TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கே.பி ஊடாக சிங்கள அரசு மேற்கொள்ளும் சதிமுயற்சிகளை முறியடிப்போம்!

Go down

  கே.பி ஊடாக சிங்கள அரசு மேற்கொள்ளும் சதிமுயற்சிகளை முறியடிப்போம்!   Empty கே.பி ஊடாக சிங்கள அரசு மேற்கொள்ளும் சதிமுயற்சிகளை முறியடிப்போம்!

Post by மாலதி Sat May 28, 2011 2:20 pm

பதிந்தவர்: ஈழப்பிரியா சனி, 28 மே, 2011
கே.பி ஊடாக சிங்கள அரசு மேற்கொள்ளும் சதிமுயற்சிகளை முறியடிப்போம் - விடுதலைப் புலிகள்.

2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப்போராட்டம்
மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை
வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றோம்.

எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது
போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின்
போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து
வந்திருக்கின்றோம்.

கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட
மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின்
படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு
நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக்கட்டமைப்புக்களை
நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி
மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசொன்றை நடாத்தி
வந்தோம்.

எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப்
பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், இராஜதந்திர சூழ்ச்சிகளாலும்,
பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர்நெறிகளை மீறிய கொடூர
போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம்.
எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை
மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின்
வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து
முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து
செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

ஐ.நா நிபுணர்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறுபல
நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர்மீது
மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்லமெல்ல
வெளிவந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் மகிந்த அரசு செய்வதறியாது
திணறிக்கொண்டிருக்கின்றது.

இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி
கொள்ள வைத்துள்ளது. ஈழத்தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான
எதிர்ப்புணர்வும், ஈழத்தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான
ஆதரவும் தமிழகத்திற் பெருகிவரும் நிலையில் செல்வி ஜெயலலிதா ஜெயராம்
அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே
நோக்குகின்றது சிங்களப் பேரினவாத அரசு.

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் மகிந்த
அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்துகொண்ட சிங்கள
அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித்திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே
கே.பி என்ற திரு செல்வராசா பத்மநாதன். இந்தியத் துணைக்கண்டத்தில்,
குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக
நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை
வெளியிட்டுவருகிறது சிறிலங்கா அரசு.

சிறிலங்கா அரசபடைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப்
பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு
நடந்ததில்லை;

இனியும் நடக்கப்போவதுமில்லை. அவ்வகையில் திரு. செல்வராசா பத்மநாதனும்
தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான்
எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக்கொள்வதும், எமது அமைப்பின்
சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குட் சிக்கிய
நாளிலிருந்து அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச்
சொல்லும் தகுதியை இழந்துள்ளார். அதன் பின்னரான அவரது செயற்பாடுகள்,
கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத்
தெளிவுபடுத்துகின்றோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும்
நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணைபோகின்றார் என்பதையே அவரின்
நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.

திரு. செல்வராசா பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய
செவ்வியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களைக்
கொலைசெய்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை
வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு.
இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக்
கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இச்செவ்வி வடிவமைக்கப்பட்டு
வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல்
தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றோம்.

அன்பான தமிழ்பேசும் உறவுகளே,

சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராஜதந்திர சதிவலைக்குள்
புதைந்துபோகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும்
வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணைபோகாமலும் விழிப்பாக இருக்குமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
source:vannionline news.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் நாடு கடந்த அரசு சிக்கும் அபாயம்! மக்களே விழித்தெழுவீர்!!
» புதிதாக 3000 தமிழர்களை தடைப்பட்டியளுக்குள் கொண்டு வருகின்றது சிங்கள அரசு ???
» சிங்கள பௌத்த பேரினவாதிக்கு இந்தியா அரசு அஞ்சல் தலை வெளியிட்டது !!
»  நட்பு நாடுகளின் உதவியுடன் ஐ. நா.அறிக்கையினை முறியடிப்போம் - ரம்புக்வெல
» பொதுமக்களை கோரத்தனமாக படுகொலை செய்த சிங்கள அரசு (படங்கள் ) – உலக நாடுகளே எமக்கான நீதி எங்கே …

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum