TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


30 வயதுக்குட்பட்டவர்களுக்கு விராட் கோலி சொல்லும் 5 பாடங்கள்!

Go down

30 வயதுக்குட்பட்டவர்களுக்கு விராட் கோலி சொல்லும் 5 பாடங்கள்! Empty 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு விராட் கோலி சொல்லும் 5 பாடங்கள்!

Post by Tamil Mon Mar 21, 2016 2:16 pm

ங்கள் வயது 30க்குள் இருந்து அலுவலகத்தில் பெரிய இலக்குகளை அடைய நினைப்பவரா நீங்கள். அப்படியென்றால் நீங்கள் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் இருந்து இந்த 5 விஷயங்களை கற்க வேண்டியது அவசியம். இலக்குகளை அடைவது துவங்கி உங்கள் நெகட்டிவ் விஷயங்களை பாசிட்டிவாக மாற்றுவது வரை கோலியின் அணுகுமுறை நிறைய மேலாண்மை தத்துவங்களோடு ஒத்து போகிறது.
30 வயதுக்குட்பட்டவர்களுக்கு விராட் கோலி சொல்லும் 5 பாடங்கள்! 1
இலக்குகளை சிக்கீரம் எட்டுங்கள்:

அலுவலகம் உங்களுக்கு நிர்ணயித்த இலக்குகளை கொடுக்கப்பட்ட காலத்துக்குள் முடிக்க முயற்சி செய்யுங்கள். உதாரணமாக ஒரு வருடத்தில் நீங்கள் செய்ய வேண்டிய வேலையை 10 மாதத்துக்குள் முடிக்க முயற்சி செய்யுங்கள். இதற்காக நீங்கள் பெரிதாக அலட்டி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாத இலக்குகளை 25 நாட்களில் முடித்து பழகுங்கள் வருட இலக்கு தானாகவே 10 மாதமாக குறைந்துவிடும். இதையே தான் கோலியும் செய்தார். ஆரம்ப காலத்தில் சச்சின் செய்த விஷயங்கள் அவருக்கு முன்னதாக முடித்தார். அதனால்தான் தற்போது  கோலியின் ஆட்டங்களோடு ஒப்பிட்டால் சச்சின் பின்னால் தான் இருக்கிறார் என்கின்றன புள்ளி விவரங்கள்.

ஒரே மாதிரியாக இருங்கள்:


நீங்கள் பொறுமையாகவோ அல்லது அதிரடியாகவோ வேலைகளை முடிப்பவராக இருக்கலாம். உங்கள் நிலையிலிருந்து மாறி அடுத்த நிலையில் வேலை செய்ய போகிறேன் என்று மாறாதீர்கள். உங்கள் செயல்திறனை அதிகப்படுத்துங்கள். ஆனால் அணுகுமுறையை மாற்றாதீர்கள். உங்களுக்கு சிறப்பாக செய்ய தெரிந்த செயலை மட்டும் செய்யுங்கள். கோலி ஆடிய காலங்களில் டிவில்லியர்ஸ், கெயில் ஆகியோர் 360 டிகிரியில் ஷாட்களை ஆடினாலும், தனக்கு வரும் க்ளாஸிக் ஷாட்களால் 360 டிகிரியையும் கோலி கவர் செய்வது க்ளாஸ்.

30 வயதுக்குட்பட்டவர்களுக்கு விராட் கோலி சொல்லும் 5 பாடங்கள்! 2

விமர்சனங்களுக்கு பயப்படாதீர்கள்:

உங்கள் அலுவலகத்திலோ அல்லது நீங்கள் இருக்கும் குழுவிலோ 'இவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது, 30 வயது கூட ஆகவில்லை, இவரால் இந்த விஷயங்களை செய்ய முடியாது என்ற விமர்சனங்கள் உங்கள் வேலை சிறப்பாக அமையும் போது எழும், இந்த விமர்சனங்களை ஒரு சதவிகிதம் கூட பெரிதாக எடுத்து கொள்ளாதீர்கள். உங்களை நம்பி அளிக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்ய துவங்குங்கள். நீங்கள் மிகப்பெரிய உயரங்களை தொடுவீர்கள். ஆட்டத்தை பார்க்காமல் அனுஷ்கா ஷர்மாவோடு ஊர் சுற்றுகிறார், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை, மைதானத்தில் கோவத்தை வெளிப்படுத்துவது அழகல்ல என்ற விமர்சனங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன் செயலை சரியாக செய்து நம்பர் ஒன் வீரராக வலம் வருகிறார்.

தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்யுங்கள்!


ஒருமுறை உங்களது வெற்றியை பதிவு செய்துவிட்டால் அதோடு உங்களை நிறுத்தி கொள்ளாதீர்கள். உங்களிடம் இருந்து இரண்டாவது வெற்றி வரவில்லை என்றால் உங்களது முதல் வெற்றி அதிர்ஷ்டம் ஆகிவிடும். அதனால் தொடர்ச்சியாக உங்களை வெற்றி பாதையில் வைத்திருக்க கடுமையான முயற்சியை மேற்கொள்ளுங்கள். டி20, ஒருநாள் டெஸ்ட் போட்டிகள் என எந்த டாஸ்க்கை கொடுத்தாலும் சரியாகவும், தொடர்ந்தும் செய்வது தான் கோலியிடம் நாம் கற்க வேண்டிய எவர்க்ரீன் பாடம்!

30 வயதுக்குட்பட்டவர்களுக்கு விராட் கோலி சொல்லும் 5 பாடங்கள்! 4

தலைவனுக்கான ஆட்டிட்யூடோடு இருங்கள்!

உங்களைவிட அனுபவமுள்ள ஒருவரை தாண்டி உங்களிடம் தலைமை பண்பு காணப்பட்டால் அதனை காட்ட ஒருபோதும் தயங்காதீர்கள். நீங்கள் தான் தலைவன். உங்களால் மட்டும் தான் இது முடியும் என்ற ஆட்டிட்யூரோடு இருங்கள். தேவைப்படும் இடங்களில் சீனியர், ஜூனியர் பார்க்காமல் உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். நீங்கள் தலைவனாக இல்லாத இடங்களிலும் நீங்கள் தனித்து தெரிவீர்கள். தோனி போன்ற அனுபவசாலி கேப்டன் இருக்கும் ஒருநாள், டி20 போட்டிகளில் கோலி கெத்தாக இருப்பதற்கு காரணம் அவரது டெஸ்ட் கேப்டன் ஆட்டிட்யூட் தான். தோல்விகளை கண்டு பயப்படாமல் கெத்து காட்டுவதால் தான் கோலி நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்.

30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமல்ல, இலக்குகளை தாண்டி தன்னை நிரூபிக்க ஓடும் அனைவருக்குமே கோலியின் பாடங்கள் பொருந்தும். 30 வயதுக்குட்பட்டவர்களால் கோலியை தன்னோடு எளிதாக ஒப்பிட்டு கொள்ள‌ முடியும். 27 வயதுள்ள கோலி இந்திய அணியை வழிந‌டத்தும் போது 30 வயதுக்குள் உங்கள் துறையில் தலைமை பதவியை எட்ட முடியாத என்ன? உங்களது இலக்குகளை துரத்துங்கள்! கமான் பாஸ்! 


-ச.ஸ்ரீராம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» 1 முதல் 8ம் வகுப்பு வரை புதிய பாடங்கள் கிடையாது : 9, 10ம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட பாடங்கள்
» தமிழில் எந்த ஒரு சொல்லும் இல்லை தமிழீழத்தில், புகைப்படம் சொல்லும் செய்தி..... Tamil name boards removed
» விராட் கோலிக்கு ரிச்சர்ட்ஸ் சர்டிபிகேட்
» சிட்னி டெஸ்டில் விராட் கோலியை வீழ்த்த ஆஸி. புது வியூகம்
» விராட் கோலிக்கு ஐ.சி.சி. விருது: ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum