Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
முதல்வர் உத்தரவை செயல்படுத்தாமல் கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியம்
Page 1 of 1

நாமக்கல்:"சில்மிஷ ஆசிரிய, ஆசிரியைகள் பணி நீக்கம் செய்யப்படுவதுடன்,
அவர்களது கல்விச் சான்றிதழும் ரத்து செய்யப்படும்' என, முதல்வர் உத்தரவு
பிறப்பித்துள்ள போதும், நாமக்கல் "சில்மிஷ' ஆசிரியர் மீதான நடவடிக்கையை
கல்வித்துறை அதிகாரிகள், கிடப்பில் போட்டுள்ளது, பெற்றோரை அதிர்ச்சியடைச்
செய்துள்ளது.
நாமக்கல் அருகே வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளியில் ஆசிரியராக சத்தியபிரபு, 33, பணிபுரிந்து வந்தார். அவர், பள்ளி
ஆசிரியைகளிடம், இரட்டை அர்த்தத்தில் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
அதுபோல் பள்ளி மாணவியரிடமும் "சில்மிஷ'த்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
புகார்:ஆசிரியர்
சத்தியபிரபுவின் நடவடிக்கையால் தர்ம சங்கடத்திற்கு உள்ளான ஆசிரியைகள்,
அதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் மறைமுகமாக புகார்
செய்துள்ளனர். எனினும், அவர் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல்
அலட்சியம் காட்டி வந்தனர்.அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர்
சத்தியபிரபு, தொடர்ந்து மாணவியரிடம், "சில்மிஷ'த்தில் ஈடுபட்டு வந்தார்.
ஒரு கட்டத்தில் அவரின் தொந்தரவு அதிகரிக்கவே, அதை பொறுக்க இயலாத மாணவியர்
சிலர், "சில்மிஷ' ஆசிரியர் சத்தியபிரபுவின் நடவடிக்கைகள் பற்றி, தங்களது
பெற்றோரிடம் கூறியுள்ளனர்.அதிர்ச்சியடைந்த பெற்றோர், சென்ற மாதம், 25ம்
தேதி, பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து
மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் உத்தரவு படி, ஆசிரியர் சத்தியபிரபுவை, மாவட்ட
தொடக்க கல்வி அலுவலர் அருள்மொழி தேவி, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
அலட்சியம்:
"பள்ளி
மாணவ, மாணவியரிடம் தவறான முறையில் நடக்கும் ஆசிரிய, ஆசிரியைகள் பணியில்
இருந்து நீக்கம் செய்யப்படுவதுடன், அவர்களது கல்விச் சான்றும் ரத்து
செய்யப்படும்' என, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் உத்தரவு
பிறப்பித்துள்ளபோதும், அவர் மீதான நடவடிக்கை மட்டும் ஆமை வேகத்தில் நடந்து
வருகிறது.மாணவ, மாணவியரிடம் தவறான முறையில் ஈடுபடும் ஆசிரிய, ஆசிரியைகள்
மற்றும் முறைகேட்டில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது, துறை
ரீதியாக முதலில், "சஸ்பெண்ட்' செய்யப்படுவர். இது, தற்காலிக பணி இடைநீக்கம்
என்பதால், சம்மந்தப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு முதல் ஆறு
மாதத்திற்கு, அவர் பெற்று வந்த ஊதியத்தில், 50 சதவீத தொகை ஊதியமாக
வழங்கப்படும்.ஆறு மாதத்திற்கு மேல் "சஸ்பெண்ட்' நடவடிக்கை நீடித்தால்,
அவருக்கு, 75 சதவீத தொகை ஊதியமாக வழங்கப்படும். எனவே, அரசுத் துறை
நடவடிக்கையை பொறுத்தவரை, "சஸ்பெண்ட்' எல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.
எனவே, தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், வடுகப்பட்டி நடுநிலைப்பள்ளி
ஆசிரியர் சத்தியபிரபுவை, பணி நீக்கம் செய்ய வேண்டும்.அவர் மீதான நடவடிக்கை,
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும் என,
பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால்,
சத்தியபிரபு மீதான அடுத்தகட்ட நடவடிக்கையை, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்,
விரைந்து மேற்கொள்ளாமல் சுணக்கம் காட்டுவது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
எப்போது?
இது குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி கூறியதாவது:
"ஆசிரியர்
சத்யபிரபு மீது "சில்மிஷ' குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, விசாரணை
நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், "17பி' சார்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை
அறிக்கை, இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில்
நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
நான்கு ஆண்டாக ஒரே பள்ளி: ஆசிரியர்
சத்தியபிரபு சென்னை பல்கலையில், கடந்த, 2000ம் ஆண்டு, பி.ஏ., ஆங்கிலம்
படித்துள்ளார். அதே பல்கலையில், முதுகலை ஆங்கில பட்ட மேற்படிப்பு மற்றும்
எம்.பில்., படித்துள்ளார். அவர் கடந்த, 2007ம் ஆண்டு, தர்மபுரி மாவட்டம்
அரூரில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அங்கு ஓராண்டு பணிபுரிந்த
சத்தியபிரபு, அங்கிருந்து இடமாற்றம் பெற்று வடுகப்பட்டி பள்ளியில்
சேர்ந்துள்ளார். தொடர்ந்து நான்காண்டாக அவர் வடுகப்பட்டி பள்ளியில்
பணிபுரிந்துள்ளார். ஆசிரியர் சத்தியபிரபுவின் தந்தை பெரியசாமி, ஓய்வு பெற்ற
அரசுப் பள்ளி ஆசிரியர். சத்தியபிரபுவின் மனைவி சங்கீதா, நாமக்கல்
மாவட்டம், புதன்சந்தை, ஆரம்ப சுகாதார நிலையத்தில், தொகுப்பூதியத்தில்
நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
ஆசிரியைகளிடமும் தவறாக பேசியதால் பணியிலிருந்து விடுவிப்பு:
அனைவருக்கும்
கல்வி இயக்கம் சார்பில், 2009-10ம் ஆண்டில், பள்ளி தொகுப்பு கருதாய்வு
மையங்களுக்கு ஆசிரியர் சத்யபிரபு, ஒருங்கிணைப்பாளராக நியமனம்
செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மாவட்ட அளவில் நடந்த ஆங்கில பயிற்சி
முகாமில் பங்கேற்றார்.
பயிற்சியில் நடத்தப்பட்ட விவரங்களை, ஒன்றிய
அளவில் நடக்கும் பயிற்சி முகாமில், கருத்தாளாக பணியாற்றி, ஆசிரியர்களுக்கு
விளக்க வேண்டும். அதன்படி சேந்தமங்கலம் வட்டார அளவில், துவக்கப்பள்ளி
ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் குறித்த பயிற்சி அளித்து
வந்தார்.அப்போது, ஆசிரியைகளிடம், இரட்டை அர்த்தத்தில் பேசுவதை, வழக்கமாக
கொண்டிருந்தார். அதனால், அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள் பலர், ஆங்கில மொழி
பயிற்சிக்கு வருவதை தவிர்த்தனர். கல்வி இயக்க மாவட்ட அலுவலகத்துக்கு,
அனைவரின் புகாரும் சென்றது. அதைத் தொடர்ந்து, "சில்மிஷ' ஆசிரியர்
சத்யபிரபு, கருத்தாளர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» முதல்வர் உத்தரவு காற்றோடு போச்சு: அலட்சியம் காட்டும் அ.தி.மு.க.,வினர்
» பெரியாறு அணையில் துளைகள் மூடுவதற்கு கேரள அதிகாரிகள் தடை: ஏமாற்றத்துடன் திரும்பிய தமிழக அதிகாரிகள்
» எஸ்.பி., உத்தரவை செயல்படுத்தாத போலீஸ் அதிகாரிகளுக்கு வினோத தண்டனை
» ஐகோர்ட் உத்தரவை பின்பற்றாத பள்ளி வாகன உரிமம் ரத்தாகும்?
» முதல்வர் பொறுப்பேற்ற பின் எந்த சொத்தும் வாங்கவில்லை : முதல்வர் ஜெயலலிதா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum