TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


"மாஜி' பொன்முடி கம்பி எண்ணத் துவங்கினார் : அனிதாவுடன் கைதானவர் ஓட்டம்

Go down

"மாஜி' பொன்முடி கம்பி எண்ணத் துவங்கினார் : அனிதாவுடன் கைதானவர் ஓட்டம் Empty "மாஜி' பொன்முடி கம்பி எண்ணத் துவங்கினார் : அனிதாவுடன் கைதானவர் ஓட்டம்

Post by logu Thu Sep 01, 2011 6:21 am

"மாஜி' பொன்முடி கம்பி எண்ணத் துவங்கினார் : அனிதாவுடன் கைதானவர் ஓட்டம் Large_305007
விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு
சொந்தமான, ரூ.2 கோடியே 65 லட்சம் மதிப்பிலான இடத்தை, தனது உறவினர்கள்
நடத்தும் அறக்கட்டளைக்கு மிரட்டி வாங்கியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி,
அவரது வீட்டில் நேற்று கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில்
அடைக்கப்பட்டார். அதே நேரத்தில், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள,
அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,வின் உதவியாளர் ஆல்நாத், போலீசாரின்
கண்ணில் "மண்ணைத் தூவி' தப்பியோடினார்.
விழுப்புரம் அடுத்த பெரியார்
நகரில், தந்தை பெரியார் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் கூட்டுறவு வீடு
கட்டும் சங்கத்தைச் சேர்ந்த, 393 தொழிலாளர்களுக்கு, 1992ம் ஆண்டு
கூட்டுறவுத் துறை மூலம், வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இங்கு பொது
காரியங்களுக்காக, ஒரு லட்சத்து 44 ஆயிரம் சதுரடி காலி இடம் வைத்திருந்தனர்.
இதில் பள்ளிக்கூடம் கட்ட, 61 ஆயிரத்து 600 சதுர அடி ஒதுக்கியிருந்தனர்.
ரூ.2 கோடியே 65 லட்சம் மதிப்புள்ள, 61 ஆயிரத்து 600 சதுர அடி இடத்தை, தனது
உறவினர்கள் நடத்தும் சிகா அறக்கட்டளைக்கு, சதுர அடி 100 ரூபாய் வீதம்,
அப்போது அமைச்சராக இருந்த பொன்முடி மிரட்டி வாங்கியதாக, தந்தை பெரியார்
போக்குவரத்துக் கழக குடியிருப்பு நலச்சங்க தலைவர் நாராயணசாமி, எஸ்.பி.,
தினகரனிடம், கடந்த 30ம் தேதி புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு
பதிந்து, ஆவணங்களை முறைகேடாக தயாரித்து, சிகா அறக்கட்டளைக்கு குறைந்த
விலைக்கு இடத்தை விற்று, நில மோசடிக்கு உதவியதாக, கூட்டுறவு வீடு கட்டும்
சங்க செயலர் சாந்தி, 39, என்பவரை, நேற்று முன்தினம் (30ம் தேதி) கைது
செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், 409 - அரசு ஊழியராக
இருந்து கையாடல் செய்தல், 420 - ஏமாற்றுதல், 465, 467, 468, 471 - போலி
ஆவணங்கள் தயாரித்தல், 120 பி - கூட்டு சதி, 353 - அரசு ஊழியரை பணி
செய்யவிடாமல் தடுத்தல், 506 (1) - கொலை மிரட்டல் விடுத்தல், ஆகிய ஒன்பது
பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து, விழுப்புரம் கிழக்கு
சண்முகாபுரம், திருப்பாணாழ்வார் தெருவில் வசிக்கும், முன்னாள் அமைச்சர்
பொன்முடியை, நேற்று மதியம் 2.15 மணிக்கு கைது செய்தனர்.

அவரை,
திண்டிவனத்தில் உள்ள மாஜிஸ்திரேட் சந்தோஷ் வீட்டிற்கு அழைத்துச் சென்று,
ஆஜர்படுத்தினர். வரும் 14ம் தேதி வரை, கடலூர் மத்திய சிறையில் காவலில்
வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் கடலூர் சிறையில்
நேற்றிரவு அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் சிகா அறக்கட்டளை தலைவர் மணிவண்ணன்,
நிர்வாகி சரஸ்வதி (பொன்முடியின் மாமியார்) ஆகியோரை தேடி வருகின்றனர்.

விழுப்புரத்தில்
பொன்முடி நிருபர்களிடம் கூறுகையில், "என் மீது பொய் வழக்கு போட்டு கைது
செய்துள்ளனர். மனித உரிமை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு,
நடவடிக்கை எடுத்து, பொய் புகார் கொடுத்தவர்களின் முகத்திரையை கிழிக்காமல்
விடமாட்டேன்' என்றார்.

அனிதா உதவியாளர் ஓட்டம்: கொலைமுயற்சி
வழக்கில், முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வுமான அனிதா
ராதாகிருஷ்ணனுடன் கைதான அவரது உதவியாளர், மருத்துவமனையில் போலீசாரை தாக்கி
விட்டு தப்பியோடிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர்
தொகுதி, தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன். இவர் ஏற்கனவே,
அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். தூத்துக்குடி அடுத்துள்ள
ஆறுமுகநேரி, தி.மு.க., நகர செயலர் சுரேஷ் என்பவரை கொலை செய்ய முயன்ற
வழக்கில், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,வையும், அவரது உதவியாளர்
ஆறுமுகநேரியைச் சேர்ந்த ஆல்நாத், 32, என்பவரையும், போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், கடந்த 11ம் தேதி முதல்,
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு,
1.30 மணியளவில், ஆல்நாத், திடீரென, நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து
அவரை, போலீசார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு ரகு,
கேப்ரியேல், நெப்போலியன் ஆகிய மூன்று சிறைத்துறை போலீசார், பாதுகாப்புக்காக
அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
நேற்று காலை 11 மணியளவில், "பாத்ரூம்'
போகவேண்டும் என்று ஆல்நாத் கூறினார். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த ரகு
என்ற போலீஸ்காரர், அவருடன் பாத்ரூம் வரை சென்றார். திடீரென, பாத்ரூம்
அருகேயிருந்த அறைக்குள், போலீஸ்காரர் ரகுவை தள்ளிய ஆல்நாத்,
மருத்துவமனையிலிருந்து வெளியே ஓடி, காம்பவுண்ட் சுவர் ஏறி, தப்பிவிட்டார்.
போலீசார் துரத்தியபோதும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) மஹாலி தலைமையில் போலீசார், மருத்துவமனைக்கு வந்து, தேடுதல் பணியை முடுக்கி விட்டனர்.
திருச்சி ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். எனினும், ஆல்நாத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» "மாஜி' அமைச்சரின் நேர்காணல் புறக்கணிப்பு:மாஜி எம்.எல்.ஏ., அணி ஸ்டாலினை சந்திக்க திட்டம்
» விலைவாசி ஏறத்தான் செய்யும் : அமைச்சர் பொன்முடி பேச்சு
»  பொ‌றி‌யிய‌ல் பாடத்திட்டத்தில் மாற்றம்: பொன்முடி
» வடிவேலுவும் விரைவில் கம்பி எண்ணுவார் – சிங்கமுத்து
» அதிர்ஷ்டமில்லாதது என புதைக்கப்பட்ட குழந்தை உயிரோடு மீண்டது: பெற்றோருக்கு கம்பி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum