Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அசல் – விமர்சனம்
Page 1 of 1
அசல் – விமர்சனம்
நடிகர்கள்: அஜீத் (இரட்டை வேடம்), பாவனா, சமீரா ரெட்டி, சம்பத், பிரபு, ராஜீவ் கிருஷ்ணா, சுரேஷ்
ஒளிப்பதிவு: பிரசாந்த் டி மாஷாலே
இசை: பரத்வாஜ்
கதை, திரைக்கதை வசனம்: சரண், யூகி சேது, அஜீத்
இணை இயக்கம்: அஜீத்
இயக்கம்: சரண்
தயாரிப்பு: சிவாஜி பிலிம்ஸ் பிரபு, ராம்குமார்
பங்காளிச்
சண்டையில் எப்படி ஹீரோ ஜெயித்து தன்னை அசல் வாரிசு என நிரூபிக்கிறார்
என்பதுதான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை (அதற்கு மேல் சொல்ல கதையில்
ஒன்றுமில்லை என்பதால் அடுத்த கட்டத்துக்கு போய்விடலாம்!).
இந்த சின்ன கதையை மகா ஸ்டைலிஷாக சொல்ல வேண்டும் என்று இயக்குநரும் அஜீத்தும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.
இன்னும்கூட பில்லா பாதிப்பிலிருந்து அஜீத் வெளிவரவில்லை போலிருக்கிறது.
அதே மாதிரி கோட் – சூட்டுடன் தொடர்ந்து நடையாய் நடந்து தள்ளுகிறார்.
கதையைத் தேர்வு செய்வதில், நடிப்பதில் இன்னும் கூட புதிய பரிமாணம் காட்ட
முயற்சித்திருக்கலாம். காதல், இறுக்கம், சோகம், ஆத்திரம் என
எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி இறுக்கமாக முக பாவம் காட்டுவதைத்
தவிர்த்திருக்கலாம் அஜீத்.
படத்தில் இடம் பெறும் மூன்று சண்டைக் காட்சிகளிலும் பின்னியிருக்கிறார் அஜீத். அந்தக் காட்சிகளை அமைத்த விதம் அசல் அசத்தல்.
அதே போல அனாவசிய பேச்சு இல்லை படத்தில். பஞ்ச் டயலாக் படுத்தல்களும்
கூட சுத்தமாக கட். படத்தில் அஜீத் பேசும் வசனங்களை ஒரு முழுதாளில்
அடக்கிவிடலாம்…
பாவனா, சமீரா இருவருக்குமே அஜீத்தை காதலிக்கும் வேலை. அதில்
பாவனாவுக்கு சுவாரஸ்யமான பாத்திரம். சமீரா கவர்ச்சி காட்டுகிறார்… ஆனால்
அவரது முதிர்ந்த தோற்றம் அதை எடுபடாமல் செய்திருக்கிறது.
கெலி டோர்ஜி, சம்பத், ராஜீவ் கிருஷ்ணா, பிரதீப் ராவத், சுரேஷ் என
ஏகப்பட்ட வில்லன்கள். இவர்களில் கெலி டோர்ஜி அசத்தல். மற்றவர்களில் சம்பத்
ஓகே.
பிரபுவுக்கு பெரிதாய் வேலையில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டை மேற்பார்வை செய்யும் தயாரிப்பாளர் போல வந்து போகிறார்.
நமக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை.. அஜீத்தான் அல்டிமேட் ஸ்டார்
பட்டம் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டாரே… அப்புறம் எதற்கு அவரைச் சுற்றி
எப்போது பார்த்தாலும் ‘தல தலதான்’ என்ற ஜால்ரா சத்தம், டிவி ஷோக்களில்
பின்னணியில் ஒலிக்கும் கைத்தட்டல் – சிரிப்பு சத்தம் மாதிரி? கப்பலில்
அஜீத்தை சுட்டுவிடுகிறார்கள். அங்கே கூட ‘தல தெரியுதா தல தெரியுதா’ என்று
அழுத்திக் கேட்கிறார்கள்.. முடியல!
சில காட்சிகள் ஏன் எதற்கு எப்படி என்று காரணத்தை யோசிப்பதற்குள் நகர்ந்துவிடுகின்றன.
முக்கிய வில்லன் இடைவேளையின்போதே கொல்லப்படுவதால், படம் அதற்குப் பிறகு
வலுவிழந்த புயல் சின்னம் மாதிரி தொய்ந்து போகிறது. அதை சரிகட்டுவதாக
நினைத்துக் கொண்டு யூகிசேது ஏதோ தத்துப்பித்தென்று பண்ணுகிறார்.
இந்தப் படத்தை ஹாலிவுட் ஸ்டைலில் தர வேண்டும் என்பது அஜீத்தின் ஆசை
போலிருக்கிறது. ஆனால் இன்னும் அமர்க்களம் காலத்திலேயே இருக்கும் பரத்வாஜ்
மற்றும் சரண் கூட்டணியால் அந்த உயரத்தைத் தொட முடியாதது பரிதாபமே.
ஆனாலும் பரத்வாஜ் இசையில் டொட்டொடய்ங் பாட்டு இனிமையாகத்தான் உள்ளது.
பிரசாந்தின் ஒளிப்பதிவு அஜீத்துக்கு வலது கரம் மாதிரி. பாரிஸ், மலேஷிய லொக்கேஷன்களில் அவர் கேமிரா விளையாடியிருக்கிறது.
முன்பெல்லாம் சரண் படங்களில் ஒரு நாவலின் சுவாரஸ்யம் படம் நெடுக
இழையோடும். எப்போதும் இதழ்களில் புன்னகை தொக்கி நிற்கும் பெண்ணைப்போல
திரைக்கதையில் ஒரு நளினம் தெரியும். இந்தப் படத்தில் அது சுத்தமாக
மிஸ்ஸிங்.
அதனாலேயே, அஜீத்தை மட்டும் ரசிப்பதற்கு தயாராகிக் கொள்கிறார்கள் அவரது ரசிகர்கள்!
அப்படியெனில் மற்றவர்கள்… ‘அடுத்த முறையாவது நல்ல படமாகக் கொடுங்க அஜீத்’ என்கிறார்கள்!
Similar topics
» கதை விமர்சனம்
» அசர வைக்கும் 'அசல்' சரண் கடனிலிருந்து மீண்டது எப்படி?
» ஆள் - விமர்சனம்
» தி எக்ஸ்பாண்டபிள்ஸ் 3 -விமர்சனம்
» 3 விமர்சனம்
» அசர வைக்கும் 'அசல்' சரண் கடனிலிருந்து மீண்டது எப்படி?
» ஆள் - விமர்சனம்
» தி எக்ஸ்பாண்டபிள்ஸ் 3 -விமர்சனம்
» 3 விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum