ளது.
சமீப காலம் வரை இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு
(சந்தனக்காப்பு) காலையில் அந்த சந்தனம் அனைத்து பக்தர்களுக்கும் சிறு
வில்லை பிரசாதமாக வழங்கப்பட்டது. இது மிகச்சிறந்த மருந்தாக
கருதப்படுகிறது.


போகர் சந்நிதி
மலைக் கோவிலின் தென்மேற்கு பிரகாரத்தில் போகர் சந்நிதி உள்ளது.
முருகனின் நவபாஷான சிலையை சித்தர் போகர் வடித்து தினமும் பூஜை செய்து
வந்துள்ளார். அவர் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ளார். போகர்
ஒரு மருத்துவராக இருந்ததால், நவபாஷானங்களை கலந்து சிலை செய்ய முடிந்தது.
இந்த கோவில் போகர் வழிபட்ட நவதுர்க்கா, புவனேஸ்வரி, மரகத லிங்கம் ஆகியவை
உள்ளன. போகரின் சமாதி இங்கு அமைந்துள்ளது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

முருகன் கோவில்கள் Empty Re: முருகன் கோவில்கள்

Post by Tamil Fri Jan 08, 2010 2:41 pm

... தொடர்ச்சி ...


முருகன் கோவில்கள் Palani2

திருஆவினன்குடி
மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோவிலின் பெயர் குழந்தை
வேலாயுதசுவாமி கோவில் ஆகும். இந்த இடத்தின் பெயர் திரு ஆவினன்குடியாகும்.
இக்கோவிலே உண்மையில் மூன்றாவது படைவீடாகும். இக்கோவிலுடன் இணைந்து ஒரு
குளம் உள்ளது. முருகனின் பழமையான கோவில் திருஆவினன்குடி ஆகும். இங்கு
முருகன் நெல்லி மர நிழலில் கோவில் கொண்டுள்ளார். இங்கு முருகன் குழந்தையாக
மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். முருகன் ஒரு அரசரைப் போல்
உயரமான கருவரையில் உள்ளார். அதனால் பக்தர்கள் அவரை மிகவும் நன்றாக காண
முடியும். இங்கு பிரதான கோவில், நெல்லி மரம், நாகலிங்கப் பூ மற்றும்
அருணகிரிநாதர் ஆலயம் ஆகியவை தரிசிக்க வேண்டியவை ஆகும்.

திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவில், சண்முகாநதி கோவில்கள்,
இடும்பன் மலை, விஷ்ணு கோவில், பட விநாயகர் கோவில், மலையைச் சுற்றியுள்ள
108 விநாயகர் கோவில்கள், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்,
கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள வேலப்பர் கோவில் ஆகிய கோவில்கள் பழனி
தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டவை ஆகும்.




மலையில் இரவு தங்குதல்
பழனி மலையில் இரவு தங்குவதற்கு ஆண்டு முழுவதும் யாரும் எப்போதும்
அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் ஒவ்வோர் ஆண்டும் ஒரே ஒரு நாள் மட்டும் சேலம்
மாவட்டம் இடைப்பாடி நகரைச் சேர்ந்த பர்வதராஜகுலத்தைச் (மீனவர்) சேர்ந்த
மக்கள் இரவு தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பல நூறு ஆண்டுகளாக
(சுமார் 300) பரம்பரை பரம்பரையாக இந்த வழக்கம் இன்று வரை
கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தை மாதம் தைப்பூசம் முடிவுற்ற
பிறகு இச்சமுதாயத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பழனிக்கு காவடி கட்டி
நடைப்பயணம் மேற்கொண்டு இங்கு வருகிறார்கள். அதே நாளில் இச்சமுதாயத்தைச்
சேர்ந்தவர்கள் சேலம், கும்பகோணம், தாரமங்கலம், சென்னை, தஞ்சாவூர், கடலூர்
மற்றும் தமிழகத்தின் பிற ஊர்களிலிருந்தும் காவடி கட்டி நடைப்பயணம்
மேற்கொண்டு இங்கு வந்து சேர்கிறார்கள். இந்த நடைப்பயணத்தின் போது
பர்வதராஜகுல சமுகத்தினரோடு மற்ற சமுகத்தினரும் நடைப்பயணம் மேற்கொண்டு
முருகனை தரிசிக்க வருகிறார்கள். நடைப்பயணத்தின் போது பர்வதராஜகுல அன்னதான
கமிட்டி மூலம் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த
லட்சக்கணக்கானோருக்கும், அனைத்து தினங்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஆகவே அனைத்து சமூகத்தினரும் பர்வதராஜகுல சமூகத்தினரோடு இணைந்து நடைப்பயணம்
மேற்கொண்டு முருகனை தரிசித்து பழனி மலையில் இரவில் தங்கி இறைவன் அருள்
பெற்று இன்பமடைகின்றனர்.


பூஜைகள்
முருகனுக்கு தினமும் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு
முருகன் விஸ்வரூப தரிசனம் அளிக்கிறார். காலை 7.15 மணிக்கு விழாபூஜை
நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு
உச்சிகால பூஜையும், மாலை 6 மணிக்கு சாயரட்சையும், இரவு 8 மணிக்கு ராக்கால
பூஜையும் நடைபெறுகிறது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

முருகன் கோவில்கள் Empty Re: முருகன் கோவில்கள்

Post by Tamil Fri Jan 08, 2010 2:41 pm

... தொடர்ச்சி ...


தங்கரதம்
ஒவ்வொரு கிருத்திகை தினத்தன்றும் மற்றும் விசேஷ நாட்களிலும் இரவு 7
மணிக்கு மலையில் கோவில் பிரகாரத்தைச் சுற்றி தங்கரதம், நாதஸ்வரம்,
திருப்புகழ் இசை மற்றும் கோவில் பரிவாரங்களுடன் வலம் வருகிறது.
பக்தர்களும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்கரதம் இழுக்கிறார்கள்.
தங்கரதம் இழுக்க கிருத்திகை தினங்களில் ரூ. 2000மும் மற்ற சாதாரண
நாட்களில் ரூ.1500மும் கட்டணம் செலுத்த வேண்டும். இக்கட்டணம் மாலை 4.30
மணிக்குள் தேவஸ்தான அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். தைப்பூசம்,
பங்குனி உத்திரம், தசரா பண்டிகையின் பத்து நாட்கள், சூரசம்ஹாரம்,
கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் தங்கரதம் வலம் இல்லை. மயில் வாகனத்தில்
முருகன் பவனி வர கட்டணம் ரூ. 300 ஆகும்.


விழாக்கள்
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, அக்னி நட்சத்திரம் ஆகிய
விழாக்கள் முக்கியமானவையாகும். வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும்
பிற பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படுகின்றன.




காவடி மற்றும் நடைப்பயணம்
பக்தர்கள் காவடி கட்டி நடைப்பயணம் மேற்கொண்டடு வந்து முருகனை
வழிபடுவது மிகவும் சிறப்பான வழக்கமாகும். லட்சக்கணக்கானோர் தைப்பூசத்
திருநாளன்று காவடிகட்டி நடைப்பயணம் மேற்கொண்டு இங்கு வந்து முருகனை
தரிசிக்கின்றனர்.


அன்னதானம்
கோவிலில் தினமும் மதியம் 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
அன்னதானம் செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ. 25000 செலுத்தினால் அந்தப்
பணத்தை முதலிடு செய்து அதன் மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தில் பக்தர்கள்
விரும்பும் தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவர் பெயரில் அன்னதானம்
வழங்கப்படுகிறது.


வின்ச் சேவை
1966 ஆண்டு தேவஸ்தானம் 22 டன் எடை இழுக்கும் திறன் கொண்ட வின்ச்
சேவையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் 36 பயணிகள் பிரயாணம் செய்ய முடியும்.
இது 290 மீட்டர் (960 அடி) நீள ரயில் பாதையில் இழுக்கப்படுகிறது. மலையின்
உயரம் 136 மீட்டர் (450 அடி) ஆகும். பிரயாண நேரும் 480 விநாடிகள் ஆகும்.
தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வின்ச் சேவை நடைபெறுகிறது.
தற்சமயம் 3 பாதைகளில் வின்ச்கள் இயக்கப்படுகின்றன. கிருத்திகை மற்றும் பிற
விழா நாட்களில் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வின்ச் சேவை
நடைபெறுகிறது. இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 10 மற்றும் 3 வயது
முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் ரூ. 5 ஆகும்.


ரோப் கார்
தற்போது மலைக்கு செல்ல ரோப் கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன்
மூலம் சில விநாடிகளில் மலை உச்சிக்கு சென்று விட முடியும். இதற்கான
கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 15 ஆகும்.


மேலும் விவரங்களுக்கு

இணை ஆணையர்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானம் அலுவலகம்
அடிவாரம், பழனி - 624 601.
தொலைபேசி: +91-4545-241417 / 242236
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

முருகன் கோவில்கள் Empty அருள்மிகு சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம், திருச்செந்தூர்

Post by Tamil Fri Jan 08, 2010 2:42 pm

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம், திருச்செந்தூர்


முருகன் கோவில்கள் Tiruchendur
பழந் தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்துக்
கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கருதப்படுகின்ற ஆறு
கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அவை அறுபடைவீடுகள் என
அழைக்கப்படுகின்றன். இவற்றுள் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுவது
திருச்செந்தூர் ஆகும். இது திருச்சீரலைவாய் எனவும் அழைக்கப்படும். மிக
அரிதாக முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கோயில்
இதுவாகும். 130 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக்
கொண்டதாக அமைந்துள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும்
குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாக
இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.



சூரபத்மன் என்ற அரக்கன் தனது குருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம்
பெற்று தனக்கு சர்வ வல்லமை வேண்டி சிவபெருமானை நோக்கி கடுந்தவம்
மேற்கொண்டான். சிவபெருமானும் அவனுக்கு காட்சி கொடுத்து, தமது சக்தியன்றி
வேறு எந்த சக்தியாலும் அவனுக்கு மரணம் கிடையாது என்று வரம் அருளினார்.
அதன் பிறகு சூரபத்மனின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போனது. அவனால்
துன்பத்திற்கு உள்ளான தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சூரனை அழிக்க
சிவபெருமான் தனது ஞானக்கண்ணிலிருந்து ஆறு சுடர்களை உருவாக்கினார். ஆறு
சுடர்களும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. கார்த்திகைப் பெண்கள் அறுவர்
குழந்தைகளுக்குப் பாலூட்டினர். அம்மையும், அப்பனும் குழந்தைகளைப் பார்க்க
வந்தனர். பார்வதி தேவி அந்த குழந்தைகளைத் திருக்கரங்களால் சேர்த்து
அணைத்தாள். அப்போது ஆறு குழந்தைகளும் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும்
கொண்டு ஒரு குழந்தையாக மாறியது. பார்வதி தேவியின் பாத சிலம்பில்
நவசக்திகள் தோன்றினர். நவசக்திகள் வயிற்றில் வீரபாகு முதலிய இலட்சத்து
ஒன்பது வீரர்கள் தோன்றினர். இவர்கள் முருகனுக்கு படைவீரர்களாக ஆனார்கள்.
சிவபெருமான் வெற்றி தரும் வேலை முருகனிடம் தந்தார். தன் அம்சமாகிய பதினொரு
ருத்ரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார். அம்மையப்பர் ஆசியுடன்
முருகன் படைகளோடு திருச்செந்தூர் வந்து தங்கினார். முருகப் பெருமான்
வீரபாகுவைச் சூரனிடம் தூதனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுவித்திடுமாறு
செய்தி அனுப்பினார். சூரபத்மன் அதற்கு மறுத்தார். ஆகவே முருகப் பெருமான்
சூரபத்மனோடு போரிட்டார். பத்து தினங்கள் நடந்த போரில் அசுரர்களை வென்று
சூரபத்மனை மயில் சேவலாக மாற்றினார். மயில் முருகனுக்கு வாகனம் ஆகியது.
சேவல் என்று முருகன் புகழ் கூவியது.

ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்த 6ம் நாள் முருகன் சூரனை வென்றான்.
இதுவே கந்த சஷ்டி என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. சூரபதமனின்
தளபதிகளான யானைமுகன், சிங்கமுகன், சூரபன்மன் ஆகிய மூன்று அரக்கர்களை
ஒழித்தான். இக்காலத்திலும் இம்மூன்று அரக்கர்களும் மாயை, கன்மம், ஆணவம்
ஆகிய குணங்களாக மக்களிடம் குடியிருக்கிறார்கள். இவர்களை ஒழிக்கவும்
திருச்செந்தூரான் அருள் பாலிக்கிறான். இந்த மூன்று துர்குணங்களையும்
விட்டொழித்தால் சூரனைப் போல இறுதியில் இறைவனை அடைய முடியும். இந்த
சூரசம்ஹார சம்பவத்தைச் சித்தரிக்கும் வைபவம் கடற்கரையில் லட்சக்கணக்கான
பக்தர்கள் புடை சூழ நடைபெறும். தீராத நோய் நீங்க வேண்டும் என்றும்,
பிள்ளைப்பேறு வேண்டியும், பல பக்தர்கள் சஷ்டி விரதம் மேற்கொள்கின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இயற்கையை வழிபட்டனர்.
இயற்கையை முருகு எனப் பெயரிட்டு வணங்கினர். காடு, மலை, அருவி, கடற்கரை
ஆகிய இடங்களில் கோவில் அமைத்து வழிபட்டனர். அத்தகைய தலங்களுள் ஒன்று
திருச்செந்தூர் ஆகும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

முருகன் கோவில்கள் Empty Re: முருகன் கோவில்கள்

Post by Tamil Fri Jan 08, 2010 2:43 pm

... தொடர்ச்சி ...


முருகன் கோவில்கள் Tiruchendur2
பதினாறாம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டம் திருவாங்கூர் மன்னர்
ஆட்சிக்குட்பட்டிருந்த போது, இந்தக் கோயில் சீரமைக்கப்பட்டது என்பதற்கான
கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. எனினும் தற்போது உள்ள கோவில்களை
உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் காசி சுவாமிகள், மௌன சுவாமிகள்
மற்றும் ஆறுமுக சுவாமிகள் என்ற மூவர் சுவாமிகள் ஆவர். இவர்கள் மூவரும்
தத்தமது காலங்களில் கோயிலைச் சுற்றி மண்டபங்களையும், கோபுரங்களையும்
அமைத்துள்ளனர். இவர்கள் மூவரும் இத்தலத்திலேயே ஜீவசமாதியும்
அடைந்துள்ளனர். இவர்களது சமாதிகள் இன்றும் கடற்கரையை ஒட்டி
காணப்படுகின்றன. இவர்களுக்கு பின்னர் வந்த தேசிக மூர்த்தி சுவாமிகள்
ராஜகோபுரத்தை கட்டியதாக கூறப்படுகிறது.

இக்கோவிலில் மூலவர் பெயர் பாலசுப்பிரமணியர். கடற்கரையோரம் நின்று
அருள்பாலிப்பதால் 'கடற்கரையாண்டி' என்றும் அழைக்கப்படுகிறார். இக்
கோவிலில் மூலவர், வள்ளி, தெய்வானை கோயில்களுக்கு போத்திகளும், ஆறுமுகப்
பெருமான், நடராஜர், சனீஸ்வரர் கோயில்களுக்கு சிவாச்சாரியார்களும் பூஜை
செய்கின்றனர். வெங்கடாசலப் பெருமாள் கோயிலில் வைணவ ஆச்சாரியார்கள் பூஜை
செய்கின்றனர். கோயில் திருப்பணி செய்த மூவர் சமாதிகளில் ஓதுவார்கள் பூஜை
செய்கின்றனர். மூலவரின் இடது பாதத்தின் அருகே தங்கச் சீபலி
வைக்கப்பட்டுள்ளது. வலது பாதத்தருகே வெள்ளியாலான சீபலி உள்ளது. இந்த சீபலி
மூலவரைப் போலவே உள்ள ஒரு சிறு விக்ரகம். தினமும் கோயில் பிரகாரங்களில்
வலம் வந்து எல்லா சந்நிதிகளுக்கும் சென்று அந்தந்த கடவுளர்களுக்கு முறையாக
நிவேதனம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு இந்த சீபலிக்கு
உண்டாம். தன் கோயிலில் தன்னுடனே உறையும் பிற கடவுளர்களுக்கே படியளக்கும்
இந்த பாலகுமரன், தன்னை நாடும் பக்தர்களை அவ்வாறே காத்து அருள்வான் என்பது
உறுதி. கேரள மன்னர் மார்த்தாண்டவர்மன் இவற்றை கோவிலுக்கு வழங்கியுள்ளார்.



சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தை சேர்ந்த
தேசிகமூர்த்தி சுவாமிகளின் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி கோயில்
திருப்பணியை மேற்கொள்ளும்படி ஆணையிட்டாராம். அதன்படி அவர் இங்கு தங்கி
கோபுரம் கட்டி முடித்திருக்கிறார். அவ்வாறு கோபுரம் கட்டியபோது அந்தப்
பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு கூலி கொடுக்க அவரிடம் பணமில்லை. மனதார
முருகனை வேண்டிக்கொண்டு, அவர் பிரசாதமான விபூதியை இலையில் மடித்து
ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். அந்த இலையை தூண்டுகை விநாயகர் கோயிலை தாண்டி
சென்றதும் திறந்து பார்க்குமாறு கூறினார். பணியாளர்களும் அப்படியே
பார்த்தபோது அவரவர் வேலைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் தனிதனியே ஊதியம் அந்த
விபூதி இலைக்குள் இருந்தது கண்டு அதிசயித்தனர். ஆனால் கோபுரத்தின் ஆறாம்
நிலை கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்ட போது இந்த அற்புதம் நின்று விட்டது.
சுவாமிகள் மிகவும் வருந்தினார். ஆனால் அன்றிரவே முருகன் அவரது கனவில்
தோன்றி காயல்பட்டினத்தில் வசிக்கும் சீதக்காதி என்னும் வள்ளலிடம் சென்று
பொருள் பெற்று வருமாறு பணித்தார். ஆனால் வள்ளலோ, சுவாமிகள் கொடை
கேட்டவுடனேயே ஒரு மூட்டை உப்பை எடுத்துக் கொடுத்தார். சுவாமிகளுக்கு
ஏமாற்றமாகப் போய்விட்டது. பணத்தை எதிர்பார்த்தால் உப்பு கிடைக்கிறதே என்று
வருந்தினார். ஆனாலும் எந்த மறுப்பும் சொல்லாமல் உப்பு மூட்டையை வாங்கிச்
சென்றார். திருச்செந்தூர் வந்து சுவாமிகள் மூட்டையைத் திறந்து பார்த்தால்
அதற்குள் தங்கக் காசுகள் இருந்ததைக் கண்டு வியந்தார். மிகுந்த
மகிழ்ச்சியுடன் அந்த காசுகளைக் கொண்டு கோபுரத்தைக் கட்டி முடித்தார்
சுவாமிகள்.

கோயிலின் வடபுறத்தில் வள்ளி குகை அமைந்துள்ளது. இங்கு
திரிசுதந்திரர்கள் பூஜை செய்கின்றனர். குகைக்குள் உள்ளே நுழையும் வாயில் 4
அடி உயரமே உள்ளது. குனிந்துதான் செல்ல வேண்டும். குகைக்குள் வள்ளியம்மன்
சிலை சுவரையொட்டி அமைந்துள்ளது. முருகன் வள்ளியைச் சிறையெடுக்க வந்தபோது
வள்ளியின் தந்தை நம்பிராசன் முருகனை துரத்தினான். முருகன், வள்ளியை
இக்குகையில் ஒளிந்திருக்கச் சொல்லி பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு
போருக்குச் சென்றதாக புராணம் சொல்கிறது. தெய்வயானையை திருமணம் முடித்து
வருவதைக் கண்ட முதல் மனைவியான வள்ளி, முருகன் மீது கோபம் கொண்டு
இக்குகையில் வந்து ஒளிந்து கொண்டதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

முருகன் கோவில்கள் Empty Re: முருகன் கோவில்கள்

Post by Tamil Fri Jan 08, 2010 2:43 pm

... தொடர்ச்சி ...

இக்கோயிலில் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார் ஆறுமுகப்பெருமாள்.
ஒரு காலத்தில் கேரளத்தவர்கள் இச்சிலையைக் கடத்திச் சென்றுவிட்டதாகவும்
பிறகு குமரி மாவட்டம் பறக்கை என்ற ஊரில் இருந்த செட்டியார்கள் அதை
மீட்டதாகவும் சொல்கிறார்கள். அவ்வாறு மீட்கப்பட்ட ஆறுமுகப் பெருமானுக்கு
அவர்கள் தோசையும், சிறு பருப்பு கஞ்சியும் நிவேதனமாக
படைத்திருக்கிறார்கள். அவ்வழக்கப்படி இன்றும் ஆறுமுகப் பெருமானின்
உதயமார்த்தாண்ட நைவேத்தியத்தில் தோசையும், கஞ்சியும் தவறாமல்
இடம்பெறுகின்றன.

கேரள மன்னர்கள் ஆளுகைக்குட்பட்ட காலத்தில் தான் இக்கோவில்
பிரபலமடையத் துவங்கியது என்கிறார்கள். ஆகவே, கேரள முறைப்படி இங்கு
போத்திகள் மூலஸ்தானத்தில் பூஜை செய்கிறார்கள். அவர்கள் கோயிலுக்குள்ளேயே
தங்கி பூஜை காரியங்களில் ஈடுபடுகின்றனர். இக்கோயிலில் இன்றும் பூஜை
புனஸ்காரங்கள் கேரள முறைப்படியே நடப்பதால், தரிசனத்திற்கு செல்லும் ஆண்கள்
கோயிலுக்குள் சட்டை அணியாமல் தான் செல்ல வேண்டும். கேரளக் கோயில்களில்
மேற்கொள்ளப்படும் துலாபார பிரார்த்தனை இங்கும் நடக்கிறது.



இக்கோவிலில் வழங்கப்படும் இலை விபூதி பிரசாதம் வேறெங்கும்
கிடைக்காது. பன்னீர் மர இலைகளில் பன்னிரண்டு நரம்புகளுள்ள இலைகளாகத்
தேர்ந்தெடுத்து அதனுள் விபூதியை வைத்து மடித்து கட்டு கட்டாக
வைத்திருப்பர். நோயால் பாதிக்கப்பட்ட முனிவர் விசுவாமித்திரருக்கு அந்நோய்
நீங்க ஆறுமுகப் பெருமான் தம் பன்னிரண்டு கைகளாலும் இலை விபூதியை வழங்கி
அவரை முற்றிலும் குணப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனால் எந்த நோயினால்
பீடிக்கப்பட்டாலும் இந்த இலை விபூதி பிரசாதம் நலமளிக்கும் என்று
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நம்புகிறார்கள்.

கோயிலில் தினமும் உச்சிக்கால பூஜையின் போது மூலவருக்கு பாலாபிஷேகம்
நடக்கும். முன்பு இதற்காக திருச்செந்தூரில் ஒவ்வொரு வீடாகச் சென்று யாசகம்
செய்து பாலை கொண்டு வருவார்கள். இதற்கென இரண்டு ஊழியர்கள்
நியமிக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு தலா ஆறு மாதம் பால் யாசிப்பது
மட்டுமே வேலை. இப்படி வீடு வீடாக யாசகம் செய்து பாலாபிஷேகம் செய்வதால்
இதனை பிச்சைப்பால் அபிஷேகம் என்றே சொல்கிறார்கள். ஆனால் தற்போது பக்தர்கள்
தாமே கோயிலுக்கு நேரடியாக பால் கொடுத்து விடுவதால், யாசிக்கும் வழக்கம்
இல்லை.

திருச்செந்தூரில் வியப்புக்குரிய ஓர் அம்சம், நாழிக்கிணறு. கடற்கரையை
ஒட்டி வெகு அருகில் அமைந்துள்ள சிறிய கிணறு இது. இந்தக் கிணற்றிலிருந்து
கிடைக்கும் நீர் உப்பு கரிப்பதில்லை என்பதும், இறைக்க இறைக்க வற்றாமல்
நீர் அதே அளவில் சுரப்பதும் விடை காண முடியாத அதிசயமாகும். இது இயற்கை
நீரூற்று. இதன் அருகிலேயே உள்ள நீள்சதுர கிணற்றின் நீர் கந்தக நெடியுடன்
கல்ங்கிக் காணப்படுவதிலிருந்து நாழிக் கிணற்றின் தெய்வாம்சத்தைப் புரிந்து
கொள்ளலாம். கடலில் நீராடிய பக்தர்கள் இந்த நாழிக் கிணற்றில் நீராடி
செல்வது வழக்கம். சூரபத்மனை போரில் வென்ற முருகன் தம் படையினரின் தாகம்
தணிக்க கடற்கரையில் ஓரிடத்தில் தன் வேலால் குத்தி நீர் வரச் செய்தார்.
முருகனே உருவாக்கிய பெருமையுடையது இந்த நாழிக்கிணறு என்று புராணங்கள்
குறிப்பிடுகின்றன.

வெள்ளையனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன்,
சிறந்த முருக பக்தராகத் திகழ்ந்தார். அவரது காலத்தில் திருச்செந்தூர்
கோவில் ராஜகோபுரத்தின் ஒன்பதாவது அறையில் உச்சி கால பூஜையின் போது, வெண்கல
மணி தினமும் ஒலிக்கப்படும். 100 கிலோ எடை கொண்ட அந்த மணி சப்தம் கேட்டு
திருச்செந்தூர் முதல், கட்டபொம்மன் ஆண்ட பாஞ்சாலங்குறிச்சி வரை 40
மண்டபங்களில் அங்குள்ள மணிகளும் அடுத்தடுத்து ஒலிக்கப்படும். கடைசி மண்டப
மணி ஒலிக்கப்படும் சப்தம் கேட்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டடயில்
கட்டபொம்மன், திருச்செந்தூர் கோவிலில் உச்சி கால பூஜை நடப்பதை அறிந்து
கொள்வார். அதன் பின் தான், அவர் பூஜைகளைச் செய்து அன்றைய உணவை
அருந்துவார். திருச்செந்தூர் கோவில் உச்சி கால பூஜை பிரசாதம், அவருக்கு
குதிரைகள் மூலம் அடுத்த சில மணி நேரத்தில் கோட்டைக்கு வந்து விடுமாம்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த மணியின் செயின் அறுந்ததால், கடந்த பல
ஆண்டுகளாக பழுதாகக் கிடந்த அந்த மணியை சரி செய்ய வேண்டுமென கட்டபொம்மன்
வாரிசு வீமராஜா மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 250
ஆண்டு பழமையான அந்த மணி தற்போது சரி செய்யப்பட்டு, ராஜகோபுர ஒன்பதாம்
அறையில் பொருத்தப்பட்டுள்ளது.


நன்றி: தினகரன்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

முருகன் கோவில்கள் Empty Re: முருகன் கோவில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum