Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வப்பாட்டிகளை விலைக்கு வாங்கி....
Page 1 of 1
வப்பாட்டிகளை விலைக்கு வாங்கி....
DISC: இது முழுக்க முழுக்க கற்பனையே. ஆனால் யாரோ ஒருவரை குறிப்பதாக இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
நினைவலைகள்.ஜனவரி 10 2050,சென்னை
அது
2016 சட்டமன்ற தேர்தல் என்று நினைக்கிறேன். அப்போது தமிழகத்தில் இரண்டு
மாபெரும் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன.
கட்சி 1 - அ.பா.ஏ.சோ.வ.க. - அகிலமாளும் பாட்டாளி ஏழை சோற்றுக்கு வழியில்லாதோர் கட்சி
கட்சி
2 - சோ.வ.இ.ம.அ.ச.ஆ.அ.க. சோத்துக்கு வழி இல்லையென்றாலும் மக்கள் அண்ட
சராசரங்கள் ஆளும் அதகள கட்சி (சுருக்கமாக சோத்துக்கட்சி, சோ.க.)
இந்திய
வரலாற்றில் முதல் முறையாக 2016 தேர்தலின் போது தான் உதிரி கட்சிகளுக்கு
தட்கல் முறையில் சீட்டுகள் வழங்கும் திட்டத்தை பெரும் கட்சிகள்
அறிமுகப்படுத்தின. அதற்கு முந்தைய தேர்தலில்(2011) R.A.C முறையை
தங்கபாலுவும் அவரது மனைவியும் சேர்ந்து அறிமுகப்படுத்தியது
குறிப்பிடத்தக்கது.
2016 தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம் அப்போதைய
முதல்வரின் குலக் கொளுந்து ஒன்று விடுமுறைக்கு சென்னையை சுற்றிப்பார்க்க
வந்திருந்தது. குலக்கொளுந்து பிறந்து வளர்ந்ததெல்லாம் லண்டனில்.
குலக்கொளுந்து ஏப்ரல் மாத விடுமுறைக்கு வந்த போது தமிழகத்தில் தேர்தல்
நடப்பதாக தெரியவர தேர்தல் என்றால் என்னவென்று தலைவரை ஒரு பிடி
பிடித்துவிட்டது. தலைவரும் பொறுமையாக 234 சீட்டு ஆடும் தேர்தல் குறித்த
விளக்கத்தை தர குலக்கொளுந்து குஷியாகிவிட்டார்.
"ஏம்பா இந்த
சீட்டாட்டம் சோக்க இக்குதுப்பா. நானும் லண்டன்ல எவ்வளவோ கேசினோல
விளாண்டிருக்கேன் சீட்டாட்ட கிளப்புல புரண்டிருக்கேன்... ஆனா இப்படி ஒரு
த்ரில்லிங்கான விளையாட்ட நான் பாத்ததே இல்லையே. லண்டன்ல ஒரு கிளப்.
அங்ஙனக்க ஒரு பொண்ண மல்லாக்க படுக்க வச்சு அது வயித்துல சீட்டு கட்ட
அடுக்கி வச்சு ஒண்ணு...ஒண்ணா ...ஒண்ணு...ஒண்ணா தடவி தடவி எடுத்து
விளையாடுவோம். குஜாலான ஆட்டம் அது.... அத்த விட இந்த தேர்தல் வெளாட்டு
மஜாவா இக்குதுப்பா" என்று குலக்கொளுந்து இந்திய ஜனநாயகம் குறித்த புரிதலை
குஜாலாக வெளிப்படுத்தியது .
அத்தோடு நின்றுவிடாமல் மேலும்
அதிர்ச்சியூட்டும் விதமாக தேர்தலில் தானும் போட்டியிட விரும்புவதாக ஒரு
குண்டை தூக்கி போட குலக்கொளுந்தின் விளையாட்டு ஆசையை கருத்தில் கொண்டு
சேப்பாக்கம் தொகுதியை ஒதுக்குவதென்று பொதுக்குழு கூடி முடிவெடுத்தது.
சேப்பாக்கம் தொகுதியில் தான் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்திருக்கிறதென்பது
கூடுதல் சிறப்பு. அதே தொகுதியில் ஐந்து முறை ஜெயித்த சட்டமன்ற உறுப்பினர்
முதுமலை காட்டுப் பகுதிக்கு தூக்கி வீசப்பட்டார்.
முன்பெல்லாம்
தேர்தல் என்றால் புதிதாக வெள்ளை அடித்து வைத்திருக்கும் சுவற்றில் கட்சி
சின்னத்தை ராவோடு ராவாக வேட்டியை தூக்கி கக்கா போவது போல் பேண்டு
வைத்துவிட்டு போய்விடுவார்கள். எங்காவது சுவர்கள் காலியாக இருந்தால்
தங்கள் கட்சி பெயரை வெள்ளை பெயின்டில் எழுதி அட்வான்ஸ் புக்கிங் செய்யும்
முறையும் அமலில் இருந்தது. அதை முற்றிலும் ஒழித்த பெருமை தேர்தல் கமிஷனையே
சாரும்.
ஒரு முறை பப்ளிக் டாயிலெட்டின் வெளிச்சுவர் காலியாக
இருந்திருக்கிறது. செக்கண்ட் ஷோ சினிமாவுக்கு போய்விட்டு வீடு
திரும்பிக்கொண்டிருந்த கட்சியின் அடி மட்ட தொண்டன் அதை கவனிக்கிறான்.
ஆர்வம் மேலோங்க உடனடியாக தன் கட்சி பெயரை அதில் சாக்பீசில் ஆங்கிலத்தில்
எழுதி வைத்து சுவற்றை அட்வான்ஸ் புக்கிங் செய்துவிடுகிறான். ராவோடு ராவாக
கட்சி சின்னத்தையும் வரைந்துவிடுகிறார்கள். அடுத்த நாள் காலை கக்கா போக
வந்த பொது ஜனம் இது பப்ளிக் டாயிலெட்டா இல்லை கட்சி அலுவலகமா என்று
குழம்பிப்போனது தான் காமெடி.
சுவர் விளம்பரங்களுக்கு அடுத்ததாக தேர்தலில் களை கட்டுவது தேர்தல் பிரசாரம்.
2011
ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, ஆதித்யா சிரிப்பொலி போன்ற நகைச்சுவை
டி.வி. சேனல்களின் டி.ஆர்.பி சரிந்ததும் சன் நியூஸ் ஜெயா நியூஸ் போன்ற
செய்தி சானல்களின் டி.ஆர்.பி எகிறியதும் குறிப்பிடத்தக்கது. குழந்தைகள்
கூட கார்ட்டூன் நெட்வொர்க்கை துறந்துவிட்டு கேப்டன் டி.வி. பார்க்க
கிளம்பியதும் அதுவே முதல்முறை.
2011 தேர்தல் நகைச்சுவை உணர்வு கொண்டவர்களுக்கு நல்ல தீனி.
2016
தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த கணமே பிரசாரம் சூடு
பிடிக்கத்தொடங்கியது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பது 2011ஐ போல்
2016லும் தொடர்ந்தது. ஊழலை மறைக்கவும் மக்களின் அன்றாட திண்டாட்டங்களை
மறைத்து, அவர்களை குஷி படுத்தும் விதமாக காமெடி நடிகர்களை களத்தில்
இறக்குவது ஒரு டிரெண்டாகவே இருந்துவந்தது. ஹீரோக்கள் முதலமைச்சராக போட்டி
போட காமெடி நடிகர்கள் பிரசாரம் செய்ய கதாநாயகி தேர்தல் அறிக்கையாக வர
அங்காங்கே வில்லன் நடிகர்கள் தேர்தலில் கலக்க ஒரு முழு நீள திரைப்படம்
பார்த்த உணர்வை பொதுமக்களுக்கு தேர்தல்கள் அளிக்கத்துவங்கின.
இதன் காரணமாகவோ என்னவோ தேர்தல் சமயங்களில் அதிக அளவில் திரைப்படங்கள் வெளிவருவதில்லை.
2016 தேர்தலில் மிகவும் வினோதமான ஒரு பிரசார யுத்தி கையாளப்பட்டது. அது தான் வப்பாட்டி பார்முலா.
காமெடி
நடிகர்கள் ஒரு அளவுக்கு தான் ஜொலிக்கிறார்கள். எதிராளி குடிகாரன்
மொள்ளமாரி முடிச்சவிக்கி என்று தனிமனித தாக்குதல்களை இந்த காமெடி
நடிகர்களால் ஒரு அளவுக்கே வழங்க முடிந்தது. "தோனி தான் கேப்டன். கப்பலில்
வருபவர் தான் கேப்டன்." என்று மேடைகளில் முழங்கியது ஒரு புயல். அதே சமயம்
ஓங்கி உயர்ந்த மரங்களை சாய்த்து வீழ்த்துவதும் குடிசைகளின் கூரையை
அலேக்காக தூக்கி எறிவதுமாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையோடு வருவது
தான் 'புயல்' என்ற பேருண்மை "வைகைப் புயல்" என தன்னை அழைத்துக்கொள்ளும்
அந்த காமெடி நடிகருக்கு 2011ல் புரியாமல் போனதும் ஒரு வகை நகைச்சுவை
காட்சி தான்.
ஒரு வேட்பாளின் வெளிப்புற குணாதிசயங்கள் மட்டுமே
தெரிந்த ஒரு காமெடி நடிகரால் பெரிய அளவில் பிரசாரத்தில் எதிராளியை
டேமேஜாக்க முடியவில்லை. என்னதான் காமெடி ஆக்ஷன் இருந்தாலும் கிளுகிளுப்பு
குறைவு என்று மக்கள் வருத்தப்பட்டார்கள்.
எனவே மக்களின் கவர்ச்சி
தாகத்துக்கு தண்ணி ஊற்றும் விதமாகவும் கொதிக்கும் ஊழலை பொசுக்கும்
விதமாகவும் 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது தான் வப்பாட்டி பார்முலா?
நமக்கு
எப்போதுமே அடுத்தவரின் படுக்கையறை ரகசியங்களை தெரிந்துகொள்வதில் இருக்கும்
அலாதி ஆர்வம் தான் இந்த பார்முலாவின் அடிநாதம். வெறும் காமெடி நடிகர்களை
வைத்து பிரசாரம் செய்வதை விட எதிர் வேட்பாளரின் படுக்கை அறை வரை பரிச்சயம்
உள்ள ஒருவர், எதிரணி வேட்பாளரின் அந்தரங்கத்தை நார் நாராக டார் டாராக
கிழித்து தொங்க விடுகிற போது பல கோடி ஊழல்களின் துர்நாற்றமும் நில
அபகரிப்பின் , அராஜகத்தின் விஷநாற்றமும் கோமணத்தின் முடை நாற்றத்தில்
அடங்கிவிடும் அல்லவா?
எனவே கட்சிகள் 2016 தேர்தலில் பிரதான கட்சிகள் வப்பாட்டி பார்முலாவை கையாண்டார்கள்.
இதை
முதலில் ஒரு தொகுதியில் தொடங்கினார்கள். தொகுதியில் சோத்துக்கட்சி
வேட்பாளரும் உலகக்கட்சி வேட்பாளரும் போட்டியிட்டார்கள். இரண்டு கட்சி
மீதும் மக்கள் அதிர்ப்தியில் இருந்தார்கள். உலகக்கட்சிக்காரர்கள் என்ன
செய்தார்கள் தெரியுமா? சோத்துக்கட்சி வேட்பாளரின் வப்பாட்டி வீட்டுக்கு
தூது அனுப்பினார்கள். இருபது கோடி என்று விலை பேசினார்கள். "அந்தாளோட
இத்தன வருஷம் இருந்தும் இப்படி ஒரு அமவுன்ட பாத்ததில்லையே" என்று பொங்கி
எழுந்த தாய்க்குலம் கூந்தலை வாரி முடிந்து பிரசாரத்திற்கு புறப்பட்டது.
முதல்
நாள் பிரசார பொதுக் கூட்டத்தில் கட்சி தலைவரின் அருகில் மேடையிலேயே
வப்பாட்டி அமர்த்தப்பட்டாள். வப்பாட்டியின் கன்னிப்பேச்சு இதோ.
அந்த தொகுதியின் வேட்பாளர் பெயர் வின்னர் வீராசாமி.
-
அந்தாளுக்கு யாரும் ஓட்டு போடாதீங்க. யாருய்யா வின்னர்? அந்தாளு வின்னரா?
சிக்ஸ் அடிச்சு கப் வாங்குறவன் வின்னரா தினமும் செக்ஸ் வச்சு சீரழியுறவன்
வின்னரா?
(மக்கள் கரகோஷங்களை எழுப்புகிறார்கள்)
- அந்தாளு
கோமணத்த ஒரு நாள் கூட தொவச்சதில்ல. அந்தாளு கோவணத்த நீ பாத்திருக்கியா? நீ
பாத்திருக்கியா? நீ...நீ...(மக்களை நோக்கி கேள்வி எழுப்புகிறார்.கட்சியின்
கொள்கை புத்தகத்தை படித்திராத மக்கள் பாவம் பெபெப்பே என முழிக்கிறார்கள்).
அவன் கோவணத்த பத்தி எனக்கு தான் நல்ல தெரியும். இப்படிப்பட்ட ஒருத்தனுக்கு
நீங்க ஓட்டு போட்டா ஊருல எவனும் கோவணாத்த தொவச்சு போடக்கூடாதுன்னு சட்டம்
கொண்டுவருவான். அவனுக்கு ஓட்டு போடாதீங்க.(மக்கள் எக்காள சத்தத்தோடு
ஆர்ப்பரிக்க சிறப்பு நிகழ்ச்சிக்காக சானல் காரர்கள் வளைய வளைய வீடியோ
எடுக்கிறார்கள்.)
- அந்தாளுக்கு புடவை கட்டினா தான் மூடு
வருமாம்.(தண்ணி குடித்துக்கொள்கிறார்) இன்று உலக அரங்கிலே....பெண்
விடுதலைக்காக போராடிய குஷ்பு பிறந்த இந்த மண்ணிலே பெண்கள் சுடிதார் நைட்டி
ஸ்கர்ட் மினிஸ்கர்ட் ஜீன்ஸ் என எது அணிந்தாலும் ஆண்கள் முழு மூடோடு
அவர்களை சுற்றி வரும் இந்த தருணத்திலே புடவை கட்டி வந்தால் தான் மூடு
வரும் என்று சொல்லும் பிற்போக்குவாதியான இந்த வின்னர் வீராசாமியை நீங்கள்
ஆதரிக்கலாமா? (மக்களின் முகத்தில் எகிப்து புரட்சியின் எழுச்சி
தென்படுகிறது.)
- அப்பளத்த கடாயில போட்ட எப்படி மொருமொருன்னு
உப்பலா பொரியுது. அப்படி அப்பளத்த பொரிச்சு தள்ளுற கோல்டு வின்னரா? இல்ல
இந்த வீராசாமி வின்னரா?
(மக்கள் அம்மையாரின் கொள்கை முழக்கத்தில் திக்குமுக்காடி போகிறார்கள்.)
-
அந்தாள பத்தி எனக்கு தான் தெரியும். அந்தாளு இரத்திரியில எங்கெங்க கை
வைப்பான் எப்படி எல்லாம் டைப் டைப்பா முழிய மாத்துவான் எல்லாம் எனக்கு
தான் தெரியும். ஏன்னா நான் தான் அவனோட வப்பாட்டி. மக்களே என்னை
ஏமாத்திடலாம் உங்கள ஏமாத்த முடியுமா? படுத்துட்டு குடிக்கிறவன் வின்னரா?
இல்ல குடிச்சிட்டு படுக்குறவன் வின்னரா? மக்களே நீங்க தான் தீர்ப்பு
சொல்லணும். இந்த தேசத்தோட தலையெழுத்த மாத்துற சக்தி உங்களுக்கு தான்
இருக்கு. அதனால இந்த தங்கச்சி....நான் யாரு உங்களுக்கு...உங்க வயத்துல
பொறக்கலேன்னாலும் உங்களுக்கு நான் அக்க தங்கச்சி மாதிரி இல்லையா? உங்க
பொண்ணா நெனச்சு ஓட்டு கேக்குறேன். என்ன நிறைய பேரு போன்ல மிரட்டுறாங்க.
இப்போ இங்கே சொல்றேன். என் கற்புக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சு அதுக்கு தேர்தல்
கமிஷன் தான் பதில் சொல்லணும்.
- வின்னர் வின்னருன்னு சில பேரு
சொல்லிகிட்டு வருவான். நம்பிடாதீங்க. மூணு சீட்டுல கூட அந்தாளு வின்
பண்ணதில்ல. அதனால கண்ட கண்ட வின்னர நம்பி ஏமாறாம ஓட்ட நம்ம ஐயாவுக்கு
போட்டு மேட்டர கறந்துகோங்க. அம்புட்டுதேன்.
அதிரடி...அதிரடி....
அதே
போல் உலகக்கட்சி வேட்பாளரின் வப்பாட்டி பெங்களூரில் இருப்பதாக
கேள்விப்பட்டு அங்கேயே போய் விலை பேசி கூட்டி வந்தார்கள். இப்படி இரண்டு
வேட்பாளர்களின் வப்பாட்டிகளால் பிரசாரம் சூடு பிடித்தது.
மக்கள் இரண்டு வப்பாட்டிகளின் பேச்சையும் கேட்டு எந்த வப்பாட்டியோட படுத்தவனுக்கு எதிரா ஓட்டு போடுவதென்று குழம்பிப் போனார்கள்.
இப்படி
2011ல் காமெடி நடிகர்களை வைத்து களைகட்டிய ஜனநாயகத் திருவிழா 2016ல்
வப்பாட்டிகளை வைத்து குத்தாட்டம் போட்டதென்று சொன்னால் அதில் இந்திய துணை
கண்டத்திற்கும் அமெரிக்க ஏகாதியபத்தியத்திற்கும் வியப்பேதும் இருக்காது
என்று நம்புவோமாக.
நடிகை(எதிர்பார்க்கப்படும் வருங்கால பாராளுமன்ற உறுப்பினர்): என்னைப் போல் குழந்தை வேண்டுமென்றால் தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்க.
பொது ஜனம்: உன்ன மாதிரி குழந்த வேணுமுன்னா முதல்ல உன்ன தான் போ....போ...போ....போனா போகுதுன்னு நம்பி தி.மு.க.வுக்கே ஓட்டு போடறோம்.http://writervisa.blogspot.com/2011/04/blog-post.html
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தீபம் தொலைக்காட்சியை விடுதலைப்புலிகள் விலைக்கு வாங்கியுள்ளனர்- அனாஸின் கதி?
» IPL 6 - அதிக விலைக்கு எடுத்தவருக்கு ஆடவாய்ப்பு இல்லை
» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
» பாகன் படத்தை விலைக்கு வாங்கியது சன் தொலைக்காட்சி
» நேபாள நாட்டு எம்பிக்களை விலைக்கு வாங்குகிறது சீனா
» IPL 6 - அதிக விலைக்கு எடுத்தவருக்கு ஆடவாய்ப்பு இல்லை
» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....!
» பாகன் படத்தை விலைக்கு வாங்கியது சன் தொலைக்காட்சி
» நேபாள நாட்டு எம்பிக்களை விலைக்கு வாங்குகிறது சீனா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum