TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழன் ஆண்மீகத்தை ஏமாற்றுவித்தையாக பாவிக்கக்கூடாது,ஏமாறவும் கூடாது

2 posters

Go down

தமிழன் ஆண்மீகத்தை ஏமாற்றுவித்தையாக பாவிக்கக்கூடாது,ஏமாறவும் கூடாது Empty தமிழன் ஆண்மீகத்தை ஏமாற்றுவித்தையாக பாவிக்கக்கூடாது,ஏமாறவும் கூடாது

Post by venkatraman Fri Jun 04, 2010 10:19 am

மார்ச்மாதம் முதல் எப்ரல் மாதங்களில் என்போன்ற தமிழர்களின் மனதை மிகவும் பாதித்த விடயம், நித்தியானந்தா என்ற ஆண்மீகமூடனின் விடயமாகத்தான் இருக்கமுடியும்,
ஏ தமிழா!!! உனக்கு ஏன் இந்தஆண்மீகப்பித்தலாட்டம் திருவண்ணாமலையில் ஒரு சிற்றூரில் ராஜசேகரன் என்ற ஒரு இளைஞனால் இப்படி ஆண்மீகத்தில்லுமுல்லுகளை பலஆண்டுகளாக அரங்கேற்றமுடிந்துள்ளதைப்பார்க்கும்போது பகுத்தறிவுபேசும்
"மா"மனிதர்கள் ஏன் விழித்துக்கொள்ளவில்லை பகுத்தறிவாளர்கள் என்றுத்தம்மைத்தாமே
உலகுக்கு பிரகடணப்படுத்திக்கொள்வோர்கள் கூட இதனைபகுத்தறிவால் வெல்லமுடியவில்லை இதுஒன்றும் முதற்சம்பவம் ஒன்றும் இல்லை முன்னறும் பிரேமானந்தா,கல்கிபகவான்,பித்தலாட்டசாமியார்களும் தோன்றி கம்பிஎண்ணிக்கொண்டிருக்கும் சம்பவங்கள் தமிழாஉனக்குபாடம் புகட்டாவிடில் என்றுதான் தமிழன் உன்மையானஆண்மீகத்தைப்புரிந்துகொள்ளப்போகிறான், ஏன்,ராமகிருஷ்ணபரமஹம்சர்,புத்தர்,ஸ்வாமி.விவேகானந்தர்,அகத்தியர்,உள்ப்பட பதினெட்டுச்சித்தர்கள்அதில் யோகக்கலையினை நமக்கெல்லாம் பரப்பிச்சென்ற பதஞ்சலிமுனிவர், அறுபத்துநான்குநாயன்மார்கள்,பன்னிரண்டுஆழ்வார்கள்,ஐயன் திருவள்ளுவர்,போன்றஞானிகளின் போதனைகளும் அதற்கு விளக்கவுரை எழுதிசாதாரன பாமரனுக்கும்போய்ச்சேர்க்கப்பாடுபட்ட உ.வே.சாமிநாதய்யர் போன்ற பெரியோர்கள் வாழ்ந்துகொண்டு ஒருபொடியனின் காலில்விழுந்து ஆண்மீக ஆசிபெருவதுஎன்பதும் அவனைக்காமப்பித்தன் என்றுபின்னர் பிரகடணப்படுத்துவதும் மூடத்தனத்தையேவெளிப்படுத்துகிறது,கண்டவர்வின்டதில்லை,வின்டவர்கண்டதில்லை,

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

நீட்டலும் மழித்தலும்வேண்டா என்பான் வள்ளுவன் தலைமுடியை சடைவளர்ப்பதும் முண்டம் செய்வதும்தேவையில்லை ஆண்மீகத்தினைமேற்கொள்பவருக்கு என்பதுவள்ளுவம்.வள்ளுவனின் மொழி எப்பொதும் பொய்க்காதது குறளிலேயே நித்தியானந்தாவைப்போன்ற எத்தர்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே வள்ளுவன் தனது திருஷ்டியில் கண்டுவிட்டான்.

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.

உண்மைத்துறவிகளுக்கு வள்ளுவனின் விளக்கம்
அப்படிப்பட்ட வள்ளுவன் வாழ்ந்தநாட்டில் திருக்குறள் பயிலும் நாட்டில் இவ்வாறு நிகழ்வதும் ஆண்மீகத்தின்பெயரில் மூடர்களாக்குவதும், ஆண்மீகப் பொருள்திரிபு தான் காரணம் என்றுநம்பத்தோண்றுகிறது.
Pray god in man.உன்னில் நீ இறைவனக்காண் என்பது ஸ்வாமி,விவேகாநந்தரின் போதனை,
பைபிளில் கொரிந்தியர் அத்தியாயம் வசனம்13.முதல்-17வரை. கூறப்பட்டுள்ளதாவது.உன் உடல் ஒருஆலயம்யென்பது உனக்குத்தெரியுமா?அந்தாலயத்தில் உன் அந்தர் ஆத்மா என்வசிப்பிடம் என்பதை நீ உணர்ந்திருக்கிறாயா என்று உண்மையான ஆண்மீகத்தினை வெளிப்படுத்துகிறது,யோகம் செய்வதிலிருந்து நாமடைவது . அஹிம்ஸை,உண்மையறிவு,பொய்மையும் களவும்விட்டொழிப்பது,பிரம்மச்சார்யம் அடைவது, அணைத்தினையும் பற்றில்லாதாக்குவது,உள்ளத்தைதூய்மையாக்குவது,மகிழ்ச்சியினைமட்டும்நுகர்வது,தபசினைமேற்கொள்வது,போன்ற அனுபவங்களைபெறலாம்
மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டாம் என்பது தத்துவம் இறைபக்த்தியிலொருங்கினைக்கும் கலைதான் யோகா என்பதும்,தியானம் என்பதும்.
(*வாம*,)பொதுஒழுக்கம்.நியமா,சுயக்கட்டுப்பாடு.(*ஆசனா*),என்பது யோகம்மேற்கொள்ளும்போது அமரும் முறை.(*பிராணாயாமம்)* மூச்சுக்கலை.பிரத்தியாகாரம்.மனதினைஒருங்கினைக்கும்முறை.(*தாரணை,)*மனதினை லட்ச்சியப்படுத்துதல்.(*தியாணம்,)*ஒரேநேரான எண்ணத்தினைமனதில் படியவைத்தல்.(*சமாதி)*,அணைத்து புலன்களையும் தன்னில் ஒருமுகப்படல்.என்பதும் தான் யோகத்தின் சிறப்பம்ஸம்.கீதாசரத்தில் கூரப்பட்டுள்ளபடி பதஞ்சலிமுனிவரின் நெறிமுறைப்படி யாரும் யோகத்தினைமேற்க்கொள்ளலாம்,இதற்கு ஜாதி,மதம் என்பதேகிடையாது,இதுஒருவாழ்வியல்விஞ்ஞானம்.குஜராத் முதலமைச்ச்ரே இந்த நித்தியானந்தாவின் காலில்விழுந்து வணங்கிச்சென்றதாகக்கேள்வி எல்லா ஜீவர்களிடத்தும் இறைவன் இருப்பதால் யாரையும் காலில் விழ சொல்லவோ விழுவதை அனுமதிக்கவோ
கூடாது. அவ்வாறு செய்தால் சாதகர் அசுர சக்தியாக ஆண்டவரால் கணிக்கப்பட்டு கடும் தண்டனைக்கு ஆளாவார்.இது ராமலிங்க அடிகளாரின் வாக்கு.
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே. எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே. அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே. என்பது திருவாசகம்,
தமிழர்களாகிய அணைவரும்
மார்க்கம் போல் நேர்வழியே குருக்குமார்க்கம்
வாய்வழியே தான்வந்து வாசியேறும்
தீர்க்கம்போற் செப்பிவிடும் வாசிவாசி
செயவாசி கூறிவிடும் வாசிபாசை
கார்ப்பதுபோற் சொல்லிவைக்குந் தனக்குமுன்னால்
கண்டுகொள்ளும் பின்னாலே துடர்ந்துசெல்லும்
சேர்ப்பதுபோற் சொல்லிவைக்கும் பொருந்திடாதே
தீண்டாதே நீயிருந்து ஒடுங்கில்லே
நாம் யாவரும் ஆண்மீகத்தினை அறிந்து கொள்ள இணயதளத்தில் ஒருவர் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார், யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக என்பதற்கிணங்க இதணை பெறுமையுடன் மறுபெயற்பு செய்கிறேன்,.
தமிழ் சொல்லும் ஆன்மீகமென்பது மிக, மிக ஆழமான ஒன்று. பல்வேறு தளங்களில், பல்வேறு பொருள் கொடுக்கும் வண்ணம் அமைந்துள்ள ஒரு அட்சய பாத்திரம். மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு சரித்திர தொடர்ச்சி காட்டும், அறிவியல் ஆய்விற்கு உட்படும் பொருளாகத் தோன்றும். வேறொரு பார்வையில் அதிக சடங்குகள் அடங்கிய, புராணங்கள் நிரம்பிய, கதைக் களஞ்சியம் போலும் தோன்றும். உளவியல் கண்ணோடு பார்த்தால் பரிபாஷைகள் அடங்கிய, குறியீடுகள் நிரம்பிய, ஆழ்ந்த பொருள் தரும் அறிவுக் களஞ்சியமாகத் தோன்றும். இன்னொரு கோணத்தில், நம் அறிவிற்கு அப்பாற்பட்டு, அற்புதங்கள் அடங்கிய, அமானுஷ்ய தளத்தில் இருப்பதும் புலப்படும். ஒரு சாதாரண தமிழன் இந்த நிலைகளுக்குள் உள்ளும், வெளியும் போய் வந்த வண்ணமே இருப்பது உலக அதிசயங்களில் ஒன்று. மிகையில்லை!


இந்து மதம் என்று விதேசிகளால் பெயரிடப்பட்ட இந்திய மெய் ஞானம் காலம் கடந்து இன்றும் அதிசயதக்க விதத்தில் இருப்பதால்தான், காலத்திற்கு காலம் புதிய விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டு என்றும் இளமையுடன் திகழ்கிறது. இன்றைய இந்து மதம் ஆரிய சமய ஞானத்தையும், காலத்தால் முந்திய திராவிட மெய் ஞானத்தையும் உள் அடக்கி வாழ்கிறது. இதற்குள் உட்பூசல்கள் இருந்தாலும், இக்கூறுகளை இனம் கண்டு பிரித்துப் பார்த்து இனி நிலைப்படுத்துவதென்பது மலையை முடியால் இழுத்த கதையாகத்தான் போகும் என்பது விவேக சிந்தனை.

பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட மூட நம்பிக்கைகள் நிரம்பிய, சடங்குகள் மண்டிக்கிடக்கும் ஒரு பரிமாணமும் இம்மதத்திற்கு இருக்கிறது. அதுதான் அடிக்கடி வம்பில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குவது. அதைப் பற்றியல்ல இக்கட்டுரை. புராணங்களப் பற்றியும் அல்ல. அற்புதங்களைப் பற்றியுமல்ல.வேதாந்த, சித்தாந்த விசாரங்களப் பற்றியும் இல்லை.

திராவிட மெய்ஞானத்திற்குப் பின் புலமாக, பக்க பலமாக அமைந்திருப்பது, அறிவிற்கு உட்பட்டு, பின் அதை மேவி விரியும் தந்திரவியலாகும். தந்திரம், மந்திரம் என்பது மிக ஆழமாக, விரிவாக சைவ பாரம்பரியத்தில் காணக் கிடைக்கிறது. காலத்தால் பழமையுடைய வைணவ வழிமுறைகளில் அது பூடகமாகவே வெளிப்படுகிறது. பின்னால் வந்த வைணவக் குரவர்கள் சரணாகதி அல்லது பிரபத்தி என்பதற்கு கொடுத்துள்ள கவனம் இந்த வைணவ தந்திர வெளிப்பாட்டை பின்புலத்தில் தள்ளி வைத்திருக்கலாம். ஆனால் நிச்சயமாக முதல் மூன்று ஆழ்வார்கள் காலத்திலும், அவர்கள் காலத்தில் வாழ்ந்தாக நம்பப்படும் திருமழிசையின் காலத்திலும் பட்டவர்த்தனமாகவே உள்ளது என்று சொல்லலாம்.

உண்மையில் யோகமும், தந்திரமும் எந்த ஒரு இந்திய சமயத் துறைக்கும் பிரத்தியேகமானது என்று சொல்வதற்கில்லை. சமண, பெளத்த, சைவ, வைணவ, பின்னால் வந்த இஸ்லாமிய (சுபி), கிருத்தவ சமயங்கள் எல்லாவற்றிலும் இது காணக்கிடைக்கிறது. எனவே இதை சமயம் கடந்த, எல்லா சமயங்களுக்கும் அடித்தளமிடும் ஒரு அறிவியல் என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது.

இம்மடலில் சைவ, வைணவத் துறைகளில் அடி வேராய் அமையும் சில தந்திரங்களைப் பற்றிப் பார்ப்போம்.

சித்தர்கள் என்று சைவ உலகில் அறியப்படும் மெய் ஞான வித்தகர்கள், யோகிகள் என்று வைணவ உலகில் பேசப் படுவர். பொதுவாக இவர்களை ஞானிகள், ரிஷிகள் என்றும் சொல்வதுண்டு. சித்தர்கள் எத்தனையோ! பல்வேறு பட்டியல்கள் உள்ளன. அவர்களில் காகபுஜுண்டர் என்பரும் ஒருவர். இவர் கல்ப காலங்கலாக வாழ்ந்து வருவதாகவும், வஷிஷ்டர் முதல் பல ரிஷிகள் இவரிடம் பாடம் கேட்டதாகவும், அவர்களுக்கிணங்கி, அன்பால், சாகா வாழ்வு பற்றி அவர் செய்வித்த பெருநூல் காவியம் 1000 என்னும் நூல் தமிழில் உள்ளது. அதில் இவர் மரணமில்லாப் பெருவாழ்வு பற்றி நிரம்ப பேசுகிறார். இதற்கு வாலைச் சித்தர் என்பவர் தனது தவ வலிமையால் நல்லதொரு விளக்கம் செய்துள்ளார்.

காகம் என்பது நல்லதொரு உணவைக் கண்டவுடன் தன் சுற்றத்தை கூவி அழைத்து பகிர்துண்ணும் பண்புடையது. அது போல் காகபுஜண்டரும் தனது மெய் ஞானப் புரிதலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

மீதம் நீருடலுயிரும் நினைவும்போகும்
வேதாந்த மாகருவும் உள்ளே நிற்கும்
நாதம்நீர் அண்ணாக்கு வாசல்மார்க்கம்
நாம் நினையா தேயிருந்தும் பேசும்வாசல்
போதம்பார் பரிபாசை யாகப்பாடும்
பொய்யதுவுந் தாந்தெரியும் மெய்யுங்காணும்
நீதம்பா ரத்தனையும் தானேகாணும்
நில்லும் நில்லும் நானறிவேன் நினைத்த மார்க்கம்.

முக்கியமாக அவர் சொல்லும் சேதி இதுதான். இந்த யோகாப்பியாசத்தால் வரும் பலன்களில் முக்கியமானது வேதாந்தம், மெஞ்ஞான பரிபாஷைகள் எந்த வேத அப்பியாசமும் இல்லாமல் தானாகவே பாகம் படும் என்பது. அதாவது, வருஷக் கணக்காக குரான் ஓதிக் கொண்டு இஸ்லாமை அறியாத மூடன் போல, வேதம் ஓதிக் கொண்டு மறை பொருள் அறியாத மூடர்களும் உண்டு. திருமழிசை ஆழ்வார் தெரு ஓரம் நடக்கின்றார். அவர் வேதம் ஓதும் பார்ப்பனர் அல்லர். பார்ப்பனர்கள் வேதம் ஓதும் போது அறியாது தவறு செய்கின்றனர். அதை வழிநடை செல்லும் திருமழிசை திருத்துகிறார். வாதம் வருகிறது, அப்போது, அந்தணர்கள் அறிந்திடாத வேதத்தின் உட் பொருட்களை புட்டு, புட்டு வைக்கிறார். இது எப்படி சாத்தியமாகியது?

மெய்ஞானம் என்பது அனுபவத்தால் வர வேண்டும் என்று அழுத்திச் சொல்கிறார் காகபுஜண்டர். அதுவில்லாமல் வெறும் புத்தக அறிவுடையோரைக் கேலி பேசுகிறார் இப்படி:

திரும்பிக்கொள் வாரவர்கள் சித்தர்தானோ
செப்பினதைக் கேளாதார் பெரியோர்தானோ
திரும்பிக்கொள் மனமிருக்கச் சந்தேகத்தால்
தேசத்தில் சுகிக்கறியா விருதாஞானி
திரும்பிக்கொள் உலகருமே ஓடிப்போவார்
தேசத்தில் ஞானபரி பாஷையென்பார்
திரும்பிக்கொள் ளுலகத்தோர் கேட்டதற்குச்
சிவபூசை செய்ததுபோற் புலம்புவரே.

இப்படிப் பட்ட பொய் ஞானிகளை "விருதா" ஞானி என்று கேலி செய்கிறார். (சித்தர்களின் மொழி நடை பேச்சுத் தமிழை ஒத்து இருப்பது ஒரு அழகு). இவர்களைக் கேட்டால், "பரிபாஷை" என்பர், மெளன மொழி என்பர், சிவ பூசை முற்றும் அறிந்தது போல் புலம்புவர் என்று சாடுகிறார், காகபுஜண்டர்!

இவரது மெய்ஞானப் புரிதலாக வருவது, குண்டலினி சக்தி என்னும் கிரியா சக்தி சரியான யோக மார்க்கத்தில் ஈடுபடும் போது, சின்னஞ்சிறு கன்னியாக வெளிப்படும் என்பதுதான். இந்த கன்னியை "வாலைக் குமரி" என்றழைப்பர் சித்தர்கள். இவள் பார்ப்பதற்குத்தான் சிறியவள், ஆனால் அவள் பெற்ற அன்னையைவிட நம்மை வேண்டிக் காப்பள், வேண்டிய நல் அருள் தருவள். அந்த சுகானுபவத்தை சொல்ல வார்த்தை இல்லை என்கிறார் காகபுஜண்டர்:

உச்சிமேல் கைகாட்டும் பொங்கிச்சாயும்
உறுமுகிடாய் திருகுகொம்பு போலத்தானே
எச்சியே தான்விசிறும் உச்சிமூக்கால்
யிடதுகையைப் பத்தியவள் எதிர்ற்பாள்காண்
குச்சியே முண்டலித்தா யதனில் நிற்பாள்
கொடுங்குமரி வர்ணமதை யென்னசொல்வேன்
பச்சியே கேட்டதெல்லா மிந்தாவென்பாள்
பார்க்கவே கன்னிசிறு ரூபமாமே.

ரூபமே நாமமே ரூபாரூபம்
நுவலுகிறேன் வாலையென்றும் வெளியேயென்றும்
நாமமே கன்னியென்றும் மந்திரமென்றும்
நவிலுஞ்சொல் மொழியென்றும் கற்பமென்றும்
காமமே யிச்சையென்று மனதேயென்றும்
கண்டவர்கள் சத்திசிவ மாய்கையென்றும்
நாமமே வாசிபர தேசிபிர்மம்
நாடியுதித் தொடுங்குமிட மறிந்துபாரே.


சித்தர்கள் கண்ட இந்த அனுபவம்தான் துர்க்கையை "சின்னஞ்சிறு பெண் போலே, சிற்றாடை உடையுடுத்தி, சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்க்கை" யாக அடியார்களை வழி பட வைத்துள்ளது என்று சொல்லலாம்.

சரி, ஒரு ஆணுக்கு இந்த அனுபவம் வரும் போது "வாலைக் குமரியாக" உருவகப்படுத்த முடிகிறது, ஆனால் அதையே ஒரு பெண் பார்வையில் பார்க்கும் போது?

சின்னஞ் சிறு பாலகிருஷ்ணன் ஞாபகம் வரவில்லை? அதுதான் ரகஸ்யம்!

கண்ணன்தான் அந்த குண்டலினி! அவன்தான் அந்த கிரியா சக்தி. அவனது ஆனந்த சயனம் எதைக் காட்டுகிறது? அந்த ஐந்து தலை ஆதிசேஷன் எதைக் காட்டுகிறது? குண்டலினியை வசப்படுத்தி வைத்திருக்கும் ஆனந்த பத்மனாபனைத்தானே?



சித்தர் வழியில் வந்து கண்ணனை வழிபடும் பாரதியின் கவிதையில் அது வெளிவராமல் இருக்குமோ?

"கோலக் குயிலோசை-உனது
குரலினிமையடீ!
வாலைக்குமரியடீ-கண்ணம்மா!
மருவக்காதல் கொண்டேன்!"

பாரதியின் மிகப் பிரபலமான "சின்னஞ் சிறு கிளி" வேறு யார்? அது போகட்டும், காகபுஜண்டரும் கண்ணனை மறந்துவிடவில்லை!

காணலா மெத்தனையோ கோடாகோடி
கண்ணுக்குள் ளேதெரியுங் கிருஷ்ணனைப்போல்
தோணலா மேதிர்ற்கும் பாவனைபோல்
துயரெல்லா மாற்றிவிடுஞ் சுழினைவாசல்
வீணல்லால் மற்றொன்றிற் காண்பதுண்டோ
மிஞ்சினவர் சொற்கேட்ட வித்தைபோல
கால்லா வில்லெறிந்த வீரன்போல
நாமறியத் தன்மைவிட்டு நாடினாலே

கண்ணன் கண்ணுக்குள்ளே உள்ளான் என்று தெளிவாகச் சொல்லி விடுகிறார். பிறகென்ன, ஆண்டாள் கண்ணன் நினைவாகவே இருந்து,

"கண்ணன் என்னும் கருந்தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேனை" (நாச்சியார் திருமொழி)

என்று சொல்வதில் தவறுண்டோ? பாரதி கண்ட "கரும் பெண்மை அழகும்", ஆண்டாள் கண்ட "கருந்தெய்வமும்" ஒன்றுதானோ?

குண்டலினி சக்தியை மாயா சக்தி என்று சொல்வதுண்டு. அது கன்னியாக வந்து மாயம் செய்யும் சக்தி. மிக கவனமாக கையாளப் படவேண்டிய சக்தி. இதை காகபுஜண்டர் பின்வரும் பாடலில் எச்சரிக்கிறார்:

மார்க்கம் போல் நேர்வழியே குருக்குமார்க்கம்
வாய்வழியே தான்வந்து வாசியேறும்
தீர்க்கம்போற் செப்பிவிடும் வாசிவாசி
செயவாசி கூறிவிடும் வாசிபாசை
கார்ப்பதுபோற் சொல்லிவைக்குந் தனக்குமுன்னால்
கண்டுகொள்ளும் பின்னாலே துடர்ந்துசெல்லும்
சேர்ப்பதுபோற் சொல்லிவைக்கும் பொருந்திடாதே
தீண்டாதே நீயிருந்து ஒடுங்கில்லே [62]

"பெற்ற தாயைப்போல கூட இருந்து உன்னை தவத்தில் மேலேற்றும் அதேசமயம் பருவப்பெண்ணாகி அழகு சொரூபியாகி உன்னை மயக்க பார்க்கும். உஷாராய் இருந்து அவளை தாயாய் போற்றி உணர்வை அறிவில் ஒடுக்கி தனித்து நிற்பாயாக." என்று விளக்கம் தருகிறார் தர்மலிங்க சுவாமிகள்.

மகா கவி பாரதி இதைத்தான் பின்வரும் பாடலில் சுட்டிக் காட்டுகிறார்:

"பின்னோர் இராவினிலே கரும் பெண்மை அழகொன்று வந்தது கண்டு
கன்னி வடிவமென்றே களி கண்டு சற்றே அருகே சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா! இவள் ஆதி பரா சக்தி தேவியடா!
இவள் இன்னருள் வேண்டுமடா! பின்னர் யாவும் உலகில் வசப்பட்டு போகுமடா!"

காகபுஜண்டரும், பாரதியும் சுட்டுவது ஒன்றுதான். கவனம்! பூரண சித்தியாகிய சிவஞானம் கிடைக்கும் முன் இந்த மாதிரி சித்து விளையாட்டுக்கள் காட்டி திசை திருப்ப பார்ப்பள், அந்த இனிய நேரத்திலும் நமது கவனம் முழு சித்தி அடைவதில்தான் இருக்க வேண்டுமே தவிர சின்ன ஆசைகளில் சிதறி விடக்கூடாது என்பதுதான்.

இதே பின் புலத்தில் நம்மாழ்வார், தன்னை பாராங்குச நாயகியாக பாவித்து செய்வித்த பாசுரங்களைப் பார்த்தாலொரு அழகான உண்மை புலப்படும். கண்ணனும் பலவித லீலைகள் செய்து இவரது கவனத்தை திருப்புகிறான் ஆனால் நம் நம்மாழ்வாரா அதற்கெல்லாம் மசிவார்? என்ன சொல்கிறார் பாருங்கள்:

"மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன்; இனியது
கொண்டு செய்வதேன்?
என்னுடைய பந்தும், கழலும் தந்து போகு நம்பீ!"

(திருவாய் மொழி 6.2.1)

மேலும், "உன் மாயங்கள் மேலை வானவரும் அறியார்; இனியெம் பரமே!" என்றும் சொல்கிறார்.

அதாவது, இந்த குண்டலினி சக்தியாகிய வாலை அம்பிகை செய்யும் மாயங்களை வானோர்கள் கூட அறிய மாட்டார், ஆனால் நான் அறிவேன். அதற்கு நான் மயங்க மாட்டேன், அதனால் என் பந்தும், கழலும் தந்து போகு நம்பீ! என்று சொல்கிறார். ஒரு திட யோகிக்கு இருக்க வேண்டிய வைராக்கியத்தை வெளிப்படுத்தும் வரிகள் இவை. அந்த திடம் இல்லையெனில் வைகுந்தம் எங்கே? கைலாசம்தான் எங்கே?

அதனால்தான் சங்கப் பாடல்களில் முல்லைத் தெய்வமாகிய கண்ணனை "மாயோன்" என்றும், பெண் தெய்வமாகிய தேவியை "மாயோள்" என்றும் அழைத்தனர்.

சைவத்தில் பெண் யோக முத்திரையாக இருக்கிறாள், வைணவத்தில் பெண்ணின் பார்வையில் அதுவே, ஆண் வடிவில் குறியீடாக உள்ளது. எவ்வளவு அழகான சீர்மைத்தல் (complement)!

உண்மையில் சித்தர்கள் பேசும் சூரியகலையும், சந்திர கலையும் வைணவ, சைவ நெறிகள்தான். அவை நம் இரு கண்கள்.
[/b]அன்புடன் வெங்கட்ராமன்[/b]
venkatraman
venkatraman
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 168
Join date : 04/06/2010
Location : Tamilnadu,India

Back to top Go down

தமிழன் ஆண்மீகத்தை ஏமாற்றுவித்தையாக பாவிக்கக்கூடாது,ஏமாறவும் கூடாது Empty Re: தமிழன் ஆண்மீகத்தை ஏமாற்றுவித்தையாக பாவிக்கக்கூடாது,ஏமாறவும் கூடாது

Post by Tamil Fri Jun 04, 2010 11:31 am

நல்ல அருமையான பதிவு .வாழ்த்துக்கள் உங்களின் பதிவுகள் தொடரட்டும் தமிழன் ஆண்மீகத்தை ஏமாற்றுவித்தையாக பாவிக்கக்கூடாது,ஏமாறவும் கூடாது 471843
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» புலனாய்வு தமிழன் சொல்லும் தமிழன் அறியாத செய்தி
» வயிற்றுப்புண்ணால் அவதிப்படுவோருக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது. ஏன்? எதற்கு?
» பார்க்கக் கூடாது என நினைக்கின்ற இணைய பக்கங்களை உங்கள் பிள்ளைகள் உலாவரக் கூடாது என நீங்கள் நினைக்கின்ற பக்கங்களை தடுப்பதற்கு விரும்புகிறீர்களா.?
» தலைகீழான தமிழன்
» தமிழன் யார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum