Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரேசன் அரிசி கடத்தலிலும் திமுக சாதனை!
Page 1 of 1
ரேசன் அரிசி கடத்தலிலும் திமுக சாதனை!
தமிழகத்தில் ரேசன் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்க ஒதுக்கப்படும் அரிசியை கடத்துவதில் திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும் கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்கள் இந்த காலத்தில் புதிய கோடீவர்களாக உருவாக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் சுமார் 27 ஆயிரம் ரேசன் கடைகள் இயங்கி வருகிறது. இதில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டிலும், 1,100 கடைகள் தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இது தவிர தற்போது மகளிர் சுயஉதவிகுழுக்களின் ககைளிலும் ரேசன் கடைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைதாரர்களில் ஒரு கோடியே 78 லட்சம் பேருக்கு ரேசன் மூலம் ஒரு ரூபாய் அரிசி வாங்குவதாக தமிழக அரசு கணக்கு காண்பித்து வருகிறது. இதில் 20 சதவீதம் ரேசன் கார்டுகள் போலியானது என உணவு அமைச்சர் எ.வ.வேலுவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அப்படியென்றால் இந்த 35 லட்சத்து 60 ஆயிரம் ரேசன் கார்டுகளுக்கு வழங்க வேண்டிய அரிசி மட்டும் 1 கோடியே 12 லட்சம் கிலோ ஒவ்வொரு மாதமும் திருடப்படுகிறது. இந்த அரிசி முழுவதையும் யார் திருடுகிறார்கள்? அரிசி எங்கே செல்கிறது? எவ்வளவு பணத்திற்கு வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது? விற்கப்படும் பணத்தில் யார் யாருக்கும் கப்பம் செலுத்தப்படுகிறது? என்ற விபரங்கள் கடந்த 5 ஆண்டு காலமாக புரியாத புதிராகவே இருந்து வருகிறது. அதற்கு உடந்தையாக திமுக அரசின் செயல்பாடும் இருந்திருக்கிறது என்பதுதானே உண்மை. சரி இது ஒருபுறம் என்றால் மறுபுறம் உண்மையான ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் அனைத்துப் பொருட்களும் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டதா என்றால் அத வும் இல்லை. மாதத்தின் முதல் பத்து தினங்களுக்குள் சென்று ரேசன் கடைமுன்பு இடம் பிடிப்பவர்களுக்கே துவரம் பருப்பு முதல் மண்ணெண்ணெய் வரை கிடைக்கும். சிறிது தாமதித்தாலும் சரக்கு தீர்ந்து விட்டது என்ற பதிலே வரும். ஏனென்றால் சேரன் கடை மூலம் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கி வருகிறோம் என்று கூறிய திமுக ஒரு ரேசன் கடைக்கு உட்பட்ட ரேசன் கார்டுகள் இருக்கும் அளவிற்கு ஏற்றவாறு பொருட்களை ஒதுக்கீடு செய்திட வில்லை. மாறாக பெயரளவிற்கே பொருட்களை ஒதுக்கீடு செய்தது. உதாரணத்திற்கு துவரம் பருப்பின் விலை விண்ணை தொட்டுவிடும் தூரத்திற்கு சென்ற போது ஆளும் அரசின் மீது மக்களின் கோபம் திரும்பியது. இதனை தாக்கத்தை குறைத்திடும் வகையில் இனி ரேசன் கடைகள் மூலம் துவரம் பருப்பு குறைந்த விலையில் விற்கப்படும் என்று அறிவித்தார். அனைவரும் ஆவலோடு பார்த்து காத்திருந்தனர். அனால் நடந்தது என்ன மூவாயிரம் ரேசன் கார்டுகள் கொண்ட பகுதியில் இருக்கும் ஒரு ரேசன் கடைக்கு அரசு ஒதுக்கீடு செய்த துவரம் பருப்பின் அளவு என்ன தெரியுமா? வெறும் 1800 கிலோ மட்டுமே இதனால் அப்பகுதியில் உள்ள 40 சதவிதமானோருக்கு துவரம் பருப்பு கிடைக்காத நிலையே ஏற்பட்டது. இப்படி குறைந்த அளவு ஒதுக்கீடு என்பது மக்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. இதனால் ரேசன் கடை ஊழியர்களோடு அப்பகுதி மக்கள் முட்டி மோதுவர். அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது. இதுநாள் வரை ஒரு ரேசன் கடைக்கு எவ்வளவு ரேசன் கார்டுகள் இருக்கிறதோ அந்த அளவிற்கேற்ப துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. இப்படி வெற்று அறிக்கை, அறிவிப்புகள் மூலமே வியோகம் என்பது இருந்து வருகிறது. அன்றாட நிகழ்வான அரிசிக் கடத்தல் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் ரேசன் அரிசி கடத்தலை அன்றாட நிகழ்வாக்கி சாதனை புரிந்தது திமுக. ஆனால் இதுவெல்லாம் திமுகவின் சொன்னாமல் செய்த சாதனை பட்டியலில் பத்தொடு பதினொன்றாக அத்தோடு இதுவும் ஒன்றாக சேர்ந்திருக்கிறது. முதலில் சைக்கிள், பைக் என அரிசியை கடத்தியவர்கள் பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்து வேன், லாரிகளில் கடத்தினர். கடத்தல் தொழில் கேள்வி கேட்பாறின்றி கொடிகட்டி பறக்க துவங்கினர். பின்னர் லாரியின் கொள்ளளவு குறைவாக இருக்கிறது என்று எண்ணிய அரிசி கடத்தும் தொழிலாதிபர்கள் ரயிலை தேர்ந்தெடுத்தனர். மொத்த மொத்தமாக வெளி மாநிலங்களுக்கு கடத்தி வந்தனர். இந்த வளர்ச்சி படிப்படியாக 2010ம் ஆண்டு ரயில் கடந்து கப்பல் ஏறும் அளவிற்கு ரேசன் அரிசி கடத்தும் தொழில் செல்வ செருக்கோடு செழிப்புற்று விளங்கியது. அப்படி கடத்திய வந்தவர்களை அத்திபூ பூத்தது போன்று தூத்துக்குடி துறைமுகத்தில் வைத்து அதிகாரிகள் பிடித்தனர். விசாரணையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஹரி அன்கோ நிறுவனம் தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு எம்.வி..டோந்தி - 2 என்ற கப்பல் மூலம் சுமார் 22 லட்சத்து 12 ஆயிரம் கிலோ ரேசன் அரிசியை கடத்தியது. அதனை அதிகாரிகள் தலையிட்டு கைப்பற்றினர். இந்த அரிசி கடத்தலில் ஈடுபட்ட நிறுவனம் தமிழகத்தில் ஆளும் அரசியல் அதிகாரத்தில் உயர் மட்டத்திலுள்ள குடும்பத்தினரோடு தொழில் ரீதியான உறவுகளை கொண்டிருந்த நிறுவனம் என்று வெட்டவெளிச்சமான ஒன்று என்று பத்திரிகைகள் எழுதின. அந்த வழக்கு என்ன ஆனது? கடத்தியவர்களுக்கு கொடுத்த தண்டனை என்ன? கடத்தலுக்கு உடந்தையான அதிகாரிகள் யார் யார்? என்ன பின்னணியில் கடத்தினார்கள் ? என்ற விபரம் முழுவதும் திட்டமிட்டு மறைக்கப்படட்து. வழக்கின் நிலையே வழக்கொழிந்த நிலையாக மாறியிருக்கிறது. இப்படி ஏழைகளுக்கு சேர வேண்டிய ரேசன் அரிசியைக்கூட முறையாக கொண்டு சேர்க்காத அரசாகவே திமுக கடந்த ஐந்தாண்டு காலமாக விளக்கியிருக்கிறது என்பது மற்றோரு சாதனையாகும். இப்படி சொல்லாமல் திமுக செய்த சாதனைகள் தமிழகத்தில் ஏராளம். அதனால் அன்றாட காட்சிகளுக்கு அனுதினமும் நிகழ்ந்து வரும் வேதனைகள் ஏராளம். [You must be registered and logged in to see this link.] |
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» திமுக , அதிமுக சாதனை............. மாணவிகள் +12 தேர்வு முடிந்தவுடன் சந்தோஷத்தில்!!
» அரிசி உணவு ஆபத்து இல்லை!என்று சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனமும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழமும் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்து இருக்கிறது.
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
» ரேசன் அரிசியே சாப்பிட்ட காமராஜர்
» நீங்களும் செய்யலாம் பல உப்புமா வகைகள்
» அரிசி உணவு ஆபத்து இல்லை!என்று சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனமும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழமும் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்து இருக்கிறது.
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
» ரேசன் அரிசியே சாப்பிட்ட காமராஜர்
» நீங்களும் செய்யலாம் பல உப்புமா வகைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum