TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வருமானம் பெருக, வழிவகை செய்ய வேண்டாமா?

Go down

வருமானம் பெருக, வழிவகை செய்ய வேண்டாமா? Empty வருமானம் பெருக, வழிவகை செய்ய வேண்டாமா?

Post by Tamil Mon Mar 28, 2016 9:30 pm

வருமானம் பெருக, வழிவகை செய்ய வேண்டாமா?
வருமானம்
பணத்தைப் பற்றிய பார்வைகள், மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. ‘இருப்பது போதும்…’ என்கிறவர்கள் முதலாம் ரகம். ‘எவ்வளவு இருந்தாலும் பத்தலை…’ என்று புலம்புவோர் இரண்டாம் ரகம். எவ்வளவு இருந்தாலும் தேடிக் கொண்டும், அதன் பின்னே ஓடிக் கொண்டும் இருப்பவர்கள் மூன்றாம் ரகம்.
இருப்பது போதும் என்பவர்களைப் பற்றி தான் எனக்கு கூடுதல் அக்கறை. ஆசை தான் துன்பங்களுக்கு காரணம் என்றார் புத்தர். அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார் வெள்ளியங்கிரி சத்குரு. காலத்திற்கு ஏற்ற குரல்கள் இவை!
மனிதர்களின் ஆயுள் நீண்டு விட்டது; ஆனால், அதற்கு நேர்மாறாக ஆரோக்கியம் குறைந்து விட்டது. மருத்துவர்களிடம் சென்றால், ‘வயசாயிடுச்சுல்ல… அப்படித் தான் இருக்கும்; கட்டுப்பாடா இருங்க…’ என்று குறிப்பிட்ட தொல்லைகளுக்கு உதட்டைப் பிதுக்குகின்றனர்.
வாழ வாழச் செலவு தான். ஆம்… மருத்துவ செலவினங்கள் கடுமையாகின்றன. எல்லா விதமான மருத்துவப் பரிசோதனைகளும் செய்யச் சொல்லி, ‘எல்லாம் நல்லா தான் இருக்கு…’ என்கின்றனர், மருத்துவர்கள். ஆனால், வலிகள், வேதனைகள் நின்றபாடில்லை. பில் தொகைகள் மட்டும் உயரங்களிலும், அகலங்களிலும் விரிந்து கொண்டே போகின்றன.
மருத்துவ செலவினங்களை பார்க்கிற போது, எவ்வளவு கை இருப்பு இருந்தாலும், பருப்பு வேக மாட்டேன் என்கிறது. பில்களுக்கான பணம் கட்டும்போது, அடுத்த தலைமுறையின் முகத்தில் தான் எவ்வளவு எள்ளும், கொள்ளும் வெடிக்கின்றன!
என் நண்பர் ஒருவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இப்பழக்கம் தொடர்பாக சில தொல்லைகள். பெரிய மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர்; செலவு ஏகமாய் ஆகியது. குணமோ தெரியவில்லை. ‘வீட்டில் வைத்து, பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள், கொண்டு போங்கள்…’ என்றனர். மருத்துவச் செலவு, 13 லட்சம் ரூபாய்! பாவம் நண்பரின் மகன்; வங்கி ஊழியர். சிறிது சிறிதாக சேமித்து வைத்திருந்த, 15ல் 13 லட்சம் ரூபாய் காலி. பொருளாதாரத்தில் மறுபடி புது இன்னிங்ஸ் ஆரம்பிக்க வேண்டும்.

[You must be registered and logged in to see this image.]
இப்போதெல்லாம் ஆகிற மருத்துவ செலவினங்களை பார்க்கும்போது, கையிருப்பை அதிகம் என்று எண்ண முடியவில்லை. நண்பர் மகளுக்கு ஏதோ காய்ச்சல்; நான்கு தினங்கள் மருத்துவமனை வாசம். பில், 40,000 ரூபாய்!
கல்வி செலவினங்களும் ஏகமாய் பெருத்து விட்டன. உல்லாச சுற்றுலாக்கள், புராஜக்ட்கள், ஆண்டு விழாப் பங்கேற்புகள் என்று எதுவுமே கட்டுப்பாட்டில் இல்லை.
வாழ்வின் வேகமான பயணத்தில், பயணிக்கும் வாகனத்தில் சக்கரங்கள் கழன்று உருண்டோடினால் என்ன நிலைமையோ, அப்படிப்பட்ட நிலைமை தான் பலரது பொருளாதார நிலைமை.
வாகனச் செலவுகள், அன்பளிப்புகள் இவற்றிலெல்லாம் பெரிதாய் என்ன செலவு வந்து விடப் போகிறது என்று எண்ண முடியவில்லை; பர்சுகள் பிய்ந்து போகின்றன.
ஒரு தாத்தா நீண்ட ஆயுள் வாழ்ந்தார். ‘நான் வாழுகிற வரை எனக்கு இதுபோதும்…’ என்று ஏதோ ஒரு கணக்கு போட்டார். பேத்தி திருமணம் இடையில் வந்தது. அன்பின் மிகுதியில் அள்ளிக் கொடுத்தார்; ஐவேஜ் (இருப்பு) அனைத்தும் காலி! இப்போது, தனக்கு பெருஞ் செலவு வந்தால் என்ன செய்வது என்று கை பிசைந்து நிற்கிறார்.
நடுத்தர வயதிற்கு பின், பிள்ளைகளது உதவியை எதிர்பார்த்து வாழும் பெற்றோர் பலர், சொல்ல முடியாத மனவேதனையில் மனம் புழுங்குகின்றனர். ‘என் மகன் இளைஞனாக, நடுத்தர வயதினனாக இருந்த போது கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தேன்; இன்று, என் செலவுக்கு எண்ணி எண்ணிக் கொடுக்கிறான்; கணக்கு கேட்கிறான். இது கூட பரவாயில்லை; அந்தச் செலவு உங்களுக்கு அவசியம் தானா என்று கேட்கிறான். இது மட்டுமா? ‘மாத்திரைகளை குறைங்கப்பா… நிறைய மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவது உடல் நலனுக்கு கேடு…’ என்று நல்லவன் போல் அறிவுரை கூறுகிறான். மருந்து சாப்பிடாமல் செத்துத் தொலை என்கிறானோ என்று நினைக்க வேண்டியுள்ளது. இப்படி வாழ்வதை விட, பேசாமல் போய் சேர்ந்து விடலாமா என்றிருக்கு…’ என வருத்தப்பட்டுப் பேசினார் நண்பர்.
‘ரத்த பந்தமாவது, சொந்தமாவது, எல்லாம் பணம் செய்கிற வேலை…’ என்று உறவினர் ஒருவர், அர்த்தமுள்ள வாக்குமூலம் ஒன்றை தந்த போது, மனசே கனத்து விட்டது.
சம்பாதிக்கிறவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து என்பதெல்லாம் சும்மா! இதெல்லாம் வேலைக்கு ஆகாது.
பேராசையற்ற பொருளாதார சேமிப்பு ஒன்று தான் நல்வாழ்விற்கான ஒரே உத்தரவாதம். ‘நாங்க உங்களை அப்படியெல்லாம் கைவிட்டுடுவோமா…’ என்கிற வாக்குமூலங்கள் எல்லாம், காலத்தின் ஓட்டத்தில் நீர்த்துவிட கூடியவை!
ஆக, இருப்பது போதாது… இன்னும் தேடிச் சேர்ப்போம்; வாரிக் குவிப்போம்!
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum