Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஏழை வயிற்றுக்குச் சோறிடும் அட்சய பாத்திரம்...
Page 1 of 1
ஏழை வயிற்றுக்குச் சோறிடும் அட்சய பாத்திரம்...
இலவச அரிசி திட்டத்தை தொடங்கிவைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. (கோப்புப்படம்)
வயிற்றுக்குச்
சோறிடல் வேண்டும்...இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்...என்றார் மகாகவி
பாரதியார். அவரின் கவிதை வரிகளை கவனமுடன் பின்பற்றும் மாநில அரசாக தமிழகம்
விளங்குகிறது. அனைவருக்கும் உணவும், உணவுப் பொருள்களும் கிடைப்பதே தமிழக
அரசின் முக்கிய நோக்கமாகும். இந்த நோக்கத்துக்கு எப்போதெல்லாம் ஊறு
நேருகிறதோ அப்போது தனது கண்டனக் குரலை மாநில அரசு பதிவு செய்யத்
தவறுவதில்லை. குறிப்பிட்ட இலக்கினருக்கு மட்டும் மானிய விலையில் உணவுப்
பொருள்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்து அறிவித்தது. இதற்கு தமிழக
முதல்வர் ஜெயலலிதா தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்தத்
திட்டத்தை கைவிட வேண்டும் அல்லது தமிழகத்தில் இந்தத் திட்டத்தை
அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தினார்.முதல்வரின் இந்த கடுமையான
கண்டத்துக்குக் காரணம், தமிழகத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு
வரும் பொது விநியோகத் திட்டம்தான். முந்தைய திமுக அரசு பொது விநியோகத்
திட்டத்தின் மூலம் ஒரு கிலோ அரிசி ரூ.1 என்ற விலைக்கு வழங்கியது. ஆனால்,
இப்போது விலையேதும் இல்லாமல் ஏழைகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு அரிசி
வழங்கப்பட்டு வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி
வைத்த முதன்மையான திட்டங்களில் முக்கியமான திட்டம் இந்த விலையேதும் இல்லாத
அரிசித் திட்டமாகும்.சென்னையில் ஒரு நியாய விலைக் கடையில் எளிமையான
முறையில் நடந்த விழாவில், விலையில்லாத அரிசி வழங்கும் திட்டத்தை முதல்வர்
ஜெயலலிதா தொடங்கி வைத்தார். மாநிலத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ்
வழங்கப்படும் பொருள்களை பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை 1.97
கோடியாகும். இந்தப் பொருள்களை வழங்குவதற்காக 33 ஆயிரத்து 222 நியாய விலைக்
கடைகள் உள்ளன.அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற பொருள்கள்
வழங்கப்பட்டு வந்தாலும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனில் அக்கறை
கொண்டுள்ள அரசு அவர்களுக்காக மலிவு விலையில் அத்தியாவசியப் பொருள்களையும்
அளித்து வருகிறது. குறிப்பாக, வெளிச்சந்தையில் அதிகமான விலையில்
விற்கப்படும் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, எண்ணெய் வகைகள் தமிழக
அரசின் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை
செய்யப்படுகிறது.உளுத்தம் மற்றும் துவரம் பருப்பு கிலோ
ரூ.30-க்கும், பாமாயில் கிலோ ரூ.25-க்கும் விற்கப்படுகிறது. இந்த பொது
விநியோகத் திட்டம் ஏழை மக்களை விலைவாசிப் பிரச்னையில் இருந்து ஓரளவுக்கு
நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது.அதிக மானியம்: தமிழக அரசு
செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு வழங்கப்படும் மானியங்களில் (நிதி)
முதலிடம் வகிக்கும் துறை உணவுத் துறையாகும். நடப்பு ஆண்டில் மட்டும்
ரூ.4,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு மானியத்தை வழங்குவதன்
மூலம் இந்த அரசு ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசு
என்பதை புரிந்து கொள்ள முடியும்.அரிசி, மண்ணெண்ணெய் என மிகப் பெரிய
அளவுக்கு திட்டங்களைச் செயல்படுத்தும்போது சில கடத்தல் மற்றும்
பதுக்கல்காரர்களால் அவ்வப்போது இடையூறுகள் ஏற்படுகின்றன. இந்த இடையூறுகளை
தமிழக அரசு திறம்பட கையாண்டு வருகிறது. குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்
புலனாய்வுத் துறையின் மூலம் மட்டும் கடந்த 10 மாதங்களில் 193 பேர்
தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.அண்டை
மாநிலங்களின் எல்லையோரத்தில் அமைந்துள்ள தமிழக மாவட்டங்களான திருவள்ளூர்,
கிருஷ்ணகிரி ஆகியவற்றில் பொது விநியோகத் திட்டத்துக்காக வழங்கப்படும்
உணவுப் பொருள்களின் நுகர்வு குறித்து ஜி.பி.எஸ். கருவி மூலம்
கண்காணிக்கப்படுகிறது. மேலும், போலி குடும்ப அட்டைகளை களையும் பணியையும்
தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.கடந்த பத்து மாதங்களில் (கடந்த
ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை) 27 ஆயிரத்து 349 போலியான குடும்ப
அட்டைகள் கண்டறியப்பட்டு அவை களையப்பட்டுள்ளன.பதுக்கல் மற்றும்
கடத்தல் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.1,000 வெகுமதியும், போலி
குடும்ப அட்டைகள் பற்றி தகவல் தந்தால் ரூ.250 சன்மானமும் அளிக்கப்படும் என
தமிழக அரசு அறிவித்துள்ளது.போலி குடும்ப அட்டைகளை முற்றாக ஒழிக்கும் வகையில் பயோமெட்ரிக் குடும்ப அட்டைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.விளைந்த
உணவுப் பொருள்களை மக்களுக்குத் தேவையான அளவுக்கு பகிர்ந்து அளித்து
வழங்குவது உணவுத் துறை என்றால் அந்த உணவுப் பொருள்களை விளைவிக்க
விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது கூட்டுறவுத் துறையாகும்.இந்தத்
துறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட 10 ஆயிரத்து 368 கூட்டுறவு சங்கங்கள்
இயங்கி வருகின்றன. இந்தச் சங்கங்களின் ஓராண்டு வருவாய் வரவுகள் என்பது ஒரு
லட்சத்து 5 ஆயிரத்து 133 கோடி ரூபாயாகும். விவசாயிகள் மற்றும் நடுத்தர
மக்களுக்கு உதவுவதற்காக 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், 4 ஆயிரத்து
534 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளும் இயங்கி வருகின்றன.அனைத்து
மாவட்டங்களிலும் உள்ள கூட்டுறவு வங்கிகளை கம்ப்யூட்டர்மயமாக்கி அவற்றை
ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நடவடிக்கையில் கூட்டுறவுத் துறை தீவிரம் காட்டி
வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை நவீனமயமாக்கும் பணிகள்
நடைபெற்று வருகின்றன.குறிப்பாக, திருவண்ணாமலையில் உள்ள வேளாண்
கூட்டுறவு வங்கிகளில் மின்னணு வங்கிச் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.கூட்டுறவு
வங்கிகளில் கடன் வழங்கும் அளவு என்பது கடந்த நிதியாண்டில் இலக்கு
வைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 8 லட்சத்து 99
ஆயிரத்து 974 விவசாயிகளுக்கு 3 ஆயிரத்து 280 கோடி ரூபாய் அளவுக்கு கடனுதவி
கொடுக்கப்பட்டுள்ளது. அதில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின
சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு
மட்டுமன்றி சிறு வியாபாரம் செய்யும் ஏழை மக்களுக்கும் கடனுதவி அளிப்பதில்
கூட்டுறவு வங்கிகள் முனைப்புக் காட்டி வருகின்றன. பூ வியாபாரம் போன்ற சிறு
வியாபாரம் செய்வோருக்கு ரூ.10 ஆயிரம் வரை யாருடைய கையெழுத்தும் இல்லாமல்
கடனுதவி அளிக்கப்படுகிறது.விவசாயிகள், பொது விநியோகத் திட்டத்தை
பயன்படுத்தும் மக்கள் என அனைவருமே நுகர்வோர்கள்தான். அவர்களுக்கு தனியார்
உள்பட எந்த நிறுவனங்கள் மூலமோ சேவை குறைபாடு ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக
புகார் தெரிவிக்கலாம்.அவர்களின் புகார்களை ஏற்று நுகர்வோர்
பாதுகாப்புத் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. உணவுத் துறையுடன் இது
இயங்கினாலும் தனக்கென்று ஒரு பாதையை வகுத்து நுகர்வோர்களின் நலன்களை காத்து
வருகிறது. புகார் தெரிவிக்க தனி தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வசதி
போன்றவற்றை அளித்துள்ளது.பல ஆயிரம் கோடி ரூபாய் மானியம்...ஏழைகள்
பசியாற உன்னதத் திட்டங்கள்...இப்படி சாமானிய மக்களின் வயிற்றுப் பசியை
ஆற்றும் அட்சய பாத்திரமாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்
துறை விளங்கி வருகிறது என்றால் அது நிஜம்தானே.
Similar topics
» இன்று அட்சய திரிதியை: தங்கம் விலை குறைந்துள்ளதால் அலைமோதும் மக்கள் கூட்டம்
» அட்சய திரிதியை : டில்லியில் ஒரே நாளில் 20,000 திருமணங்கள்
» அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பாத்திரம் துலக்கும் மாணவியர்
» மெட்ராஸ் கஃபே இந்தி திரைப்படத்தில் பாஸ்கரன் என்ற பெயரில் பிரபாகரன் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
» இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் பிரதான பாத்திரம் ஏற்றுள்ளவர் ஓர் சிங்களவர்:
» அட்சய திரிதியை : டில்லியில் ஒரே நாளில் 20,000 திருமணங்கள்
» அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் பாத்திரம் துலக்கும் மாணவியர்
» மெட்ராஸ் கஃபே இந்தி திரைப்படத்தில் பாஸ்கரன் என்ற பெயரில் பிரபாகரன் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
» இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் பிரதான பாத்திரம் ஏற்றுள்ளவர் ஓர் சிங்களவர்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum