Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இன்டெல் "IVY Bridge" பிராசசர்
Page 1 of 1
இன்டெல் "IVY Bridge" பிராசசர்
இன்டெல் நிறுவனம் தன் புதிய திட்டத்தில், புதிய கட்டமைப்பில் உருவான ஐவி
பிரிட்ஜ் ப்ராசசரை வெளியிட்டுள்ளது. தன்னுடைய பென்டியம் 4 ப்ராசசர்களை
விட்டு வெளியே வந்ததிலிருந்து, இன்டெல் நிறுவனம் ஒருவகையான டிக்-டாக்
(“ticktock”) விளையாட்டை தன் ப்ராசசர்களில் காட்டி வருகிறது. இதில் டிக் (“tick”)
என்பது ப்ராசசர் வடிவமைப்பில் சுருங்கும் தன்மையைக் குறிக்கிறது. டாக்
என்பது ஒரு புதிய மைக்ரோ ப்ராசசரின் கட்டமைப்பினைக் குறிக்கிறது. இதனால்,
ஒவ்வொரு ஆண்டும் இன்டெல் நிறுவனத்திடமிருந்து, புதிய கட்டமைப்பில்
ப்ராசசர்களை எதிர்பார்க்கலாம்.
சென்ற ஆண்டில், இன்டெல் நிறுவனம் Sandybridge என அழைக்கப்பட்ட புதிய மைக்ரோ கட்டமைப்பினை அறிமுகப் படுத்தியது. இதில் கோர் (Core ix) வரிசை ப்ராசசர்கள் வெளியாகின. இதே அமைப்பில், இப்போது புதிய கட்டமைப்பு பதிப்பாக ஐவி பிரிட்ஜ் (Ivy Bridge)
ப்ராசசரை வெளியிட்டுள்ளது. மிகக் குறைந்த மின் சக்தியைப் பயன்படுத்தி,
அதிக கம்ப்யூட்டிங் திறனை இது அளிக்கும். இந்த சிப் 22nm நானோ மீட்டர்
தயாரிப்பு ப்ராசசரை அடிப்படையாகக் கொண்டது. (நானோ மீட்டர் - ஒரு நானோ
மீட்டர் என்பது ஒரு மீட்டரில் நூறு கோடியில் ஒரு பங்கு ஆகும்.) இது முந்தைய
சாண்டி பிரிட்ஜ் 32nm வடிவமைப்பினைக் காட்டிலும் தடிமன் குறைவாக
இருக்கும். 22nm எவ்வளவு சிறியது என்பதனைக் குறிக்க இன்டெல் ஓர்
எடுத்துக்காட்டினைத் தந்துள்ளது. 0.05 அங்குல விட்டம் உடைய ஒரு
குண்டூசியின் தலையில், 10 கோடி எண்ணிக்கையில், 22 நானோ மீட்டர்
ட்ரான்சிஸ்டர்களை வைக்கலாம். மனித தலை முடி அளவிலான அகலத்தில் 4 ஆயிரம்
ட்ரான்சிஸ்டர்களை அமைக்கலாம்.
இன்டெல் நிறுவனத்தினை அமைத்தவர்களில் ஒருவரான கார்டன் மூர் இது குறித்து
கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும், சிப் ஒன்றில் வைக்கப்படும்
ட்ரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை இரு மடங்காகும். ஆனால் அதற்கான செலவோ
குறைவாகவே இருக்கும் என்றார். இந்த கருத்தை மூர் விதி என்று கூறுகின்றனர்.
இந்த விதியைப் பின்பற்றி வரும் இன்றைய விஞ்ஞானிகள், ட்ரான்சிஸ்டர்களின்
அளவைத் தொடர்ந்து சுருக்கி வருகின்றனர். அதனால் தான் ஒரு ப்ராசசரில் நூறு
கோடிக்கு மேல் ட்ரான்சிஸ்டர்களை வைக்க முடிகிறது. (வரும் 2013ல், 14 நானோ
மீட்டர் ட்ரான்சிஸ்டர்களையும், 2015 ஆம் ஆண்டில் 10 நானோ மீட்டர்
ட்ரான்சிஸ்டர்களையும் வடிவமைக்க இன்டெல் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது)
தற்போது வெளிவந்துள்ள ப்ராசசரில் உள்ள ட்ரான்சிஸ்டர்களில், மின் சக்தி
திறன் கசிவது தடுக்கப்படுகிறது. ஒரு விநாடியில், பத்தாயிரம் கோடி முறை,
இந்த ட்ரான்சிஸ்டர்களை ஆன்/ஆப் செய்திடலாம். இதுவரை மேற்கொண்ட செயல்திறனை
மேற்கொள்ள, குறைவான மின் சக்தியே தேவைப்படுகிறது. மேலும் இந்த தொழில்
நுட்பத்தினால், சிப் தயாரிக்கும் செலவு 2% முதல் 3% வரை குறைகிறது.
ஐவி பிரிட்ஜ் ப்ராசசர் சிலிகானில், யு.எஸ்.பி.3 தொழில் நுட்பம்
பதிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இத்தகைய வசதியை இன்டெல் தருகிறது.
இதனால் யு.எஸ்.பி.3 தொழில்நுட்பம் அனைவருக்கும் கிடைக்கும். அதுவே பன்னா
டெங்கும் தரப்படுத்தப்படும். எனவே 2012 ஆம் ஆண்டில், யு.எஸ்.பி. 3 வகை
தொழில் நுட்பத்தை ஏற்று செயல்படக் கூடிய, 40 கோடி சாதனங்கள் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ப்ராசசரின் சிறப்பம்சம் இதன் கிராபிக்ஸ் மற்றும் மல்ட்டி மீடியா திறன்
ஆகும். Intel HD 3000 கிராபிக்ஸ் இதில் பயன்படுத்தப்படுகிறது. இது சாண்டி
பிரிட்ஜ் ப்ராசசரில் இருந்ததைக் காட்டிலும் இரு மடங்கு திறன் அதிகம்
கொண்டதாகவும், அனைத்திலும் மேம்படுத்தப் பட்டதாகவும் இருக்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் செயல்திறனைப் பெருக்க, இன்டெல் நிறுவனத்தின் 3டி ட்ரைகேட்
ட்ரான்சிஸ்டர் தொழில் நுட்பம் பயன் படுத்தப்பட்டுள்ளது. தட்டையான பழைய வகை
ட்ரான்சிஸ்டர்களுக்குப் பதிலாக, மூன்று பரிமாண ட்ரான்சிஸ்டர்கள் இந்த
தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது. சாண்டி பிரிட்ஜ் ப்ராசசர்களைக்
காட்டிலும் 20% கூடுதல் செயல் திறன் கொண்டதாக இது இருக்கும்.
இந்த வெளியீட்டுடன், இன்டெல், Core
i5 ப்ராசசரின் 13 quadcore வகையையும், ஐவி பிரிட்ஜ் கட்டமைப்பினை
அடிப்படையாகக் கொண்ட ஐ7 (i7) ப்ராசசரையும் இன்டெல் தந்துள்ளது. இது
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை இயக்குவதனை இலக்காகக் கொண்டது. அல்ட்ரா
நோட்புக் கம்ப்யூட்டர்களுக்கான ப்ராசசர்கள் வகை இந்த ஆண்டின் பிற்பகுதியில்
வெளியிடப்படும் எனத் தெரிகிறது. தற்போது 14 வகையான ஐவி பிரிட்ஜ்
ப்ராசசர்கள் பெர்சனல் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கு வழங்கப்பட
இருக்கின்றன. தொடக்கத்தில் Core i3 சிப் வெளியிடப்பட மாட்டாது. Core i5
ப்ராசசர் ஐந்து வகைகளில் வெளியாகின்றன. Core i7 ப்ராசசர் ஏழு வகைகளில்
கிடைக்கும். விலை குறைவான Core i3 சிப் பின்னர் வெளியிடப்படும்.
ஐவி பிரிட்ஜ் ப்ராசசர்களுடன் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் விரைவில் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» இன்டெல் (Intel) தரும் THUNDERBOLT.
» உள்ளங்கையையே பாஸ்வேர்டாக மாற்றப்போகும் இன்டெல் தொழில்நுட்பம்
» உலகை கலக்க வருகிறது அடுத்த தலைமுறை இன்டெல்(intel)
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
» A long bridge ...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum