TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எல்லாம் நன்மைக்கே!

Go down

எல்லாம் நன்மைக்கே! Empty எல்லாம் நன்மைக்கே!

Post by அருள் Thu Feb 16, 2012 9:24 am


எல்லாம் நன்மைக்கே! Edits





அமெரிக்கக்
கனவில் மிதந்து கொண்டிருக்கும் இந்திய இளைஞர்களுக்கும் வாழ்க்கை
வசதிகளுக்கு ஆசைப்பட்டு அமெரிக்காவைத் தஞ்சமடைந்திருக்கும்
இந்தியர்களுக்கும் பேரதிர்ச்சியான நீக்கங்கள் அங்கே நடந்தேறிக்
கொண்டிருக்கின்றன. பொறியியல், அறிவியல் தொழில்நுட்பத் திறமை தேவைப்படும்
பணிகளில் இந்தியர்களையும் சீனர்களையும் நியமனம் செய்யாமல், அமெரிக்கர்களையே
நியமனம் செய்யுங்கள் என்று அமெரிக்க நிறுவனங்களை வலியுறுத்தியிருக்கிறார்
அமெரிக்க அதிபர் ஒபாமா.இதை அவர் பலமுறை சொல்லியிருக்கிறார்
என்றாலும், இந்தியப் பொருளாதார மேதையும் பொருளாதாரத்தில் நோபல் பரிசு
பெற்றவருமான அமார்திய சென்னுக்கு அமெரிக்க விருது வழங்கிப் பாராட்டிப்
பேசும்போது மண்ணின் மைந்தருக்கு முன்னுரிமை என்பதை மீண்டும் தெளிவாக
வலியுறுத்தியிருக்கிறார்.அடுத்தபடியாக, "அமெரிக்கா
அமெரிக்கர்களுக்கே சொந்தம்', "அன்னியர்க்கு வசதியும் வாழ்வும்,
அமெரிக்கருக்கு வறுமையும் நோவும்?' என்றெல்லாம் அதிபர் ஒபாமா கோஷம்
எழுப்பினாலும்கூட நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. தனக்குப்பின்தான் தானம்
என்பதும், தன்னலம் சார்ந்ததே வாழ்வு என்பதும் அமெரிக்கர்களின் அடிப்படைச்
சித்தாந்தம்தான் என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். அமெரிக்காவில்,
பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கும்
நிலையில், முதலீட்டுச் சிக்கலில் உள்ள நிறுவனங்களை மீட்கும் திட்டம் கொண்டு
வந்துள்ள ஒபாமா, இதை ஒரு நிபந்தனையாகவே அறிவித்தார். இந்தத் திட்டத்தின்
கீழ் அரசின் நிதியுதவி, சலுகையைப் பெறும் நிறுவனங்கள் அமெரிக்க மண்ணில்
அன்னியர்களுக்கு வழங்கப்படும் "தாற்காலிகப் பணி அனுமதி'யான எச்-1பி விசா
பெற்றவர்களைப் பணிநியமனம் செய்யக்கூடாது என்பது நிபந்தனை. இரண்டு
ஆண்டுகளுக்கு முன்பு 1.95 லட்சமாக இருந்தது. இப்போது, வெறும் 65,000
பேருக்கு மட்டுமே தாற்காலிகப் பணி அனுமதி என்று மூன்றில் ஒரு பங்காகக்
குறைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தப் புதிய நிபந்தனையும்
அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.இத்தகைய தாற்காலிகப் பணி அனுமதி
பெறுபவர்களில் இந்தியர்கள்தான் அதிகம். அமெரிக்காவில் எச்-1பி விசா
பெற்றுள்ள இந்தியர்கள் 5.70 லட்சம் பேர் இருப்பார்கள் என்று
கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்தவர்களே
அதிகம்.தற்போதைய சட்டத்தின்படி அரசின் நிதியுதவியைப் பெறும்
நிறுவனங்கள், தாற்காலிகப் பணி விசா பெற்றிருக்கும் வெளிநாட்டவரை நியமிக்கக்
கூடாது. மேலும், ஏற்கெனவே பணியில் உள்ள அமெரிக்கரை நீக்கிவிட்டு
அவருக்குப் பதிலாக தாற்காலிகப் பணி அனுமதி பெற்றவரை எக்காரணத்தைக் கொண்டும்
நியமிக்கக்கூடாது என்று நிபந்தனை கடுமையாக்கப்பட்டிருக்கிறது.இந்தச்
சட்டத்தால், அயல்பணி ஒப்பந்த நடைமுறைகளில் பெரும் மாற்றம் இருக்காது என்று
கூறப்படுகிறது. ஆனால், இதற்கும்கூட சில நிபந்தனைகள் இருந்தாலும்கூட, அவை
மிகக் கடுமையானவை அல்ல என்று சொல்லப்படுகிறது. ஆகவே, தகவல் தொழில்நுட்பம்
சார்ந்த இந்திய ஊழியர்களை இந்தியாவுக்கு அனுப்பி, ஏதாவது ஒரு நகரில் ஒரு
கிளை அலுவலகம்போல இவர்களிடம் வேலை வாங்கிக்கொள்ள முடியும் என்று
கருதப்படுகிறது. ஆனால், இவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு வேலை செய்ய
முடியாது அவ்வளவே. 5.7 லட்சம் பேர் அங்கே தாற்காலிகப் பணி அனுமதி
பெற்றிருக்கிறார்கள் என்றால் அவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் மாணவர்களாக
இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் கல்விக் கட்டணத்தைச் செலுத்தவும்,
வாழ்க்கைச் செலவுக்காகவும் பணியாற்றுகிறார்கள். தற்போது அமெரிக்கா இந்தப்
புதிய சட்டத்தின் மூலம், அந்த வாய்ப்புக்குத் தடை போட்டுள்ளது. ஆகவே, இனி
அமெரிக்காவுக்குப் போய், வேலை செய்துகொண்டே படிக்கலாம் என்பவர்களின் கனவு
இனி பகல்கனவுதான்.புதிதாக மாணவர்கள் அங்கே செல்வது குறையும்
என்றாலும், ஏற்கெனவே இத்தகைய பகுதிநேர வேலையை நம்பி அங்கே சென்ற
மாணவர்களின் கதி என்னவாகும்? அதனால், ஏற்கெனவே அமெரிக்காவில்
படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டுமாவது அவர்கள் தமது படிப்பை
முடிக்கும் வரை, பணியாற்றவும், பணி வழங்கவும் அனுமதிக்க வேண்டும் என்று
அமெரிக்க அரசுக்குக் கோரிக்கை வைக்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உள்ளது.கேட்டிலும்
உண்டோர் நன்மை. இத்தனைக் காலமாக நாம் கவலைப்பட்டுக்கொண்டிருந்த திறமையின்
வெளியேற்றம் (பிரெய்ன் டிரெய்ன்) நிச்சயமாகக் குறையும். திறன் மிக்க
இளைஞர்கள் இங்கேயே வேலை தேடிக்கொள்வார்கள். இந்தியர்களும் சீனர்களும்
வெளியேறிய பிறகுதான் அமெரிக்கர்கள் தாங்கள் செய்த முட்டாள்தனத்தை உணரப்
போகிறார்கள். இவர்களைப்போல மாடாக உழைக்க அமெரிக்கர்களால் முடியாது
எனும்போதுதான் இந்தியர்களின் அருமை அவர்களுக்குத் தெரியப் போகிறது.இப்போதே,
இந்தியாவுக்குத் திரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எண்ணிக்கை
அதிகரித்துக்கொண்டு வருகிறது. தகவல்தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில்
ஈடுபட்டிருந்தவர்கள் இந்தியா திரும்புவது 2010-ம் ஆண்டைக் காட்டிலும் 28
விழுக்காடு அதிகரித்துள்ளது. ரசாயனம் மற்றும் மருந்து தொழில் துறையைச்
சேர்ந்தவர்கள் தாயகம் திரும்புவது 20 விழுக்காடு அதிகரித்துள்ளது. அடித்து
விரட்டப்படும்போதுதான் சுயமரியாதைச் சிந்தனையும், பிறந்த மண்ணைப்
பொன்னாக்க வேண்டும் என்கிற தார்மிக வெறியும், கையில் வெண்ணெயை
வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தோமே என்கிற பட்டறிவும் இந்தியர்களுக்கு
ஏற்படும். ஏற்பட வேண்டும். யார் கண்டது? அதிபர் ஒபாமாவின் முயற்சிகளால்
திறமைசாலிகள் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டு இந்தியா உலக
வல்லரசாகும் வாய்ப்பு அதிகரிக்கக் கூடாதா என்ன? நம்புவோம், நல்லது நடக்கும்
என்று!
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum