TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இறுகுகின்றது சீன சிறிலங்கா உறவு: இப்போது வர்த்தகத் துறையில்

Go down

இறுகுகின்றது சீன சிறிலங்கா உறவு: இப்போது வர்த்தகத் துறையில் Empty இறுகுகின்றது சீன சிறிலங்கா உறவு: இப்போது வர்த்தகத் துறையில்

Post by Tamil Wed Feb 03, 2010 3:12 pm

இறுகுகின்றது சீன சிறிலங்கா உறவு: இப்போது வர்த்தகத் துறையில் China_rajapaksaசிறிலங்காவின் சீனாவிற்கான ஏற்றுமதி கடந்த மூன்று வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது.

2006 ஆம் ஆண்டு 37 மில்லியன் டொலராக இருந்த ஏற்றுமதி 2009 ஆம் ஆண்டு 70 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்ட காலப்பகுதியில் கூட சீனாவுக்கான சிறிலங்காவின் ஏற்றுமதி அளவு அதிகரித்துள்ளது.

ஆனால், 2009 ஆம் ஆண்டில் சிறிலங்காவுக்கான சீனாவின் ஏற்றுமதி வீழ்ச்சி முகமாகவே காணப்பட்டது.

2007
முதல் 2009-ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சீனாவுக்கான ஏற்றுமதிக்
கட்டமைப்பில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன;
ஏற்றுமதிக்கான பட்டியலில் மேலும் பல பொருட்கள் சேர்க்கப்பட்டன.

சீனாவின்
நுகர்வுச் சந்தையை இலக்காகக் கொண்டு புதிய ஏற்றுமதிப் பொருட்களை
அறிமுகப்படுத்துவதற்காக நன்கு திட்டமிடப்பட்ட விளம்பர நடவடிக்கைகளை
சிறிலங்கா இந்தக் காலப்பகுதியில் மேற்கொண்டது.

இறுகுகின்றது சீன சிறிலங்கா உறவு: இப்போது வர்த்தகத் துறையில் Sl_exports

சிறிலங்காவிலிருந்து சீனாவுக்கு...
முன்னர், சீனாவிற்கு மூலப் பொருட்களே அதிகளவில் ஏற்றுமதி
செய்யப்பட்டன. மொத்த ஏற்றுமதியில் 40 விழுக்காடு மூலப் பொருட்களாகவே
காணப்பட்டது.

திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த விளம்பர
நடவடிக்கைகள் மூலம் தேயிலை, ரப்பர் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட
உற்பத்திப் பொருட்கள், ஆபரணக் கற்கள், மீன் தயாரிப்புக்கள், நகைகள்
போன்றவற்றை நோக்கி சீனாவுக்கான ஏற்றுமதி திரும்பி உள்ளது.

தமது
உற்பத்திப் பொருட்களை சீனாவில் விளம்பரப்படுத்துவதற்காக, சிறிலங்கா
வர்த்தக மற்றும் அபிவிருத்திக்கான கொள்கை வகுப்பாளர்கள் பீஜிங்கில் உள்ள
சிறிலங்கா தூதரகத்துடன் சேர்ந்து சீனா முழுவதும் கவனமாகத் தெரிவு செய்த
முக்கிய பல இடங்களில் வர்த்தகக் கண்காட்சிகளை நடத்தினர்.

சீன
வர்த்தக ஆதரவு அமைப்புக்களுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றிய சிறிலங்காத்
தூதரகம் அவர்களுடன் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்து கொண்டது.
அவற்றின் மூலம் சீன வர்த்தகக் கண்காட்சிகளில் சிறிலங்காப் பொருட்களுக்கு
இலவசமான காட்சி அறையை அல்லது மிகக் குறைந்த கட்டணத்துடனான காட்சி அறைகளைப்
பெற முடிந்துள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளை அடுத்த கடந்த மூன்று
வருட காலத்தில் சீனாவில் நடைபெற்ற ஆகக் கூடுதலாக 52 வர்த்தகக்
கண்காட்சிகளில் சிறிலங்காப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றில்
25 கண்காட்சிகள் கடந்த ஆண்டில் மட்டும் நடத்தப்பட்டவை.

இந்தக்
கண்காட்சிகளில் கலந்து கொண்ட பெரும் எண்ணிக்கையான சிறிலங்கா வர்த்தகர்கள்
சீனாவின் பல மாகாணங்களில் தமது பொருட்களைக் காட்சிப்படுத்தினர்.

இறுகுகின்றது சீன சிறிலங்கா உறவு: இப்போது வர்த்தகத் துறையில் China_sl_export_development_trade_2008_1

படம்: Ministry of Commerce, People's Republic of China

2007 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தெற்காசிய
வர்த்தகக் கண்காட்சிகளில் முறையே 53 மற்றும் 60 வர்த்தகர்களுடன் சிறிலங்கா
கலந்து கொண்டது.

இத்தகைய வர்த்தகக் கண்காட்சிகளை வருடாந்தம்
நடத்த வேண்டும் என்று பீஜிங்கில் உள்ள சிறிலங்காத் தூதரகம் எடுத்த
முயற்சிகளுக்கு கடந்த ஆண்டு சாதகமான பதில் கிடைத்தது.

தமது
வருடாந்த குன்மிங் வர்த்தகக் கண்காட்சியுடன் இணைத்து இந்த வர்த்தகக்
கண்காட்சியையும் நடத்தலாம் என்று சீன வர்த்தகத் துறை அமைச்சு
அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் உள்ள வர்த்தக ஆதரவு
அமைப்புக்களுக்கும் சீனாவில் உள்ள அவர்களின் கூட்டாளிகளுக்கும் இடையிலான
ஒத்துழைப்புக்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் மிகம் பெருமளவில்
வளர்க்கப்பட்டுள்ளது.

வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறை சார்ந்த
பிரதிநிதிகள் குழுக்களை இரு தரப்பும் வரவேற்பது, சிறிலங்காவின்
தொழிற்துறையின் பல்வேறு பகுதிகளையும் எப்படி அபிவிருத்தி செய்வது என்பது
தொடர்பில் தொழில் நுட்பங்களைப் பரிமாறிக் கொள்ள வசதியாக கவர்ச்சிகரமான
வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளையும் அனுசரணையையும் வளர்த்துக் கொள்வது
– ஆகிய விடயங்களை உள்ளடக்கி இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
செய்யப்பட்டுள்ளன.

நடுத்தர வருமானம் கொண்ட சீன மக்களின் வருவாய்
அதிகரித்திருக்கும் நிலையில், சிறிலங்காத் தூதரகம் ஆபரணக் கற்களின்
விற்பனையை அங்கு முன்னகர்த்தி இருப்பது பெரும் பயனைத் தந்துள்ளது.

இதன்
மூலம் 2006 ஆம் ஆண்டில் 32ஆவது இடத்தில் இருந்த சீனாவிற்கான சிறிலங்காவின்
ஆபரணக் கல் ஏற்றுமதி கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் 19ஆவது இடத்திற்கு
முன்னேறி உள்ளதாக ஆபரணக் கற்கள் மற்றும் நகைகள் அதிகார சபையின் புள்ளி
விபரங்கள் கூறுகின்றன.

டிசெம்பர் மாதத்துப் புள்ளி விபரங்களில்
மேலும் முன்னேற்றம் காணப்படக்கூடும். ஏனெனில் நவம்பரில் பீஜிங் மற்றும்
சங்காய் நகர்களில் நடைபெற்ற ஆபரணக் கற்கள் வர்த்தகக் கண்காட்சியில்
சிறிலங்கா நிறுவனங்களும் பெருமளவில் பங்கேற்றிருந்தன.

ஆகக் கூடுதலாக 20 சிறிலங்காவின் ஆபரணக் கல் நிறுவனங்கள் பீஜிங் கண்காட்சியில் கலந்து கொண்டிருந்தன.

இதற்கு மேலாக, சீனாவிற்கான தேயிலை ஏற்றுமதி வேகமும் பெருமளவில் அதிகரித்துள்ளது.

2006இல் 700,000 கிலோவாக இருந்த ஏற்றுமதி அளவு கடந்த வருடத்தில் 1,000,000 கிலோவாக அதிகரித்துள்ளது.

அதே சமயம், சீனப் பொருட்களுக்கான இறக்குமதித் தேவையும் பெருமளவில் காணப்படுகின்றது.

அதன் காரணமாக இரு நாடுகள் இடையிலும் வர்த்தக சமநிலை காணப்படவில்லை.

ஆனாலும், சிறிலங்காவின் சீன இறக்குமதியானது பெருமளவு முதலீட்டுப் பொருட்கள் சார்ந்ததாகவே இருக்கின்றது.

உழவூர்திகள், வாகன உதிரிப் பாகங்கள், இயந்திரங்கள், வேதியல் பொருட்கள் போன்றனவே சீனாவில் இருந்து இறக்குமதியாகின்றன.

இத்தகைய சீனப் பொருட்கள் சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்துவதன் மூலம் சிறிலங்காவிற்கு மறைமுகமாக நன்மையையே கொண்டு வருகின்றன.

இவற்றுக்கு
உதவிகரமாக, பீஜிங்கில் உள்ள சிறிலங்காத் தூதரகம் வர்த்தகத்
திணைக்களத்துடன் இணைந்து இரு தரப்பு பொருளாதார ஆணைக் குழுவை
உருவாக்கியது. 8 வருட முயற்சிகள் தோல்வி அடைந்த பின்னர் 2008 ஆம் ஆண்டில்
அது உருவாக்கப்பட்டது.

இறுகுகின்றது சீன சிறிலங்கா உறவு: இப்போது வர்த்தகத் துறையில் China_sl_export_development_trade_2008_2

படம்: Ministry of Commerce, People's Republic of China

அது மட்டுமின்றி சீனாச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும்
பொருட்களுக்கு விசேட சலுகைகளை, ஆசிய – பசுபிக் வர்த்தக ஒப்பந்தத்தின்
(Asia Pacific Trade Agreement (APTA) கீழ் பெற்றுக் கொடுக்க வர்த்தகத்
திணைக்களத்துடன் சேர்ந்து சிறிலங்காத் தூதரகம் பணியாற்றியது.

ஆசிய
– பசுபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் உறுப்பு நாடு என்ற வகையில் -
சிறிலங்காவின் தேயிலை, ஆபரணக் கற்கள், நகைகள், தென்னையை அடிப்படையாகக்
கொண்ட பொருட்கள், பழங்கள், கார வகைகள், மின்சாதன உதிரிப் பாகங்கள்
என்பவற்றுக்கு சீனா வரிச் சலுகையை வழங்கியது.

அனைத்துலகச்
சந்தையில் மேலும் சலுகைகளைப் பெறுவதற்கு சிறிலங்காவின் மேலும் 50
உற்பத்திப் பொருட்களுக்கான வாசல் இன்னும் திறந்தே இருக்கிறது.

சீனாவில்
கிடைத்திருக்கும் இந்த மிகப் பெரிய வாய்ப்புக் குறித்து
ஏற்றுமதியாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வர்த்தக ஆதரவு
அமைப்புக்கள் அந்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.

அதிலும்
குறிப்பாக ஆசிய – பசுபிக் ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வரிச்
சலுகையால் வரிச் சுமை குறைக்கப்பட்டிருப்பது சிறிலங்காவின்
ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு பெரும் வாய்ப்பு.

சீனாவிற்கு
ஏற்றுமதி செய்யப்படும் எல்லாப் பொருட்களும் சிறிலங்காவின் உற்பத்திப்
பொருட்கள் தான் என்பதை வர்த்தகத் திணைக்களம் உறுதிப்படுத்துகின்றது.

சீனாவுடன்
கூட்டு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கும் முதலீட்டில் ஈடுபடுவதற்குமான
வழியையும் ஆசிய – பசுபிக் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.


இரு தரப்பு கூட்டு வர்த்தக நடவடிக்கைகளின் கீழ், வீட்டுக்கான மின்
இணைப்புப் பொருட்கள், தோற் பொருட்கள், விவசாய இயந்திரங்கள்,
உந்துருளிகள், செப்புப் பொருட்கள், பளிங்குக் கற்கள், அலுமினியப்
பொருட்கள், ஆடைகள், காலணிகள் போன்ற சிறிய தொழிற்துறைப் பொருட்களுக்கு
வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

நான்கு கட்டங்களாகச் சீனாவுடன்
நடத்தப்பட்ட பேச்சுக்களின் விளைவாக இந்த ஆண்டு முதல் மேலும் வரிச்
சலுகைகள் சிறிலங்காப் பொருட்களுக்குக் கிடைக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

இறுகுகின்றது சீன சிறிலங்கா உறவு: இப்போது வர்த்தகத் துறையில் China_sl_export_development_trade_2008_3

படம்: Ministry of Commerce, People's Republic of China

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் 2007ஆம் ஆண்டு
மிகவும் முக்கியமான. இரு தரப்பு ராஜீய உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50
ஆண்டுகள் அப்போதே நிறைவடைந்தது.

அந்த நிகழ்வைச் சிறப்பிக்கும்
வகையில் சீனாவிற்குப் பயணம் செய்த குடியரசு அதிபர் மகிந்த ராஜபக்ச, கடந்த
மூன்று ஆண்டுகளில் மேலும் இரு தடவைகள் சீனாவிற்குப் பயணம் செய்துள்ளார்.

அத்துடன்
பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இரண்டு தடவைகள் சீனாவிற்குப் பயணம்
மேற்கொண்டதும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுவை மேலும்
பலப்படுத்துவதற்கான அரசியல் சூழலை ஏற்படுத்தியது.

இரு
நாடுகளினதும் வர்த்தக மற்றும் அபிவிருத்தித் துறை அமைச்சர்களும்
வெளிவிவகாரத் துறை அமைச்சர்களும் கடந்த ஆண்டில் மேற்கொண்ட பயணங்கள்
இந்தப் பிணைப்பை மேலும் வலுப்படுத்தின.

சிறிலங்காவிற்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான உறவுகள் இந்த நடவடிக்கைகளின் மூலமாக மேலும் வெளிச்சத்திற்கு வந்தன.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» 16 வயதுப் பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டவருக்கு 10 வருட சிறை! மைனர் பெண்ணுடனான உறவு தவறே!
» கட்டுநாயக்க சிறிலங்கா வான்படைத் தளத்தில் சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரழிவுகளை ஏற்படுத்தி வீரவரலாறு படைத்து காவியமான 14 நிழற்கரும்புலிகளின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
» இவ்வளவு காலம் நாம் அனுபவித்ததை இப்போது நீங்கள் அனுபவிக்கிறீர்கள்
» இலவசமாக உங்கள் கணினியில் டிவி நேரடி இப்போது பார்க்கவும்
» இப்போது பேசாமல் எப்போது பேசுவது? நூல் வெளியீட்டு விழா - அரங்கத்தை சூடாக்கினார் பழ.கருப்பையா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum