Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காதல் காமம் கற்பு
Page 1 of 1
காதல் காமம் கற்பு
உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.
தமிழ் என் உயிர். தமிழ் மொழி மூலம் கற்றதற்காக தமிழ்நாட்டால் துரத்தப்பட்டவன், உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்து,
காதல் காமம் கற்பு - பற்றி தமிழ் இலக்கியம் பேசுகிறேன்.
இந்தக் காதலுக்கு பலர் பல விதமாக வரைவிலக்கணம் தருகிறார்கள். அன்பு,ஆசை மோகம், இவற்றுக்கு மேலான ஒன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகிறது என்றும்,காதல் காமத்தின் மறு பெயர் என்றும்,உடலோடு தொடங்கி உடலோடு முடிவதென்றும்,இரண்டு மனம் சேர்வதே என்றும் வேவ்வேறு விதமான கருத்துக்கள் வருவதை நாம் காண்கிறோம். இது பற்றிய ஒரு சிறிய பார்வையே இந்தக் கட்டுரை.
ஆசை,மோகம்,காமம் அற்ற இரண்டு மனம் ஒன்றுபடும் ஒரு உன்னத உணர்வே காதல் என்றால், அது எப்படி கண்டவுடன் ஏற்படுகிறது.கண்ணால் பார்த்ததும் காதல் வருமாயின் இரண்டு மனங்கள் எப்படி ஒன்று பட முடியும்?காதலுக்கு முன் மனங்கள் ஒன்றுபடுகிறதா இல்லை பின்னர் ஒன்றுபடுகிறதா? அவனும் நோக்கினான் அவளும் நோக்கினாள் அதன் பின் அவர்களுக்குள் காதல் அரும்பி வளர்ந்தது,பின் இரண்டு மனங்களும் ஒன்று பட்டு விட்டது என்றால்,சீதையின் மீது சந்தேகம் எப்படி வர முடியும்,எப்படி கர்ப்பிணியான சீதையை காட்டிற்கு அனுப்ப முடியும்? அங்கே இரண்டு மனம் ஒன்றுபடவில்லையா இல்லை சந்தேகம் காட்டுத்தீயாகி வளர்ந்து,சீதையை கொலை செய்யுமளவிற்கு முறிவாகி விட்டதா?அல்லது அது காதலே இல்லாமல் சீதையின் அழகில் மயங்கி ஏற்பட்ட காமமா?அன்று வால்மீகி வந்து சீதையை காப்பாற்றினான்.ஆனால் இன்று, இன்றைய காதலுக்காக எந்த வால்மீகியும் (அனேகமானவை பெற்றோர்கள்,வெறுப்பினால் ஏற்பட்டதால்) வரப்போவதில்லை.
முதலில் வருவது காமம்,திருமணத்திற்கு பின் வருவது காதல் என்கிறது நாலடியார் (384,385) அதையே ஐங்குறுநூறும்(41,81.331),உலகநீதியும் வலியுறுத்துகிறது. காதலா லறிவது காமம் காதலே... என்கிறார் தேலாமொழித்தேவர் சூளாமணியில்.
அகநானூறும்,கலித்தொகையும்,குறுந்தொகையும் தலைவனும் தலைவியும் சந்திக்கிறார்கள், என்பதைக் காட்டி அதற்கு முக்கியத்துவம் கொடுக்காது பின் சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தருகிறது. தலைவனின் பிரிவை, எண்ணி வாடும் தலைவியையும்,அவளுக்கு ஆறுதல் சொல்லும் தோழியையும் அவர்கள் உணர்வுகளையும் வெளிக் கொணருகிறது சங்ககால இலக்கியங்கள்.
காதல் இரண்டு மனங்களின் சங்கமமா இல்லை காமத்தின் வெளிப்பாடா?அன்றும் இன்றும் எல்லா நூல்களும் பெண்ணின் அழகை விபரித்ததே தவிர,பெண்ணின் குணங்கள்,கல்வி என்பவற்றுக்கு முதலிடம் தரவில்லை.தமிழன் நாகரீகத்தில் அன்று பெண்ணிற்கு சம உரிமை வழங்கப்பட போதிலும் கூட, பெண்ணை ஒரு போதைப் பொருளாகவே பார்த்தார்கள். ஒரு ஆண் பெண்ணைப் பார்க்கிறான் காதல் உண்டாகிறது எனும் போது,அவன் அவளின் கண்களைப் பார்த்தானா,உடல் அழகைப் பார்த்தானா,அவளின் அழகான அங்கங்களைப் பார்த்தானா,எதைப் பார்த்து மயங்கினான்?அவளின் குணம்,அறிவு,கல்வி எதுவும் தெரிய வாய்ப்பில்லாத போது அவனை மயக்கியது என்ன? அது ஒரு உன்னத உணர்வானால், அந்த உணர்வுக்கு புறத் தோற்றமே காரணமாக இருந்திருக்கிறது என்பதே உண்மை. சூளாமணியை வைத்துப் பார்க்கும் போது எங்கும் காதல் காமத்திலிருந்தே ஆரம்பமாகி இருக்கிறது. ஒரு ஆணின் பெயரைப் பார்த்தால்,கேட்டால் எந்த உணர்வும் இன்னொரு ஆணிற்கு, ஒரு சில சமயங்கள் தவிர, ஏற்படுவதில்லை.ஆனால் அதுவே பெண்ணின் பெயரானால் உடனே ஏதோ உணர்வை அந்த ஆண் பெறுகிறான்.அதனால் தான் இணையத்தளங்களில் கூட பார்க்காமலேயே காதல் உருவாகிறது.ஒரு ஆண் பெண்ணின் பெயரில் காதல் செய்கிறான்,செய்து ஏமாற்றவும் செய்கிறான். ஒரு காந்தத்தின் ஒரே முனைகள் ஈர்ப்பதில்லை, எதிர்முனைகளே ஈர்த்துக் கொள்வதைப் போல், பெண் என்ற ஒரு உணர்வு தான் பார்த்தாலோ,கேட்டாலோ ஆணிற்கு ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது என்பதே தவிர எங்கோ இருந்து வந்த ஒரு உணர்வோ அல்லது மாய சக்தியோ காதல் அல்ல. ஆண் ஆணை,பெண் பெண்ணை அல்லது ஆண் பெண்ணை,பெண் ஆணை காதலிப்பதற்கு ஒரு ஊடகம் தேவைப்படுகிறது. அது உணர்வு என்ற ஊடகமல்ல,மனம் என்ற ஊடகமல்ல, மாறாக மனத்தால் இயக்கப்படும் நம் எண்ணங்கள், பெண் என்ற வார்த்தையும், உடல், அழகு, கவர்ச்சி, அறிவு, பணம், இவற்றைக் கேட்டவுடன்,பார்த்தவுடன் ஒரு உணர்வுக்குப் பதில், உணர்ச்சி தான் ஏற்படுத்துகிறது. அப்படியானால் பார்வை இழந்தவர்களுக்கு...?,அங்கேயும் உடலைப் பார்க்க முடியா விட்டாலும் குரல் ஊடகமாகி விடுகிறது. ஊடகம் உணர்ச்சிகளை கொண்டு செல்ல, காதல் என்ற போர்வையில் காமம் உருவாகிறது.ஒரு சிலருக்கே உணர்வு ஊடகமாகிறது. உணர்ச்சி வேறு,உணர்வு வேறு. தொடுவதாலும் உணர்வு ஏற்படுமாயினும்,அது பலனை எதிர்பார்க்கிறது. மனத்தினால் ஏற்படும் உணர்வு பலனை எதிர்பார்ப்பதில்லை. அதனால் தான் காதல் இருவகையாக, உணர்ச்சியினால் ஏற்படும் இன்றைய காதல்,உணர்வினால் ஏற்பட்ட அன்றைய,வள்ளுவன் சொன்ன காதலும், வேறுபடுகிறது.
கண்டதும் காதல் ஏற்படுகிறது,உடலை தானமாக கொடுத்து விடுகிறது,விரைவிலேயே பிரிந்தும் விடுகிறது. நியூயோர்க்கை தளமாக கொண்ட ஒரு சமூகவியல் மன்றம் ஒன்று உலகெங்கிலும் உள்ள 45 ற்கு மேற்பட்ட நாடுகளில்,இந்தியாவின் சென்னை,பெங்க்களூர்,மும்பாய்,டில்லி நகரங்களிலும் கணக்கெடுப்பொன்றை நடத்தியது.பொதுவான முடிவுகளின் படி, காதலித்து திருமணம் செய்தவர்களில் அனேகரிடம் மணமுறிவும்,பிரிவுகளும்,கொலை,தற்கொலை,உளவியல் தாக்கங்களும் ஏற்பட்டு இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. நீங்கள் சொல்வது தவறு, நாங்கள் காதலித்து திருமணம் செய்துள்ளோம் மகிழ்ச்சியாக வாழுகிறோம் என்று போர்க்கொடி தூக்குபவர்கள் கொஞ்சம் சிந்தியுங்கள்.எடுத்துக்காட்டுகளெல்லாம் சமூகத்தின் பிரதிபலிப்புக்கள் அல்ல. அப்படி எடுத்துக்காட்டுக்களை வைத்து சிந்திப்போமானால், இன்று இந்த நாட்டில் லட்சக்கணக்கான தெரேசாக்களும், விவேகானந்தர்களும், காந்திகளும் உருவாகி இருப்பார்கள்.உருவாகி இருக்கிறார்களா?
காதலித்து திருமணம் செய்து கொள்ளுங்கள் சாதி ஒழியும்,வரதட்சணை ஒழியும் என்கிறார்கள். எத்தனை பேர் கலப்பு திருமணம் செய்து கொண்டார்கள்,எத்தனை பேர் வரதட்சணை இல்லாது திருமணம் செய்து கொண்டார்கள்? காதல் வளர்ந்து கல்யாணம் வரும்போது வரதட்சணைக்காக காதலை துறந்தவ்ர்கள் எத்தனை பேர்,சாதிக்காக பிரிந்தவர்கள் எத்தனை பேர்,பெற்றோர்களுக்காக காதலை துறந்தவர்கள் எத்தனை பேர்,இல்லை என்கிறீர்களா? திருமணம் முடிந்த பின் பெண்ணின் குடும்பநிலை அறிந்து வரதட்சணை கேட்டு வீட்டுக்கு துரத்தியவர்கள் இல்லை என்கிறீர்களா? நீதி மன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை பாருங்கள் தெரிந்து விடும்.
வள்ளுவன் காதலுக்கு, கூடுவதற்கு முன் ஏற்படும் காதலுக்கு, முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்?அழகாக வாழ்க்கைத் தத்துவங்களை சொல்லி வந்த வள்ளுவன்,வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச் சேறல்,வரைவின் மகளிர் அத்தியாயங்களில் பொருள்,வஞ்சகம்,புகழ்ச்சி யால் வரும் காதலையும், காமத்தால் ஏற்படும் காதலையும்,குறிப்பிடுகிறார்.
நாட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர்.
குறள் வாழ்க்கை நெறிகளான அறம் பொருளை முதலில் வைத்து இன்பத்தை இறுதியில் வைத்தது ஏன்?இங்கே வருகிறது, கீதையின் கடமையை செய் ... என்ற தத்துவம்.மனிதன் ஒவ்வொருவனும்,தாயை தன் குடும்பத்தை,மனைவியை தவிக்க விட்டு விட்டு இன்பம் என்ற பலனை மட்டும் தேடி செல்வது சரிதானா என்று வள்ளுவன் கேட்கிறான்.முதலில் உன் கடமையை செய், செய்தால் உனக்கு இன்பம் கிடைக்கும்.ஆனால் இன்றைய காதல், முதலில் அட்வான்ஸ்சாக பலனை,லஞ்சம்,ஊழல் போல் கேட்கிறது.அதாவது காமத்தை முதலில் கேட்டு, பின் காதலை தேடுவதால் காதல் தோல்வியில் முடிகிறது.இதை வள்ளுவன் எண்ணிப் பார்க்கிறான். முதலில் கடமை என்று எண்ணிய வள்ளுவன் உலக நெறிகளை முன் வைக்கிறான். இல்லறத்திற்கு உலக அறங்கள் மட்டுமல்ல,பிறனில் விழையாமை,வரைவின் மகளிர் செல்லாமை எல்லாவற்றையும் சொல்லி வந்த வள்ளுவன், காமத்துப் பாலில் (1081...ளில் இருந்து மெல்லத் தொடங்குகிறான்)
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர் கொல் மாலுமென் நெஞ்சு. -1081
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரால்
நோக்கமிம் மூன்றும் உடைத்து. -1085
உண்டார்க ணல்லது அடு நறாக் காமம் போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று. - 1090
இந்தக் குறள்களைப் பார்க்கும் போது காதல் எல்லாமே புறத் தோற்றத்தில் இருந்தே வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.புறத் தோற்றத்தில் இருந்து வந்தாலும் கூட அந்த உணர்வு வந்தவுடன்,அதை அணைப்பது முடியாது என்று வள்ளுவன்,
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல் போல் தோன்றி விடும்.....1253
அது மட்டுமல்ல காதலை வள்ளுவன் பல இடங்களில் காமம் என்றும் காமநோய் என்றுமே வார்த்தைப் பிரயோகம் செய்து காட்டுகிறான். இதுமட்டுமன்றி இன்றைய காதலர்கள் போல் டூயட் பாடுவது, சுற்றித் திரிவது போலல்லாமல் யாருக்கும் காட்டிக் கொள்ளாது அன்னியர் போல் நடந்து கொள்வார்கள் காதலர்கள் என்கிறார்.
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள. ...-1099
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர். ...-1130
என்ற குறள் மூலம் காதலர் எப்படி இருக்க வேண்டும் என்பதை, உள்ளத்தால் இணைந்து.. என்பதன் மூலம் தெரிவித்து விட்டார்.
அது போல் பிரிவினால் ஏற்படும் வேதனையை சொல்லியவர்,அப்படி ஏற்படக் கூடாது என்பதையும்,எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அறம்,பொருளிலும்,முக்கியமாக வாழ்க்கை துணைநலம் என்ற குறள்களிலும் காட்டி விட்டார். புறக் காரணங்களால்,கண்கள் தானே காதல் ஏற்பட தப்பு செய்தது என்பதை,
கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டா நோய்
தாங்காட்ட யாங்கண்டது. ...-1171 என்ற குறள் மூலம் காட்டுகிறார்.
வள்ளுவனின் ஒரு குறளை வைத்து,அவனை எடை போடவோ,குறளின் முழு நெறிகளையும் சொல்லி விடவோ முடியாது. நல்லதையும் கெட்டதையும் சொல்லி,மனிதனே! சில சமயம் நான் கூட தப்பாக சொல்லி இருக்கலாம்,அதனால் இன்றைய மத போதகர்கள்,தொலைக்காட்சி போதனையாளர்கள் போல் இல்லாது, சிந்தித்து முடிவு செய், என்று வள்ளுவன் நம்மிடம் விட்டு விட்டார். காதலரின் பிரிவுத் துன்பங்களை சொல்லி வந்தவர், அது நிரந்தர பிரிவு அல்ல ஒரு நாள் வருவார் என்பதை...
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.... -1266 என்று சொல்கிறார்.
காதலர்களிடையே ஏற்படும் சந்தேகத்தையும் பொறாமையையும் வள்ளுவன் விட்டு வைக்கவில்லை. தும்மினால்,யார் நினைக்கிறார்கள் என்றும்;,தலைவன் தலைவியின் கண்களை உற்று நோக்கினால் மற்றப் பெண்களை ஒப்பிடுவதாக நினைத்து பொறாமையும்; பிரிந்திருந்த போது உன்னையே நினைத்திருந்தேன் என்று சொன்னால்,மறந்தபடியால் தானே நினைத்திருக்க முடியும் ஏன் மறந்தீர் என்று சந்தேகமும் கொண்டு சினங் கொள்வாள் என்று அதையும் சொன்னவர், எவ்வளவு தூரம் வாழ்க்கையை காதலை அனுபவித்து, எழுதி இருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது..எல்லாவற்றையும் சொன்ன வள்ளுவன் காதலை காமத்துடன் ஊடலையும் கூடலையும் சேர்த்தானே தவிர, தனியாக சொல்ல வரவில்லை என்பதை நோக்கினால்,அறம்,பொருள் முழுவதையும் எடுத்து காட்டி விளக்க வேண்டும். காதல் திருமணத்திற்கு பின் வர வேண்டும் என்பதில் தான், வள்ளுவன் தன் குரலை ஓங்கி ஒலிக்கின்றான்.ஆனால் இன்றைய காதல்...?திருமணத்திற்கு முன் வந்து பூவாமல்,காயாமல் கனிய முயற்சிப்பதால், பல தோல்வியில் முடிகிறது.
இந்தக் காதல், திருமணத்திற்கு முன் வந்து பாடாய் படுத்துவதால்,கற்பு என்பது கேள்வியாய் எழுகிறது.மனிதன் என்று வந்து விட்டால் கற்பு ஆணிற்கும்,பெண்ணிற்கும் சமமாக கருதப்படல் வேண்டும்.ஒருவனுக்கு ஒருத்தி என்றால்,ஒருத்திக்கும் ஒருவன் என்றாக வேண்டும்.விசுவாமித்திரன் முதல் இன்று வரை பெண் போதைப் பொருளாகவே பார்க்கப்படுகிறாள்.அதனால் தான் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன.திருமணங்களில் கூட கன்னிகாதானம் என்று சொல்லி பெண்ணை ஒரு போதை பொருளாகவே ஆணிற்கு கொடுக்கப்படுகிறாள்.இது ஆரிய மதக் கொள்கையானாலும் இன்று வரை ஆண் நிறுத்தவுமில்லை,பெண் தடுக்கவுமில்லை. திருமணங்களில் ஆணுக்கும் பெண்ணிற்கும் மண ஒப்பந்தம் செய்யப்படுகிறது. ஒற்றுமையுடனும் ஒருவருக்கொருவர் துரோகம் செய்யாமலும்,சந்தேகம்,பொறாமை இல்லாமலும் நடப்பதாக உறுதி எடுத்துக் கொள்ளும் இவர்களுக்கிடையில், ஏன் கற்பு என்பது பெண்ணிற்கு மட்டும் பேசப்படுவதும்,அது ஆணிற்கு இல்லாமல் மறைக்கப்படுவதும்,பெண் ஆணிற்கு அடிமை என்பதன் அறிகுறியா?
சிலர் பெண்களின் கன்னித்திரையை(hymen) வைத்து கற்பை அளவிடுகிறார்கள்.இந்த மெல்லிய திரை பல காரணங்களால் உடலுறவிற்கு முன்னரே சிதைவுறவும்,ஒரே முறையில் சிதைவுறாது,பல முறை உறவு கொண்ட பின் கிழியவும் கூடிய வாய்ப்புக்கள் உண்டு. தவிர, ஒரு மணி நேர சத்திரசிகிச்சையில் அதிக செலவின்றி,புதிய கன்னித்திரையை இன்று உருவாக்கவும் முடியும்,உடனே வீட்டிற்கும் சென்றும் விடலாம். ஆனாலும் இன்றும் கூட இஸ்லாமியர்களிடமும், பஞ்சாப், குஜராத்திலும்,அறிவியல் ஆதாரங்களை காட்டியும் கூட, திருமணம் முடிந்ததும், முதல் நாள் படுக்கை அறையில் கட்டிலில் வெள்ளைத் துணியை விரித்து வைத்து கன்னித்தன்மையை பரிசோதிக்கின்றார்கள்.அப்படியானால் விதவைத் திருமணம்,மறுமணம் செய்பவர்கள் கற்பில்லாதவர்களா? இல்லை,கற்பிற்கும் கன்னித் திரைக்கும் சம்பந்தம் கிடையாது என்பதையும்,திருமணத்திற்கு முன் நடந்தது பற்றி குழப்பமும் சந்தேகத்தையும் விட்டு விட்டு,திருமண ஒப்பந்தத்திற்குப் பின்,மனம் ஒன்று பட்டவர்களாகவும்,துரோகம் இழைக்காமலும் தம்பதிகளாக வாழ்வதும், அப்படி இல்லாது வேறு ஆடவனிடம் தொடர்பு வைத்துக் கொண்டால் மட்டுமே அங்கே கற்பு வருகிறது என்பதையும் புரிந்து கொள்வதே சிறந்ததாகும்.
கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை, என்றால் ஆணும் பெண்ணும் சொல்லில் இருந்து தவறாமை,அதாவது திருமண ஒப்பந்தத்தில் இருந்து தவறாது, என்றானால், கற்பு இருவருக்கும் ஒன்றாகி விடுகிறது.நாம் எல்லாவற்றையும் நமக்கு ஏற்றாற் போல் மாற்றி பேசுகிறோம் இல்லையேல் நமக்கு சாதகமானதை மட்டும் எடுத்துக் கொள்கிறோம், அதுவும் இல்லையேல் எடுக்க வேண்டியதை எடுக்காமல் மௌனமாகி விடுகிறோம். எப்படி? ஒரு எடுத்துக்காட்டு. காமசூத்திரம் ஓடி ஓடி பலரால் படிக்கப்படும் ஒரு நூலாகி விட்ட நிலையிலும் கூட,அந்த நூல் முடிவாக எதை ஆணித்தரமாக கூறுகிறது என்பதை எண்ணிப் பார்க்க மறந்து விடுகிறோம்,இல்லை மறைத்து விடுகிறோமா தெரியவில்லை. எல்லா இன்பங்களையும் எடுத்துக் கூறும் அந்த நூல் ஒரு உண்மையை,தர்மத்தை சொல்கிறது.நீ இந்த இன்பங்களை எல்லாம் உன் வாழ்க்கைத் துணையிடம் அனுபவித்துக் கொள்,பிறன்மனை நாடாதே என்பதுதான் அந்த தர்மம்.யார் இதை சொல்கிறார்கள்?நமக்கு சாதகமாக இல்லா விட்டால் அதை குப்பைத் தொட்டியில் போட்டு விடு என்பது நமது தாரக மந்திரமாயிற்றே.
=இரண்டுடல் ஒன்றாய் கரைந்து கண்படாமல்,
அளவியல் மணவியல் பரப்பும் காலம்,தளைகரை கடந்த காமக் கடலுள்,
புல்நுனிப் பனியென மண்ணுதல் இன்றி,..... .............என்றும்;
வடுத்தெழு கொலைமுலை பொடித்தில் அன்றே,செம்மகள் மாலை இம்முறை என்றால்,வழுத்தாலும் வறுதலும் தவிர்தி,................ என்றும்;
சிற்றிடைப் பெருமுலைப் பொற்றொடி மடந்தைதன், கவைஇய கற்பினைக் காட்டுழி இதுவே... ........என்றும்; கல்லாடர் அழகாக இளமைத் திருமணம் வேண்டாம்,காத்திரு,கண்டதும் காமக் காதலை தவிர்த்திரு, என்று சொல்லி சென்றார்.
ஒருவன் வேலைக்கு செல்கிறான்,சம்பளம் வருகிறது,லஞ்சம்,ஊழல் போன்றவற்றால் கிம்பளமும் வருகிறது. சம்பளத்தை மட்டும் வைத்து வாழ்பவன் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும், கஷ்டமும் விடிவும்,கவலையும் மகிழ்ச்சியும் கலந்து வந்தாலும்,தெளிந்த நதியாக அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும். கிம்பளமும் சேர்த்து வாங்குபவன் மகிழ்ச்சியாக உல்லாசமாக அனுபவித்து வாழ்வான். ஆட்சி மாறும்,2ஜீ விசாரணையும் வரும்,சிறை வாசலும் காத்திருக்கும்,தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு வீரமும் பேச வரும். ஆனாலும் மக்களின் மனதில் இடம் பிடிப்பது எட்டாக்கனியாகும். கிம்பளம் என்ற காமம்,கவர்ச்சி,அழகு,போலி, ஆசை இவையெல்லாம் முதலில் இனித்தாலும், பின் கசப்பதால் வாழ்வு இருளும். அன்பு,அறிவு,பண்பு,உண்மை போன்றவற்றை முதலீடு செய்து அடித்தளம் அமைக்கும் அன்பு, உன்னத காதலாக அமைந்து, துன்பம்,கவலை,கஷ்டம் அனைத்தையும் தகர்த்தெறிந்து முன்னேறும்.இதனால் தான் காமம், காதல் என்ற மாயைத் தோற்றத்தில் உருவாகி,மாயை நீங்கும் போது , பலரை அழிக்கிறது.ஆனால் சிலரிடம் அன்பு முதலில் தோன்றி,திருமணத்திற்குப் பின் காதலாக விருட்சம் போல் வளர்ந்து,அவர்களை என்றும் வாழ வைக்கிறது. அன்பின் உச்ச கட்டம் காதல்.அது அண்ணன் தங்கை,அப்பா,அம்மா என்று எல்லோரிடமும் வரலாம்.காதலாகி... என்று கடவுளிடம் காதல் கொண்டு தேவாரம் பாடப்பட்டிருக்கிறது என்பதை நினைவூட்டி,
மீண்டும் அடுத்த வாரம்............... சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» காமம் - I
» காமம் - II
» கல்லூரி பெண்களின் கற்பு விலை,ஒரு குவார்ட்டரா..?girls night out
» காதல் என்னும் பெயரால் சீரழிந்துக் கொண்டி இருப்பவர்கள் மத்தியில் இப்படியும் ஒரு உண்மை காதல்!!
» ரொமான்டிக் காதல் திரில்லர் உருவாகும் “காதல் முன்னேற்றக் கழகம்”

Permissions in this forum:
You cannot reply to topics in this forum